போராட்டமே வாழ்க்கை

”என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை போரட்டமாகவே இருக்கிறுது!”
இப்படிச் சொன்னவர், காலம் சென்ற புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள்தான்!
இதை அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் சர்வ சாதாரணமாக, பேச்சோடு பேச்சாகச் சொன்னார். ஆனால், அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள்தாம் எத்தனை எத்தனை!
‘எம்.ஜி.ஆர்!’ என்று சொன்னாலே இந்தியா முழுவதிலும், – ஏன், உலகம் முழுவதிலும் – உள்ள தமிழர்கள் அனைவரும் உடனே புரிந்து கொள்ளும் நிலையையும் பிரபலத்தையும் பெரும்புகழையும் 1972 ஆம் ஆண்டில் அவர் எய்தியிருந்தார். ஆனால், அந்த நிலையை எட்டுவதற்கு தம் வாழ்நாளின் ஆரம்பக்கட்டத்தில் அவர் சந்தித்த போராட்டங்கள் ஒன்றா, இரண்டா?

Continue Reading

முதல் போராட்டம்

1967 ஆம் ஆண்டில், தமிழக்த்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் செயல்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது. அதற்கு வித்தாக அமைந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆவார். ஆம்; நடிகர் எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் வீட்டினுள் புகுந்து அவரைத் தம் கைத்துப்பாக்கியால் சுட்டார், குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றார்.
அப்போது கட்டிடப்பட்ட நிலையில் மக்கள் திலக்த்தைப் புகைப்படமெடுத்து சுவரொட்டிகள் அச்சிட்டுத் தமிழகம் முழுவதிலும் ஒட்டச் செய்தது.
தமிழக மக்களிடம் ஒரு வகையான அனுதாப அலையை உருவாக்கி மக்களிடம் வாக்கைப் பெறக் கட்சித் தலைவர்கள் சிலர் சொன்ன யோசனை இது.

Continue Reading

புதிய கட்சி உதயம்

1972 அக்டோபர் 17 ! அன்றுதான் சர்வாதிகாரி ஜார் மன்னனை எதிர்த்துப் புரட்சித் தலைவர் மாமேதை லெனின் தலைமையில் ரஷ்ய நாட்டின் தொழிலாளர் வர்க்கம் புரட்சிக் கொடியை உயர்த்திப் பிடித்தது!.
ஆகா என்றெழந்தது யுகப்புரட்சி! அலறி வீழ்ந்தான் கொடுங்கோலன் ஜார்ஜ் மன்னன்! அந்தப் புனிதமான அக்டோபர் மாதம் 17 – ம் தேதியன்று தான் தமிழகத்தின் புரட்சித் தலைவர் புதுக்கட்சியைத் தொடங்கினார்! அறிஞர் அண்ணாவின் பெயரையும், அவரது கொள்கைகளையும் தி.மு.க. தலைமை இருட்டடிப்புச் செய்வதால், தாம் தொடங்கிய புதிய கட்சிக்கு ”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்னும் பெயரைச் சூட்டினார், புரட்சித் தலைவர்!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பைத் தொடங்கியது குறித்த அறிவிப்பை வெளியிடும் பெரும் பேறு முன்னாள் மேலவை உறுப்பினரான அனகாபுத்தூர் இராமலிங்கத்துக்கு கிட்டியது.

Continue Reading

சட்டசபைப் புரட்சி

திராவிட இயக்கத்தின் பெரும் தலைவர்களுள் ஒருவர் கே. ஏ. மதியழகன். அவர் அப்பொழுது (1972) தமிழக சட்டசபையில் சபாநாயகராக இருந்தார். “தி.மு.க.வில் கருணாநிதியின் கை ஓங்குவதையும் தி.மு.க ஆட்சியில் தவறுகள் பெருகிக் கொண்டிருப்பதையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
சபாநாயகர் பதவி வகிக்கும் மதியழகனும் புரட்சித் தலைவரின் இயக்கத்தை ஆதரிக்கத் தொடங்கினால், தம் நிலைமை மிகவும் பலவீனமாகிவிடும் என்று முதல்வர் கருணாநிதி அஞ்சினார். ஆகவே அவர், தி. மு. க. வில் இருந்த எஸ். டி. சோமசுந்தரம் எம். பி. யை சபாநாயகர் மதியழகனிடம் அனுப்பி அவரைச் சரிக்கட்டும்படி கேட்டுக்கொண்டார்.
ஆனால், எஸ். டி. எஸ். அவர்களையே சரிக்கட்டி புரட்சித்தலைவரோடு சேரும்படி செய்துவிட்டார், மதியழகன்.
இதை தனதுநூல் ஒன்றில் கருணாநிதி வருத்தத்தோடு குறிப்பிட்டிருக்கிறார்.

Continue Reading

புரட்சிப்பூமியில் எம்.ஜி.ஆர்

திண்டுக்கல் தேர்தலில் சாதனை படைத்த சரித்திர நாயகராம் எம்.ஜி.ஆருக்குப் புரட்சிப் பூமியாம் சோவியத் யூனியனுக்குச் செல்லும் வாய்ப்பு ஒன்று அதே ஆண்டில் வாய்த்தது.
மாஸ்கோவில் எட்டாவது சர்வதேசப் பட விழா நடைபெறவிருந்தது. அதில் கலந்துகொள்ளும்படி சோவியத் அரசு புரட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட புரட்சித் தலைவர், 1973 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதியன்று சோவியத் யூனியனுமக்குப் புறப்பட்டுச் சென்றார்.
மாஸ்கோ நகரில், புகழ் பெற்ற ‘ருஷ்யா’ என்னும் உணவு விடுதியில் புரட்சித் தலைவருக்கு வசதியான ஓர் அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புரட்சித் தலைவரோடு இயக்குனர் ப. நீலகண்டன், சித்ரா கிருஷ்ணசாமி, ஆகியோரும் சோவியத் யூனியனுக்குச் சென்றிருந்தனர்.

Continue Reading

புதுவைத் தேர்தல்

1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் பாண்டிச் சேரியிலும், தமிழகத்தில் கோவையிலும் இடைத்தேர்தல்கள் நடக்கவிருந்தன.
அரசியல் கட்சிகள் புதிய அணிகளாகப்பிரிந்து த்ததமது வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் முனைந்து நின்றன். திண்டுக்கல் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸிலும், இந்திரா காங்கிரஸிலும் மறு சிந்தனை ஏற்பட்டது. தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க. வளருவதை இரு காங்கிரஸ் கட்சிகளுமே விரும்பவில்லை. அதனால் பிரதமர் இந்திராகாந்தியின் சார்பில் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியமும், மரகதம் சந்திரசேகரும் காமராஜரைச் சந்தித்துப் பேசி ஓர் உடன்பாட்டுக்கு வந்தார்கள்.

Continue Reading

மொரீஷியஸ் தீவின் அழைப்பு

பாண்டி-கோவை தேர்தல் முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து புரட்சித் தலைவர் கட்சிப் பணிகளிலும், கலைத்துறைப்பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். 1974 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் அவர் மொரீஷியஸ் தீவு நாட்டுக்குச் செல்வதென்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தார்.
மொரீஷியஸ் தீவு இந்துமகா சமுத்திரத்தில் பசிபிக் கடலும் அரபிக்கடலும் சேரும் இடத்தில் ஆப்பிரிக்காவுக்கு அருகில் உள்ளது. சென்னை நகரிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்தத் தீவு நாடு சுமார் 6 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. அங்கு 4 இலட்சம் பேர் இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவுக்குத் தமிழர்களும் இருக்கின்றனர். சுதந்திரக்குடியரசு நாடான மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக ராம்கூலம் என்னும் இந்திய வமிசா வழியைச் சேர்ந்தவரே இருந்து கொண்டிருந்தார். மொரீஷியஸிலுள்ள 12 அமைச்சர்களுள் ஏ. செட்டியார் என்னும் தமிழரும் ஒருவர்.

Continue Reading

கழகப் பெயர் மாற்றம்

1975 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர், கழகத்தின் பெயரில் ஒரு மாற்றத்தைச் செய்ய விரும்பினார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திற்குத் தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரம், கேரளம், கருநாடகம், மாகராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும்கூட கிளைக் கழகங்களும் மன்றங்களும் தோன்றி வளர்ந்து கொண்டிருந்தன. எனவே, கட்சிப் பெயருக்கு முன்னால் ”அனைத்திந்திய” என்னும் வார்த்தைகளையும் சேர்க்க வேண்டுமென்று புரட்சித் தலைவர் விரும்பினார்.

Continue Reading

புதிய கூட்டணி உதயம்

1976 ஆம் ஆண்டு ஜனவரியில் தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதற்கிடையில் தமிழகத்தில் இன்னோர் அரசியல் மாற்றமும் நிகழ்ந்தது. ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் காமராஜர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதியன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
காமராஜர் மரணத்தைத் தொடர்ந்து ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஒரு விரக்தியும் மறு சிந்தனையும் தோன்றின. இந்திரா காங்கிரஸும் ஸ்தாபன காங்கிரஸும் இணைந்து ஒரே காங்கிரசாகிவிட வேண்டும் என்பதுதான் அந்த மறு சிந்தனை ஆகும். அதன்படி இணைப்பும் ஏற்பட்டது. கருப்பையா மூப்பனார் தலைமையில் பெரும்பாலன ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்கள் இந்திராகாங்கிரஸில் இணைந்தனர். ஒன்றுபட்ட தமிழ்நாடு காங்கிரசுக்கு கருப்பையா மூப்பனார் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Continue Reading

முதல்வர் பதவி

1977 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தமிழக சட்ட மன்றத்திற்குத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அரசியல் கட்சிகள் புதிய அணிகளை அமைத்தன.
ஜனதாக் கட்சி தி.மு.க. உறவைத் துண்டித்துக் கொண்டு தனியாகப்போட்டியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தி.மு.கவை உதறிவிட்டுத் தனித்துப் போட்டியிட்டது.
அ.இ.தி.மு.க. கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டது. இந்திரா காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் சட்டமன்றத்தில் அதிகமான இடங்களைத் தங்களுக்குக் கோரின. புரட்சித் தலைவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அதனால், இந்திரா காங்கிரசும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தங்களுக்குள் தனிக் கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டு போட்டியிட்டன.

Continue Reading

தமிழுக்குச் சிறப்பு

புரட்சித் தலைவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும், அது வரை பல ஆண்டுகளாக நிரப்பப்படாதிருந்த ஆஸ்தானக் கவிஞர் பதவிக்குத்தமிழ் மக்களின் இதயங்கவர்ந்த கவியரசு கண்ணதாசனை நியமித்தார்.
கவிஞர் கண்ணதாசன் புரட்சித் தலைவரை கடுமையாக எதிர்த்து வந்தவர் என்றாலும், அவர் கவித்திறனில் உள்ளம் பறிகொடுத்த புரட்சித் தலைவர், கட்சி வேறுபாடு கருதாமல், அவர் தமிழ்ச்சேவைக்கு மதிப்பளித்து அவரையே ஆஸ்தானக் கவிஞராக நியமித்தார்.

Continue Reading