”என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை போரட்டமாகவே இருக்கிறுது!”

இப்படிச் சொன்னவர், காலம் சென்ற புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள்தான்!

இதை அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் சர்வ சாதாரணமாக, பேச்சோடு பேச்சாகச் சொன்னார். ஆனால், அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள்தாம் எத்தனை எத்தனை!

‘எம்.ஜி.ஆர்!’ என்று சொன்னாலே இந்தியா முழுவதிலும், – ஏன், உலகம் முழுவதிலும் – உள்ள தமிழர்கள் அனைவரும் உடனே புரிந்து கொள்ளும் நிலையையும் பிரபலத்தையும் பெரும்புகழையும் 1972 ஆம் ஆண்டில் அவர் எய்தியிருந்தார். ஆனால், அந்த நிலையை எட்டுவதற்கு தம் வாழ்நாளின் ஆரம்பக்கட்டத்தில் அவர் சந்தித்த போராட்டங்கள் ஒன்றா, இரண்டா?

அந்தப் போராட்டங்களில் வெற்றி பெறுவதற்கு அவர் ஆற்றிய சாகசங்கள் எத்தனை! சந்தித்த சோதனைகள் எத்தனை!

அந்த வாழ்க்கைப் போராட்டத்தில் அவர் நீந்திய நெருப்பு ஆறுகள் எத்தனை!

அவர் ஏறி இறங்கிய இமயக் கொடுமுடிகள் எத்தனை! அவர் தாண்டி வந்த சஹாராப் பாலைவனங்கள் தாம் எத்தனை! எத்தனை!

ஏழு வயதிற்குள் எத்தனை நாள் வறுமைத் தீயில் வாடி இருக்கிறார்!

கதாநாயகன் ஆவதற்குள் பட்ட துன்பங்கள்

ஏழாவது வயதிலேயே வயிற்றுப்பிழைப்புக்காக நாடக்க் கம்பெனியில் சேர்ந்து, நடிப்புக் கலையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டு ஒரு நாடறிந்த நடிகராகப் பரிணாம வளர்ச்சி பெறுவதற்குள் அவர் பட்ட அல்லல்கள் எத்தனை! ஆசிரியர்களிடம் பெற்ற பிரம்படிகள் எத்தனை!

நாடக உலகிலிருந்து திரைப்பட உலகில் புகுவதற்காக அவர் நடந்து நடந்து தேய்ந்த செருப்புகள் எத்தனை!

‘சதி லீலாவதி’ என்னும் படத்தில் ஒரு சாதாரண வேடத்தில் அறிமுகமாகி, ‘ராஜகுமாரி’ என்னும் படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடிப்பதற்குள் இடையில் அவர் அடைந்த இன்னல்கள் எத்தனை! சந்தித்த ஏற்ற இறக்கங்கள் எத்தனை!

ராஜகுமாரி படத்தை அடுத்து பல படங்களில் சரித்திர காலக் கதாநாயகன் வேடம் தாங்கியே நடித்து வந்த அவரது திரைஉலக வா.க்கை, சமூகப்படங்கள் தயாராகி மக்கள் ஆதரவைப் பெறத் தொடங்கிய ஒரு கால கட்டத்தோடு முடித்துவிட்டதாக ஆரூடம் சொன்னவர்கள் எத்தனை பேர்!

சமூகப்பட நாயகனாகவும் தம்மால் சிறப்பாக நடிக்க முடியும்; எந்த வேடத்திலும் தம்மால் ஒளிவீசிப் பிரகாசிக்க முடியும் என்று அவர் நிரூபித்ததை நாடறியும். இன்று அது வரலாறு.

ஆனால் அப்படி நிரூபிப்பதற்குள் அவர் சந்தித்த சோதனைகள் எத்தனை!

ஆரம்ப காலத்தில் கதர் வேட்டி, கதர்ச் சட்டை அணிந்து சிறிய ருத்ராட்ச மாலையைக் கழுத்தில் தரித்துக் காங்கிரஸகார்ராக இருந்தார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்போது அவர் அறிஞர் அண்ணாவைச் சந்தித்து, அவரது அறிவார்ந்த பேச்சாலும், ஆணித்தரமான எழுத்தாலும் கவரப்பட்டு, அவர் காட்டிய மெய்யன்பால் திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் படிப்படியாய் உழைத்தார். உயர்ந்தார். அண்ணாவின் ‘இதயக்கனி’ யாகவும் மாறினார்.

ஆனால் அந்த இதயக்கனியை கன்றிவிடும்படி கல்லால் அடித்தவர்களும், சொல்லால் அடித்தவர்களும் எத்தனை பேர்! அவர்களை எதிர்த்துக் கழக்த்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் நடத்திய போராட்டங்கள் எண்ணற்றன.

ஊறரிந்த நடிகர் ஆகி, ஒப்பற்ற ‘புரட்சி நடிகர்’ ‘மக்கள் திலகம்’ என்றெல்லாம் ஏற்றிப் போற்றப்பட்ட காலத்திலுங்கூட அவர் சென்ற வழி மலர் தூவப்பட்ட பாதையாகவா இருந்தது? கல்லும், முள்ளும் நிரம்பி அவை அவர் காலைக் குத்திக் கிழித்துக் குருதியைக் கொட்டச் செய்தனவே!

கால் முறிந்தாலும் மனம் முரியாதவர்!

1959 ஆம ஆண்டில், தஞ்சை மாவட்டம் சீர்காழியில் ‘இன்பக்கனவு’ என்னும் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சண்டைக்காட்சியில்
அவர் கால் எலும்பு முறிந்தது. அதனால் அவர் படுத்த படுக்கையானார். அந்த நிலையலேயே சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். சில மாதங்கள் ஓய்வு பெறவும் நேர்ந்தது.

அப்பொழுது அவரது ‘அன்பார்ந்த’ எதிரிகள் என்ன சொன்னார்கள்? ‘முடிந்தது எம்.ஜி.ஆரின் கதை! இனிமேல் அவரால் முடியாது! ஒடிந்துவிட்ட அவர் கால் இனிமேல் ஒன்றுகூடாது. முரிந்த எலும்பு ஒன்றுகூடி அவர் எழுந்து நடந்தாலும் முன்போல அவரால் சண்டைக்காட்சிகளில் ஓடி ஆடி நடிக்க முடியாது” என்றுதானு கூறினார்கள்.

சண்டைக்காட்சிகளில் எம்.ஜி.ஆரின் அருகில் நிற்க முடியாதவர்களெல்லாம் அதை அறிந்து மகிழ்ச்சிக் கூத்தாடினார்கள்.

ஆனால், நடந்தது வேறு. ஆம்; மீண்டும் தமிழ்த்திரை உலகில் மிகச்சிறந்து நடிகராகத் தலை நிமிர்ந்து நின்றார்.

குண்டடிப் பட்டாலும் குன்றாதவர்

1967 ஆமு ஆண்டில் எம்.ஜி.ஆரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். குண்டு பாய்ந்த நிலையில் எம்.ஜி.ஆர். இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதை அறிந்து நாடே திடுக்கிட்டது. தாய்க்குலம் அழுது புலம்பியது. இளைஞர் கூட்டம் பெருந்துன்பமுற்றது.

அப்பொழுதும் அவர் விரோதிகள் என்ன சொன்னார்கள்?

”முடிந்தது எம்.ஜி.ஆர் கதை இனி மேல் அவர் பிழைக்கமாட்டார்” என்று சிலர் அற்ப மகிழ்ச்சி கொண்டார்கள்.

மறுநாள் அந்தச் செய்தி வந்தது ”எம்.ஜி.ஆரின் தொண்டைக்கருகில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது; அவர் உயிருக்கு ஆபத்தில்லை! என்பதே அது.

அப்போதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்?

”பிழைத்து எழுந்தாலும் அவரால் முன்போலப் பேச முடியாது; பேச முடியாவிட்டால் எப்படி நடிக்க முடியும்?” என்று கூறி தங்கள் குரூரமான மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்!

எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டுச்சிதறல் ஓர் ஓராமாய் ஒதுங்கிவிட்டது. அவர் தும்மியபோது தானாகவே அது வெளியே வந்துவிட்டது. இப்படி மறுபிறவியெடுத்த எம்.ஜி.ஆரின் தொண்டைப்புண் ஆறே மாத்த்தில் ஆறியது. அவரால் பேச முடிந்தது. ஆனால், குரல், குழந்தைகள் பேசும் மழலைபோல் சற்றுத் தெளிவின்றி அமைந்தது; ஆனால், அவரது கோடான கோடி இரசிகர்களும், உடன் பிறபுக்களும் அக்குறயை எண்ணி அவர்மீது கொண்டிருந்த அன்பிலிருந்து சற்றும் மாறவில்லை. அது கண்டு எதிரிகள் வியப்பால் செயலற்றனர்.

1972 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுத் தூக்கி எறியப்பட்டார்.

அவர் செய்த தவறு என்ன? கணக்குக் கேட்டார். ஆம், கட்சிக்கணக்கைக் கேட்டார்; சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன என்று கணக்கு காட்ட வேண்டும் என்று கேட்டார்.

அதனால் கட்சித் தலைமை சீறியது. அவரைக் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தது. பின்னர் நிரந்திரமாகவே நீக்கிவிட்டதாகவும் அறிவித்தது!

அப்பொழுதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்? ”இன்றோடு முடிந்தது எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்வு” என்று கொக்கரித்தார்கள்.

‘கட்சியால் எம்.ஜி.ஆர் வளர்ந்தாரா, எம்.ஜி.ஆரால் கட்சி வளர்ந்ததா? என்று பத்திரிக்கைகளுர், அரசியல் கட்சிகளும் ஆராய்ச்சி நடத்தின.

ஆனால், எம்.ஜி.ஆரின் நிலை என்ன?

எம்.ஜி.ஆர். மீண்டும் இமயம்போல் எழுந்து நின்றார்.

புரட்சி நடிகர் புரட்சித் தலைவராக மாறினார். அண்ணாவின் பெயரால் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஐந்தே ஆண்டுகளில் கடுமையான அடக்குமுறைகளையும் மீறி, கட்சியை வளர்த்தார். 1987 இல் தமிழகத்தின் ஆட்சியிலும் அமர்ந்தார்.

ஆனால், அந்த ஐந்தாண்டுகளுக்குள் அவர் சந்தித்த போராட்டங்கள்தான் எத்தனை.