புரட்சித் தலைவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும், அது வரை பல ஆண்டுகளாக நிரப்பப்படாதிருந்த ஆஸ்தானக் கவிஞர் பதவிக்குத்தமிழ் மக்களின் இதயங்கவர்ந்த கவியரசு கண்ணதாசனை நியமித்தார்.

கவிஞர் கண்ணதாசன் புரட்சித் தலைவரை கடுமையாக எதிர்த்து வந்தவர் என்றாலும், அவர் கவித்திறனில் உள்ளம் பறிகொடுத்த புரட்சித் தலைவர், கட்சி வேறுபாடு கருதாமல், அவர் தமிழ்ச்சேவைக்கு மதிப்பளித்து அவரையே ஆஸ்தானக் கவிஞராக நியமித்தார்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாமக்கல் கவிஞர் அந்தப் பதவியை வகித்துக் கொண்டிருந்தார். அதற்குப் பின்னர் அமைந்த அரசு அந்தப் பதவிக்கு எவரையும் நியமிக்கவில்லை.

1977 – ஆம் ஆண்டு வரை தி.மு.க. ஆதரவாளராகவே இருந்தவர், சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம். அவர் தமிழ்ச்சேவையைக் கௌரவிக்கும் வகையில் புரட்சித் தலைவர் அவரை மேலவைத் தலைவராக்கினார்.

காமராஜர், ராஜாஜி, முத்துராமலிங்கத்தேவர், ப. ஜீவானந்தம், பாரதியார், திரு.வி.க., பாரதிதாசன், கலைவாணர் முதலியோரின் பிறந்த நாள்களை அரசாங்கத்தின் சார்பிலேயே ஆண்டுதோறும் கொண்டாடவும் புரட்சித் தலைவர் வகை செய்தார்.

தேசபக்தரும் முன்னால் அமைச்சருமான கக்கன் அவர்களின் இறுதிக்காலத்தில், தாமே வலியச் சென்று அவருக்குத் தேவையான சகல உதவிகளையும் செய்தார், புரட்சித் தலைவர்!