1936 ல் சதிலீலாவது என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும்ர, 1947ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம்புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம்.ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. நல்ல குணங்கள் சிறைந்த கதை பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார்.