ஆரம்பப்பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் (2 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள்) மதியம் ஒரு வேளை சத்துள்ள உணவைப் பள்ளிகளிலேயே சமைத்து வழங்கும் திட்டந்தான் ச்த்துணவுத் திட்டமாகும். அதன்படி தமிழகம் முழுவதிலும் உள்ள 90 இலட்சம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்தனர். அதுமட்டுமின்றி, சத்துணவுக் கூடங்களை நிருவகித்து உணவு சமைத்துப் படைக்கும் ஆயா வேலையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அமர்த்தப்பட்டனர். அவர்கள் மாதம் ரூ. 100 சம்பளம் பெறவும் வகை செய்யப்பட்டது. பெண்களின் வேலையில்லாத்த் திண்டாட்டமும் இதன் மூலம் ஓரளவுக்குக் குறைந்தது; குழந்தைகளின் பசியும் தீர்க்கப்பட்டது. இதற்காக ஆன செலவு ஆண்டுக்கு ரூ. 200 கோடியாகும்.

சத்துணவுத் திட்டத்தை வாழ்த்தி வரவேற்காத தாய்மார்கள் ஒருவர்கூட இரார். எதிர்த்த அரசியல் தலைவர்களும் எவருமிலர். பின்னர் முதியோர், ஊனமுற்றார், விதவைகள், மாஜி இராணுவத்தினர் முதலிய 2 இலட்சம் பேருக்கும் இத்திட்டம் விரவுபடுத்தப்பட்டது.