வீட்டு வசதி
நலிந்த பிரிவு மக்களுக்கு 3 ஆண்டுகளில் 30 இலட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கும்திட்டத்தையும் அமல்படுத்தினார், புரட்சித்தலைவர். அவர் பத்தாவது வகுப்புவரை படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.50 நிவாரணப்பணம் அளிக்கும் திட்டத்தையும், புதுமுக வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.75 நிவாரணப்பணம் அளிக்கும் திட்டத்தையும் அமல்படுத்தினார். அதனை மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் இளைஞர்கள் பயன்பெற்ற்றுக் கொண்டிருக்கின்றனர்.
வணிகர்களுக்கு ஒரு முனை வரி விதிப்புத் திட்டத்தை அமல்படுத்தி வீண் தொந்தரவுகளிலிருந்து விடுதலை அளித்தார்.
கிராம்ப்புற மக்களுக்குப் போக்குவரத்து வசதி அளிக்கப் புதிதாக 4316 பேருந்து வழித்தடங்களையும் ஏற்படுத்தினார். மேலும்-
கிராமக் கைவினைஞர்களுக்கு இலவசத் தொழில் கருவிகள் வழங்கும் திட்டம்
விவசாயிகளுக்குப் பயிர்ப் பாதுகாப்பு மற்றும் விபத்து மற்றும் இடர் உதவித் திட்டம்
அரசு ஊழியர்களுக்கு ஈட்டுறுதியுடன் இணைந்த சிறப்பு ஓய்வூதியத்திட்டம்.
தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணத் திட்டம்.
மீனவர்களுக்கு வீட்டு வசதித் திட்டம்
நெசவாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம்
நெசவாளர், தீப்பெட்டித் தொழிலாளர், பனை ஏறும் தொழிலாளர் விபத்து உதவித் திட்டம்.
கட்டடத் தொழிலாளர், கிராமக் கைவினைஞர், கை வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் போன்றோருக்கும் ஆயுள் காப்புறுதியும் பணி ஓய்வுப் பலன்களும் கிட்ட வழி செய்யும் திட்டம்.
காவலர்களுக்கு தனி வீட்டுவசதிக் கழகம், அமைத்தல்,
காவலர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள் வழங்கம் திட்டம். வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம்.
முதியோர் பென்ஷன் திட்டம்.
உலக வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும், பயிற்சி வழங்கும் வழி தொடர் திட்டம்,
தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தனியாகத் தஞ்சைப் பல்கலைக்கழகம் அமைத்தல்,
பாரதியார், பாரதிதாசனார் பெயர்களில் புதிய பல்கலைக்கழகங்கள் அமைத்தல், முதலிய சாதனைகளைச் செய்த சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர் தாய்க்குலத்தின் நலம் பேணுவதற்காக மேலும் சில நல்வாழ்வுத் திட்டங்களையும் அமல்படுத்தினார்.
