திருமண நிதி உதவி
ஆதரவற்ற பெண்களுக்குத்திருமண நிதி உதவியளிக்கும் திட்டம்.
தாலிக்கும் தங்கம் வழங்கும் திட்டம், ஆகியவற்றுடன்,
ஆதரவற்ற விதவைத் தாய்மார்களின் பெண்களுக்குத் திருமண உதவித் திட்டத்தின் கீழ், ஆளுக்கு ரூ.1000 வீதம் வழங்கவும் உத்தரவிட்டார் புரட்சித்தலைவர்.
விதலை மறுமணம் செய்துகொண்ட 1,500 தம்பதிகளுக்கு ரூ. 5,300 வரை ஊக்கத்தொகையாக வழங்கியது, புரட்சித் தலைவரின் அரசு.
அதேபோல, தாழ்த்ததப்பட்டோரைத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் நபருக்கு ரூ. 4,300 வீதம் வழங்கவும் உத்தரவிட்டார், புரட்சித்தலைவர்.
பத்தாயிரம் ஏழைத் தாய்மார்களுக்கு உதவ, தையல் மெஷின்களை இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார், புரட்சித்தலைவர்.
ஏழை விதவைத் தாய்மார்களின் குழந்தைகள் 15,126 பேருக்கு 1979 முதல் 1983 வரை இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் அமல்படுத்தினார், புரட்சித்தலைவர்.
மனிதர் சேலை நிலையங்கள் மற்றும் பணி புரியும் மகளிர்க்குத் தங்கும் விடுதிகள் அமைக்கும் திட்டம் முதலியவற்றையும் புரட்சித் தலைவர் அமல்படுத்தினார்.
