நதி நீர் திட்டம்
சென்னை நகரக்குக் கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு வந்து சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையைப்பூர்த்தி செய்யும் திட்டம் கடந்த 102 ஆண்டுகளாகப் பல்வேறு அரசுகளாலும், பொறியியல் வல்லுநர்களாலும் பேசப்பட்டு வந்தது. அதைப்பற்றி 1983 ஆம் ஆண்டில் புரட்சித் தலைவர், ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவுடன் பேசி நனவாக்கினார். அதற்கான தொடக்க விழாவைப் பிரதமர் இந்திராகாந்தி, என்.டி.ஆர். ஆகியோரை சென்னைக்கு அழைத்துச் சிறப்பாக நடத்தி முடித்தார். அத்திட்டத்திற்கு சுமார் 500 கோடிரூபாய்க்கு மேல் செலவு ஆகும். அது 1984 இல் தொடங்கப்பட்டு வேகமாய் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
