கட்சி பெயர் மாற்றம்
1975 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர், கழகத்தின் பெயரில் ஒரு மாற்றத்தைச் செய்ய விரும்பினார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திற்குத் தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரம், கேரளம், கருநாடகம், மாகராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும்கூட கிளைக் கழகங்களும் மன்றங்களும் தோன்றி வளர்ந்து கொண்டிருந்தன. எனவே, கட்சிப் பெயருக்கு முன்னால் ”அனைத்திந்திய” என்னும் வார்த்தைகளையும் சேர்க்க வேண்டுமென்று புரட்சித் தலைவர் விரும்பினார்.
அதற்காக அ.தி.மு.க. பொது குழுவைக் கூட்டிய போது, புரட்சித் தலைவரே எதிர்பாராத அளவுக்கு கட்சியின் இளம் உறுப்பினர்கள் சிலர் அந்த யோசனையைக்கடுமையாக எதிர்த்தனர்.
பழைய கொள்கைகளில் ஊறியிருந்த அவர்கள் அனைத்து இந்திய என்னும் வார்த்தைகளை தீண்டத்தகாதவையாகவே கருதி வெறுப்பைக் க்க்கினார்கள். ஒரு மிக்க் குறுகிய வட்டத்திலிருந்து எப்பொழுதோ தம்மை விடுவித்துக்கொண்டு தேசியத் தலைவராக உயர்ந்து கொண்டிருந்த புரட்சித் தலைவருக்கு அந்தச் சிலரின் எதிர்ப்பு மிகுந்த வருத்த்தை ஏற்படுத்தியது. அதனால் தாம்கூறும் யோசனையைக் கட்சி ஏற்றுக்கொள்ளாவிட்டால், தம்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு புதிய பொதுச்செயலாளர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி புரட்சித் தலைவர் ஒரு வெடிகுண்டை எடுத்து வீசீனார்.
அவ்வளவுதான்! பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், ”கூடவே கூடாது! புரட்சித்தலைவர் இல்லாத கட்சியில் எங்களுக்கு மட்டும் என்ன வேலை?’ என்று கூறினர். பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களும் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு புரட்சித் தலைவரின் கருத்தை ஏற்றனர்.
அதற்குப்பின்னர் அந்தத் தீர்மானம் ஏகமனதாய் நிறைவேறியது. கழகத்தின் பெயர் அன்று முதல் ”அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” ஆயிற்று.
1974 -75 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசியலில் ஒரு முக்கியமான மாறுதல் நிகழ்ந்தது.
பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் செல்லாது என்று அலஹாபாத் உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது, சில அற்பக் காரணங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பு, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இந்திரா காங்கிரஸ் கட்சி கருதியது; எனவே, அது உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துவிட்டுப் பிரதமர் இந்திரா தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டது.
ஆனால், ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் திரண்ட எதிர்க்கட்சியினரோ இந்திரா உடனே பதவி விலக வேண்டும் என்று கோரிப் பெரும் கிளர்ச்சி செய்தனர்.
ஜெயப்பிரகாஷ் நாராயண் போலீஸாரும் இராணுவத்தினரும் அரசு உத்தரிவுகளுக்குக் கீழ்படியக்கூடாது என்று அறைகூவல் விடுத்தார். மக்கள் தெருவுக்கு வந்து போராட வேண்டும் என்றும் கூறினார். நாடே கொந்தளிப்பு நிலையில் இருந்தது. வெடிகுண்டுகள்கூட ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டது. அதை அடக்குவதற்கும், நாட்டல் சட்டம் ஒழுங்குப் பாதுகாபதற்கும் பிரதமர் இந்திரா உள்நாட்டு நெருக்கடிநிலையைப் பிரகடனப்படுத்தினார். ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்பட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
பரோடா வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவானார்.
தமிழகத்தில் தி.மு.க., ஸ்தாபன காங்கிரஸ் கட்சிகளைத் தவிர இதர கட்சி கட்சிகளெல்லாம் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை ஆதரித்தன.
இந்நிலையில் தி.மு.க. அரசு அ.தி.மு.க. விஷயத்தில் அடக்குமுறையைக் கடைப்பிடப்பதாகவும் எனவே கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டவேண்டும் என்றும் ஒரு கருத்து எழுந்தது.
சட்டமன்ற உறுப்பினரும் அ.இ.அ.தி.மு.க. பொருளாளருமான எஸ்.எம்.துரைராஜ் அவ்வாறே கறுப்புக்கொடி காட்டினார். அவரும் அவருடன் சென்ற தொண்டர்களும் தாக்கப்பட்டனர். அதுமட்டுமன்றி அவர்கள்மீதே கொலை முயற்சி வழக்கும் தொடரப்பட்டது.
பின்னர் நீதிமன்றம், எஸ்.எம். துரைராஐயும் மற்றவர்களையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்த்தோடு பொய் வழக்குத் தொடுத்த போலீஸாரையும் கடுமையாகக் கண்டித்தது.
மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத் தலைவர் வி.பி. சித்தனை தி.மு.க. தொழிற்சங்கத்தினர் பட்டப்பகலில் அவர் பல்லவன் பஸ்ஸில் செல்கையில் படுகொலை செய்ய முயன்றார்கள். அவர் உடலில் 34 கத்திக் குத்துக்கள் விழுந்தன!
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் கே.எம். சுந்தரமும் கடுமையாகத் தாக்கப்பட்டார்! அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன.
இந்தச் சூழ்நிலையில், 1975 ஆம் ஆண்டின் இறுதியில் அ.இ.அ.தி.மு.க.வின் சார்பில், தி.மு.க. தலைவர் மீதும் அமைச்சரவைமீதும் மீண்டும் ஊழல் புகார்கள் கொடுக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி. விஸ்வநாதனும் நாஞ்சில் மனோகரனும் மத்திய அரசிடம் இந்த மூன்றாவது புகார் மனுவைக் கொடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தினர் எனக் கூறப்பட்டது.
மத்திய அரசு, தி.மு.க. அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தது.
1976 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 31 – ஆம் தேதியன்று இரவு, மத்திய அரசு, தமிழக தி.மு.க. அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்தது; தமிழ்நாடு சட்டமன்றமும் கலைக்கப்பட்டது.
அ.இ.அ.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கொடுத்த ஊழல் புகார் மனுக்களும், தி.மு.க. அரசு மேற்கொண்டதாக்ச் சொல்லப்பட்ட அதிகார துஷ்பிரயோகங்களுந்தாம் தி.மு.க. அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்வதற்குக் காரணமாய் அமைந்தன.
தி.மு.க.வைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை மனப்பூர்வமாய் வரவேற்று ஆதரித்தன.
புரட்சித்தலைவர் தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்த்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டார்; துணிச்சலான நடவடிக்கை என்றும் பாராட்டினார்.
தி.மு.க. அரசு மீதான ஊழல் குற்றச் சாட்டுகளை விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்றை உடனே அமைக்க வேண்டும் என்றும் புரட்சித்தலைவர் கோரினார். அவரது கோரிக்கை விரைவிலேயே ஏற்றக்கொள்ளப்பட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியாவின் தலைமையிலான விசாரணைக் கமிஷனையும் அமைத்தது, மத்திய அரசு. 54 ஊழல் புகார்களும் 27 புகார்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சர்க்காரியா கமிஷன் அமைத்தது, புரட்சித் தலைவருக்குக் கிட்டிய மகத்தான வெற்றியாகும். மாநில முதல்வர்மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் பகிரங்கமாய் இயக்கம் நடத்தும் அசாத்தியத் துணிச்சல் அவர் ஒருவருக்குத்தான் இருந்தது. அதனால் ஆளுங்கட்சியினரும் அரசாங்கமும் ஏவிவிட்ட அடக்குமுறைகளைத் தாங்கிக்கொண்டு போராடும் மனோதிடமும், வலிமையும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மட்டுமே இருந்தது!
இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தி சரித்திரம் படைத்த புரட்சித் தலைவர் அரசியல் அரங்கில் இன்னொரு சாதனையையும் சத்தமில்லாமல் செய்து முடித்தார்.
