எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்
  • நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.
  • கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்!
  • அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
  • சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!
  • வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
  • வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாக்க் கிடைக்கும் என்பது நிச்சயம்.

Continue Reading

மறக்க முடியாத மாமனிதர்

எதிரிகள் தன்னைச் சிலுவையில் அறைந்து இம்சித்த போதுகூட,”தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். பிதாவே அவர்களை மன்னியும்….” என்று ஏசுபிரான் சொன்னதாக விவிலியம் சொல்கிறது.
ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் நடந்த நிஜம் ஒன்று. இன்னும் நம் கண்முன்னே நிழலாடிக்கொண்டிருக்கிறத
1967 ஜனவரி பன்னிரண்டாம் தேதி ஐந்து மணிவாக்கில் வேளச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, தன் இராமவர தோட்ட இல்லத்திற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வருகிறார் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். சில நிமிடங்களில், அந்த இராமாவரம் தொட இல்லத்துக்குள்ளேயே புகுந்த எம்.ஆர். இராதா அவர்கள், நடுஹாலில் வைத்து வள்ளலைத் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். தானும் சுட்டுக்கொள்கிறார். கழுத்தில் குண்டு பாய்ந்ததால் இரத்தம்பீறிட்டு வருகிறது. வள்ளல் அதைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, எம்.ஆர். இராதாவைத் தாக்க முயன்ற தன் விசவாசிகளிடம், “இராதா அண்ணனை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவரைப் பத்திரமாக வெளியில் கொண்டுபோய்விட்டு விடுங்கள்…” என்று ஆணையிடுகிறார்.
வள்ளல் தன் விழிப்புருவம் அசைத்து, ‘என் வீட்டிற்குள்ளேயே புகுந்து, என்னையே கொலை செய்யத் துணிந்து விட்டான். அவனை வெட்டி வீழ்த்துங்கள்!’ என்று சொல்லும் சராசரி மனிதனைப் போல் நடந்துகொள்ளவில்லை.
அந்த நேரத்தில்கூட தன்னைத் கொல்ல வந்த கொலையாளியைக சர்வ்வல்லமையும், சகல செல்வாக்கும் படைத்த செம்மல், ‘ராதா அண்ணன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் என்றால், இந்த இதிகாசத் தலைவனை ஏசுவின் நிழல் என்று சொல்வதா? நிஜம் என்று சொல்வதா? “த்த்தா நமர்”- த்த்தா அவன் நம்முடையவன்… என்று தன்னை கொல்லும் பொருட்டு தன்மீது கத்தி எறிந்த சிவனடியார் வேடத்தில் வந்த மூத்தநாதனை, அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படா வண்ணன், அவனை ஊருக்கு வெளியே கொண்டு போய் பத்திரமாக விட்டுவா என்று தத்தனை ஏவிய, மெய்ப் பொருள் நாயனார் மறு உருவமன்றோ மக்கட் திலகம்.
வள்ளல் மானுடப் பிறவிதான் என்பதற்கு அவருடைய இறப்பு ஒன்றுதான் ஆதாரமாகிப் போய்விட்டது.

Continue Reading

எட்டாவது வள்ளல்

ஆயிரம் யுகங்கள் ஆனாலும் அம்மா என்கிற அமுதச் சொல் அலுத்துப் போய்விடுமோ? அதேபோல் ஆயிரம் கைகள் மறைத்து திரை போட்டாலும் ஆதவனை அப்புறப்படுத்தி விட முடியுமோ! அப்படித்தான் ஒப்புவமையில்லாத, ஈடு இணையற்ற இதிகாச நாயகன் நம் எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். இப்படிப்பட்ட, காலம் வழங்கிய இந்த கற்பக விருட்சத்தை, காணக்கிடைக்காத கனகமணி பெட்டகத்தை அலுப்பில்லாமல் காலம் உள்ளவரை கைவலிக்க எழுதிக்கொண்டே இருக்கலாம். நடிப்பதை தொழிலாகவும், கொடுப்பதை கொள்கையாகவும் கொண்டிருந்தவர் நம் கோமான். எல்லோருக்கும் தசைகளால் மட்டுமே, உடல் இருக்கும். நம் வள்ளலுக்கு மட்டுமே தங்கம் கரைத்து, வார்த்து பிரம்மன் பிரத்யேகமாக இதயத்தால் மேனி செய்தான். எதிரிகளை மட்டுமல்லாமல் எமனைக்கூட ஏழெட்டுத் தடவை பந்தாடி, தன் இழுத்த இழுப்பில் வைத்திருந்த வாகை மலர் எம்மன்னன். எல்லோரும் வீட்டில் பூனைகளையும், புறாக்களையும், வளர்த்தபோது நம் வள்ளல், வீட்டில் சிங்கம் வளர்த்த சீமான், எல்லோரும் பொன்னையும், பொருளையும் மட்டுமே சேமித்துக்கொண்டிருந்த பொழுது, நம் வள்ளல் புகழையும்,புண்ணியத்தையும், சேமித்து வைத்த பூமான். சிலர் கிளைகளுக்கு வெந்நீர் பாய்ச்சியபோது நம் வள்ளல் வேர்களுக்கு வியர்வையைப் பாய்ச்சியவர். உலை பொங்க, உத்தரவாதம் இல்லாதபோது, நம் மன்னன் இலை போட்டு பரிமாறிய பரங்கிமலை பாரி.

பரம்புமலை பாரி மன்னனுக்குகூட, முல்லைக்கு தேர் கொடுத்த தயாள குணம் மட்டுமே வரலாற்றில் பதிவாகி இருந்ததது. ஆனால் நம் வள்ளலோ நாலு கோடி மக்களுக்கு மட்டுமல்ல. அறுபத்தி ஐந்து லட்சம் பிள்ளைகளுக்கு சோறூட்டி மகிழ்ந்த மன்னாதி மன்னன். சாதனைகள் நிகழ்த்தி, சரித்திரம் படைத்தவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அற்புதம் நிகழ்த்தி அவதாரமாக நிகழ்ந்தவர் நம் வள்ளல் மட்டுமே.

Continue Reading

கண்ணதாசனின் கருத்து

தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.

“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”

இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.

மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.

‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.

1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.

தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.

அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.

இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?

சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!

பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.

செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.

1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.

பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.

கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.

இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.

Continue Reading