நினைத்ததை முடிக்கும் நெப்போலியத்தனம்

எதிரிகள் தன்னைச் சிலுவையில் அறைந்து இம்சித்த போதுகூட,”தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். பிதாவே அவர்களை மன்னியும்….” என்று ஏசுபிரான் சொன்னதாக விவிலியம் சொல்கிறது.

ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் நடந்த நிஜம் ஒன்று. இன்னும் நம் கண்முன்னே நிழலாடிக்கொண்டிருக்கிறது

1967 ஜனவரி பன்னிரண்டாம் தேதி ஐந்து மணிவாக்கில் வேளச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, தன் இராமவர தோட்ட இல்லத்திற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வருகிறார் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். சில நிமிடங்களில், அந்த இராமாவரம் தொட இல்லத்துக்குள்ளேயே புகுந்த எம்.ஆர். இராதா அவர்கள், நடுஹாலில் வைத்து வள்ளலைத் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். தானும் சுட்டுக்கொள்கிறார். கழுத்தில் குண்டு பாய்ந்ததால் இரத்தம்பீறிட்டு வருகிறது. வள்ளல் அதைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு, எம்.ஆர். இராதாவைத் தாக்க முயன்ற தன் விசவாசிகளிடம், “இராதா அண்ணனை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவரைப் பத்திரமாக வெளியில் கொண்டுபோய்விட்டு விடுங்கள்…” என்று ஆணையிடுகிறார்.

வள்ளல் தன் விழிப்புருவம் அசைத்து, ‘என் வீட்டிற்குள்ளேயே புகுந்து, என்னையே கொலை செய்யத் துணிந்து விட்டான். அவனை வெட்டி வீழ்த்துங்கள்!’ என்று சொல்லும் சராசரி மனிதனைப் போல் நடந்துகொள்ளவில்லை.

அந்த நேரத்தில்கூட தன்னைத் கொல்ல வந்த கொலையாளியைக சர்வ்வல்லமையும், சகல செல்வாக்கும் படைத்த செம்மல், ‘ராதா அண்ணன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் என்றால், இந்த இதிகாசத் தலைவனை ஏசுவின் நிழல் என்று சொல்வதா? நிஜம் என்று சொல்வதா? “த்த்தா நமர்”- த்த்தா அவன் நம்முடையவன்… என்று தன்னை கொல்லும் பொருட்டு தன்மீது கத்தி எறிந்த சிவனடியார் வேடத்தில் வந்த மூத்தநாதனை, அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படா வண்ணன், அவனை ஊருக்கு வெளியே கொண்டு போய் பத்திரமாக விட்டுவா என்று தத்தனை ஏவிய, மெய்ப் பொருள் நாயனார் மறு உருவமன்றோ மக்கட் திலகம்.

வள்ளல் மானுடப் பிறவிதான் என்பதற்கு அவருடைய இறப்பு ஒன்றுதான் ஆதாரமாகிப் போய்விட்டது.

மற்றபடி-வள்ளலின் அனைத்து செயல்பாடுகளும், நிகழ்த்திய அற்புதங்களும் ஓர் அவதாரத்தின் தன்மையாகவே திகழ்ந்தன.

வள்ளலிடம் ஒருவன் பசி என்று வந்துவிட்டால், அவனின் பசியைப் போக்கிப் பரவசம் அடைவார். ஒருவன் அணிந்து கொள்ள ஆடை வேண்டி வந்தால், அவனுக்கு ஆடை அணிவித்து அழகு பார்ப்பார்.

இப்படி பொன் கொடுத்து, பொருள் கொடுத்து, கேட்டவர்க்கு கேட்டதைக்கொடுத்து, கேட்காதவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்த வள்ளலிடம், வாழ்நாளில் யாருமே தன்னிடம் இதுவரை கேட்காத ஒன்றை ஒருவர் கேட்கிறார். கேட்டவர் வேறு யாருமல்ல. இன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்தான். அப்படி என்னதான் கேட்டார் கலைஞர்?

1967-ல் பேரறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று ஓராண்டு காலத்துக்குள் மறைந்து விடுகிறார். இந்த நிலையில் தேர்தலே இல்லாமல் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்வி எழுகிறது. செயற்குழுவும், பொதுக்குழுவும், கட்சியின் அனைத்து அமைப்புகளும் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை முதல்வராக்க முடிவெடுத்தது.

இந்த நிலையில் தன்னுடைய பேச்சால், எழுத்தால் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கும் கலைஞர், தனக்குத் தான் முதல்வர் நாற்காலி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் நடந்தது வேறாகிவிட்டது.

கீழ்க்கோர்ட்டில் அளித்த தீர்ப்பு, மேல் கோர்ட்டில் மாற்றி அமைக்கப்படும் என்கிற சூட்சும்ம் தெரிந்த அரசியல் சாணக்கியர் கலைஞர், உடனே மூதறிஞர் ராஜாஜி அவர்களைச் சந்திக்கிறார். அவரிடம் தனக்கு இருக்கிற தகுதிகளையும், அதன் விளைவாக எழுந்த எண்ணத்தையும் எடுத்துச் சொல்கிறார்.

அதற்கு இராஜாஜி அவர்கள், ‘உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் எம்.ஜி. இராமச்சந்திரனைப் போய் பார்’ என்று அனுப்பி வைக்கிறார்.

இராஜாஜியின் இராஜதந்திரப்படிக் கலைஞர் வள்ளலைச் சந்தித்து, “எனது பேச்சும் மூச்சும்-தமிழ், தமிழ. என்றுதானே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எனது மனைவி மக்களை மறந்து , இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன். அது மட்டுமில்லாமல் நான் நிலச்சுவான்தார்களின் பிடியில் சுழன்று கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்திருக்கிறேன். எனவே, அந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக முதல்வர் நாற்காலியில் ஒரே ஒரு நாள் நான் அமர்ந்தால், பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கே பெருமையல்லவா?” என்று கலைஞர் வள்ளலிடம் சொல்கிறார்.

இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட மக்கள் திலகம், எவர் கேட்டு இல்லையென்று சொல்லியிருக்கிறேன். இன்று நீ கேட்டா மறுக்கப் போகிறேன். ஆனால் நீ கேட்டது பொன்னோ பொருளோ அல்ல; அள்ளிக் கொடுத்து விட! நீ கேட்டது கர்ணனின் கவச குண்டலம் அல்லவா!” – இப்படி வள்ளல் ஒருநிமிடம் யோசித்தார்.

அடுத்த விநாடியே, “நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்…” என்று கலைஞருக்கு வாக்குக் கொடுத்து வழியனுப்பி வைக்கிறார் வள்ளல்.

அதற்குப்பிறகு, அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுக்குப்போன் செய்து, “ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு…” என்று சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

மக்கள் திலகம் சாப்பிட அழைத்தாலோ அல்லது தான் சாப்பிட வருகிறேன் என்றுசொன்னாலோ – அதில் ஒரு சரித்திர நிகழ்வு புதைந்து கிடக்கும். இதைப்புரிந்து வைத்திருப்பவர் இலட்சிய நடிகர்.

வள்ளல் தன் வீட்டிற்குச் சாப்பிட வருவதைத் தன் தாயிடம் தெரிவித்து, வள்ளலுக்குப்பிடித்ததைச் செய்யச் சொல்கிறார் இலட்சிய நடிகர்.

சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு இலட்சிய நடிகரின் இல்லம் வருகிறார் வள்ளல். இலை போட்டுவிட்டு – இன் முகத்துடன் இலட்சிய நடிகரின்தாய், சமையல் கட்டிலிருந்து பதார்த்தங்களை ஒவ்வொன்றாக எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைக்கிறார்.

இந்த நேரத்தில் இலட்சிய நடிகர் – வள்ளலிடம் “அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு
நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும்…. என்னன்னு சொல்லுவாங்க….!” என்றார்.

அப்பொழுதுதான் இலட்சிய நடிகரிடம், “கலைஞர் முதல்வர் நாற்காலியல் அமர விரும்புகிறார். நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள எம்.எல்.ஏக்களை கலைஞருக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்…” என்று வள்ளல் விளக்குகிறார்.

அதற்கு இலட்சிய நடிகர் நிறைய விளக்கம் அளித்து, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.

‘இந்த விளக்கமெல்லாம் எனக்குத் தேவையில்லை! எனக்காக இதைச் செய்கிறாயா? இல்லையா?’ என்று கடிந்தும் கேட்காமல், இலட்சிய நடிகர் எதைச் சொன்னால் இளவகுவார் என்கிற இங்கிதம் தெரிந்த வள்ளல், “நான் சாப்பிடட்டுமா? வேண்டாமா” என்கிற தமிழ்க் கலாசார வஜ்ராயுத்த்தைப் பிரயோகிக்கிறார். அவ்வளவு தான்; இலட்சிய நடிகர் வீழந்து விடுகிறார்!

“சரி நீங்க சாப்பிடுங்க..” கவிதையாய் ஒப்புதல் அளித்தார் இலட்சிய நடிகர்.

அதற்குப் பிறகு முதல்வராகக் கலைஞர் பொறுப்பேற்கிறார். வள்ளல் நாவலரை எப்படி நேர்செய்தார் என்பதெல்லாம் வேறு விஷயம்!

ஆனால் இந்த நிகழ்வு மூலம், வள்ளல் ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டால் வானத்தையும் வசப்படுததும் வலிமை பெற்றவர் என்பதும், நினைத்ததை முடித்துக் காட்டும் நெப்போலியத்தனம் மிக்கவர் என்றும், நம்பி வந்தவர்களுக்காக- நட்புக்காகத் தன்னையே இழக்கத் துணிகிற குணமும்தானே தெரிகிறது…!

வள்ளல் நடத்திய விலகல் நாடகம்

1972-ல் வள்ளல் துவங்கிய கட்சி, 1977-ல் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அசுர பலம் கொண்டு வளர்ந்த நேரமது. வள்ளல் தமிழகம் முழுவதும் சுற்றி வலம் வருகிறார். அப்படி வருகிறபொழுது 1976ம் ஆண்டு வள்ளல் தமிழக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 1959ல் பாடிஸடாவின் சர்வாதிகார ஆட்சி வேற்ற்றுத்து, வெற்றி வீரனாய் வரவிருந்த ‘சேகுவாராவின் வருகைக்காக மூன்று நாட்கள் கடும்பனியிலும் வெயிலிலும் காத்திருந்த க்யூபா மக்களைப் போல், தமிழக மக்கள் தங்கத் தலைவனைக்காண காத்திருந்தனர். தலைவர் முகம் கண்டு, தங்கள் துயர் மறந்தனர். சேயின் பசியறியும் தாயைப் போல தலைவர் தமிழ் மக்களின் உள்ள சோகத்தை அறிந்து கொண்டார். ஏரி-குளங்களில் வற்றி, வாடிய பயிர்களும், வாடிய முகங்களும் மட்டுமே வள்ளலின் பார்வையில் படுகின்றன.

கங்கை காவிர்த் திடமெல்லாம் சட்டச் சிகலில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. ஆட்சி அதிகாரம் தன்னிடம் இல்லாத பட்சத்திலும், தன்னால் ஆனதைச்செய்ய முடிவெடுக்கிறார் வளல். உடனே முன்னால் அமைச்சர் இராஜாராம் அவர்களை அழைத்து, மறுநாள் பெங்களூர் செல்ல இரண்டு விமான டிக்கெட் வாங்கச் சொல்கிறார்.

அதற்குப் பிறகு கர்நாடகப்பொதுப்பணித்துறை அமைச்சர் பாலகிருஷணன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நாளை மதியம் தங்கள் வீட்டிற்குச்சாப்பிட வருகிறேன். என் வருகையை அமாவிடம் தெரிவியுங்கள்’ என்று மட்டும் சொல்லிவிட்டுப் போனை வைத்து விடுகிறார் வள்ளல்.

பொதுப்பணித்துறை அமைச்சர் பாலகிருஷ்ணன் அவர்கள், இதற்கு முன்பு பலமுறை வள்ளலை விருந்துக்கு அழைத்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயமாக வருகிறேன்’ என்று மழுப்பி வந்த வள்ளல், இன்று வலிய போன் செய்து வருகிறேன் என்று சொன்னதும், அமைச்சருக்கும், அவரது தாயாருக்கம் ஆனந்தம் தாளவில்லை! அமைச்சரின் தாயார் வள்ளலின் தீவிர ரசிகையும் கூட! சொல்லவா வேண்டும்!

மறுநாள் – மதியம் பெங்களூர் விமான நிலையத்திலிருந்து வள்ளலையும் இராஜாராம் அவர்களையும் அமைச்சரின் கார் அழைத்துச் செல்கிறது.

சாப்பாட்டு நேரத்திற்குச் சரியாக வந்த வள்ளலை, ஐந்து நிமிட ஓய்விற்குப் பிறகு – அமைச்சரின்தாயார் அக மகிழ்வுடன் சாப்பிட அழைக்கிறார். வேலைக்கார்களை ஓரம் கட்டி விட்டு, அமைச்சரின் தாயாரே விழுந்து விழுந்து உபசரிக்கிறார்.

வந்த நோக்கத்தை அமைச்சருக்குத் தெரிவிக்கத் தருணம் பார்த்துக்கொண்டிருந்த வள்ளல், இரண்டு-மூன்று வாய் சாப்பிட்டுவிட்டு வேண்டுமென்றே விக்க ஆரம்பிக்கிறார்.

அடுக்களைக்குப் பதார்த்தம் எடுக்கச் சென்ற அமைச்சரின் தாயார், வள்ளலின் தொடர் விக்கல் சத்தம் கேட்டு, அடுக்களையில் இருந்தவாறே, “ஏம்பா! பிள்ளை சாப்பிட முடியாம விக்கிக்கிட்டு இருக்குது. பக்கத்துல இருக்கிற நீ பார்த்துக்கிட்டு இருக்கியே? தண்ணிய எடுத்துத் தரக்கூடாதா?” என்உ தன் பிள்ளையைக் கடிந்து கொள்கிறார்.

உடனே வள்ளல், “எங்கே உங்க பிள்ளை தண்ணி தர்றாரு?” என்று சூசகமாய்ச்சொல்ல அதற்கு அமைச்சரின்தாயார், உனக்கா என் பிள்ளை தண்ணி தரமாட்டேங்குறான்…” என்று யதார்த்தமாகய் சொல்லிக் கொண்டே அடுக்களையில் இருந்து வந்தவர். வள்ளலுக்குத் தண்ணீர் சொம்பை நீட்டுகிறார். ஆனால் வள்ளலின் விக்கல் நாடகம் மூலம் வள்ளல் வைத்த வேண்டுகோள் அமைச்சருக்கு புரிந்துவிட்டது.

அமைச்சரின் தாயாரிடமிருந்து தண்ணீர் சொம்பை வாங்கிய வள்ளல், “அம்மா நீங்க எனக்குச்சாப்பிட சோறும், குடிக்கத் தண்ணீரும் தாராளமாக கொடுக்கிறீங்க..! ஆனா தமிழ் நாட்டுல சாப்பிட சோறே கிடைக்காத அளவுக்கு ஜனங்க தண்ணியில்லாமத்தவிக்கிறாங்க. பயிர் பச்சையெல்லாம் வாடிக் கிடக்குது…” என்று தான் வந்த நோக்கத்தைக் கோரிக்கையாக அமைச்சரின் தாயார் மூலம் அமைச்சரின் பார்வைக்கு நேரடியாகத் தெரிவிக்கிறார் வள்ளல்.

புரிந்து கொண்டு பொதுப்பணித்துறை அமைச்சர், நட்பு நாடி வந்து- நாசுக்காகத்தன்நாட்டு மக்கள் பிரச்சினையை முன் வைத்த வள்ளலைக் கட்டித் தழுவிக்கொள்கிறார்.

உடனே முதல்வர் குண்டுராவிற்கு – வள்ளலின் வருகையையும், வந்த நோக்கத்தையும் தெரிவிக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர்.

கேட்டுக்கொண்ட குண்டுராவ், “எம்.ஜி.ஆர். கேட்கும் உதவியை உடனே செய்யுகள்…அவர் நமக்கு நண்பர் மட்டுமல்ல; நாம் அவரின் ரசிகர்களும் கூட!” என்று சொல்லி அணையைத்திறந்துவிட உத்தரவிடுகிறார்.

வள்ளல் பெங்களூரில் இருந்து சென்னை வந்து சேருவதற்குள் கர்நாடகத் தண்ணீர் தமிழகம் வந்து சேர்கிறது.

இப்படி சாப்பாட்டு வேளையில்கூட சரித்திரம் படைத்தவர் வள்ளல் ஒருவர் மட்டும்தானே!

பூமியை வெட்டித் தங்கத்தைப் புதைத்தோம்!

யானைக்கு ஒரு குணம் உண்டு. தன்னுடைய காதில் எறும்பைவிட நினைத்ததவனையும் நினைவில் வைத்திருக்கும். தன் நேசத்துக்குரிய கரும்பைக்கொடுத்தவனையும் நினைவில் வைத்திருக்கும். இந்த யானை குணம், இதிகாசத் தலைவன் எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்.

அதனால்தான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் மறைந்தபோது, “யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்!” என்றும்;

“இதுவரை பூமியை வெட்டித்தான் தங்கத்தை எடுத்தோம். ஆனால் இன்று பூமியை வெட்டி தங்கத்தை அல்லவா புதைக்கிறோம்!” என்றெல்லாம் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரைப் பற்றியே இதய வெளிப்பாட்டை எழுதிக் காட்டினார்கள் அறிஞர் பெருமக்கள்.

பொன்மனச் செம்மலின் யானை பலத்திற்கும், குணத்திற்கும் எடுத்துக்காட்டாய் நிகழ்ந்த நிகழ்வு இது.

அறுபதுகள் வரைமக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வெள்ளித் திரையில் மட்டுமல்லாமல் நாடக மேடைகளிலும் மின்னிக் கொண்டிருந்தார்.

அன்று தஞ்சை அரண்மனைத் தோட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ‘இன்பக்கனவு’ நாடகம் நடந்துக் கொண்டிருக்கிறது அந்ந நாடக்க் குழுவிற்கு மட்டுமல்லாமல், மக்கள் திலகத்தின் அனைத்துக்ச் செயல்களுக்கும் ஆதாரமாக விளங்கியவர் ஆர்.எம். வீரப்பன் அவர்கள்.

திருவாரூரில் மக்கள் திலகத்தின் நாடகத்தை நடத்த, ஆர்.எம். வீரப்பனிடம், தேதி கேட்டு வருகிறார் தில்லையாடி சிவராமன் என்பவர். ஆர்.எம். வீ. அவர்கள் புரட்சித் தலைவரிடம் விஷயத்தைக் கூற, புரடிச்த்தலைவரும் சந்தோசமாக தேதி தருகிறார். நாடகத்திற்கென்று சல்லிகாசு வேண்டாம். போக்குவரத்து செலவு மட்டும் போதும் என்ற நிபந்தனையுடன் இதைக்கேட்டதும்,

ஆம்.எம்.வீக்கு மட்டுமல்ல தில்லையாடி சிவராமனுக்கும் அதிர்ச்சி. காரணம், வெளியூர் நாடகங்களுக்கு எம்.ஜி.ஆர் நாடக மன்றம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தது. அந்த வேளையில் நமக்குப் போக்குவரத்துச் செலவு மட்டும் கொடுத்தால் போதுமென்று சொல்லியிருக்கிறாரே மக்கள் திலகம். எப்படியோ தேதிகிடைத்துவிட்டதுஸ இதற்கான காரணத்தைக் கண்டுகொள்ளமுயற்சிக்கும் நேரமல்ல இது என்று அவசர அவசரமாக, ஆனந்தத்துடன் ஐநூறு ரூபாயை அட்வான்சாக ஆர்.எம்.வீ அவர்களிடம் கொடுக்கிறார் தில்லையாடி சிவராமன்.

இருந்தும், இந்த இன்பச் சலுகையைத் தனக்கு மட்டும்மக்கள் திலகம் அளித்ததற்கான காரணத்தைத் தேடுகிறார் தில்லையாடி. பிறகுதான் தெரியவருகிறது தில்லையாடி சிவராமனுக்கு.

‘இசை மணி’ என்றும் ‘இசை ஞானச் செம்மல்’ என்றும் கர்னாடக இசையுலகில் போற்றுவதற்குரியவராகத் திகழ்ந்தவர் தஞ்சையைச் சேர்ந்த இந்தத் தில்லையாடி சிவராமன். இன்றைய முதல்வர் கலைஞர் அவர்க்கின் அன்பையும், எம்.கே. தியாகராஜ பாகவதரின் நேசத்தையும் நிறைவாகப்பெற்று யிருந்தவர் என்பது ஊரறிந்த உண்மை.

ஒருசமயம் லாயிட்ஸ் ரோடு, முத்து முதலி தெருவில் உள்ள வீட்டில்மக்கள் திலகம் தங்கியிருந்த போது, அவரது நாடக் குழுவில் பாடுவதற்காக, டி.எஸ். துரைராஜ் மூலம் தில்லையாடி சிவராமன் வரவழைக்கப்பட்டார்.

தனது கம்பீரமான குரலில் பாடி மக்கள் திலகத்தைப் பரவசப்படுத்துகிறார் சிவராமன். அவரை ஒருநிமிடம் இருக்கச்சொல்லிவிட்டு உள் அறைக்ககுச் செல்கிறார் மக்கள் திலகம். அந்த நேரம்பார்த்து, அங்கு வேலை செய்யும் பசுபதி, தில்லையாடி சிவராமனை டீ சாப்பிட வெளியே அழைத்துச் சென்று, “இப்பொழுது எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாடிக்கொண்டிருக்கிறார். இந்த வருமானத்தை வைத்துத்தான் அவர் தன்னுடைய ஐந்து குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார். அவர் பிழைப்பில் நீங்கள் ஏன் மண் அள்ளிப்போடுகிறார்கள்?” என்று தில்லையாடி சிவராமனிடம் கேட்கிறார். அவ்வளவுதான்! தில்லையாடி அவர்கள் டீ சாப்பிட்ட கையோடு திரும்பிக் கூடப்பார்க்காமல் அப்படியேதன் வீடு வந்து சேர்ந்துவிட்டார்.

உள்ளே சென்ற வள்ளல்திரும்பி வந்தபோது தில்லையாடி சிவராமன் அங்கு இல்லை. பிறகுதான் தெரிய வருகிறது. தில்லையாடி சிவராமனின் இந்த மனித நேயம். மக்கள் திலகத்தின் மனதில் அப்படியே கல்வெட்டாய்ப் பதிவாகிப் போகிறார் தில்லையாடி சிவராமன்.

தில்லையாடி சிவராமனின் இந்த மனிதநேயத்தை மறக்காமல்நினைவல் வைத்துத்தான் இந்தச் சலுகை அளித்து கௌரவிக்க நினைத்திருக்கிறார் மக்கள் திலகம்.

திருவாரூர் முழுவதும் தெருத்தெருவாக, ‘தங்கவாள் பரிசு பெற்ற நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர் நடிக்கும் ‘இன்பக்கனவு’ நாடகம் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்கிறார் தில்லையாடி சிவராமன். அன்று, திருவாரூர் முழுவதும் மற்றும் திருவாரூரிலிருந்து வெளியூருக்குச் செல்லும், சக்தி விலாஸ் பஸ் கம்பெனியின் 150 பேருந்துகளிலும், இன்பக் கனவு நாடக விளம்பரம் காணப்படுகிறது.
நாடகம் நடப்பதற்குச் சில தினங்களுக்கு முன், திருவாரூர் ஜமானுதீன் அச்சகத்தில் தன் நேசத்துக்குரிய கலைஞர் அவர்களைச் சந்திக்கிறார் தில்லையாடி சிவராமன். அப்பொழுது தில்லையாடி மீதுகலைஞர் வைத்திருக்கும் அன்பின் மிகுதியால், “இந்த ஊர்ல நாடகம் போட்டு உன்னை லாபத்தோடு அனுப்ப மாட்டாங்க…” என்று அந்த ஊரில் நிலவரம் குறித்து, தில்லையாடி சிவராமனிடம் சொல்லியிருக்கிறார் கலைஞர். ஆனாலும் நம்பிக்கையுடன் செயல்படுகிறார் தில்லையாடி.

அதிகாலையில் ப்ளைமவுத் காரில், திருவாரூர் வந்து சேர்கிறார் மக்கள் திலகம். கலைஞர் எச்சரித்துச் சொன்னது போலவே ‘புளிச்சகுடி கருணாநிதி’ என்பவரின் மிரட்டலால், சர்மா பங்களாவில் தங்கவேண்டிய மக்கள் திலகத்தை, பழக்கடை ராஜன் வீட்டில்தங்க வைக்கிறார் தில்லையாடி.

அது மட்டுமல்லாமல், நாடகம் துவங்குவதற்கு முன் புளிச்சக்குடி கருணாநிதி கலாட்டா செய்கிறார். தஞ்சை டி.எஸ்.பி. குழந்தைவேலு நிலைமையைக் கட்டுப்படுத்திகிறார்.

நடந்தது எதுவுமே மக்கள் திலகத்துக்குத் தெரியாமலேயே ‘இன்பக்கனவு’ நாடகம் முடிகிறது.

திருவாரூரில் நாடகம் முடிந்து ஒரு வாரம் கழித்து, சீர்காழியில்மக்கள் திலகத்தின் ‘அட்வகேட் அமரன்ய நாடகம் நடக்கிறது. அந்த நாடகத்தைப்பார்க்கத் தில்லையாடி சிவராமனும் செல்கிறார். தான் அமர்ந்திருந்த சேரில் சீர்காழி எம்.எல்.ஏ முத்தையாவை உட்கார வைத்துவிட்டு, தில்லையாடி சிவராமன் மேடைக்கே சென்று விடுகிறார்.

ஒரு காட்சியில் 250 பவுண்டு எடையுள்ள குண்டுமணியை அலேக்காகத் தூக்கிக் கீழே போடும் பொழுது, தவறித் தன் காலிலேயே அவரைப் போட்டுக்கொண்டு விடுகிறார். எழுந்து நிற்க முடியாத அளவுக்கு வள்ளலின் கால் எலும்பு முறிந்து விடுகிறது. உடனே தில்லையாடி சிவராமன், டாக்டர் சம்பத்திடம் அழைத்துச் சென்று முதலுதவி அளித்து, மக்கள் திலகத்தை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.

சென்னையிலும் சில மாதங்களாக சிகிச்சை தொடர்கிறது. செய்தி அறிந்த தில்லையாடி சிவராமன், ‘சிங்கப்பூர் ஷா பிரதர்ஸ்’ மூலம் ‘அட்ஜஸ்பல் க்ரட்சர்’ ஒன்றை ஆர்டர் செய்து, அதை குமாரசாமி மூலம் மக்கள் திலகத்திற்குக்கொடுத்தனுப்பி இருக்கிறார். தில்லையாடி அவர்கள்தான் இதை வாங்கி அனுப்பினார். என்று விவரம் தெரியாத மக்கள் திலகம், ஷா பிரதர்ஸிக்கு நன்றிக் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

சில நாட்களுக்குப்பிறகுதான் இதை வாங்கிக்கொடுத்தவர் தில்லையாடி என்றும், அதற்கு விலையாக ஷா பிரதர்ஸிடம் வாங்கிக் கொடுத்த நண்பருக்குப் பத்து மூட்டை நெல் கொடுத்ததாகவும் தெரிய வருகிறது மக்கள் திலகத்துக்கு!

இந்த உண்மை தெரிந்த அடுத்த நிமிடமே தில்லையாடி சிவராமனை கௌரவப்படுத்தி நன்றி தெரிவிக்கு, தன் லாயிட்ஸ் ரோடு இல்லத்திற்கு அழைத்து வரக்கார் அனுப்புகிறார் எம்.ஜி.ஆர் வரும் வழியில்தான் மக்கள் திலகம் அழைத்த காரணம் தில்லையாடி சிவராமனுக்குப் புரிகிறது.

மக்கள்திலகம் வாசலில் கார் நின்றது. காரில் இருந்தவாறே வெளியில் எட்டிப்பார்க்கிறார் தில்லையாடி. அங்கே ஹாலில் அண்ணா, சி.பி. சிற்றரசு, நடிகை சரோஜாதேவி ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள் அவர்களைப் பார்த்தவுடன் தில்லையாடிக்குக் கூச்சம்…. மக்கள் திலகத்தின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக ’150 ரூபாய் விலை மதிப்புள்ள பொருள் வாங்கிக் கொடுத்ததற்காக அதற்கு விலையாக வெகுமதி பெறுவதா?’ என்று நினைத்த தில்லையாடி, காரைவிட்டு இறங்கியவுடன், மக்கள் திலகத்தின் வீட்டிற்குள் செல்லாமல், இரண்டாவது முறையும் தன் வீடு வந்து சேர்ந்துவிடுகிறார்

இப்படிப் பலமுறை தில்லையாடி சிவராமனின் உயர்ந்த பண்பைப்பாராட்டி, வாரிக் கொடுத்து மகிழ, தில்லையாடியைத் துரத்தி துரத்திப் பின் தொடர்கிறார் மக்கள் திலகம்.

ஆனால் மக்கள்திலகம் நிறைந்திருப்பதே போதும் என்று விலகி விலகிச்செல்கிறார் சிவராமன்.

சில ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ர் தமிழக முதல்வரான பிறகு, ஒருமுறை பூம்புகார் விருந்தினர் மாளிகையில் தங்கி இருக்கிறார். அப்பொழுது தில்லையாடியிலிருந்து பொறையார் வழியாகத் திருவாரூர் செல்ல பஸ் ரூட் வேண்டி- மனு ஒன்றை மக்கள் திலகத்திடம் சேர்க்கச் சொல்லி, அன்றைய எம்.எல்.ஏ வான விஜயராகவன்மூலம் கொடுத்தனுப்புகிறார் தில்லையாடி சிவராமன்.

மனுவைப்பார்த்த மக்கள் திலகம், அந்த நிமிடமே மாலைக்குள் பஸ்ரூட் விட உத்தரவு பிறப்பிக்கிறார். காலையில்மனுக்கொடுத்துவிட்டு, அதைப் பற்றிய நினைவே இல்லாமல் டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கிறார் தில்லையாடி சிவராமன். மாட்டு வண்டிகளும், சைக்கிள்களும் மட்டுமே சென்று கொண்டிருந்த அந்த ரோட்டில், பஸ் வந்து கொண்டிருந்ததை பார்த்து, சந்தோஷத்தல் திக்குமுக்காடிப் போகிறார் தில்லையாடி. அது மட்டுமில்லாமல் மறுநாள் வந்த தபாலில் உத்தரவு பிறப்பித்த நகலில் ‘காப்பி டூ சீப் என்ஜினியர், காப்பி டூ ஆர்.டி.ஓ. ‘காப்பி டூ தில்லையாடி சிவராமன்’ என்று வேறு குறிப்பிட்டுக் கௌரவித்து இருந்தது வேறு அவரை மகிழ்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அன்று மக்கள் திலகத்திடம் பொன்னோ, பொருளோ பெற்றிருந்தால், ஒருமந்திரியின் மனுவுக்குக்கிடைத்திருக்கும் மரியாதை தனக்குக் கிடைத்திருக்குமா என்று இன்னமும், மறைந்தும் மறையாமல் மக்கள் மனங்களில் குடியிருக்கும் மக்கள் திலகத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் தில்லையாடி சிவராமன்.

தோட்டத்துக்கு அனுப்பிவை! மகளாகத் த்த்து எடுத்துக்கிறேன்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன் வாழ்நாளில் ‘முதலாளி’ என்று அழைத்த சிலரில் சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலு மணியும் ஒருவர்.

இவர்களில் தேவரும் வேலுமணியும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைக் கடவுளாகவே கருதி வந்தார்கள்.

ஜி.என். வேலுமணி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைத் தன் படத்தில் நடிக்கும் ஒரு நடிகராக மட்டும் நினைக்காமல், நட்பு பாராட்டி, தன் குடும்பத் தலைவராகவே பாவித்து வந்தார். அதனால்தான் வேலுமணி ஒரு வியாபாரம் தொடங்க நினைத்தாலும் சரி; வீட்டில் ஒரு விசேஷம் நடத்த நினைத்தாலும் சரி-மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைக் கலந்தாலோசிந்துத்தான் முடிவெடுப்பார்.

‘கலங்கரை விளக்கம்’ பட ரிலீஸ்… பரபரப்பில் இருந்தபோதிலும் வேலுமணி, ஓர் அதிகாலை நேரம் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட வீட்டிற்குச் செல்கிறார் அப்பொழுது எம்.ஜி.ஆர். முண்டா பனியனுக்கு மேலே, மார்பு வரை கட்டிய லுங்கியுடன் தோட்டத்தைச்சுற்றி வாங்கிங் செயது கொண்டிருக்கிறார்.

வேலுமணியைப் பார்த்தவுடன், “என்ன முதலாளி! இவ்வளவு சீக்கிரமா வந்திருக்கீங்க.. விஷயம் ரொம்ப அர்ஜெண்டா?” என்று கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

அதற்கு வேலுமணி, “அர்ஜெண்டைவிட, அவசியம் என்பதால்தானே உங்களைப் பார்க்க வந்தேன்….” என்கிறார்.

“சொல்லுங்க!”

“பையன் சரவணன் ஒரு பொண்ணைக்காதலிக்கிறான். அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறான்.”

“அப்புறம் என்ன… அவன் ஆசைப்பட்டபடி நடத்தி வச்சுட வேண்டியதுதானே?”

“இல்லே.. பொண்ணு ரொம்ப ஏழையாம்! அது மட்டும்மல்லாம: பொண்ணு, அம்மா-அப்பா இல்லாத அநாதையாம்! இப்பக்கூட அவுங்க அத்தை வீட்ல தங்கித்தான் படிக்குதாம். அதான்…நம்ம ஸ்டேட்டசுக்கு இது சரிப்பட்டு வருமான்னு யோசிச்சுக்கிண்டு இருக்கேன்..” என்று வேலுமணி தயங்கிச தயங்கிச்சொல்லி முடிக்கிறார்.

எல்லாவற்றையும் பொறுமையாக்க்கேட்டுக் கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் “என்ன முதலாளி பெரிய ஸ்டேட்டா இப்படிப்பட்ட பொண்ணை நீங்க மருமகளா ஏத்துகறதுதான் உங்களுக்கு ஸ்டேட்டஸ்! இந்த்ததிருமணம் நடக்கறதுனால, உங்க உறவுக்காரங்க மத்தியிலயும் ஊர்க்காரங்க மத்தியிலயும் உங்க ஸ்டேட்டஸ் உயருமே தவிர குறையாது. ஒண்ணும் யோசிக்காம கல்யாணத்துக்குத் தேதி குறிச்சிட்டு வாங்க! அந்தப்பொண்ணுக்கு நானே அப்பாவா இருந்து, திருமணத்தை நடத்தி வைக்கிறேன்…”
என்று கொஞ்சம் மிரட்டும் தோரணையில் சொல்லி அனுப்புகிறார்.

மறுப்பேதும் பேசாமல் வேலு மணி அங்கிருந்து விரைகிறார். போன வேகத்தில், 7.3.1966ஆம் தேதியில் சென்னை ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தன்மகனுக்கு அந்த ஏழைப் பெண்ணுக்கும் திருமணம் என்றுநாள் குறித்து, முதல்பத்திரிக்கையை மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கிறார்.
திருமண வேலைகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்த வேளையில் மூன்றாம் தேதி அன்று கல்யாண மாப்பிள்ளை ஓட்டிச் சென்ற காரில் மோதி, ஒரு கிழவி இறந்துவிடுகிறார்.

“ஏழாம் தேதி திருமணம். மூன்றாம்தேதி இப்படியா?’ என்று எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து, வரப்போகிற பெண்ணின் ராசியால்தான் நடந்திருக்கிறது என்றும்; திருமணத்திற்கு முன்பே இப்படியென்றால், திருமணத்திற்குப் பிறகு இந்தப் பெண்ணின் ராசி என்ன பாடுபடுத்துமோ என்று வேலுமணி வீட்டார் அந்தத் திருமணத்தையே நிறுத்தி விடுவதென்று தீர்மானித்து விடுகிறார்கள். தன் குடம்பத்தினர் எடுத்த இந்த் தீர்மானத்திற்கு ஒப்புதல் வாங்க தங்களின்குடும்பத்தலைவரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ராமாவரம் வீட்டில் சந்தித்து, விஷயத்தைச் சொல்கிறார் வேலுமணி.

கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர். மிகுந்த கோபத்துடன், “இதே அசம்பாவிதம் திருமணத்திற்குப் பின்னாடி நடந்திருந்தா என்ன பண்ணுவீங்க? சரி; உங்க மகளுக்கே இந்த மாதிரி நிலைமை வந்தா உங்களுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க…. எதுக்கும் உங்க விட்டுல திரும்பவும் எல்லார்கிட்டயும் பேசி, நல்ல முடிவோட வாங்க…’ என்று சொல்லி அனுப்பிவிட்டுக்காரில் ஏறப்போன வேலுமணியை நிறுத்தி, “இதோ பாருங்க முதலாளி… ஒருவேளை நாங்க எல்லோமு சேர்ந்து இந்தத் திருமணத்தை நிறத்தணும்னு முடிவெடுத் திட்டீங்கன்னா, அந்த அனாதைப் பொண்ணை நாளைக்கே என் தோட்டத்துக்கு அனுப்பி வச்சுடுங்க.. நானே அவளை என் மகளா த்த்து எடுத்துக்கிறேன்…” என்ற பொன்மனச்செம்மலின் வார்த்தையைக் கேட்ட வேலுமணி, அப்படியே வெலவெலத்துப்போகிறார்.

“கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஒரு பெண்ணின் வாழ்வில் விளையாடத்துணிந்தோமே! முகம் தெரியாத -முகவரி அறியாத யார் பெத்த பிள்ளைக்காகவோ பரிஞ்சு பேசி, மகளாகத் த்த்தெடுக்க முன்றவந்திருக்கிறாரே இந்த மகான்! ஆனா நம்ம பெத்த பிள்ளை காதலிச்ச பொண்ணுன்னு தெரிஞ்சும் கூட கைவிட நினைச்சோமே..’ என்றுமனம் உருகி, பிதற்றி, பேதிலித்து அப்படியே ஓடோடிப் போய்க் கண்ணீர் மல்க-மக்கள் திலகத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள்.. அதே தேதியில் தான் திருமணம்.. இதில் எந்த மாற்றும் இல்லை!” என்று சொல்லிவிட்டு வேலுமணி விடைபெறுகிறார்.

மார்ச் மாதம் ஏழாம் தேதி,ஏ.வி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபம் நிறைந்து வழிந்தது. த்ந்தை பெரியார், அண்ணா, கலைஞர், வீரமணி என்று அரசியல் தலைவர்கள் ஒருபக்கமும் , சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எம்.ஆர்.ராதா, அசோகன் நம்பியார், நாகேஷ், சரோஜாதேவி என்று திரைப்பட நட்சத்திரங்கள் ஒருபுறமும் திரளாக மின்னிக் கொண்டிருந்தார்கள்!

காரில் வரும் பொழுதுதான், நின்று போகவிருந்த தனதுதிருமணம், மக்கள் திலகத்தாலதான் நடந்து கொண்டிருக்கிறது என்கிற விவரம் தோழிகள் மூலம் மணப்பெண் சாந்திக்குச்சொல்லப்படுகிறது.

அவ்வளவுதான், மணமேடைக்குச்செல்ல வேண்டிய மணப்பெண் சாந்தி, காரைவிட்டு இறங்கியவுடன் குழுமி இருந்த திரைப்பட நட்சந்திர்ங்ஙளையெல்லாம் விலக்கிக்கொண்டு, சந்திர பிம்பமாய் மேடையோரம் நின்று ஒளிவீசிக்கொண்டிருந்த பொன்மனச் செம்மலை நோக்கி ஓடி வருகிறார். இதுவரை ஒரு நடிகராக மட்டுமே திரையில் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைத் தனக்கு அப்பாவா பார்க்கிறோமே என்கிற பரவசத்தில் அப்படியே சாஷ்டாங்கமாக்க் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்.

இந்தத் திருமணத்திற்குத் தேதி குறித்ததிலிருந்து, மணப்பெண் திருமண உறுதிமொழி எடுக்கும்பொழுது அவர் உயரத்திற்கு மைக்கைச் சரிசெய்து கொடுத்தது வரை; உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்த நேரத்தில், வி.ஐ.பி.க்களுக்கு காலை சோறு போட்டால் சாப்பிடமாட்டார்கள்; அப்படியே இலையில் மூடி வைத்துப்போய் விடுவார்கள்; எனவே அரவ்களுக்கு ஸ்வீட், காரம் கொடுத்தால் போதும்; சாதாரண மக்களுக்உக மட்டும் வயிறார சோறு போடலாம் என்று திட்டம் நிறைவேற்றி, அவர்களுக்கு தானே பரிமாறியதிலிருந்து அனைதையும் மணப் பெண்ணின் தந்தையின் ஸ்தானத்திலிருந்து ஓடி ஓடிச்செய்தார் மக்கள்திலகம்.

காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த வேலுமணி, தனது தலைவர் காமராஜர் வர இயலாத நிலையில், அவர் மேடையில் இருப்பது போல் ஏதாது ஒன்று செய்ய வேண்டும் என்று எம்.ஜி.ஆரிடம் சொல்ல, காமராஜரின் மெழுகுச் சலையை மணமேடையில் வைக்கலாம் என்று ஐடியா கொடுத்து, பெருந்தலைவர் காமராஜின் மெழுகு உருவபொம்மையை வடிவமைத்து, மணமேடையில் வைக்கச் செய்த்தும் மக்கள் திலகம்தான்!

காலம் உருண்டோடுகிறது. 1981- ஜி.என். வேலுமணியின் மகன் சரவணன் மாரடைப்பில் இறந்துவிடுகிறார். மகள்திலகமாக இருந்து திருமணத்தை நடத்தி வைத்த எம்.ஜி.ஆர்.. புரட்சித் தலைவராக – தமிழக முதல்வராக சரவணின் இறுதிச் சடங்கிற்குச் செல்கிறார்.

த்ந்தையாக வந்த முதல்வர் எம்.ஜி.ஆரைப்பார்த்தவுடன், “இப்படி சின்ன வயசுலேயே, என்னை விட்டுட்டுப் போவார் வன்று தெரிஞ்சிருந்தா, நான் கல்யாணமே பண்ணிக்காம, காலம்பூரா உங்களுக்கு மகளாகவே வாழ்ந்திருப்பேனே..” என்று கதறி அழுகிறார் வேலுமணியின்மருகள் சாந்தி சரவணன்.

“இப்பவும் நீ என் மகள்தானே!” என்று ஆறுதல் சொல்கிறார் பொன்மனச்செம்மல்.

பெற்றால்தான் பிள்ளையா? பெறாமல் பெற்ற வேலுமணியின் மருமகள் சாந்திசரவணன், இன்னமும் எம்.ஜி.ஆர் இறந்ததாகவே நினைக்கவில்லையாம்! தன் பேத்திகளிடம் கூட தாத்தா கடற்கரையில் உறங்கிக்கொண்டு, ஓய்வெடுக்கிறார் என்றுதான் சொல்லி வைத்திருக்கிறாராம்!

ஏழைக்கு இரங்குபவன்தான் இறைவன்!

இன்னமும் மக்கள் மனங்களில் மகாத்மாவாகத் திகழும் காந்தியடிகள் கற்றுத் தேர்ந்த கல்விமான். பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர் மட்டுமல்ல; மேலை நாட்டிலும் படித்த மாமேதை அவர்! ஆனால் அவர் படித்த எவையுமே, இவரை மகானாக மாற்றி வைக்கவில்லை. அதே நேரத்தில் நம் மண்ணிலே பார்த அரிச்சந்திரா என்ற ஒரு நாடகம்தான் இவரை மகாத்மாவாக மாற வைத்திருக்கிறது.

இப்படித்தான் 1981 – ல் ஈரோடு கொல்லம்பாளையத்தில் ராஜேந்திரன் என்ற இளைஞனை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பாடல் ஒன்று பதப்படுத்தி இருக்கிறது.

ஆம்; ஒரு பௌர்ணமி இரவில், பத்துமணிக்கு வானொலியில், தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?’ என்ற வரிகளினால் ஈர்க்கப்பட்ட ராஜேந்திரன் அந்த நிமிடத்தில் இருந்து வீரத்தின் வெளிப்பாடாய் வெறும் ராஜேந்திரன் வேங்கை ராஜேந்திரன் என்று தன் நாமகரணத்தை மாற்றி வைத்துக்கொண்டார். அது மட்டுமில்லாமல் தன்னுடைய நிறுவனம் அனைத்திற்கும் வேங்கை என்றும், தன்னுடைய நற்பணி மன்ற்த்திற்கு ‘வள்ளல் எம்.ஜி.ஆர் ஆசி பெற்ற வேங்கை நற்பணி மன்றம்’ என்றும் பெயர் வைத்தார். அன்றிலிருந்து மக்கள் திலகத்தின் அடி ஒற்றி நடைபோடுகிறார்.

எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு – 1985இல் சிகிச்சை பெற்று வரும் நேரம்…சேலம் நாமக்கல் எம்.எல்.ஏ திருமணத்திற்குத் தன்னுடைய துணைவியார் ஜானகி அம்மையாருடன் வருகிறார் வள்ளல், ஒன்பது மணிக்கு முகூர்த்தம். எட்டு மணிக்கு விருந்தினர் மாளிகையில் இருந்து கிளம்புகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

அதே நேரத்தில் எம்.எல்.ஏ. வீட்டுத் திருமண மண்டபமே களேபரப்பட்டுக் கிடக்கிறது. நாமகிரிப் பேட்டையச் சேர்ந்த கட்சித் தொண்டர் ஒருவர், அதே முகூர்த்த நேரத்தில், நாக்கரிபேட்டையில் தனக்கும், தன்னுடைய முறைப்பெண்ணுக்கும் நடக்கவிருந்த திருமணதை நிறுத்திவிட்டு, மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு, எம்.எல்.ஏ. இல்லத் திருமணத்திற்கு வரும் எம்.ஜி.ஆர். முன்னிலையில், அவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்துக் கட்ட வேண்டும் என்ற பேராவலினால் – மணப்பெண்ணுடன் எம்.எல்.ஏ. வீட்டு மணப்பந்தல் வாசலில் தாலியுடன் நிற்கிறார்.

கட்சிப் பிரமுகர்களும் காவல் துறையினரும் போக்குவரத்து அமைச்சர் முத்துசாமி உட்பட பலரும் அந்த மணப்பெண்ணையும், மணமகனையும் அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செயகின்றனர். ஆனால் அந்த ஜோடி அங்கிருந்து அங்குலம் அளவு கூட நகர மறுக்கின்றனர்.

இந்தச் செய்தி காரில் வந்துகொண்டிருக்கிற எம்.ஜி.ஆருக்குச்சொல்லப்படுகிறது. கேட்டுக்கொள்கிறார். கார் மணப்பந்தல் வாசலில் நிற்கிறது. இறங்குகிறார் அவ்வளவுதான், அந்த்த் தொண்டர் அத்தனை செக்யூரிட்டிகளையும் கடந்து ஒரே பாய்ச்சலில் மக்கள் திலகத்தின் முன்னால் மணப்பெண்ணுடன் நிற்கிறார்.

எம்.ஜி.ஆர் அந்தத் தொண்டரின் தோள்களைத் தொட்டுக் கொண்டு, “இது தவறான செயல்! இனி இது போன்ற செயலை ஒரு போதும் செய்யக்கூடாது” என்று எச்சரித்துவிட்டு, அதே மணமேடையில், எம்.எல்.ஏ திருமணத்துடன் அந்த் தொண்டர் திருமணத்தையும் நடத்தி வைக்கிறார்.

அதோடு எம்.எல்.ஏ. வுக்குப் பரிசாக்க் கொண்டு வந்திருந்த இரண்டு பணக்கட்டுப் பார்சலில் ஒன்றை எம்.எல்.ஏவுக்கும், இன்னொன்றை இந்தத் தொண்டருக்கும் கொடுக்கிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

பொன்மனச் செம்மல் தாலி எடுத்துக்கொடுத்தால்போதும் என்று மட்டுமே எதிர்பார்த்து வந்த அந்த் தொண்டர், வள்ளல் கொடுத்தப் பரிசுப் பொட்டலத்தை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.

நாமிகிரி பேட்டையிலுள்ள தன் வீடு வந்து சேர்ந்த பின்பே அந்தப் பொட்டலத்தைப்பிரித்துப் பார்க்கிறார். அதில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய். தொண்டருக்கு உடம்பெல்லாம் நடுக்கம். பொட்டலம் மாறிவிட்டதென்று பயந்து, பொட்டலத்துடன் எம்.எல்ஏ. வீட்டிற்கு ஓடோடி வருகிறார் அந்தத் தொண்டர்.

ஆனால் அங்கு மக்கள் திலகம் இல்லை. உடனே எம்.எல்.ஏ. வீட்டாரிடம் பொட்டலத்தைக்கொடுத்து, ‘மாறி வந்துவிட்டது, வைத்துக்கொள்ளுங்கள்’ என்று அந்தத்தொண்டர் கொடுக்க, ‘அப்படியெலாம் மாறிவில்லை. எம்.ஜி.ஆர் உனக்குக் கொடுத்ததுதான். வைத்துக்கொள்’ என்று எம்.எல்.ஏ. வீட்டார் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

அதற்குப் பிறகு அந்த் தொண்டர் அந்தப் பணத்தை வைத்து நாமகிரிப்பேட்டையில் வீடு ஒன்றைக் கட்டி, அதற்கு ‘இதயதெய்வம் எம்.ஜி.ஆர் இல்லம் என்று பெயர் வைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.

இந்தச சரித்திர நிகழ்வு வேங்கை ராஜேந்திரன் மனத்தில் வேரூன்றிப் போய், ஏழைக்கு இரங்குதல், தாழ்த்தப்பட்ட மக்களுக்குகாக தன்னையே அர்பணித்தல் என்று சபதமேற்கிறார்.

அது மட்டுமல்லாமல், அன்றிலிருந்து மக்கள் திலகத்தைப் போலவே, செயின் மோதிரம் போன்ற அனைத்துத் தங்க ஆபரணங்களையும் துறக்கிறார். தான் அணிந்திருந்த விலையுயர்ந்த பேண்ட், பட்டு வேஷ்டி, பட்டுச சட்டை அத்தனையும் விட்டொழித்து,

‘என்றைக்கு இங்கே ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு ஒழிகிறதோ.. என்றைக்கு உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடு மாறுகிறதோ – அது வரை இந்த நாலு முழக்கருப்பு வேஷ்டிப் போதும்’ என்று அன்றிலிருந்து கறுப்பு நிற வேஷ்டி கட்ட ஆரம்பிக்கிறார்.

ஆண்டவனைத் தேடி ஆலயங்களுக்குச் செல்லும் தாழ்த்தப்பட்ட மக்களிடம, ‘ஏழைக்கு இரங்குபவன் தானே இறைவன்? அப்படியென்றால், ஏழைக்காக உழைத்தவர் எம்,ஜி.ஆர். தன்னுடைய திரைப்படங்களில் கூட, ஜாதிப் பெயர் வராமல் பார்த்துக் கொண்டதோடு, இந்தியாவிலேயே ஜாதி, மதம் பார்க்காத ஒரே தலைவன் எம்.ஜி.ஆர். ஒருவர்தான்! எனவே அவரை வணங்குகங்கள்’ என்றுபட்டி தொட்டிகளில் எல்லாம் எம்.ஜி.ஆர் புகழைப் பரப்பிக்கொண்டு, ஊர்தோறும் எம்.ஜி.ஆர்.சிலை வைக்க ஏற்பாடு செய்கிறார்.

இப்படி எம்.ஜி.ஆரின் குணங்களைச் சொல்லி, கொள்கைகளைச் சொல்லி, எம்.ஜி.ஆரின் விசுவாசிகள ஒன்றரை லட்சம் பேரைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார் வேங்கை ராஜேந்திரன்.

இதனால் இவரது மேல்ஜாதி உறவினர்களின் பெரும் பகையைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

இதற்கெல்லாம் வேங்கை ராஜேந்திரன் சிறிதும் கவலைப்படவில்லை. இதற்கிடையில் வேங்கை ராஜேந்திரன் அவர்களுக்கு திருமணம் நடக்கிறது.

“இந்தத் திருமணத்தில், பொன் வேண்டாம், பொருள் வேண்டாம் வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று சொல்லியதைக் கூட, பரவாயில்லை என்று விட்டுவிட்டார்கள். ஆனால், கறுப்பு வேஷ்டியோடு தான் தாலி கட்டுவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் ராஜேந்திரன். மணமேடையிலாவது அந்தக் கறுப்பு வேஷ்டியைக் களைந்துவிட்டு, பட்டு வேஷ்டியைகட்டு!”

என்று சொல்லி மணவீட்டாரில் இருந்து மந்திரி முத்துசாமி வரை எல்லாருமே கட்டாயப்படுத்துகின்றனர்.

ஆனால் வேங்கை ராஜேந்திரன் கொண்ட கொள்கையை விட்டுக்கொடுக்காமல், கறுப்பு வேஷ்டியைக் கட்டிக்கொண்டுதான் மனமகள் கழுத்தில்தாலி கட்டுகிறார்.

எம்.ஜி.ஆரின் ஒரே ஒரு பாடல்வரி, ஒருமனிதனை எஃகுக கோட்டையாக மாற வைத்து, மக்கள் தலைவனாகப்பவனி வருச் சய்த்து. இன்றைக்கு பெரியார்பிறந்த ஈரோட்டில், ஜனவரி 17ம் தேதி எம்.ஜி.ஆர்ப பிறந்த நாளில் தலித் மக்களுக்காகத் தனிக்கட்சித் தொடங்குகிற அளவுக்கு எம்.ஜி.ஆர் என்ற மந்திரச்சொல் மகத்துவம் புரிந்திருக்கிறது.

வெஸ்ட்பரி டு ப்ருக்ளின்

1985… ஒரு ஞாயிறு அன்று திருநெல்வேலி சென்டரல் தியேட்டரில், தன் மனைவி பிலோமியுடன் வர்மா ஸ்பெலிஸ்ட் டாக்டர் ராஜாமணி படம் பார்த்துக் கொண்டிருந்தார். படத்தின் இடைவேளை நேரம். ஆனால் எவருமே எழுந்து போகவில்லை. என்ன காரணமென்று டாக்டர் ராஜாமணிக்கு விளங்கவில்லை. சரி, நாமாவது வெளியில் போய்வரலாம் என்று, தன் இருக்கையை விட்டு எழுந்த டாக்டர் ராஜாமணி, எழுந்த வேகத்தில் அப்படியே உட்கார்ந்து விட்டார்.

காரணம் இடைவேளையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு, வாயில் சளுவாய் ஒழுக, அதை ஜானகி அம்மையார் கர்ச்சிப்பால் துடைத்துவிடுகிற நெஞ்சைப் பிழிகிற அந்தக்காடசியைத் தமிழ்நாடு அரசுத்திரைப்பட பிரிவு காட்டியது.

இதைப்பார்த்த டாக்டர் ராஜாமணி, மனசஞ்சலத்துடன் தன் மனைவியிடம், “இதை ஈஸியா குணப்படுத்திவிடலாமே…இதுவரை இந்த மாதிரி ஸ்டோக் பேஷண்ட் எத்தனை பேரைக்குணப்படுத்தி இருக்கேன். இந்த மனித தெயவத்துக்கா இந்த கதி! என்று சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே ரசிகர்கள் ‘கவலைப் படாதே தலைவா.. நாங் இருக்கிறோம்; நீ நல்லா குணம் ஆயிடுவே!’ என்று அழுதும், தொழுதும், பிரார்த்திக்கிறார்கள்.

பிறகுதான் தெரிந்தது கடந்த ஒரு வாரமாக, மக்கள் படத்தைப் பார்க்க வரவில்லை. இந்த நியூஸ் ரீல் காட்சியைத்தான் பார்க்க வருகிறார்கள் என்று! படம் முடிந்து தியேட்டரில் லைட்டைப் போட்டால் வந்தவர்கள் பாதிப்பேர் கூட இல்லை.

ஒரு மாதம் கழித்து டாக்டர் ராஜாமணியின் பாளையங்கோட்டை விலாசத்திற்கு, எம்.ஜிஆர் மருத்துவக்குழுவுக்குச் சிறப்பு அழைப்பாளரா அரசு ஆணை அனுப்பி இருந்தது.

என்ன ஆச்சரியம்! ஒரு மாத்த்திற்கு முன் தானே படம் பார்த்துவிட்டு, ‘என்னால் குணப்படுத்த முடியும்’ என்று மனைவியிடம் சொன்னேன். இது மக்கள் திலகத்திற்கு எப்படித் தெரிய வந்தது? ஆர்டரை வாங்கிய ராஜாமணி அப்படியே அசந்து நிற்கிறார்.

இது எப்படி நிகழ்ந்தது! தன்னுடைய பேஷண்டும், நண்பருமான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அரிய நாயகபுரம் சுப்ரமணியம் அவர்களின் சிபாரிசில் எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டர் பி.ஆர். சுப்ரமணியம் அவர்கள் மூலம் தான் இந்த அதிர்ஷ்ட அழைப்பு வந்திருக்கிறதென்று.

உடனே புறப்பட்டு, சென்னை வந்த டாக்டர் ராஜாமணி, கன்னிமாரா ஓட்டலில் ராஜ உபசாரத்துடன் தங்க வைக்கப்பட்டார். மறுநாள் காலை நான்கரை மனணிக்கே புற்ப்டுட்க்காரில் ராமாவரம் தோட்ட இல்லத்திற்குச் செல்கிறார். இதுவரை திரையில் மட்டுமே தன் நேசத்துக்குரிய நாயகனைப் பாத்து மகிழ்ந்து கொண்டிருந்த டாக்டர் ராஜாமணி, இனி நேரில் தொட்டுப்பேசியல்லவா பணிவிடை செய்யப்போகிறோம் என்கிற கனவில், தான் ஒரு மருத்துவர் என்பதை மறந்து ஒரு ரசிகராகக் காரைவிட்டு இறங்குகிறார்.

ஆனால் அந்த நிமிடமே டாக்டர் ராஜாமணியின் கனவு பொய்த்து விட்டது. ஆம்! எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டர் ராஜாமணியை அழைத்து, “ஜானகி அம்மையார் பதினான்கு வருடங்களாக் கால்மூட்டு வலியால் சம்மணம் போட்டு உட்காரக்கூட முடியாமல் அவஸ்தைப்படுகிறார் முதலில் அவருக்குச் சிகிச்சை ஆரம்பித்துக் குணப்படுத்துங்கள்!” என்று சொல்கிறார்.

டாக்டர் ராஜாமணிக்கு எதிர்ப்பார்ப்பில் ஏமாற்றமெனினும், தனது திறமையை நீருபிக்கும் வைராக்கியத்தோடு ஜானகி அம்மையாருக்குச் சிகிச்சை ஆரம்பித்து, ஆறே நாளில் குணப்படுத்துகிறார்..

இதில் ஜானகி அம்மையார்,பி.ஆர். சுப்ரமணியம் ஆகியோர் அடைந்த சந்தோஷத்தை விட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அதிக சந்தோஷமடைந்திருக்கிறார். உடனே டாக்டர் ராஜாமணியைக் கட்டித் தழுவிப் பாராட்டி மகிழ்ந்தார் மக்கள் திலகம்.

பரீச்சையில் பாஸாகிவிட்ட மகிழ்ச்சியில் அன்றிலிருந்து எம்.ஜி.ஆருக்குச் சிகிச்சை அளிக்க ஆரம்பிக்கிறார் டாக்டர் ராஜாமணி.

சில மாதங்கள் கழிந்து, ஒரு நாள் ஜானகி அம்மையாரிடம், “பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் எனக்கு வரவேண்டிய ரீடர் போஸ்ட்டைத் தராமல் ஒன்றரை வருடமாக்க் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்! ” என்று டாக்டர் ராஜாமணி பேச்சு வாக்கில் சொல்லி இருக்கிறார். அதை ஒருநாள் காலை எட்டரை மணிக்கு மக்கள் திலகத்திடம் ஜானகி அம்மையார் எடுத்துச் சொன்னதும் அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, உடனே டெப்டி செகரட்டரிக்குப் போன் செய்து, “டாக்டர் ராஜாமணியோட பைல் உடனே என் டேபிளுக்க வரணும்!” என்று முதல்வராக ஆணை பிறப்பித்துச் செயல்படுகிறார் எம்.ஜி.ஆர்.

உடனே டெப்டி செகரட்டரி – டெல்லிக்கும், மதுரை காமராசர் பல்கலைகழகத்திற்கும் தொடர்பு கொண்டு , எல்லாவற்றையும் பேக்ஸில் வரவழைத்து மதியம் இரண்டரை மணிக்கு ஃபைலை முதல்வர் எம்.ஜி.ஆரிடம் கொடுக்கிறார்.

ஃபைலைப் பார்த்த முதல்வர் எம்.ஜி.ஆர் ராஜாமணியின் கோரிக்கை நியாயமானது என்று புரிந்து கொண்டார். உடனே மாடிக்கு ராஜாமணியை வரச் சொல்கிறார்.

“இந்தாங்க உங்க ரீடர் போஸ்டிங் ஆர்டர், உடனே ஊருக்குப் புறப்பட்டுப் போய் உங்க அம்மா அப்பா கையில் கொடுத்து ப்ளசிங் வாங்கிட்டு, நாளைக்கே ட்யூட்டியில் ஜாய்ன் பண்ணிட்டுத் திரும்பி வந்துடுங்க..” என்று சரியாக் பேச்சு வராத மக்கள் திலகம் மழலை மொழியிலும், கை சைகையிலும் உணர்த்தி ஆர்டரைக் கையில் கொடுக்கிறார்.

ஏதோ பேச்சு வாக்கில் ஜானகி அம்மையாரிடம் சொன்ன விஷயம் இந்த அளவுக்குத் தனக்குத் தெரியமல் ஆறு மணி நேரத்தில் முடிந்த அதிசயத்தை எண்ணி எண்ணி நெகிழ்ந்து நிற்கிறார் டாக்டர் ராஜாமணி.

1987- மே மாதம் … இரண்டாவது முறையாக அமெரிக்கா ப்ருக்ளின் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக்ப புறப்படுகிறார் மக்கள் திலகம். உடன் சென்ற மருத்துவர்கள் ஏழு பேரில் டாக்ட் ராஜாமணியும் ஒருவர். நியூயார்க்கில் ஹோட்டல் வெஸ்ட்பரியில், எம்.ஜி.ஆர் தங்கியிருந்த இரண்டாவது மாடியிலேயே இந்த ஏழு டாக்டர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

வெஸ்ட்பிர ஹோட்டலில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ப்ரூக்ளின் மருத்துவமனைக்குச் செல்ல, மாடியில் இருந்து மக்கள் திகலம் கீழே வருகிறார். கீழே பத்து கார்கள் புறப்பட தயாராக தயார்நிலையில் நிற்கிறது. ஹோட்டலைச் சுறி மக்கள் வெள்ளம்! கடல் கடந்தும் காலூன்றி இருக்கிறாரே இந்தக் காவிய நாயகன் என்று நம்மவர்கள் எல்லோரும் அதிசயத்துப் போகிறார்கள்.

செக்யூரிட்டி கார்கள், வி.ஐ.பி. கார்கள் புடைசூழ மக்கள் திலகத்தின் கார் ஓட்டலில் இருந்து புரூக்ளின் மருத்துவ மனைக்கு புறப்படுகிறது. வழு நெடுக மக்கள் கைசைக்கிறார்கள். இதென்ன… வெஸ்ட்பரி ஹோட்டலிலிருந்து ப்ரூக்ளின் மருத்துவ மனைக்கு செல்கிறோமா? அல்லது ராமாவரம் தோட்டத்திலிருந்து கோட்டைக்குச் செல்கிறோமா என்கிற பிரமிப்பு மருத்துவர்களுக்கு! அமெரிக்கர்களுக்க இவர் எந்த நாட்டு மன்னர் என்றும், எந்த தேசத்துப் பிரதமர் என்றும் குழம்பி நிற்கிறார்கள்.

ஒருநாள் எம்.ஜி.ஆர். ஓய்வெடுக்கிறார் என்று நினைத்து ஆறு டாக்டர்களும், வெளியில் சுற்றிப் பார்க்கச் சென்று விடுகிறார்கள். டாக்டர் ராஜாமணி மட்டும் வெளியில் செல்லாமல், தன்னுடைய துணிகள் அனைத்தையும் துவைத்து அறைக்குள்ளேயே தொங்க விட்டு, காயப் போட்டு விட்டுக்குளித்துக்கொண்டிருக்கிறார்.

அப்பொழுது எம்.ஜி.ஆருக்கு தூக்கம் வராமல், டாக்டர்களிடம் பேசிக்கொண்டிருப்பதற்காக ஒவ்வொரு அறைக் கதவையும் தட்டிக்கொண்டு வருகிறார். யாரும் இல்லை. கடைசியாக ராஜாமணி அறைக் கதவைத் தட்டுகிறார்.

குளித்துக் கொண்டிருந்த டாக்டர் ராஜாமணி, சக நண்பர்தான் கதவைத்தட்டுகிறார் என்று நினைத்து, கட்டியிருந்த ஈர டவலுடன் வந்து கதவைத் திறக்கிறார், எதிரில் எம்.ஜி.ஆர்.

“நீங்க வெளியில் போகலையா?” என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் வந்து ஷோபாவில் உட்காருகிறார். அறை முழுவதும் தொங்கிக் கொண்டிருந்த துணிகளைப் பார்க்கிறார். “என்ன இது… எல்லாத்தையும் லாண்டரிக்குப்போட்டு இருக்கலாம்ல!” கொஞ்சம் கோபமாக்க் கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

“ஒரு துணிக்கு 18 டாலர் சார்ஜ் பண்றாங்க.. எதுக்கு இவ்வளவு பணம் வேஸ்டா கொடுக்கணும்னு தான் நானே துவைச்சுப் போட்டேன்…” என்று டாக்டர் ராஜாமணி சொல்ல, மக்கள் திலகம் மௌனமாகப்புன்முறுவலுடன் ரசிக்கிறார்.

பிறகு ஷோபாவில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆரின் பாதங்களுக்கு ஆயில் போட்டு, மசாஜ் செய்கிறார் டாக்டர் ராஜாமணி, எம்.ஜி.ஆர் அப்படியே தூங்கி விடுகிறார்.

இந்த நிகழ்வு நடந்த சில தினங்களுக்குப் பிறகு, எம்.ஜ.ஆர். டாக்டர் ராஜஸமணியிடம, ப்ளைட் டிக்கெட்டுடன் கையில்பணமும் கொடுத்து, டாக்டர் ராஜாமணி கையில் பத்து செட் பேண்ட் சர்ட்டுகளையும் கொடுத்து, “உங்ககூட டாக்டர்முத்து சாமியையும் அழைத்துக்கொண்டு ஜாலியா கலிபோர்னியா, மியாமி, டிஸ்னி வேர்ல்ட் என்று எல்லா இடத்தையும் சுத்திப் பார்த்துட்டு வாங்க…” என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.

அதற்குப்பிறகு அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தவுடன் என்னுடைய டூட்டி டைம் அதிகாலை 5.30 முதல் நள்ளிரவு 12.40வரை. இந்த நேரத்தில் நான் வேறு எவரையும் சந்திக்கவோ, அல்லது எவருக்கும் வைத்தியம் செய்யவோ கூடாது. காரணம் தமிழகத்தில் புகழ்பெற்ற முதல்தர வி.ஐ.பிக்கு பிரத்யேகமாக சிகிச்சை அளிக்க அரசாங்கம் அனுப்பி இருக்கிறது.

புரட்சித் தலைவருக்கு நான் சிகிச்சை அளிக்க ஆரம்பிக்கும் பொழுது அவரால் ஒரு எழுத்தைக்கூட உச்சரிக்க இயலாது. சிகிச்சை தொடங்கிய மூன்றாவது நாளே புரட்சித் தலைவர் ‘பா’ என்று உச்சரித்தார். இந்த சிகிச்சைக்கு முன்பு அமெரிக்காவில் இருந்த ஸ்பீச் தெரபி ஸ்பெஷலிஸ்டுகளெல்லாம் சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் என்னுடைய சிகிச்சையில் மூன்றாவது நாளே ஓர் எழுத்தை உச்சரித்தார். அதற்குப் பிறகு புரட்சித் தலைவருக்கு என் சிகிச்சை மீதும் அவர் மீதும் தன்னம்பிக்கை கூடி அவரே மிகவும் ஆர்வம் காட்டினார்.

என் சிகிச்சைக்குப் பிறகு டெல்லியில் நடந்த இந்திரா காந்தி இரங்கல் கூட்டத்திற்குச்சென்று ஏழுநிமிடம் தொடர்ந்து பேசினார். அந்த மகிழ்ச்சியிலேயே சென்னை வந்ததும் கார் ஒன்றை எனக்கப் பரிசளித்தார்.

அதற்குப் பிறகு ஒருநாள் நான் அதிகாலை தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸில் இருந்து ராமாவரம் தோட்டத்திற்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் பொழுது, புரட்சித் தலைவருக்கு மிகவும் வேண்டப்பட்ட வி.ஐ.பி. ஒருவரின் கட்டாய அழைப்பின் பேரில் அவரது இல்லத்திற்குச் சென்று சிகிச்சை அளித்துவிட்டு தோட்டத்திற்குக் கொஞ்சம் தாமதமாகச்சென்றேன். புரட்சித் தலைவர், “ஏன் லேட்?” என்று கேட்டார். அரசின் சட்ட விதியை மீறி சென்று வந்ததால், புரட்சித் தலைவரிடம் “டிரைவர் லேட்டாக வந்தார்” என்று பொய் சொன்னேன்.

உடனே டிரைவரை அழைத்து, “ஏன் டாக்டர் வீட்டிற்கு லேட்டாகச்சென்றாய்?” என்றார். அதற்கு டாக்டர் வி.ஐ.பி வீட்டிற்கு போய் வந்த உண்மையைச்சொல்லி விட்டார். அவ்வளவுதான்! அன்றிலிருந்து 11 நாட்கள் எம்.ஜி.ஆர் என்னுடன் பேசவில்லை. எனக்காக ஜானகி அம்மையார் சிபாரிசு செய்தும் என்னை அவர் மன்னிக்கவில்லை.

பன்னிரண்டாவது நாள் அமெரிக்காவிலிருந்து வந்த திருமதி ஜானு(ஜானகியின் அண்ணன் மகள்) என்னைப் பற்றி, நிறைய எடுத்துச் சொல்லி என்னுடன் புரட்சித் தலைவரைப்பேச வைத்தார். அவர் குழந்தையைப் போல் கண் கலங்க, “நீ அந்த வி.ஐ.பி. வீட்டிற்கு போனதில் எந்த தப்பும் இல்லை. ஆனால் என்னிடம் பொய் சொன்னதுதான் எனக்குப்பிடிக்கவில்லை” என்று கட்டி அணைத்துக்கொண்டு பேசினார்.

பிறகு “அன்னிக்கு சீக்கிரம் வீட்டுக்கு போங்க, போய் என் படம் டி.வியில போடுறாங்க பாருங்க” என்று சொல்லியவர்.

“என்ன டி.வி. வீட்டுல இருக்கு” என்று கேட்டார். “சாலிடர் பிளாக் அண்ட் ஒயிட்” என்று சொன்னேன்.

“அப்படியா கலர் படத்தைக் கலர் டி.வி.யிலதான் பார்க்கணும்” என்று சொல்லிவிட்டு உதவியாளரை அழைத்து,
“உடனே ஒனிடா கலர் டி.வி. ஒண்ணு வாங்கி டாக்டர் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்” என்று உத்தரவிட்டார். எனக்கு வாங்கித் தர உத்தரவிட்டார்.

என்னால் அன்றைக்கு அங்கிருந்த 22 பேருக்கும் கலர் டி.வி இரண்டு மணி நேரத்தில் கிடைத்தது.

இன்னொரு சம்பவம்.

தமிழகம் முழுவதும் மழை, வெள்ளம், ராமாவரம் தோட்டத்திலும் வள்ளம் புரட்சித் தலவைர் அலுவலகம், வீடு இரண்டையுமே கன்னிமாரா ஓட்டலுக்க மாற்றினார். அவரது அறைக்குப் பக்கத்தில்தான் என் அறையும் இருந்தது. மாலை ஊருக்குச் சென்று வர அனுமதி கேட்டேன். சரி என்று சொல்லி விட்டு வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட ஹெலிகாப்டரில் சென்று விட்டார்.

நான் புறப்பட்டு அரசு மரியாதையுடன் சென்னை விமான நிலையத்திற்குச்சென்று விமானத்திற்குள் உட்கார்ந்து விட்டேன். ஆனால் என்னிடம் செலவுக்குப்பத்து பைசா கூட இல்லை.. கிளம்பிய அவசரத்தில் அவரும் தரவில்லை. நானும் கேட்க மறந்துவிட்டேன்.

ஆனால் புரட்சித் தலைவர் ஹெலிகாப்டரில் வானத்தில் பறந்து கொண்டிருந்த பொழுதே ஜானகி அம்மையாரிடம் ஒயர்லஸ் மூலம் தொடர்பு கொண்டு, “காலையில் டாக்டர் ஊருக்குப் போறதாகச் சொன்னாரு. நானும் அவசரத்துல செலவுக்கு பணம் கொடுக்காம வந்துட்டேன். உடனே அவருக்குப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்” என்று சொல்லி இருக்கிறார்.

அவ்வளவுதான். விமானம் புறப்பட பத்து நிமிடம் இருக்க எனது இருக்கைக்கே வந்து 20ஆயிரம் ரூபாய் பணத்தை செக்யூரிட்டி கொடுத்து விட்டுச் சென்றார். இப்படி அவர் நிகழ்த்திய அற்புதங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அவர் இறப்பதற்கு முன்பினம்”டிசம்பர் 23-ம் தேதி கிறிஸ்துமஸூக்க்காக ஊருக்குச் செல்கிறேன்” என்று அவருக்கு என் கையாலேயே கேக் ஊட்டிவிட்டுச் சென்ற இறுதிநாள் வரை அவர்நிகழ்த்திய அற்புதங்கள் தான் நிழலாடிக்கொண்டிருக்கின்றன.

உண்மையிலேயே இவர் வாத்தியார்தான்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இன்னமும் மக்களின் மனதில் மகத்தான சக்தியாக, அரசியலில், சினிமாவில், தனிமனித வாழ்வில், தன்னை எவராலும் வெல்ல இயலாத வரலாற்று நாயகனாகத் திகழ்கிறார் என்றால், அதற்குக்காரணம், விடாமுயற்சி, எந்த ஒரு வேலையைச்செய்தாலும், அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, அது முழுமை அடையும் வரை போராடுகிற அவரது இயல்பு!

நான் எதிர்பார்க்கிற Perfection கிடைக்கவில்லை என்றால், அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தாலும் சரி, திரையுலகில் கற்றுத் தேர்ந்த கவிக் கம்பனாக இருந்தாலும் சரி, தான் எதிர்பார்த்தது கிடைக்கும் வரை விட மாட்டார். தாமஸ் ஆல்வா எடிசன்,மின்சார பல்பை கண்டுகிடிக்கும் முயற்சியில் சுமார் முந்நூறு தடவைகளுக்கும் மேல் தோலவியடைந்தார். ஆனால் மனந்தளராமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, பல்பை கண்டுபிடித்ததோடு, அல்லாமல்- பல்பினுள்ளே ஒளிரும் ஊடகமாக எலெக்ட்ரான் கார்பனிலிருந்து, டங்ஸ்டன் வரைக்கும்படிப்படியாக ஆராய்ச்சி செய்து, நவீன மின்சார பல்பை வடிவமைத்தார். அதைப்போலவே வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்கள் சமூக விஞ்ஞான பார்வை கொண்டேதாம் நடிக்கும் திரைப்படத்தையும் உருவாக்கினார். அவரது படங்களில் வருகின்ற பாடல்கள், வெறும் சொற்சுவையும் இசை அழகும் இருப்பதோடு மட்டுமல்லாமல் உயர்ந்த சமூக கருத்துக்களையும் உள்ளடக்கியிருந்தது. அவரது திரைப்படங்களுக்குபாடல் எழுதிய பாடலாசிரியர்கள் கூட மற்ற படங்களுக்கு எழுதும்போது இத்தகைய சிறப்புக்கு ஆட்படாமற் போனதற்கு காரணம், பாடல்களில் வள்ளல் காட்டிய ஈடுபாடுதான்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் படங்களில் வரும் பாடல்கள் இன்றும் சாகாவரம் பெற்றுத் திகழ்வதற்குப் பாடலாசிரியர், இசையமைப்பாளரைக்காட்டிலும், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். காட்டிய தனி ஈடுபாடுதான் காரணம். இதற்கு உதாரணங்கள் சில.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ‘நேற்று இன்று நாளை’ படம் வெளிவந்த நேரமது.

கவியரசு கண்ணதாசன் , லேனா செட்டியாரின் மருமகன் முத்தையா செட்டியார் இருவரும் நடேசன் பூங்கா பக்கமுள்ள தனது இல்லத்திலிருந்து , மவுண்ட் ரோட்டிற்கு ஒரு வேலையாகப் புறப்படுகிறார்கள். முத்தையா செட்டடியாரின் மகன் கிருஷ்ணா கார் ஓட்ட, முன் சீட்டில் கலைவாணன் கண்ணதாசனின் நண்பர் பாக்யநாதன் என்பவரும் அமர்ந்திருக்கிறார்.

எல்.ஐ.சி. கட்டடத்தைத் தாண்டி கார் சென்று கொண்டருந்த பொழுது,அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் நடித்த ‘நேற்று இன்று நாளை’ படத்தின் கட்-அவுட்டைக்கவியரசர் கண்ணதாசன் பார்க்கிறார்.

உடனே அருகில் அமர்ந்திருந்த முத்தையா செட்டியாரிடம் எம்.ஜி.ஆர் கட் அவுட்டைக்காட்டி.

“எல்லோரும் இவரை வாத்தியார், வாத்தியார்னு சொல்றாங்க. நான் கூட ஆரம்பத்துல இவர் எந்த ஸ்கூலுக்கு வாத்தியார்னு கிண்டலடிப்பேன். இப்ப சொல்றேன் முத்தையா… உண்மையிலேயே இவர் வாத்தியார்தான். இன்னும் சொல்லப்போனா, இவர் எனக்குக்கூட வாத்தியார்தான்!” என்கிறார்.

“என்ன சொல்றீங்க?” முத்தையா செட்டியார் இடைமறித்துக் கேட்கிறார்.

“ஆமய்யா.. அவர் நான் எழுதிய பாட்டுலகூட தப்பை சிவப்பு மையில திருத்தியிருக்கிறார். அப்ப எம்.ஜி.ஆர் வாத்தியார்தானே!” என்று தன் மயக்கும் சிரிப்புடன் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் கவியரசு.

அதேபோல் உவமைக் கவிஞர் சுரதா, “ஒருத்தன் அறிவாளின்று தெரிஞ்சுட்டா, அவனை வெறும் வார்த்தையால் மட்டும் பாராட்ட மாட்டார். அவனைப் பணத்தாலும் அடிப்பார் எம்.ஜி.ஆர்!” என்று மக்கள் திலகத்தை பற்றி சொல்வார்.

இந்த காலகட்டத்தில்தான், தன்னுடைய திரையுலக வாழ்வில், தனி முத்திரையுடன் திகழ்ந்த மக்கள் திலகம் முதன் முதலாக ஒரு படத்தை இயக்குவது என்று தீர்மானிக்கிறார்.

மண் குடிசையில் பிறந்து, மக்கள் தலைவனாகி, மன்னனாக மகுடம் சூடி மக்கள் நலன் காத்து, தன்னுடைய கொள்கை, கோட்பாடுகளைக் கதையாக வடித்து ‘நாடோடி மன்னன்’ என்ற பெயரில் பிரம்மாண்டமாக உருவாக்கத் திட்டமிடுகிறார். சத்யா ஸ்டுடியோவில் கதை டிஸ்கஷன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியபாடல்களில், ‘பாசவலை’ படத்தில் எழுதிய

“குட்டி ஆடு தப்பி வந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி தப்பி வந்தால்
குறவனுக்குச் சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர்கள் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்”-

என்ற பாடல்தான் மக்கள் திலகத்திற்கு ரொம்பப் பிடித்தப் பாடல்

இந்தப் பாடல் மக்கள் திலகத்தின் நினைவுக்கு வருகிறது, எனவே, தான இயக்கவிருக்கும் ‘நாடோடி மன்னன்’ படத்தை டைரக்கட் பண்றேன். வேறு சில கவிஞர்களும் இந்தப் படத்துக்குப் பாட்டு எழுதி இருக்காங்க. நீங்களும் ஒரு பாட்டு எழுதிக்கொடுங்க… என்கிறார்.

“சரி” என்கிறார் பட்டுக் கோட்டையார்.

“எப்ப எழுதித் தர்றீங்க” எம்.ஜி.ஆர். கேட்கிறார்.

“நாளைக்குத் தருகிறேன்” என்று சொல்லிவிட்டு விடை பெறுகிறார் பட்டுக்கோட்டையார்.

மறுநாள் சொல்லியபடி பாட்டுடன் வருகிறார் பட்டுக்கோட்டையார். பாடல் எழுதிய பேப்பரை மக்கள்திலகத்திடம் கொடுக்கிறார். வாங்கிப் படித்த மக்கள்திலகம் சிரித்துக் கொண்டே “நல்லா இருக்கு! நான் பயன்படுத்திக்கிறேன்.. ஆனா இந்தப் பாடல் என் படத்துக்காகத்தான் எழுதினதுன்னு என்னை ஏமாத்த முடியாது!” என்று சொல்லிக் கொண்டே மேஜை டிராயரில் இருந்த 18.8.56 இல் வந்த ஜனசக்தி பேப்பரைக்காட்டி, அவர் கட்சிப்பத்திரிகையில் வந்த,

“சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி
சோம்பல் இல்லாமல் ஏர்நடத்தி
கம்மாக் கரையை ஒசத்திக் கட்டி”.

என்று தொடங்கும் 64 வரிக்கவிதையைக் காட்டகிறார். மக்கள் திலகம். பட்டுக்கோட்டையார் மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக் கொள்கிறார்.

பிறகு மக்கள்திலகத்தின் விருப்பப்படி, அந்தக் கவிதை வரிகள் குறைக்கப்பட்டும், பல வரிகள் மாற்றப்பட்டும் ஒரு முழுமையான வடிவம் பெறுகிறது.

“நானே போடப்போறேன் சட்டம்”
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம்பெறும் திட்டம்!”

போன்ற வரிகளெல்லாம், முதலில் பட்டுக்கோட்டையார் எழுதிய 64 வரிகளில் இல்லாத பாடல் வரிகள்..

இந்தப் பாடல், மக்கள்திலகத்திற்கு மன நிறைவளித்ததால், இன்னொரு பாடலையும், பட்டுக் கோட்டையாரையே எழுதச்சொல்கிறார். அந்த பாடல்தான்..

தூங்காதே தம்பி தாங்காதே… நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே” என்று துவங்கும் பாடல்!

இதே பாடலின் சாயலில் மக்கள் திலகம் இயக்கும் இரண்டாவது படமான ‘அடிமைப்பெண்’ படத்தில் வாலியை எழுதச் சொல்லியிருக்கிறார். அந்தப் பாடல்தான்..
“ஏமாற்றாதேத ஏமாற்றதே
ஏமாற்றதே ஏமாறாதே!- பாடல்

அதே போல் அதே ‘அடிமைப் பெண்’ படத்தில் ஆலங்குடி சோமு அவர்களையும் ஒருபாடல் எழுதச் சொல்கிறார் மக்கள் திலகம். அதன்படி எழுதி எடுத்துக்கொண்டு தன்னுடைய உவியாளர்-இன்றைய கவிஞர் காளிதாஸ் அவர்களையும் அழைத்துக்கொண்டு ஆலங்குடி சோமு ராமாவரம் இல்லம் செல்கிறார். மக்கள் திலகத்திடம் பாடல் எழுதிய பேப்பரை நீட்டுகிறார், அதில்,

“பாட்டுப் பாடும் குயிலம்மா
என்னைக் கொஞ்சம் பாரம்மா-
இங்கு உனக்கு இருக்கும் அம்மா
வைப்போல் எனக்கு யாரம்மா-”

என்று பல்லவியும், சரணத்தில்

“ஆத்துக்குள்ளே ஒத்தைக் கால் கடுக்க
நித்தம் காத்திருந்து மீன்பிடிக்கும் கொக்கண்ணா,
உழைத்து வாழ்ந்திட முயற்சிகள் பண்ணு!

உடம்பில் சொம்பலை வளர்க்காதே கண்ணு!
இது தப்பண்ணா

என்று முடித்திருக்கும் பாடலைப்படித்த மக்கள்திலகம், பாட்டு நல்லா இருக்கு… ஆனா இந்தப் பாடல் என் படத்துல – அதுவும் நானே பாடுகிற மாதிரி இருந்தா, எதிர்க்கட்சிக்காரங்க, எம்.ஜி.ஆரே அவுங்க தலைவர் அண்ணாவைக் கண்டிச்சுப் பாடுறார்ன்னு தப்பா பிரச்சாரம் பண்ணிடுவாங்க. அதனால இந்த வரிகளெல்லாம் வேணாம். அது மட்டுமில்லாம; இதைவிட இன்னும் கொஞ்சம் எளிமையா இருந்தா இன்னும் நல்லா இருக்கும். அதனால,

“தாயில்லாமல் நானில்லை
தானே எவரும் பிறந்ததில்லை..”

என்றுதொடங்கும் பல்லவியைச் சொல்லி, இதற்குச் சரணங்கள் எழுதுங்கள்’ என்று வரி எடுத்துக் கொடுக்கிறார் மக்கள் திலகம்.

இப்படித்தான், பார்த்துப் பார்த்து, பட்டை தீட்டித் தீட்டி கதையை, காட்சியை, பாடலைக் கவனத்தோடும், கண்டிப்போடும் கையாண்டதால்தான் இன்றும் அவர் படங்கள் காலத்தை வென்று நிற்கின்றன.

பிள்ளைக்கு பேரு வச்சா போதும்

17.10.1972 – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவராக உருமாறி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தடிக் கட்சியைத் தொடங்கிய நேரம்…

கும்பகோணம் – மேலக்காவிரித்தெருவில் உள்ள தனது வீட்டு வாசல் முற்றத்தில் அமர்ந்துகொண்டு அதிகாலையில் ஒரு பெரியவர் , “ஏண்டா ராஜன்.. இயற்கை கலைசன் நற்பணி மன்றம்’ ன்னு பேர் வச்சுக்கிட்டு, கதை எழுதறேன், கவிதை எழுதுறேன்னுட்டு, இங்கே லோக்கல்லேயே சுத்திக்கிட்டு இருக்கியே…? இதே கும்பகோணத்துலதாண்டா ஆணையடிப் பள்ளிக்கூடத்துல மாணாம்கிளாஸ் படிச்ச எம்.ஜி.ஆர் இதுவரை சினிமாவுல சக்கரவர்த்தியா திகழ்ந்தது மட்டுமல்லாம, இன்னிக்கு ஒரு தனிக்கட்சித் தொடங்கி தலைரவகாவும் ஆகியிருக்கிறார்.

அதுமட்டுமில்லை; இங்க இருக்கிற வாணிவிலாஸ் சபாவுல (இப்பொழுது இது விஜயலட்சுமி டாக்கீஸாக இருக்கிறது) . மதுரை பாய்ஸ் கம்பெனிக்காரங்க நாடகம் போடும்போது,, அவுங்க நாடகத்துல ‘லவ-குசா’ கேரக்டரில் நடிக்க பையன்கள் கிடைக்காம, இதே உச்சிப்பிள்ளையார் பக்கத்துல குடியிருந்த – செக்கச் செவேல்னு இருந்த எம்.ஜி.ஆரையும், அவுங்க அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியை யும்தான் அழைச்சுட்டுப் போய் நடிக்க வச்சாங்க.

அப்ப நடிக்கும் போது எம்.ஜி.ஆருக்கும் , எம்.ஜி.சக்ரபாணிக்கும் சண்டைப்பயிற்சி கற்றுக்கொடுத்த நம்ம ஊர் அசன், உசேனுக்கு இப்பவும் மாதாமாதம் பணம் அனுப்பி உதவி செஞ்சிக்கிட்டு இருக்காரு எம்.ஜி.ஆரு….! பி.யூ.சி வரைக்கும் உன்னைப்படிக்க வச்சு, என்ன ப்ரயோஜனம்?” என்று தன் மகன் ராஜனைக் கண்டித்து அறிவுரை சொல்கிறார்.

தந்தையின் ‘உபதேசம்’ கேட்டு ராஜனுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. அன்றிரவே சென்னை கிளம்புகிறார் ராஜன்.

ராஜன் சென்னை வந்த நேரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பிலும் கட்சியிலும் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்ததால், அவரைச் சந்திக்க முடியாமல், மற்ற இயக்குநர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணா, கதை, வசனம் எழுதிய காலத்தில்-அவர் தங்கியிருந்த கொத்தவால் சாவடிகோவிந்தப்பன் தெருவிலேயே ராஜன் தங்கிக் கொண்டு, சாப்பாட்டுக்காகப் பழ வியாபாரமும் செய்கிறார்.

கொஞ்சநாள் கழித்து, திருவேற்காட்டில், பொரிக்கடலைக் கடை வைத்துக்கொண்டு, கருமாரி அம்மன் பற்றிய பாடல்கள் எழுதி அதைப் புத்தகமாக வெளியிட்டு, அதையும் விற்றுக் கொண்டிருக்கிறார் ராஜன்.

இந்த நேரத்தில்தான் முகலிவாக்கம் மாந்தோப்பில் “உரிமைக் குரல்” படப்பிடிப்பல் மக்கள்திலகம் இருக்கிறார் என்று ராஜனுக்குத் தெரியவருகிறது.

உடனே அங்கிருந்து முகலிவாக்கம் கிளம்புகிறார் ராஜன். அங்கு மக்கள் புடைசூழ, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நின்று ஷூட்டிங் பார்க்கிறார் ராஜன்.

மதியம் உணவு இடைவேளை வருகிறது . மக்கள்திலகம், போலீஸ் செக்யூரிட்டியுடன் காரை நோக்கி வருகிறார். மக்கள், “தலைவா, தலைவா” என்று ஆரவாரித்து அன்பைப்பொழிகிறார்கள்.

‘இந்த ஆரவார இரைச்சலுக்கிடையில்ராஜன் விண்ணைப் பிளக்கும் அளவுக்கு, “அண்ணே…” என்று உரக்க அழைக்கிறார். உடனே ஜனங்கள் உட்பட, காரில் ஏறப்போன மக்கள் திலகமும் திரும்பிப்பார்க்கிறார். ராஜனைப் பார்த்து ‘வா’ என்று கை அசைக்கிறார். அந்தக் காந்தக்கை விரல் அசைவில், கண நேரத்தில் மக்கள் திலகம் அருகில் ஓடி வந்து நிற்கிறார் ராஜன்.

என்ன?

“சினிமாவுல எனக்கு வாய்ப்பு வேணும்..”

“என்ன வாய்ப்பு?”

“கதை, வசணம், பாடல்கள் இதுல ஏதாவது ஒரு துறையில..”

“எங்கிருந்து வர்றே?”

“நீங்க படிச்ச கும்பகோணத்தில் இருந்து…!”

அப்படியே ஒரு நிமிடம் நெகிழ்ந்து நிற்கிறார் மக்கள் திலகம். இந்த நேரம் ராஜன், தான் எழுதிய திருவேற்காடு கருமாரி அம்மன் பாடல் புத்தகத்தைக்கொடுக்கிறார்.

வாங்கிக் கொண்ட மக்கள் திலகம், “கட்சி ஆபீஸ்ல போய் துரையைப் பாரு..” என்று சொல்லிவிட்டு, காரில் புறப்படுகிறார். கனவில் வரும் தேவதூதனைக்கண்ணாரப்பார்த்துப் பேசிய மகிழ்ச்சியில், அப்பொழுதே அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ‘அண்ணா தி.மு.க. அலுவலகம்’ சென்று துரையைச் சந்தித்து, தனது விருப்பத்தைச் சொல்கிறார் ராஜன்.

கேட்டுக் கொண்டு துரை, “உரிமைக்குரல்” படப்பிடிப்பில் தலைவர் ரொம்பவே பிஸியா இருக்கார். படம் ரிலீசுக்குப் பிறகு வந்து பாருங்க… தலைவரைச் சந்திக்க வைக்கிறேன்..” என்று சொல்கிறார்..

“சரி; வருகிறேன்..” என்று கிளம்பிய ராஜனிடம், “ஏம்பா… திருவேற்காட்டுல நம்ம கட்சி அமைப்பு இருக்கா?” என்று கேட்கிறார் துரை.

“இல்லை!” என்கிறார் ராஜன்.

“அப்படின்னா அங்கிருக்கிற இளைஞர்களை நம்ம கட்சி மெம்பர்களா சேர்த்துட்டு வாங்களேன்!” என்று சொல்லி, பத்து உறுப்பினர்பாரங்களைக் கொடுக்கிறார் துரை.

ராஜன் இரட்டிப்பு மகிழ்ச்சியில் வாங்கிச் செல்கிறார்.

பொரிகடலைக் கடையில் இருந்து கொண்டே ஒரு வாரத்தில், 50உறுப்பினார்களைக்கட்சியில் சேர்க்கிறார் ராஜன்.

அப்பொழுது கோயிலுக்கு வந்த அ.தி.மு.க. பேச்சாளர் ஆலங்குடி சோமுராஜன், ராஜன் வைத்திருந்த மெம்பர்ஷிப் பாரத்தைப் பார்த்துவிட்டு, “நீதான் இந்த ஏரியாவில் மெம்பர் ஷிப் சேர்க்கிறாயா?” என்று கேட்கிறார், ‘ஆமாம்’ என்கிறார் ராஜன்.

இப்ப கட்சி ஆபிஸ்தான் போறேன்..வர்றியா? என்கிறார் ஆலங்குடி சோமுராஜன். சரியென்று அவருடன் தலைமைக்கழகம் செல்கிறார் ராஜன்.

துரையிடம் உறுப்பினர் பாரத்தைக் கொடுத்து, பணம் கட்டி ரசீது வாங்கிக் கொள்கிறார்.

மறுநாள் அந்த ரசீதை எடுத்துக் கண்டுராமாவரம் தோட்டம் செல்கிறார் ராஜன்.

அங்கே, பொதுக்கூட்டம் போல் கட்சித் தொண்டர்களும், நாஞ்சில் மனோகரன், வண்ணை மு. பாண்டியன், திருச்சி சௌந்தர் ராஜன் போன்ற முக்கியப் பிரமுகர்களும் இருக்கிறார்கள்.

மக்கள் திலகம் எல்லோரிடமும் ஒரு நிமிடம் பேசிவிட்டு, படப்பிடிப்புக்குக்கிளம்பக் காரில் ஏறப்போகும் பொழுது கூட்டதில் முண்டியடித்துக் கொண்டிருந்த ராஜனைப் பார்த்து, வழக்கமாகச் செய்யும் தன் காந்த விரல்களை நீட்டிக் கையசைக்கிறார். கூட்டம் ராஜனுக்கு வழிவிடுகிறது. ராஜன், பணம் கட்டிய ரசீதை மக்கள் திலகத்திடம் நீட்டுகிறார்.

“என்ன இது.. எதுக்கு வந்தே..? இப்ப என்ன காரியம் பண்ணிக்கிட்டு வந்திருக்கே?” என்று கட்சி உறுப்பினர் எண்ணிக்கை கூடுகிறதே என்று மகிழாமல் தடம் மாறி நின்ற ராஜனைக் கடும் கோபத்துடன், “இது உனக்குத் தேவையா?” என்று கேட்கிறார்.

கலைப்பணியோ..கட்சிப் பணியோ… எல்லாமே மக்கள் பணி தாண்ணே! உங்க நிழல்ல எந்தப் பணியும் நான் செய்யத் தயாரா இருக்கேன்!” என்று தைரியமாகப் பேசுகிறார் ராஜன்.

ராஜனின் அரசியல் ஆர்வத்தைப்புரிந்து கொண்ட மக்கள்திலகம், “அப்படியா சரி; பயப்படாதே..உறுதியா இரு!” என்று வாழ்த்தி விடைபெறுகிறார்.

அடுத்த பத்தே நாளில்- திருவேற்காட்டில், மே தினத்தில் கோடம்பாக்கம் குமார், ஆலங்குடி சோமுராஜன் ஆகியோரை வைத்துக் கூட்டம் ஏற்பாடு செய்கிறார் ராஜன்.

கூட்டத்தில் ன்றைய பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினரால் மிரட்டப்படுகிறார். அதை , ஆற்காடு முதலி தெருவில் உள்ள அலுவலகத்தில் இருந்த மக்கள் திலகத்திடம் ராஜன் விளக்குகிறார்.

உடனே மக்கள் திலகம் தொலைபேசியில் ஒரு எண்ணைச் சுழற்றி, ‘நீங்கதான் இனிமே ராஜனுக்குப் பாதுகாப்புக்கொடுக்கணும்” என்று சொல்கிறார். மறுமுனையிலிருந்த அன்பரிடம்.

அன்றிலிருந்து மக்கள் திலகத்தின் அன்புக் கட்டளைக்கு இணங்கி, பிரசிடெண்ட் சண்முகம், வியாபாரிகள் சங்கத் தலவைர் கோவிந்தசாமி எல்லோரும் ராஜனின் அரசியல் பணிக்குத் துணை நின்றார்கள்.

4.7.77 அன்று மக்கள் திலகம் தமிழக முதல்வராகப் பதவி ஏற்கிறார். பதவி ஏற்ற அன்றே திருவேற்காடு மாரியம்மன் கோயிலுக்கு, எந்த முன்ன்றிவிப்புமின்றி அமைச்சர் பி.டி.சரஸ்வதியுடன் ஒரே ஒரு போலீஸ் ஜீப்புடன் திடீர் விஜயம் செய்கிறார்.

திடீரென்று வள்ளலின் வருகையைப் பார்த்த ராஜனுக்கு, அந்த அம்மன் சந்நிதானத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே விளங்கவில்லை.

ஒரு நிமிட அதிர்ச்சிக்குப் பிறகு, “அண்ணே…!” என்று அழைக்கிறார் ராஜன்.

“என்ன.. சௌக்கியமா ராஜன்?” என்று பெயர் சொல்லி விசாரித்தவுடன், ராஜனுக்கு நரம்புகள் எல்லாம் நர்த்தனம் ஆடுகின்றன.

ஆலயத்துக்குள் வந்த மக்கள் திலகம், நேரே கருவறைக்குக்கூடச் செல்லாமல், கணக்கு அலுவலக அறைக்குச் செல்கிறார்.

“விளம்பரப் பலகையில், விற்பனைக் கட்டணங்களை ஏன் எழுதவில்லை?” என்உ ஆலயப் பணியாளர்களிடம் கேட்கிறார் மக்கள் திலகம்.

இப்படி ஆலயத்தைச் சுற்றி மக்கள் திலகம் இருந்த ஐந்து நிமிடத்திற்குள், ராஜன் தன் கடைக்குச் சென்று, அங்கு வைத்திருந்த புரட்சி மணி நடத்திய 74- ஆம் ஆண்டு ‘புரட்சிக் கொடி’ பத்திரிகையை எடுத்து வந்து மக்கள் திலகத்திடம் நீட்டுகிறார். வாங்கிப்பார்க்கிறார் மக்கள் திலகம். அதில்-

“பகலவனின் மறுவடிவாம்
பரம் பொருளின் தூதுவனாம்
கர்ணனுக்கு உடன்பிறப்பாம்,
திராவிடர் கழகத்தின் புரட்சியாராம்!
இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற உத்தமனாம்!
இருகரம்கூப்பி நின்று – அவனை
ஏற்றி வைப்போம் ஆட்சியில்!”

என்று தீர்க்கத் தரிசனமாய் ராஜன் எழுதியிருந்த கவிதையைப் படித்த மக்கள் திலகம், மனம் நெகிழ்ந்து ராஜனைத் தட்டிக் கொடுத்துவிட்டு விடைபெறுகிறார்.

இதன் பின்னர், 1983 -ல் ராஜனுக்குப் பெண் குழந்தை பிறந்த செய்தியை, தன்னுடைய குலதெய்வமான மக்கள் திலகத்திடம் தெரிவிக்கிறார்.

“அப்படியா!” என்று மகிழ்ந்த மக்கள் திலகம், “இன்னிக்கு மாலை ஆறுமணிக்கு, அண்ணாநகரில் என்.வி.என் நகர் திறப்பு விழாவிற்கு வர்றேன். நீயும் உன் குழந்தையைத் தூக்கிட்டு மேடைக்கு வந்துடு..” என்கிறார்.

சந்தோஷத்தில் மனைவி, குழந்தையுடன் கூட்டத்திற்குச் செல்கிறார் ராஜன். கூட்டம் தொடங்கியவுடன் முதல் நிகழ்ச்சியாக மக்கள்திலகம், ராஜன் தம்பதியை அழைத்து, அந்தக் குழந்தையை வாங்கிக்கையில் வைத்துக் கொண்டு முத்த மழை பொழிந்து ‘தமிழ்ச்செல்வி’ என்று மக்கள் திலகம் நாமகரணம் சூட்டிக் கொண்டிருந்தபொழுது, அந்தக்குழந்தை, மூத்திரம் பெய்து மக்கள் திலகத்தின் சட்டையை நனைத்து விடுகிறது.

கொஞ்சமும் முகம் சுளிக்காத மக்கள் திலகம் குழந்தையை -அருகில் நின்ற தமிழ்நாடு குடிசை மாற்றுத் தலைவர் சுலோசனா சம்பத்திடம் கொடுக்கிறார்.

குழந்தையைக்கொடுத்த அதே வேளையில், “இவன் சினிமாவுக்காக எங்கிட்ட வந்தான்… அதுக்கப்புறம் என்னையே சுத்திகிட்டு இருக்கான். இவன்படிப்புக்கு ஏத்த வேலை கொடுத்தேன். அதையும் வேண்டாம்னுட்டான். இப்ப இவன் போகிற போக்கைப் பார்த்தா ஆன்மிகத்துல இறங்கி சன்னியாசியா ஆயிடுவான் போலிருக்கு! அதனால் அவனுக்கு உடனே ஒருவீடு கொடுத்திடுங்க!” என்று சுலோசனா சம்பத்திடம் சொல்கிறார் மக்கள் திலகம்.

மக்கள் திலகம் சொல்லியபடியே, சுலோசனா சம்பத் துரிதமாகச் செயல்பட்டு, மறுநாளே, இன்றைக்கு அருள்மிகு அணுசக்தி அம்மன் ஆன்மிக சங்கத்தின் தலைவராக இருக்கும் இறையருள் ராஜன் அவர்களுக்கு கே.கே.நகரில் வீடு தரப்படுகிறது. பிள்ளைக்குப் பெயர் வைத்தாலே பெருமை என்று நினைத்த ராஜனுக்கு, வீட்டையே பரிசாக்க்கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் மக்கள் திலகம்.

சொன்னது பலித்தது

சென்னை பெரம்பூர் பேலஸ் தியேட்டர் இது தான் நாடக மேடைகளில் மட்டுமே மின்னிக் கொண்டிருந்த் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வெள்ளித் திரைக்குள் கொண்டு வந்த முதல்தியேட்டர்.

1935 – எம்.கே. ராதாவின் தந்தை கந்தசாமி முதலியாரின் மதுரை ட்ராமாடிக் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் ‘பதி பக்தி’ நாடகம் பெரம்பூர் பேலஸ் தியேட்டரில் இருவு நடக்க இருக்கிறது; தியேட்டருக்கு அருகிலேயே நாடக்க் கம்பெனி. அங்கு பகலெல்லாம் நாடக ஒத்திகை.

இடையில் மதிய உணவு பந்திப் பாய் விரிக்கப்படுகிறது. இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த எம்.கே.ராதா.எம்.ஜி.ஆர். என்.எஸ். கிருஷ்ணன், டணால் தங்கவேல், எம்.ஜி.சக்ரபாணி, வீர்ராகவன் உட்பட கம்பெனி நடிகர்கள் எல்லோரும் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அருகில் சம்மணம் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த வீர்ராகவன், இடது கையைத் தொடையின்மீது விரித்து வைத்துக் கொண்டு, பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் அளவுக்குச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

சாப்பிடுவதைக்கூட ஓர் அழகியல் கலையாக்க கடை பிடித்து வருபவர் மக்கள் திலகம். நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பார்கள். அந்த விஞ்ஞான விதிப்படி, எதையுமே கடித்துச் சுவைத்து ருசித்து – ஒரு குழந்தையின் வசீகரத்தோடு உண்ணுகிற மக்கள் திலகம், தான் நடிக்கும் படங்களில் கூட உண்ணுகிற காட்சியை ஏழெட்டு இடங்களில் வைத்திருப்பார்.

ஆனால் இங்கே சிலர் – வித்தியாசமாகச் சிந்திக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு,மனது அருவருப்பு அடையும் அளவுக்குக் கழிவறையில் காட்சிகளை படமாக்குகிறார்கள்.

எனவே வீர்ராகவன் இடது கையை விரித்துக் கொண்டு சாப்பிடும் பழக்கத்தைக்கைவிடச் சல்லி,பல முறை மக்கள் திலகம் வேண்டியும், அவர் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

சொல்லிச் சொல்லிக் கேட்காத இந்தப் பழக்கத்தை மாற்ற மக்கள் திலகம் விரித்து வைத்திருந்த வீர்ராகவனின் இடது கையில தன்னைடைய இலையில் இருந்து ஒரு கவளம் சோற்றை உருட்டி வைத்து, இப்ப இரண்டு கையினாலும் திருப்தியா சாப்பிடு’ என்று சொல்கிறார்.

அப்பொழுதே வீர்ராகவன், இனி மேல் இது மாதிரி பிச்சைக்காரன் மாதிரி பிச்சைக் காரனைப்போல் கையேந்திக் கொண்டு சாப்பிடமாட்டேன்’ என்று மக்கள் திலகத்திடம் சத்தியம் செய்கிறார். அதை இன்றும் கடைப்பிடித்து வருகிறார்.

அன்று சாப்பிடும் போது சத்தியம் செய்த நேரத்தில் தான், “அண்ணே, உங்க பர்சனாலிட்டிக்கு, பழக்கவழக்கத்துக்கு கண்டிப்பா நீங்க சினிமா ஸ்டார் ஆவீங்க!” என்று வீர்ராகவன் சொல்ல-மக்கள் திலகம் “அப்படியா வீரா!” என்று அதிசயத்துடன் கேட்கிறார்.

இரவு நாடகம் முடிகிறது. கந்தசாமி முதலியார் எல்லோரையும் அழைத்து “நம்முடைய ‘பதிபக்தி’ நாடகத்தை ‘சதிலீலாவதி’ என்ற பெயரில் கோயமுத்தூர் மருதாச்சல செட்டியார் சினிமாவா எடுக்கப் போகிறார். நாடகத்துல நடிச்சு நீங்க எல்லோரும் சினிமாவுலயும் நடிக்கப் போறீங்க!” என்று சொல்கிறார்.

மக்கள் திலகத்துக்கு மகிழ்ச்சி தாளவில்லை. உடனே வீர்ராகவனை அழைத்து, “ஏம்பா வீரா.. பகல நீ சொன்னே, ராத்திரியில நடந்துடுச்சு!” என்று வீர்ராகவனைக்கட்டிப்பிடித்துக் கைகுலுக்குகிறார். நாடகத்தில் மாதச் சம்பளமாக இருபதும், முப்பதும் பெற்றுக்கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதன் முதலாக முழுதாக மருதாச் சலம் செட்டியாரிடமிருந்து நூறு ரூபாய் வாங்கினார். அன்றிலிருந்து இலட்சங்களைத் தாண்டிச்சம்பாதித்த காலம்வரைகூட நல்ல வார்த்தை சொன்ன வீர்ராகவன்மீது எம்.ஜி.ஆர் தனிப்பிரியம் வைத்திருந்தார்.

‘சதி லீலாவதி’ படத்தில் அறிமுகமான அத்தனை பேருக்குமே அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் வீர்ராகவனுக்உ மட்டும் வரவில்லை.

எனவே, நடன குரூப் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு வெளிநாடுகளுக்கு நடன நிகழ்ச்சி நடத்தச் சென்றுவிட்டார். ஐந்தாண்டுகளுக்கு மேல் நடன நிகழ்ச்சி நடத்தியும் வீர்ராகவன் பெரியதாக வெற்றி அடைய முடியவில்லை.

எனவே,மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து விடுகிறார். இந்த ஐந்தாண்டு இடைவெளிக்குள் மக்கள்திலகம் முன்னணி ஹீரோவாக ஆகிவிட்டார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரைச் சந்தித்து நமக்கும் நடிக்க வாய்ப்பு வாங்கித் தரச் சொல்ல்லாமா என்று யோசிக்கிறார் வீர்ராகவன்.

ஒருவேளை- நம்மைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டால் என்ன செயவது என்று வீர்ராகவன் பலவாறு யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில்தான் வடபழனியில் – நாடக நடிகர் கணபதிக்காக எம்.ஜி.ஆர் வைத்துக்கொடுத்த ‘எம்.ஜி.ஆர் வெற்றிலை பாக்கு சீவல் கடை’ வாசலில் – கந்தசாமி முதலியாரின் நாடக்க் குரூப்பில் இராமாயணத்தில் ‘வாலி’ வேடம் போட்டுக் கொண்டிருந்த வீரய்யனைச் சந்திக்கிறார் வீர்ராகவன்.

அவரிடம், “இன்றிருக்கும் நிலையில் எம்.ஜி.ஆரைச் சந்தித்தால் உதவி செய்வாரா?” என்று யோசனை கேட்கிறார்.

அதற்கு வீரய்யன், “இந்த நிலையில் மட்டுமல்ல; அவர் எந்த நிலையிலும் தன்னை நம்பினவங்களை – நாடி வந்தவங்களைக்கைவிட மாட்டார். நான் கூட, அஞ்சு வருஷதுக்கு முன்னாடி நாடகத்துல வாலி வேஷம் போட்டுகிட்டு, சாதாரண நாடக நடிகர் வீரய்யனாதான் இருந்தேன். இன்னிக்கு தில்ரூபா வீரய்யனா- பாப்புலரா பணம் காசோடு இருக்கிறேன்னா அதுக்குக் காரணம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான்!” என்று சொல்கிறார் வீரய்யன்.

“என்ன சொல்றே வீரய்யா? கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லு!” என்கிறார் வீர்ராகவன்.

“கந்தசாமி முதலியார் நாடக்க் கம்பெனியில் நான்தானே வாலி வேஷம் போட்டுக்கிட்டு இருந்தேன். ஆனா முதிலியார் ஒருநாள் அந்த வாலி வேஷத்தை எம்.ஜி.ஆரைப்போடச் சொல்லிவிட்டார். நான் அவமானத்தினாலும், ஆத்திரத்தினாலும் அந்த நிமிடமே, அந்த நாடக்க் கம்பெனியை விட்டு வெளியில் வந்து விட்டேன்.

கொஞ்சநாள் கழிச்ச எம்.ஜி.ஆர் என்னைத் தேடிக்கண்டு பிடிச்சு, ‘என்னாலதானே அந்த நாடக்க் கம்பெனியை விட்டுப் போனே.. இப்ப உனக்கு நான் என்ன உதவி செய்யணும் என்று கேட்டார். ‘எனக்கொரு தில்ரூபா மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட் மட்டும் வாங்கிக் கொடுங்க… அதை வைச்சுக் கச்சேரி பண்ணி டெவலப் ஆகிக்கிறேன்!” என்று கேட்டேன். மறுநாளே வாங்கிக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல்,மாசா மாசன் ஒரு தொகையை வீட்டுச் செலவுக்கு கொடுத்துக்கிட்டு வர்றார்!” என்று வீரய்யன் சொல்லி முடிக்க – வீர்ராகவன் உடனே எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த ‘அரசிளங்குமரி’ பட நிறுவனமான ஜூபிடர் பிக்சர்ஸூக்குச் செல்கிறார்.

ஆனால் அங்கு எம்.ஜி.ஆர் இல்லை. உடனே கலைஞரின் வசன உதவியாளர் லட்சுமணன், லாயிட்ஸ் ரோடு வீட்டில் உள்ள எம்.ஜி.ஆருக்குப் போன் செய்து, “உங்களைப் பார்க்க வீர்ராகவன் என்பவர் வந்திருக்கிறார்!” என்று தகவல் சொல்கிறார். உடனே “போனை வீர்ராகவன் ரிசீவரைக் காதில் வைக்கிறார்.

‘என்ன வீரா சௌக்கியமா… எப்ப? வெளிநாட்டுல இருந்து வந்தே?” என்று பழைய பாசத்துடன் விசாரித்து விட்டு, “இப்ப என்ன வேணும்? என்னால ஏதாவது காரியம் ஆகணுமா?” என்று கேட்கிறார்.

அதற்கு வீர்ராகவன், “பண உதவியெல்லாம் வேணா முண்ணே! படத்துல நடிக்க வேஷம் வேணும்!” என்று சொல்ல,

“அவ்வளவுதானே.. நான் பார்த்துக்கிறேன். நாளைக்கு வாகினி ஸ்டுடியோவுக்கு வந்துடு.. அங்குதான் ஷூட்டிங்.. மத்ததை அங்கே பேசிக்கலாம்!” என்கிறார்.

மறுநாள்-மக்கள் திலகம் சொல்லியபடி, வாகினி ஸ்டுடியோ செல்கிறார் வீர்ராகவன். வேஷம் ரெடியாக இருக்கிறது. நடிக்கிறார். சம்பளம் மற்றவர்களைவிடப்பத்து ரூபாய் கூடுதலாகப பெறுகிறார் வீர்ராகவன்… இப்படி தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு டணால் தங்க வேலுக்கு மானேஜராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஓரளவு வசதி வாய்ப்பு வந்தவுடன், தன் மகனுக்குத் திருமண ஏற்பாடு செய்கிறார் வீர்ராகவன்.. முதல் பத்திரிகையை மக்கள் திலகத்துக்குக் கொடுகிறார் வீர்ராகவன். வாங்கிக்கொண்ட வள்ளல், “எங்கே திருமணம்?” என்றுகேட்கிறார்.

‘வடபழனி கோயிலில்’ என்கிறார் வீர்ராகவன்.

உடனே, “ஏன் வீரா..? போன முறை மைசூர்ல ஷூட்டிங் நடந்தப்ப, ந்ந்தி ஹில்ஸ் இருக்கிற சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு உன் கூட வந்ததுனாலதான், கட்சிக்குள்ள ஏகப்பட்ட பிரச்சினை இப்ப இங்கே வடபழனி கோயிலுக்கு வந்தேன்னா, திரும்பவும் தேவையில்லாத பிரச்சினை பண்ணுவாங்க. அதனால நான் கல்யாணத்துக்கு வரமுடியாது. ஆனா கல்யாணச்செலவு முழுக்க என்னோடதுதான்!” என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். சொல்லியபடி செய்கிறார் மக்கள்திலகம்.

இப்படி வீர்ராகவனுக்கு நிறைய உதவிகள் செய்து கொண்டும், வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்துக்கொண்டும் வருகிறார் எம்.ஜி.ஆர். ஆனால் வீர்ராகவனால் பெரிய அளவில் நடிகராக ஆகவோ – மற்ற முன்னேற்றமோ அடையமுடியவில்லை. எனவே நாடகம் நடத்தத் திட்டமிடுகிறார் வீர்ராகவன்.

இந்தக் காலகட்டத்தில் -மூதறிஞர் இராஜாஜி ஆட்சியில், 25 ரூபாய் சம்பளம் கேட்டு வேலை நிறுத்தம் செய்கின்றனர். எனவே அவர்களுக்கு நிவாரணம் அளிக்க ‘சொர்ணபுரி இளவரசி’ என்ற நாடகத்தை வேலூர்முள்ளுப்பாளையம் என்ற ஊரில் நடத்த ஏற்பாடு செய்கிறார் வீர்ராகவன். தலைமை ஏற்க மக்கள் திலகத்தை அழைக்கிறார்.

மக்கள் திலகமும் ஒப்புக் கொண்டபடி வந்து, நாடகம் முடிந்தவுடன், நாடக்க் குழுவினரையும், வீர்ராகவனையும் வாழ்த்திப்பாராட்டி, ஒரு பெரிய தொகையை வீர்ராகவனிடம் கொடுத்தார்.

காவல்துறையினரின் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெறச் சொல்லி, கனிவோடும்,கண்டிப்போடும், முதல்வர் இராஜாஜியின் அரசுக்கு ஆதரவாகச் செயல்படுமாறு வேண்டுகோள் விடுக்கிறார். மக்கள் திலகத்தின் வேண்டுகோளை ஏற்ற காவல் துறையினர் மறுநாளே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுகின்றனர்.

அவர் வார்த்தைக்கு பதவி இல்லாத அந்தக்காலத்திலேயே அரசு ஊழியர்கள் கட்டுப்பட்டார்கள். ஏன்?

அதுதான் மக்கள் திலகத்தின் முகராசி!

நல்லவர்களுக்கு நான் சொந்தமானவன்!

‘எம்.ஜி.ஆர். யார்? அவர் பூர்வீகம் என்ன? என்ற விஷயம் தமிழக அரசியல் மேடைகளில் அலசப்பட்டுக் கொண்டிருந்த நேரம்…

“இலங்கை நான் பிறந்தது… கேரளம் என்னை வளர்த்தது…. தமிழகம்- என்னை வாழ வைத்தது. அப்படியானால் நான் யாருக்குச் சொந்தம்? நல்லவர்களுக்கெல்லாம் நான் சொந்தமானவன்!” என்று மேலே எழுப்பப்பட்ட சர்ச்சைக்கு, இலங்கையில் பொதுவிளக்கம் கொடுத்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

‘சன்’ என்ற ஆங்கிலப் பத்திரிகை: ‘திவசா’ என்ற சிங்களப்பத்திரிகை, ‘ராதா’ என்ற தமிழ்ப் பத்திரிகைகளை நடத்திக் கொண்டிருக்கும் ‘இன்டிபெண்டன்ட் நியூஸ் பேப்பர்ஸ்’ என்ற இலங்கைப் பத்திரிக்கை நிறுவனம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை விருந்தினராக அழைத்திருந்தது.

அதை ஏற்று, 1966- ஆம் ஆண்டுதான் பிறந்த இலங்கை தேசத்துக்குப் புறப்பட்டார். புரட்சி நடிகர் உடன் சரோஜா தேவியும் சென்றார்.

இன்டியன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து கொழும்பு விமானதளத்தில் கால் வைக்கிறார் மக்கள்திலகம்.. விமான தளத்தைச் சுற்றி மக்கள் கூட்டம் வெள்ளம் போல்காட்சியளித்தது. எம்.ஜி.ஆரைக்கண்ட மகிழ்ச்சி ஆரவாரம் விண்ணைப் பிளக்கிறது.

சாலையின் இருபுறத்திலும் மக்கள் படை வரிசையாய் நிற்க, திறந்த காரில்கைகூப்பிச சென்ற மக்கள் திலகம், கடற்கரையில் உள்ள ‘கால்பேஸ்’ ஓட்டலில் தங்குகிறார்.

தமிழகத்தில் மட்டுமல்லாமல், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் (நடிகராக இருந்த பொழுதே) இலங்கையிலும் முடுசூடா மன்னனாக மக்கள் மனதில் வாழ்ந்தவர்.

1957 இல் இலங்கையில் ஏ. நெயினார் என்பவர்- எம்.ஜி.ஆர் மன்றத்தைத் துவக்கி, தமிழ்நாட்டில் மக்கள் திலகம் என்னென்ன சமுதாயப் பணிகளைச் செய்ய வந்தாரோ- அதே பணிகளை இலங்கை எம்.ஜி.ஆர் மன்றத்தின் மூலம் செய்துகொண்டிருந்தார்.

அது மட்டுமில்லாமல், மக்கள் திலகம் எம்.ஜி. ஆருகு முகவாயில் குழிவிழுந்த பள்ளம் இருக்கும். அது இரட்டை நாடிபோல் தெரியும். ஆரம்பத்தில் இதுவே அவர் ஹீரோவாகத் தடையாக இருந்தது. ‘முகம் குதிரை மாதிரி இருக்கிறது’ என்று கிண்டல் செய்தவர்களும் உண்டு. ஆனால் ஹீரோவாக அவர் வெற்றி பெற்றபின்னர், அதே போல் தங்களுக்கும் தாடையில் பள்ளம் இருக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் ரசிகர்கள் , ஏன்- சிங்கள் ரசிகர்களும் க்தியால் தங்களுடைய முகவாயில் கிறி, பள்ளம் விழச் செய்துகொண்டார்கள்.

1967-இல் மக்கள் திலகத்தின் ‘அடிமைப்பெண்’ படம் கொழும்பு மருதாணை சென்டரிலில் ரிலீஸாகிறது. அந்தப் படத்தில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை போடுவது போல் இடம் பெற்றிருந்த ஒரு காட்சியை இலங்கைத் தணிக்கைக் குழு நீக்கி விட்டது.

இந்தச் செய்தி அறிந்த எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் நெயினார, அந்த இரவிலேயே ஐந்தாயிரம் ரசிகர்களை ஒன்று திரட்டி, சென்ட்ரல் பட மாளிகை முன் மீண்டும்,அந்தக் காட்சியைச் சேர்க்கச் சொல்லி மறியல் செய்கிறார். உனே அன்றைய பிரதமர் ட்ட்லி சேன நாயகா, அந்க்காட்சியை மீண்டும் சேர்க்கச் சொல்லி ஆணை பிறப்பித்தார்.

சிங்களப்போராளி இயக்கமான ‘சேகுவேரா’ (ஜனதா விமுக்தி பெரமுனா) என்ற மக்கள் விடுதலை முன்னணிப் போராளி இயக்கத்தில் உறுப்பினராகச்சேருவதற்கு, ‘பந்தி பகாய்’ என்று ஐந்து வகுப்பில் பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற வேண்டும்.

அதில் ‘தெவனி பந்திய’ என்ற இரண்டாம் வகுப்பில், ‘இந்திய ஏகாதிபத்தியத் திணிப்பு’ என்ற தலைப்பில்,

“எம்.ஜி.ஆர். என்கிற ஒரு நடிகரின் திரைப்படங்கள் முதலாளித் துவத்துக்கு எதிராகவும் ஏழைகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றன. எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் வெளியிடுவதால் இந்தியாவின் கொள்களை இலங்கையில் புகுத்தப்படுகிறது. எனவே, எம்.ஜி.ஆரின் படங்களை இலங்கையில் தடை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இப்படி எம்.ஜி.ஆரின் படங்களைப்பார்த்து மிகப்பெரிய போராளி இயக்கமே பயந்தது.

இப்படி, கடல் கடந்தும் கல்வெட்டாய் மக்கள் மனங்களில் பதிந்திருந்த் மக்கள்திலகம் – ‘கால்பேஸ்’ ஓட்டலில் தங்கியிருந்த பொழுது, அந்த ஓட்டலுக்குமுன்புறம் இரவு – பகலாக ஆயிரக்கணக்கான மக்கள் காத்துக்கிடந்தார்கள்.

1957-ல் இருந்து 1966-வரை எம்.ஜி.ஆர் மன்றம்மூலம் நற்பணியாற்றி வந்த நெயினார் முகமது, முதன்முதலாக்க் கால்பேஸ் ஹோட்டல் நான்காவதுத மாடியில் தங்கியிருந்த மக்கள் திலகத்தைச் சந்திக்கிறார்.

தன்னை அறிமுகம் செய்து கொண்ட முகமது நெயினாரை மக்கள் திலகம் அகமகிழ்வுடன், “நீங்க தான் அந்த நெயினாரா!” என்று பரிவுடன் விசாரிக்கிறார்.

“உங்களுடைய பணிகள் எல்லாத்தையும் பத்திரிகைகள் மூலமாகவும், இங்கிருந்த வரும் நண்பர்கள் மூலமாகவும் தெரிந்து கொண்டேன். தொடர்ந்து தொண்டாற்றுங்கள்!” என நெயினாரின் தோள்களைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டுகிறார் மக்கள் திலகம்.

பாராட்டிய கையோடு, கொழும்பிலிருந்து எழுபதுகிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ‘இக்களுவா’ என்ற கடற்கரைக்குச்செல்ல ஹோட்டல் அறையில் இருந்து இறங்கி வருகிறார். ஓட்டலைச் சுற்றி இலட்சக்கணக்கான மக்கள்! எல்லோரையும் வணங்கிவிட்டு மக்கள் திலகம் காரில் கிளம்புகிறார். மக்கள் திலகத்தின் காரின் முன்னும் பின்னும் நூற்றுக்கணக்கான கார்கள் செல்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள், பார்த்தது போதும் என்றில்லாமல், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆர்வத்துடிப்போடும் காரின் வேகத்துக்குப் பின்னால் ஓடி வருகிறார்கள்.

இந்த அற்புதக் காட்சியை அருகில் இருந்த பாராளுமன்றப் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா (இன்றைய ஜனாதிபதி சந்திரிகாவின் தாய்) பார்த்து அதிசயத்துப் போய், தன்னுடன் வந்து கொண்டிருந்த பி.ஏ. செல்லையாவிடம், “யாருக்காக இப்படியொரு கூட்டம் அலைமோத ஓடிக்கொண்டிருக்கிறது?” என்று கேட்கிறார்.

அதறகு செல்லையா “இந்தக் கூட்டம் எம்.ஜி.ஆர் என்ற நடிகருக்காக மட்டுமல்ல, மக்கள் தலைவன் என்று போற்றப்படுகிற எம்.ஜி.ஆருக்காக!” என்கிறார்.

இதைக்கேட்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயகா, தன்னுடைய கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, ‘மகே அம்மே’ என்று கூறி வியக்கிறார்.

இக்களுவா, நுவரேலியா, மட்டக்களப்பு, மாத்தளை, யாழ்ப்பாணம் என்று ஒரு வாரம்தங்கி மகிழ்கிறார் மக்கள் திலகம்.

கடைசியாக, மக்கள் திலகம் கருவாகி, உருவாகிப் பிறந்த கண்டிக்குச் செல்கிறார். கண்கலங்க நின்ற மக்கள் திலகத்திடம், “இந்தப் பள்ளி இருக்கும் இடம்தான் நீங்கள் பிறந்த இடம்!” என்று அருகில் உள்ளவர் சொல்ல, உடன் இருந்த எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் நெயினார் முகமதுவிடம், “என்னுடைய ‘இன்பக் கனவு’ நாடகத்தில் நான் பிறந்த வீட்டைப் பள்ளிக்கூடமாக மாற்றுங்கள் என்று பேசுவேன். அது இங்கே உண்மையாக்கப்பட்டிருக்கிறது!” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் மக்கள் திலகம்.

இந்த இலங்கைப் பயணத்தில், மக்கள் திலகம் இதயத்தில் இடம் பிடித்த மும்மது நெயினார், 1975 இல் முதன்முதலாகத் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க வருகிறார்.

ராதாசலுஜா மற்றும் சில பட உலகப்பிரமுகர்களுடன் இருந்த மக்கள் திலகத்திடன் வாசனை சோப்பும், மதுபாட்டில் வடிவில் இருந்த சில தேங்காய் எண்ணய் பாட்டில்களையும் தருகிறார். பாட்டிலைப் பார்த்து பயந்துபோன மக்கள் திலகம், “என்னப்பா இதை என்கிட்ட தர்றே?” என்று கேட்கிறார்.

“இது நீங்க நினைக்கிறமாதிரி அது இல்லைங்கண்ணே! தேங்காய் எண்ணெய்தான்!” என்று நெயினார் சொல்கிறார். வாங்கிக் கொண்ட எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் ஆளுக் கொன்றாகத்தருகிறார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர் படப்பிடிப்புக்குச செல்லக் கிளம்புகிறார். அப்போது சுற்றியிருந்த கூட்டத்தில், “எங்கே இலங்கை நெயினார்?” என்று கேட்கிறார். பின்னால் நின்றிருந்த நெயினார் அந்த நிமிடத்தில் இலங்கை நெயினாராகப் பெயர் மாற்றப்பட்டு மக்கள் திலகத்துடன் காரில் ஏறிச்செல்கிறார். ஒரு மாதம் மக்கள் திலகத்தின் விருந்தாளியாகத் தங்கியிருந இலங்கை நெயினார் மீண்டும் இலங்கை செல்கிறார்.

1977-இல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல்வராகப் பதவி ஏற்கிறார். 1981 இல் உலகிலேயே பெரிய நூலகமான யாழ்ப்பாண நூலகம் ராணவத்தினரால் தீக்கிரையாக்கப்படுகிறது. இலங்கை நெயினார், எம்.ஜி.ஆர் மன்றம் மூலம் இதை முதல்வர் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கிறார். உடனடியாக எம்.ஜி.ஆர் ஆறு இலட்சம் ரூபாய்க்கான நூல்களை அனுப்பி வைக்கிறார்.

அதையடுத்து, 1982 – ல் இலங்கை கிழக்கு மாகாணமான மட்டக்களப்புப் பகுதி புயல், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு விடுகிறது

உடனே இலங்கை நெயினார், அப்பொழுது அமெரிக்கா சென்றிருந்த எம்.ஜி.ஆரிடம் தகவல் சொல்ல, கொழும்பு தொலைபேசியிலிருந்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத் துடன் தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆர் எங்கு தங்கியிருக்கிறார் என்ற விவரம் கேட்கிறார்.

‘சிங்கப்பூர் சென்றுவிட்டார்’ என்று அமெரிக்க தூதரகம் சொல்கிறது. உடனே சிங்கப்பூர் இந்தியத் தூதரகத்திடம், ‘எம்.ஜி.ஆர் எங்கு தங்கியிருக்கிறார்’ என்று விபரம் கேட்கப் படுகிறது. சிங்கப்பூர் இந்தியத்தூதரகம் எம்.ஜி.ஆர் ஜப்பான் சென்று விட்டதாகச் சொல்கிறது. அடுத்து ஜப்பான் இந்தியத் தூதரகத்திடம் தொடர்பு கொண்டபோது, அவர்கள்மக்கள் திலகம் தங்கியிருந்த ஓட்டல், தொலைபேசி எண், அறை எண் தருகிறார்கள்.

அப்பொழுது ஜப்பான் நேரம் இரவு 12.30 மணி, தயங்கிய படியே இலங்கை நெயினார் மட்டக்களப்பு புயல் பாதிப்பைச சொல்கிறார். உடனடியாக முப்பது இலட்சம் ரூபாய்க்கு உணவு, உடை, மருந்து என்று அனைத்தையும் அனுப்ப ஏற்பாடு செய்கிறார் எம்.ஜி.ஆர். ‘மறுநாள் இந்தியா திரும்பும்பொழுது மட்டக் களப்பு வந்து செல்கிறேன்’ என்ற செய்தியையும் சொல்கிறார் மக்கள் திலகம்.

மகிழ்ச்சியும், ஆறுதலும் அடைந்த இலங்கை நெயினார் மறுநாள் மக்கள் திலகத்தின் வருகைக்காக்க் காத்திருக்கிறார். ஆனால் சொல்லியபடி வர இயாலத எம்.ஜி.ஆர் போனிலேயே மட்டக் களப்பு வருவதாகத்தான் இருந்தேன். ஆனால்தமிழ்நாட்டில் இராமேசுவரம் பெரும் புயலில் பாதிக்கப்பட்டதாகச் செய்தி வந்திருக்கிறது. எனவே நான் அங்கு செல்கிறேன்!” என்று இலங்கை நெயினாரிடம் இதமாகச் சொல்கிறார்.

எம்.ஜி.ஆர் வரவில்லையென்றாலும், இந்தச் சாதாரண தொண்டனின் வார்த்தைக்கு மதிப்புக்கொடுத்து, மனமுருகப் பேசியதை, இன்றும் நினைத்து, நினைத்து இதயம் கசிகிறார் இலங்கை நெயினார்.

பாகவதர் இப்படிச் செய்யலாமா?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காட்டிய கடைப்பிடித்த பண்புகளை மட்டுமல்லாமல் அவரின் தனிமனித ஸ்டைலையும், திரைப்படங்களில் செய்த மேனரிஸங்களையும் கடைப்பிடிக்க இன்றும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்களை நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.

ஆனால் மக்கள் திலகத்தின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராகத் திகந்தவர். ஏழிசை மன்னர் எம்.கே. டி. தியாகராஜ பாகவதர் பாகவதரின் ரசிகனாக மாறி, அவரைப் போலவே தன்னை வசீகரமாக வைத்துக்கொண்டவர் மக்கள் திலகம்.

ரங்கூன் கமலம் கல்லில் செய்த கடுக்கன், சரிகைத்துண்டு, வைரமாலை, சில்க் ஜிப்பா, எட்டுமுழ வேஷ்டி, வைர மோதிரம், அடர்ந்த கழுத்து வரை தொங்கும் முடி, கறுப்புநிற கட்ஷூ, ஜவ்வாதுப் பொட்டு, வானையை வைத்தே காரில் வரும் பாகவதரை வெளிப்படுத்தும் உயர்ந்த வகை செண்ட் பாகவதிரின் இந்தப் பாணியில் பாதியைக் கடைப்பிடித்தவர் மக்கள் திலகம்.

1941…தியாகராஜபாகவதர் நடித்த ‘அசோக்குமார்’ படத்தின் படப்பிடிப்பு, திருவானுமியூரில் நடந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது, ‘சத் வகுண போதன்’ என்ற பாடல் காட்சியில் நடித்து முடித்துவிட்டு, செட்டுக்கு வெளியே வந்து ஒரு சேரில் அமர்கிறார் பாவதர். ஆயிரக்கணக்கான மக்கள் பாகவதரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில்,, சந்தன நிறத்தில் தனித்துக் காட்சியளித்த எம்.ஜி.ஆரைப் பாகவதர் பார்க்கிறார். பக்கத்தில் இருந்த தன் உதவியாளரிடம் எம்.ஜி.ஆரைக் காட்டி, “என்னைப் போலவே ஒரு பையன் நிற்கிறானே …யார் அவன்?” என்று கேட்கிறார்.

“ராமச்சந்திரன்னு பேரு… சினிமாவுல நடிக்க சான்ஸ் தேடி அழைஞ்சிட்டு இருக்கான்!” என்று உதவியாளர் சொல்கிறார். உடனே பாகவதர் மக்கள் திலகத்தைப்பக்கத்தில் வரச்செய்து, ‘அசோக்குமார்’ படத்தின் டைரக்கடர் ராஜாசந்திர சேகரிடம், “இந்தப் பையனுக்கு இந்தப் படத்துல நல்ல வேஷம் ஒண்ணு கொடுங்கள்…” என்கிறார்.

ராஜா சந்திரசேகரும், “நாளைக்கு உங்களுக்கு சீன் இருக்கு..வந்திடுங்க..” என்று எம்.ஜி.ஆரிடம் சொல்கிறார்.

தாளாத மகிழ்ச்சியில் மக்கள்திலகம் செல்கிறார். மறுநாள் படப்பிடிப்புக்கு மக்கள் திலகம் வருகிறார். மகேந்திர பூபதி கேரக்டரில நடிக்க மக்கள் திலகத்திற்கு மன்னர் உடை தரிக்கப்படுகிறது. இந்த ஒரு காட்சியில் தன்னை நிடக்க வைத்ததற்காக மக்கள் திலகம் தன் வாழ்நாள் முழுவதும் பாகவதர் பெயரைச்சொல்லி, யார் வந்தாலும் வேண்டியதைச்செய்து விருந்தோம்பி வந்தார்.

லாயிட்ஸ் ரோட்டில் இருந்த தன் வீட்டிற்கு, எம்.கே.டி. தியாகராஜபாகவதர் பெயர் சொல்லி வந்தாலோ, என்.எஸ். கிருஷணன் பெயர் சொல்லி வந்தாலோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அப்படித்தான் ஒரு நாள், இன்று சென்னை சாலிகிராமத்தில், மதியழகன் நகர், காமராஜர் தெருவில் வசிக்கும் -ஏழிசை மன்னர் எம்.கே.டி.தியாராஜபாகவதரின் பாரம்பரிய பிம்பமாக, பாகவதரிடம் வேலை பார்க்க வருகிறார். அசப்பில் கொஞ்சம் பாகவதரைப் போலவே காட்சியளிக்கும் கோபாலிடம், ‘எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று மக்கள் திலகம் கேட்கிறார்.

“பாகவதரிடமிருந்து வருகிறேன்..” என்று கோபால் சொல்ல, மக்கள் திலகம் குஷியாகிவிட்டார். முதலில் சாப்பிட வைக்கிறார். பிறகு பாகவதரைப் பற்றி விசாரிக்கிறார். இப்படியே பாகவதருக்கும், மக்கள் திலகத்திற்கும் பரம ரசிகனாகத் திகழ்ந்த கோபால், கொஞ்ச நாள் கழித்து ஏவி.எம். நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாச் சேர்ந்து விட்டார்.

அப்பொழுதான் 1966இல்-ஏவி.எம்.நிறுவனத்தின் முதன் முதலாக மக்கள் திலகம், ‘அன்பே வா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிறார். ஏவி.மெய்யப்ப செட்டியார், எம்.ஜி.ஆருக்கென்று தனி ஏர்-கண்டிஷன் அறையை உருவாக்கித் தருகிறார்.

திரையுலகில் ஏகபோகச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த மெய்யப்பச்செட்டியார், ஒருநடிகருக்காகப் பிரத்யேக ஏர் கண்டிஷன் அறையை ஏற்படுத்திக் கொடுத்தது மக்கள் திலகம் ஒருவருக்குத்தான்!

அதுமட்டுமல்லாமல், அந்த அறையில் எந்த மின்சாரக் கோளாறும் ஏற்படாத வண்ணம் கவனித்துக் கொள்ள, எலக்ட்ரீஷியனாக நியமித்ததில் கோபாலுக்கு ஒரே கொண்டாட்டம்.

முதல் நாள் மக்கள் திலகம் அறைக்கு வந்த போது, வணங்கி நிற்கிறார் கோபால். அடையாளம் கண்டு கொண்ட மக்கள் திலகம், “நீங்கள் பாகவதர் ஆள்தானே?” என்று கேட்கிறார்.

“ஆமண்ணே!” என்கிறார் கோபால், தட்டிக் கொடுத்து விட்டு உள்ளே செல்கிறார் மக்கள் திலகம.

சிம்லாவில் – ‘அன்பே வா’ படத்தில் வரும் ‘அன்பே வா’ பாடல்காட்சி படமாகிக் கொண்டிருக்கிறது. அந்தப் பாடலின் முதல் பல்லவியில், மக்கள் திலகம் ஓடி வரும் காட்சியை மட்டும் ஏவி.எம்.ஸ்டுடியோவில் மக்கள் திலகத்தை வைத்துப்படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எலக்ட்ரீஷியனாக்க் கோபால் தான் பணிபுரிகிறார். இன்னொரு யூனிட், மக்கள் திலகம் இல்லாத காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் சிம்லாவுக்கு பேட்டரியை ஃப்ளைட்டில் எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு வரவேண்டும். இதற்கு யாரை அனுப்புவதென்று மனோகர் அய்யங்கார்தான் தீர்மானிப்பார். இந்தச சந்தர்ப்பத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டு முதல் முதலாக ஃப்ளைட்டில் சென்று வர கோபாலுக்கு ஆசை வருகிறது. தன் விருப்பத்தை மக்கள் திலகத்திடம் தெரிவிக்கிறார். அதற்கு மக்கள் திலகம், “இதோ பாருங்க பாகவதர்.. (கோபல், தியாராஜ பாகவதரிடம் இருந்து வந்ததால், அவரை எல்லோரும் பாகவதர் என்றே அழைப்பார்கள்!) நான் வேணும்னா பணம் தர்றேன்..ஃபளைட்ல ஏறி எங்கே வேணும்னாலும் போய் சுத்திப் பார்த்துட்டு வாங்க!…. இதுக்கெல்லாம் நான் சிபாரிசு பண்ண மாட்டேன்!” என்று அய்யங்காரிடம் சொல மறத்து விடுகிறார் மக்கள் திலகம். கோபால் சோர்வுடன் சென்று விடுகிறார்.

கோபால் சென்றவுன், அவர் வேண்டுகோளை மறு பரிசீலனை செய்கிறார் மக்கள் திலகம்.

எப்படியும் யாராவது ஓர் ஆள் இந்தப் பேட்டரியை காஷ்மீருக்கு எடுத்துச் செல்லத்தான் போகிறார்கள். நாம் ஒன்றும் இல்லாம ஒன்றைச் செய்யச் சொல்லி சிபாரிசு பண்ணப்போவதில்லை. அந்த வேலைக்கு கோபாலை அனுப்புங்கள் என்று சொன்னால் தப்பில்லை’ என்று அய்யங்காரிடம் கோபாலுக்குச் சிபாரிசு செய்கிறார்.

மிகவும் கண்டிப்பானவரான அய்யங்கார் மக்கள் திலகத்தின் சுபாரிசுக்கு மறுப்பேதும் சொல்லாமல், கோபாலை அனுப்பி வைப்பதற்கு ஒத்துக்கொள்கிறார். மக்கள் திலகம் ஏவி.எம்மில் அந்த டிரிக் ஷாட் காட்சியில் நடிது முடித்துவிட்டு,மறுநாளே சிம்லாவுக்குக் கிளம்பிவிட்டார். இரண்டு நாள் கழித்து, தன்னுடைய மிகப்பெரிய இலட்சியம் நிறைவேறிவிட்ட ஆனந்தத்தில் ஃப்ளைட்டில் பறந்து சிம்லாவை அடைகிறார் கோபால்.

பேட்டரியுடன் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்த கோபாலை “என்ன பாகவதரே… உங்க ஆசை நிறைவேறிடிச்சா?” என்று கேட்கிறார் மக்கள் திலகம். உணர்ச்சிப் பெருக்கில் வராத கோபால், மக்கள் திலகத்தின் காலில் விழுந்து நன்றி தெரிவிக்கக் குணிகிறார். தடுத்த மக்கள் திலகம் “பாகவதர் இப்படிச் செய்யலாமா?” என்று கோபிக்கிறார்.

அடுத்து 1970 இல் ‘எங்கள் தங்கம்’ படப்பிடிப்பு ஏவி.எம் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருக்கிறது. காட்சிப்படி, மக்கள் ஒரு ஸ்விட்ச் பட்டனை அழுத்த வேண்டும். கதவு திறந்து அசோகன் அங்கிருந்து வெளியில் வரவேண்டும்.

அந்தக் காட்சியில் 10.கி.வாட் லைட் மூலம் பதினோராயிரம் கிலோவாட் ஒளி, மக்கள் திலகத்தின் மீது பாய்ச்சப்படும். அப்போது ஸ்விட்ச் போர்டில் இருக்கும் எலக்ட்ரீஷியன் கோபாலுக்கு, மக்கள் திலகத்தைப்பார்க்கமுடியாத அளவுக்குக் கண் கூசியிருக்கிறது. இதை மற்றவர் மூலம் தெரிந்துகொண்ட மக்கள் திலகம்,மறுநாள் கோபாலிடம், “உங்களுக்கு ஒரு போட்டி வைப்பேன். அதில் நீங்கள் ஜெயித்துவிட்டால் உங்களுக்குநான் ஒருபரிசு தருவேன்!” என்கிறார் சரியென்று ஒப்புக்கொண்ட கோபாலிடம் “சிவகவி” படத்தில் தியாகராஜ பாகவதர், ‘வள்ளலைப்பாடும் வாயால் தருதலைப்பிள்ளையைப் பாடுவேனா!” என்று பாடி இருக்கிறார். இதே ராகதில் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களும் பாடி இருக்கிறார். எந்தப் படத்தில் என்ன பாடல்? சொல்லுங்கள்…?” என்கிறார்.

உடனே, “எங்கும் நிறை நாத பிரம்மம் தனை நான் பணிந்தே’ பாடல். படம் – சாவித்திரி!” என்கிறார் கோபால்.

“சபாஷ்!” என்று கோபாலைத் தட்ட்டிக்கொடுத்து, “கண்ணை மூடங்கள்..” என்கிறார் மக்கள் திலகம்.

கோபால் இரண்டு கண்களையும் மூடிக் கொள்கிறார். மக்கள்திலகம் தயாராக வைத்திருந்த – நான் அணிந்திருக்கும்கறுப்பு நிற கூலிங்கிளாஸ் போலவே, இன்னொரு கூலிங்கிளாசை கோபாலுக்குப் விட்டுக்கொண்டே, “இனிமே உங்க கண்ணு கூசாது. ஆர்மோனியப் பெட்டி வாசிக்கிற மாதிரி ஜாலியா உட்கார்ந்து வேலைபார்க்கலாம்!” என்று மக்கள் திலகம் கூறுகிறார். குறிப்பறிந்து கொடுத்த மக்கள் திலகத்தைக் கோபால் நினைக்க, கண்கள் குளமாகிறது.

அதேபோல், ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் படபிடிப்பு முடிந்து, யூனிட்டில் உள்ள எல்லோரும் மக்கள் திலகத்துடன் நின்று குரூப் குரூப்பாகப்போட்டோ எடுதுக்கொள்கின்றனர். ஆனால் கோபால் மட்டும், ஏற்கனவே தியாராஜ பாகவதுருடன் தான் எடுத்துக் கொண்ட போட்டோவை மக்கள் திலகத்திடம் காட்டி, “இதே போல் என்னுடன் ஒட்டி நின்று போட்டோ எடுக்க வேண்டும். இல்லாட்டி நான் ஏதோ வெட்டி ஒட்டி வச்சுட்டதாகச் சொல்லுவாங்க!” என்கிறார்.

அதற்கு மக்கள்திலகம், “நீங்க வைரத்தோடவே போட்டோ எடுத்து இருக்கீங்க. நானென்ன சாதாரணம்?” என்று சொல்லிக் கொண்டே கோபாலுடன் ஒட்டி நின்று போஸ் கொடுக்கிறார்.

3.7.1977 இரவு ஏவி.எம்.மில் ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தின் இறுதிக்கட்ட பேட்ச் ஒர்க் படப்பிடிப்பு. விடிந்தால் மக்கள்திலகம் தமிழக முதல்வர்.

பேக் ப்ரஜகஷன்திலையில், மலைப்பிரதேசக் காட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு முன்பு குதிரையில் எம்.ஜி.ஆர் செல்வது போன்ற குளோசப் ட்ரிக் ஷாட் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இரவு உணவு-மக்கள் திலகம் செலவில், வகை வகையாகப் பரிமாறப்படுகிறது.

அதிகாலை ஐந்து மணிக்குப் படப்பிடிப்பு முடிகிறது. யூனிட்டில் உள்ளவர்கள் அனைவரையும் அழைக்கிறார்மக்கள் திலகம்.

“இதுவரைக்கும் நடிகனாக இருந்தேன்…நிறைய சம்பாதிச்சுட்டேன். இன்னையிலிருந்து தமிழ் நாட்டு முதலமைச்சரா பதவி ஏற்கப்போறேன்.. இப்ப உங்களுக்கு நான் செய்யற அளவுக்கு, இனிமே செய்ய முடியாமா என்பது எனக்குத் தெரியலை…! அதனால இப்ப உங்களுக்கு என்ன தேவைன்னு சொல்லுங்க..?” என்கிறார்.

மக்கள் திலகத்தின் பேச்சில் மனம் கசிந்து போய் நின்றதால் எவருக்கும் எதையும் கேட்கத் தோன்றவில்லை.

கோபால் மட்டும், “பாகவதருக்கு அப்புறம் உங்கள் உருவத்தில் தான் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் பாகவதர் மீது வைத்திருக்கும் அன்பும், அபிமானமும், அவர் பெயரைச் சொல்லி உங்களிடம் வந்ததால் எனக்குத் கிடைத்த இதே அன்பும் அரவணைப்பும் கடைசி வரை நீடிச்சா போதும்” என்கிறார் ஏழிஞை கோபால்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்ட மக்கள் திலகம் கண்கலங்கக் கையசைத்துக்கொண்டு, பிறந்த வீடில் இருந்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் புதுமணப் பெண்போல் புரட்சித் தலைவராகக் காரில் ஏறி விடை பெறுகிறார்.

மக்கள் திலகம் முதல்வராகப் பொறுப்பேற்ற சில மாதங்களில், திருச்சியில் தியாராஜ பாகவதர் கலையரங்கத்தைத்திறந்து வைத்து, பாகவதரின் துணைவியர் கமலா, பங்கஜம் ஆகியோருக்குப் பணமுடிப்பு வழங்கிக் கௌரவிக்கிறார்.

அந்த விழாவில் தியாகராஜ பாகவதர் பாடல்களைப் ப்ளேயரில் போட்டுக கொண்டிருந்த ஏழிசை கோபாலைப் பார்த்து, ‘இப்பொழுது திருப்தியா’ என்று பார்வையாலேயே கேட்கிறார் மக்கள் திலகம். அதற்கு ஏழிசை கோபால் ‘இது போதும் மன்னா’ என்பது போல் தலையசைத்து மகிழ்கிறார்.

பரம்புமலையில் பரங்கிமலை மன்னன்!

1975-ல் ஒரு வழக்கு சம்பந்தமாகத் தஞ்சை நீதிமன்றத்துக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வருகிறார். அவர் வருகிற செய்தி அறிந்த தஞ்சை மக்கள், சாலைகளின் இருபுறமும் கால்கடுக்க நிற்கிறார்கள். நீதி மன்ற வளாகம் முஉவதும் மக்கள் கூட்டம் மாநாடு போல் நிரம்பி வழிந்தபடி இருக்கிறது. கால் துறையினரின் உதவியுடன், நீதி மன்றத்துக்களு சென்று திரும்பிய மக்கள்திலகம் எல்லோரையும் கைகூப்பி வணங்கிவிட்டு, தங்குவதற்காக அரசினர் ஓய்வு விடுதிக்குச் செல்கிறார். வள்ளலில் காருக்குப் பின்னால் அந்த கூட்டமும் பின் தொடர்கிறது. காரணம்-மக்கள் திலகத்துடன் போட்டோ எடுத்துக்கொள்வதற்காக! ஆயிரக்கணக்கான மக்கள் தன் தலைவனுடன் தனித்தனியே போட்டோ எடுத்துக்கொள்ள முடியாத்தால், அந்த விடுதி வளாக வாசலில் ஒரு சேர் போட்டோவுக்கு நூறுபேர் வீதம், சுற்றி நிற்கச் செய்து இருப்பத்தி நான்கு போட்டோக்களைத் தஞ்சை நேஷனல் ஸ்டுடியோ உரிமையாளர் சிவபாதசேகர் எடுக்கிறார்

போட்டோ எடுத்து முடித்த சிவபாதசேகர், உடனடியாக ஸ்டுடியோ சென்று இருபத்தி நானுகு போட்டோக்களையும் கழுவி நெகடிவைக் காயவைத்துவிட்டு, ஸ்டுடியோ வாசலுக்கு வருகிறார். வாசலில் பார்த்தால், மக்கள் திலகத்துடன் போட்டோ எடுத்துக்கொண்ட அந்த இரண்டாயிரத்து நானுறு பேரும் ட்ராபிக் ஜாம் ஆகும் அளவுக்கு அலைமோதிக் கொண்டு நிற்கிறார்கள்.பிறகுதான் தெரிந்தது; மக்கள் திலகத்துடன் எடுத்த போட்டோவை விலை கொடுத்து வாங்க வந்திருக்கிறார்கள என்று!

உடனே நிலைமையைச் சமாளித்து, ஒரே போட்டோவில் நூறுபேர் உள்ள 24 போட்டோவையும் ஒருபோர்டில் ஒட்டி, ஸ்டுடியோ வாசலில் வைத்து விட்டார் சிவபாதசேகர்.

இப்பொழுது, தேனீக்கள் போல் தெரியும் அந்த குருப் போட்டோவில் ஒவ்வொரு ரசிகரும் தன் தலையை அடையாளம் கண்டுபிடித்து, தலைக்குப் பத்து ரூபாய் கொடுத்து பிரிண்ட் போடச் சொல்கிறார்கள்.

ஸ்டுடியோ வாசலில் நின்ற கூட்டத்தைப்பார்த்த சிவபாதசேகரின் தந்தை சி. முத்து வேல் பிள்ளை. பதறிப்போய் என்ன வென்று தன் மகனிடம் கேட்கிறார். விஷயத்தைச் சொல்கிறார் சிவபாதசேகர்.

இதுவரை, ஐம்பது ரூபாயையும், நூறு ரூபாயையும் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த முத்துவேல் பிள்ளை, இன்று ஆயிரம் ஆயிராமாகக் குவிந்ததைப் பார்த்து, அந்தப் பணத்துடன் – ஒரு பசுமையான நினைவும் அவர்முன் வந்து நின்றது.

அன்று கும்பகோணத்தில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்தவர் முத்துவேல் பிள்ளை. அதேபாய்ஸ் கம்பெனியில், படிப்பை நிறுத்திவிட்டு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், எம்.ஜி.சக்கரபாணியும் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருநாள் முத்துவேல் பிள்ளை, நாடகத்துக்ககு களி மண்ணால் ஏசுநாதர் சிலை செய்து கொண்டிருக்கிறார். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் திலகத்தைச் சிறிய களிமண் உருண்டையால் எறிந்து துரத்துகிறார் முத்துவேல்பிள்ளை,.

இதைப் பார்த்த முத்துவேலின் மனைவி, “ஏங்க.. அந்தப் பையனே குழந்தை ஏசுமாதிரிதான் இருக்கான்.. அவனைப் போய் -விரட்டி அடிக்கிறீங்களே?” என்று கண்டித்துக்கொண்டே, கணவனுக்குக்கொண்டு வந்த பலகாரத்தை, பாலகன் எம்.ஜி.ஆருக்கு ஊட்டி மகிழ்கிறார்.

இதை நிறைவு கூர்ந்த முத்துவேல் பிள்ளை அருகில் நின்ற பேரன் போட்டோகிராபர் தேனாரமுதனிடம், “அன்னிக்கு உன் பாட்டி எம்.ஜி.ஆருக்கு ஊட்டிய பலகாரத்துக்கு வட்டியும் முதலுமா தன் முகத்தைக் காட்டி, கட்டுக் கட்டா நம்பளைச சம்பாதிக்க வச்சு, தன்னுடைய பழைய கணக்கைநேர் செஞ்சு இருக்கார். இப்படிப் படிக்கிற வயசுல, தான்பட்ட கஷ்டத்தை மத்தவங்க அனுபவிக்கக்கூடாதுன்னு மெட்ராஸ் வடபழனியில் பள்ளிக்கூடம் கட்டி இருக்கிறார்!” என்று சொல்கிறார், முத்துவேல் பிள்ளை.

மக்கள் திலகம் முன்னணி ஹீரோவா வந்து கொண்டிருந்த நேரம். 1956-இல் வடபழனியில் குண்டும், குழியுமாக இருந்த ஓர் இடத்தை வாங்கி, இரவு பகலாகத் தன்னுடைய சக நடிகர்களான துணை நடிகர்கள், ஸ்டண்ட் நடிகர்கள் அனைவரையும் துணைக்கு வைத்துக்கொண்டு அவர்களுக்காகவே ஓலைக் குடிசையில் பள்ளி நிறுவுகிறார்.

இலவசக் கல்வியுடன், இலவச உடை, இலவசப் புத்தகம் இவற்றுடம் பின்னாளில்-அரசுப் பணத்தில் சத்துணவு வழங்கிய மக்கள் திலகம், தன்னுடைய பள்ளியில் சொந்தச் சலவில் மதிய உணவுத் திட்டத்தை அமுல் படுத்துகிறார். தன்னுடைய ராமாவரம் தோட்டத்திலிருந்தே அரிசியிலிருந்து காய்கறிகள் வரை வரவழைத்து, வயிறார உணவு கொடுக்கிறார்.

தான் சார்ந்திருந்த கட்சிக்கும், கல்விக்கூடத்துக்கும் தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவிடவும் பணம் நிறைய தேவைப்பட்டதால், சினிமாவில் நடித்துக் கொண்டே தன்னூடைய நாடகங்களையும் ஊர்தோறும் நடத்தி வருகிறார் மக்கள் திலகம்.

1958.. கடையேழு வள்ளல்களில் ஒருவரான பரம்பு மலை பாரிமன்னன் ஆண்ட தகடூருக்கு, (இன்றைய தர்ம்பரி) எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் தன்னுடைய “இன்பக் கனவு” நாடகத்தை நட்டச் செல்கிறார். வள்ளலின் வருகையறிந்த தகடூர் மக்கள் முல்லைக்கொடிக்குத் தேரை விட்டுச் சென்ற பாரி மன்னன்தான், பரங்கி மலை மன்னன் உருவில் வருகிறார் என்று வாசலெங்கும் கோலமிட்டு ஆரத்தித் தட்டுடன், காரைவிட்டு இறங்கிய மக்கள் திலகத்தை வரவேற்கின்றனர்.

இரவு நாடகம் முடிந்து அய்யாப்பிள்ளை வீட்டில் தங்கியிருந்த மக்கள் திலக்த்தைக் காண, நாடகம் ஏற்பாடு செய்த குழுவில் இருந்த கோவிந்தராஜ் தன் நான்கு வயது மகளுடன் வருகிறார்.

அந்தச் சிறுமியிடம் மக்கள் திலகம், “உன் பேரென்ன?” என்கிறார்.

“பூங்கொடி”

“நல்ல தமிழ்ப் பெயரா இருக்கே?”

“நம்ம பேரறிஞர் அண்ணா வச்ச பெயர்!” என்று கோவிந்த ராஜ சொல்ல, “அதுதான் பேரே மணக்குது!” என்றுசொல்லி மகிழ்ந்த மக்கள் திலகம் , “இப்ப நான் 16 குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்க்கிறேன். உங்க பொண்ணையும் கொடுத்திடுங்க… பதினேழா இருக்கட்டும்!” என்கிறார்.

“ரொம்ப வருஷம் கழிச்சுப் பொறந்த ஒரே பொண்ணு!”

என்று கோவிந்த ராஜ் சொல்ல, “பரவாயில்லை..நீங்களே வளர்த்துக்குங்க..” என்று மக்கள் திலகம் சொல்கிறார்.

1956 – ல் சூழ்நிலைக் காரணமாக கோவிந்தராஜின் குடும்பம் தகடூரில் இருந்து சென்னைக்கு வந்துவிடுகிறது.

தன் மகள் பூங்கொடியை, எம்.ஜி.ஆர் ஆரம்பப் பள்ளியில்(இன்று ஜே.ஆர்.கே.ஸ்கூல்) சேர்த்து விடுகிறார் கோவிந்தராஜ்

ஷீட்டிங், மீட்டிங் என்று இரவு பகலாக உழைத்துக்கொண்டிருந்த மக்கள் திலகம், பள்ளி சம்பந்தமாக அதிக நேரம் ஒதுக்கமுடியாத்தால் பொறுப்பை அண்ணன், எம்.ஜி.சக்ரபாணி யிடம் ஒப்படைத்துவிட்டார். எனவே, பள்ளிப் பிள்ளைகள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எப்பொழுது வருவார் என்ற ஏக்கத்தில் இருந்தனர்.

ஒருநாள் சென்னையில் மழை பலமாகப் பெய்து கொண்டிருந்தது. அப்பொழுது வாகினி ஸ்டுடியோவில் ‘ஆன்ந்த ஜோதி’ படப்பிடிப்பில் ‘பொய்யிலே பிறந்துத பொய்யிலே வளர்ந்த புலவர்பெருமானே’ பாடல் காட்சியில் மக்கள் திலகம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மழை பெய்தவுடன் ஓலையில் வேயப்பட்ட பள்ளி நினைவுக்கு வரவே, உடனே ஒரு குடையை எடுத்துப் பிடித்துக் கொண்டு நடந்தே பள்ளிக்கு வருகிறார் மக்கள் திலகம். வகுப்பறையில் நிறையிடத்தில் ஒழுகிக்கொண்டும், பள்ளங்களில் நீர்தேங்கியும் இருக்கிறது. எல்லாக் குழந்தை களையும் பாதுகாப்பாக ஆசிரியரைப் பாத்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பிய மக்கள் திலகத்தின் கண்ணில், மழை நீரில் விளையாடிக் கொண்டிருந்த ஒருசிறுமி தென்படவே “நீ தகடூர் பூங்கொடி தனே?” என்று கேட்கிறார்.

“ஆமா”

“பரவாயில்லை…என் விட்டுப் பிள்ளையா வரவேண்டிய நீ… என் பள்ளிப் பிள்ளையா வந்துட்டே!” என்று கன்னத்தில் தட்டிச் செல்கிறார்.

மழை நின்ற மறுவாரவே ஓலையைப் பிரித்து விட்டு ஓடு போடுகிறார் மக்கள்திலகம்.

1956-ல் 2000 பாடல்களுக்கு மேல் எழுதிய தஞ்சை ராமய்யாதாஸின் கதை, வசனம், பாடல்களில் ‘குலேபகாவலி’ படத்தை இயக்குகிறார் டி.ஆர்.ராமண்ணா. அந்தப் படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும், ஜி.வரலட்சுமிக்கும் வாக்கு வாதம் நடப்பதுபோல் வசனம் எழுதியிருப்பார் தஞ்சை ராமய்யதாஸ்.

அதில், ‘ஆட்சிப் பீடத்துக்கு அவசியமானவர்கள் ஆண்களா? பெண்களா?’ என்கிற ஜி. வரலட்சுமியின் கேள்விக்கு “ஆண், பெண் என்ற வித்தியாசம் ஆட்சிப்பீடத்துக்குக் கிடையாது. மக்களின் உதவி என்ற நூலைக் கொண்டே, பதவி என்னம்பட்டம் வானளாவிப் பற்றக்க வேண்டும். ஆகையால் நிலையான செங்கோல், நரேமையான மகுடம், நிம்மதியான ஆட்சி-இவைதான் முழுமையான ஆட்சிப்பீடம்!” என்று மக்கள் திலகம் பதில் சொல்வது போல் வசனம் எழுதியிருப்பார்.

படபிடிப்பில் இந்த வசனத்தைப் பேசிமுடித்த மக்கள் திலகம், தஞ்சை ராமய்யாதாஸைக் கூப்பிட்டுப் பாராட்டி, தமிழ்நாட்டில் ஆறுபேர் மட்டுமே ‘கலைக் களஞ்சியம்’ என்ற அரிய பொக்கிஷ நூலை வைத்திருக்கிறார்கள். அந்த ஆறு பேரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் ஒருவர். தான் வைத்திருந்த அந்த அரிய நூலை ராமய்யாதாஸிடம் நீட்ட, “இந்த நூல் என்னிடம் இருப்பதைவிட, தமிழ் அறிஞரான உங்களிடம் இருப்பதுதான் நல்லது!” என்று சொல்லித் தன் கையொப்பமிட்டு, அவ்வைக்கு அதியமான் அபூர்வ நெல்லிக்கனி கொடுத்தது போல், மக்கள் திலகம் அந்தக் கலைக்களஞ்சியத்தை ராமய்யாதாஸிடம் தருகிறார்.

அதற்குப் பிறகு, 1957-ல் எம்.ஜி.ஆர் – பானுமதி நடிக்க ‘ராணி லிலிதாங்கி’ படத்தைத் தஞ்சை ராமய்யாதாஸ் தயாரித்தார்.

படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்த வேளையில்,

‘ஆண்டவனே இல்லையேதில்லை
ஆண்டவனே உன்போல்
ஆண்டவனே இல்லையே!
என்ற பாடல் காட்சியில் திருநீறு பூசி மக்கள் திலகத்தை நடிக்கச் சொன்னார் தஞ்சை ராமய்யாதாஸ்.

இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத மக்கள்திலகம், “இன்றைக்குநான் சார்ந்திருக்கிற கொள்களையறிந்து, கடைப்பிடித்து வருகிற கோட்பாடறிந்து இது போன்ற காட்சியில் திடீரென்று நடிக்கச் சொல்கிறீர்களே? கண்டிப்பாக நான் இந்தக் காட்சியில் நடிக்கமாட்டேன்!” என்கிறார்.

“தயாரிப்பாளர் நான்.. எனவே நான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும்.!” என்கிறார் ராமய்யதாஸ்.

“நீங்கள் தயாரிப்பாளராக இருக்கலாம். ஆனால் என் கொள்கைக்கு மாறாக நீங்கள் கலை என்ற பெயரில் எனக்கு உடன்பாடு இல்லாத, எதைச்சொன்னாலும் கேட்க வேண்டும் என்பது என்னால் முடியாது!” என்கிறார் எம்.ஜி.ஆர்.

உடனே எம்.ஜி.ஆர் அந்தப் படத்தில் இருந்து நீக்கப்படுகிறார். உடனே எடுத்த எல்லா பிலிம் ரோலையும் தன் மாடி மீது வைத்து எரித்துவிடுகிறார் ராமய்யாதாஸ். அதே படத்தை எம்.ஜி.ஆருக்குப் பதிலாக சிவாஜி கணேசனை நடிக்க வைத்து எடுத்து ரிலீஸ் செய்கிறார் ராமய்யாதாஸ். படம் ஓடவில்லை. பெருத்த நஷ்டம்.

எம்.ஜி.ஆரும் ராமய்யாதாஸூம் பிரிந்து விடுகின்றனர். இருந்தும் மக்கள் திலகம், தான்நடித்த ‘சக்கரவர்த்தி திருமகள்’ ‘புதுமைப்பித்தன்’ ‘மகாதேவி’ படங்களில் தஞ்சை ராமய்யா தாஸுக்குப் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்துச் சிபாரிசு செய்கிறார்.

1962 இல் தஞ்சை ராமய்யாதாஸ் எழுதிய ‘திருக்குறள் இசை அமுதம்’ என்ற நூலை,கோல்டன் ஸ்டுடியோவில் நடந்த நடிகர் சங்கவிழாவில் மக்கள் திலகம் வெளியிட்டு கௌரவித்தார்.

அது மட்டுமல்லாமல் ராமய்யாதாஸின் பத்து வயது மகன் டி.ஆர் ரவீந்திரன் அன்றே அதே மேடையில் 1330 குறளையும் ஒப்பிக்க, மக்கள் திலகம் ரவீந்திரனை மடியில் வைத்துக் கொஞ்சிப் பாராட்டி, “நீயும் உன் அப்பாவைப் போல் தனித்த கொள்களையுடன், தமிழறிஞராய்த் திகழ வேண்டும்!” என்று வாழ்த்துகிறார்.

“படத்தில் இருந்து நீக்கி மக்கள் திலகத்தை மனம் நோகச்செய்தும், மனித தெய்வமாக, எனது மாமனார் ராமய்யாதாஸுக்குத் தொடர்ந்துத உதவிகள் செய்தார் வள்ளல். அதனால் தான் எனது வீட்டில் இன்றும் எனது பூஜையறையில் எம்.ஜி.ஆரின் படத்தைத்தான் வணங்குகிறேன்!” என்றார் தஞ்சை ராமய்யாதாஸின் மருமகளும், டி.ஆர். ரவீந்திரனின் மனைவியுமான தகடூர் பூங்கொடி…!

தோல்வியே தூரப்போ!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.கவைத் துவங்கிய பின்னர், தி.மு.க.விலிருந்து பலதிரைப்பட நடிகர்கள் அவர் பக்கம் வந்து விட்டார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். மீது மாறாத அன்பு கொண்டிருந்த எம்.எஸ்.கிருஷ்ணன் என்ற நடிகர் தி.மு.க.விலேயே இருந்தார்.

எப்பொழுதுமே கையில் முரசொலி பேப்பருடன் காட்சியளிக்கும்ம் எம்.என்.கிருஷ்ணன் எதேச்சையாக தமிழக முதல்வராகத் திகழ்ந்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆரைச் சந்திக்கிறபொழுது கூடத் தன்னைத் திராவிட முன்னேற்றக் கழகத் தீவிர விசுவாசியாகத்தான் காட்டிக்கொள்வார்.

ஆனாலும், கட்சி மாச்சரியத்தை மறந்து, களையை மதித்து, 1980 இல் தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி, தந்தை பெரியாரின் சிறப்புக்களைப் பற்றி நாடு முழுவதும் நாடகம் நடத்த எம்.எஸ். கிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆர் அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி வேலூரில் எம்.எஸ். கிருஷ்ணன் நடித்துக் கொண்டிருக்கும்பொழுது, பதினைந்து அடி உயர மேடையில் இருந்து விழுந்து இறந்துவிடுகிறார். உடனே உடன் நடித்த பி.ஏ.சொக்கலிங்கம். கே.ஆர்.சீதாராமன் ஆகியோர் அரசு வண்டியில் எம்.என். கிருஷணன் உடலைப் பாதுகாப்பாக சென்னைக்கு எடுத்து வருகின்றனர். பணம் கொடுத்து உதவியதுடன், அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களை அரசு சார்பில் எம்.என். கிருஷ்ணனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச் செய்கிறார் மக்கள் திலகம்.

எம்.என். கிருஷ்ணனின் இறுதிச் சடங்கு முடிந்து, மூன்று நாள் கழித்து, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் உத்தரவுப்படி எம்.என். கிருஷ்ணனின் மகன் என்.கே. நடேசன் ராமாவர தோட்ட இல்லத்துக்கு அழைத்து வரப்படுகிறார்.

எதிரில் நின்ற எம்.என்.கே. நடேசனிடம், “உன்கூடப் பிறந்தவங்க எத்தனை பேர்? என்று கேட்கிறார்.

“மூணு பேர்..”

“இப்ப நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?”

“லேப் டெக்னீஷியன் கோர்ஸ் முடிச்சுட்டு வேலை கிடைக்காம சும்மாத்தான் இருக்கேன்…”

விசாரித்து முடிந்த மக்கள் திலகம், தன் உதவியாளர் மகாலிங்கத்தை அழைத்து, “இவரை மக்கள் நல வாழ்வுத் துறை அமைச்சர் எச்.வி. ஹண்டேவிடம் அனுப்பி வச்சு, இவருக்குக் கருணை (Comparssionate) அடிப்படையில் – உடனே அவர் தகுதிக்கேற்ப ஒரு வேலை போட்டத் தரச் சொல்லு!” என்று உத்தரவு பிறப்பித்து, எம்.என்.கே. நடேசனைத் தட்டிக் கொடுத்து, “கவலைப்படாம போ.. நான் உனக்கு வேண்டியதைச்செய்கிறானே!” என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

சொல்லியபடி எம்.என்.கே நடேசனுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. இன்றும் ராயப்பேட்டை மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார் எம்.என்.கே. நடேசன்.

எம்.என். கிருஷ்ணனைப் போலவே, நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்த (எம்.என். கிருஷ்ணனின் நண்பர்) பி.ஏ. சொக்கலிங்கம், கே.ஆர் ராமசாமியுடன் “வேலைக்காரி” போன்ற நாடகங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

கே.ஆர். ராமசாமி சினிமாவில் நடிக்கச் சென்றுவிட்டதால், பி.ஏ. சொக்கலிங்கம் நாடகத்தில் நடிக்க வாய்ப்பில்லாமல் ராயப்பேட்டையில் ஒரு அறையில் தங்கிக் கொண்டு, இனி என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறார்.

அந்தத் தருணத்தில், “உங்களை எம்.ஜி.ஆர் அழைத்து வரச் சொன்னார்!” என்று நாராயணப்பிள்ளை என்பவர் பி.ஏ. சொக்கலிங்கம் அவர்களை – லாயிட்ஸ் ரோட்டித் தங்கியிருந்த மக்கள் திலகத்திடம் அழைத்துச் செல்கிறார்.

“நீங்கதான் கே.ஆர். ராமசாமி நாடகக் கம்பெனியில நடிச்சுட்டு இருந்தவரா?” என்று கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

“ஆமண்ணே…”

“சாப்பிட்டாச்சா?”

“இன்னும் இல்லைண்ணே!”

முதல்ல எதிர்ல இருக்கிற ஓட்டல்லபோய் சாப்பிட்டு வந்திடுங்க..” என்று எம்.ஜி.ஆர் ரூபாயை கொடுத்து அஜந்தா ஹோட்டலை காட்டுகிறார்.

ஐந்து ரூபாய் என்பதே அபூர்வம்..இருபது ரூபாயைப்பார்த்தவுடன்மலைத்து போய் , வாங்கிக் கொண்டு சாப்பிடச்செல்கிறார் சொக்கலிங்கம்.

சாப்பிட்டு முடித்துவிட்டு வந்தவுடன் -சொக்கலிங்கத்திடம், “உங்களுக்குப் பாடத் தெரியுமா? என்கிறார் மக்கள் திலகம்.

‘ஊம்’ என்று தலையசைத்த சொக்கலிங்கம்.

“வானம்பாடி போல பிரேம
கானம் பாடி மகிழ்வோம்!”

என்று பாடி மகிழ்விக்கிறார். மக்கள் திலகத்தை, கேட்டு முடிந்த மக்கள் திலகம், “திருச்சி தேவர் ஹால்ல. டால்மியாபுரம் போராட்ட நிதிக்காக இடிந்த கோயில் நாடகத்தை நடத்தப் போறோம். அதுல நீங்க நடிக்கிறீங்க…நாளையில இருந்து ஒத்திகைக்குக் கரெக்டா வந்திடுங்க!” என்று சொல்லி அனுப்பகிறார் மக்கள் திலகம்.

ஒருநாள் நாடக ஒத்திகை முடிந்து, தன்னுடன் தனது அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.ஜி.ராம்மூர்த்தி, ஸ்டண்ட் மாஸ்டர் ஆர்.என். நம்பியார், சொக்கலிங்கம் ஆகியோரைக் கூட்டாக வைத்துக் கொண்டு ‘கேரம் போர்டு’ விளையாடுகிறார், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

தனக்கு ஜோடியாக விளையாடிய எம்.ஜி.ராமமூர்த்தி சரியாக ஆடாததால், எதிலும் தோல்வியையே சந்திக்காத மக்கள் திலகம். அந்தக் கேரம் போர்டு விளையாட்டில்தோற்றுவிடுகிறார்

இது நடந்து முடிந்து இரண்டு நாட்கள் கழித்து, சொக்கலிங்கம் தங்கியிருந்த ராயப்பேட்டை முத்து முதலி தெருவில் இருந்த வீட்டிற்கு -மக்கள் திலகத்தின 2248 எண் பியட் கார் வருகிறது.

காரை விட்டு இறங்கிய டிரைவர், “உங்களைச் சின்னவர் கையோடு அழைத்து வரச்சொன்னார்!” என்று சொக்கலிங்கத்தைக் காரில் ஏற்றிக் கொண்டு, லாயிட்ஸ் ரோட்டில் உள்ள மக்கள் திலகத்தின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

‘எதற்காக நம்மைத் திடீரன்று அழைக்கிறார் மக்கள் திலகம்’ என்ற பதைபதைப்புடன் சென்ற சொக்கலிங்கத்தை – வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கிறார் மக்கள்திலகம்.

மாடிக்குச்சென்றவுடன் அங்கே ரெடியாக இருந்த கேரம் போர்டு அருகில் மக்கள் திலகம் அமர்ந்து கொண்டு, “அன்னிக்கு நீங்க என்னை ஜெயிட்சுட்டீங்க இல்லே..! ரெண்டு நாளா எனக்குத் தூக்கம் பிடிக்கலை…இப நீங்களும் நானும் ஒத்தையா இருந்து ஆடப்போறோம். நீங்க உங்க முழுத்திறைமையையும் காட்டி ஆடுங்க. திரும்ப என்னைத் தோற்கடச்சுட்டா வேலை போயிடும்கற பயமெல்லாம் இருக்கக் கூடாது!” என்று சொக்கலிங்கத்தைக் கேரம் போர்டு எதிரில் உட்காரச் சொல்கிறார்.

இப்பொழுது ஆட்டம் தொடங்குகிறது. சொக்கலிங்கம் ரொம்ப சீக்கிரம் சீரியசாக ஆடுகிறார்.

ஆனால் மக்கள் திலகம் போர்களத்தில் ஒருபோர் வீரன், எதிரிகளைச் சிதறடித்துச் சின்னா பின்னம் ஆக்குவது போல் காய்களைச்சுழற்றிச்சுழற்றி அடிக்கிறார்.

ஒவ்வொரு அடிக்கும், நான்குகுழிகளிலும் காய்கள் துள்ளி விழுகின்றன.

கடைசிவரை சொக்கலிங்கத்தால் ஒரு காய்கூட எடுக்க முடியவில்லை.

இப்படித் தோல்வியை ஒரு நாளும் தன் தோள்கள் தழுவக் கூடாது என்கிற போர்குணம்தான், மக்கள் திலகத்தை இறுதி நாள் வரை ஒரு வெற்றி வீரனாகவே உலா வர வைத்தது.

ஒருமுறை நாடக ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அறிஞர் அண்ணா போடும் அம்பாள் பொடியை…அருகில்நின்று ஒரு அடப்புக்காரனைப் போல், தேவைப்படும் பொழுது மற்றவர்களுக்குத் தெரியாமல் அண்ணாவிடம் கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்த சொக்கலிங்கத்துக்கும், அண்ணாவைப் போலப் பொடி போடும் பழக்கம் தொற்றிக் கொண்டது.

ஒருநாள் நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது சொக்கலிங்கம் பொடி போட்டுவிடுகிறார்.

அந்த நேரம் பார்த்து இவரது காட்சி ஒத்திகை வரவே, மக்கள் திலகம் சொக்கலிங்கத்தைத் தனியாக அழைத்துச் செல்கிறார்.

“இனி இவ்வளவுதான்” என்று வெட்டப்படப் போகிற ஆடாகச் சென்ற சொக்கலிங்கத்திடம், “என்னாச்சு.. ஏன் இப்படிக் கண் கலங்க நிக்கறீங்க? வீட்ல யாருக்காவது உடம்புக்கு சுகமில்லையா?” என்றெல்லாம் மக்கள் திலகம் கேட்டவுடன்,

“ஆமண்ணே… காரைக்கடுயில இருக்கிற அம்மாவுக்கு உடம்பு சுகமில்லை… நேத்துத்தான் கடுதாசி வந்தது!” என்று அம்மா என்ற அஸ்திவாரத்தை சொக்கலிங்கம் வீச, அப்படியே வீழ்ந்து விடுகிறார் தாயன்பில் தனித்துத் திகழும் மக்கள் திலகம்.

“உடனே இதை ஏன் என்கிட்டே சொல்லாம மறைச்சீங்க? இந்தாங்க… இந்த முன்னூறு ரூபாயை உடனே எதிரில் இருக்கிற போஸ்ட் ஆபீசுக்குப் போய் அம்மாவுக்கு அனுப்பிவிட்டு, ரசீது வாங்கிட்டு வாங்க!” என்று பணம் கொடுத்து அனுப்புகிறார் பொன்மனச் செம்மல்.

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லி, தாய்க்குப் பணம் அனுப்பக்கூடிய புண்ணியத்தைத் தேடிதந்த மக்கள் திலகத்தை மனதார வாழ்த்திக்கொண்டேபோஸ்ட் ஆபிஸ் சென்று பணத்தை அனுப்பிவிட்டு, திரும்பி வந்து -மக்கள் திலகத்திடம், இப்பொழுது ஆனந்தக் கண்ணீர் வடித்து ரசீதைக்கொடுக்கிறார் சொக்கலிங்கம்.

மக்கள் திலகம் முதல்வர் ஆன பிறகு, ஒருபடபூஜைக்கு வாகினி ஸ்டுடியோவுக்கு வருகிறார். அந்த பூஜைக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த சொக்கலிங்கத்தைமக்கள் திலகம் பார்த்து விடுகிறார். உடனே ஆட்காட்டி விரலைக் காட்டி, ‘இங்கே வாங்க’ என்று அழைக்கிறார்.

ஆயிரம் பேருக்கு மத்தியிலும் தன்னை அடையாளம் கண்டு, மக்கள் திலகம் அழைத்த மகிழ்ச்சியில் சொக்கலிங்கம், மக்கள் திலகத்தின் கரம் பற்றி வணங்குகிறார்.

பிறகு, “எல்லாரும் என்னை வந்து பார்க்கிறாங்க… ஆனா உங்களை மட்டும் நான் வந்து பார்க்கணுமா? ஏன்னா, ஒரு காலத்துல என்னைத் தோற்கடிச்சவராச்சே நீங்க!” என்று வாய் நிறைய சிரித்துக் கொண்டு, எதையும் மறக்காத மக்கள் திலகம் மனம் திறந்து பேசுகிறார்

இதையெல்லாம் கேட்டுக் கிறங்கிப் போன சொக்கலிங்கத்தைப் பார்த்து, “ஏதாவது வேணும்னா என்னைதோட்டத்துலயோ, அல்லது கோட்டையிலேயோ வந்து பாருங்க…” என்ற மக்கள் திலகத்திடம், “என் பிழைப்புக்கு கடை வைச்சுக் கொடுத்தீங்க…என் சந்தோஷமான வாழ்க்கைக்குத் திருமணம் செய்து வச்சீங்க…இருக்க வீடு வாங்கிக்கொடுத்தீங்க…இனிமே உங்க கிட்ட என்ன வேணும்னு கேட்பேன்? உங்களைத் தெய்வமா நினைக்கிற மக்களுக்கு நீங்க செய்ற உதவியைப் பார்த்து நான் மகிழ்ச்சியா இருப்பேன்!” என்று சொல்லி மகிழ்கிறார் சொக்கலிங்கம்.

எனக்கு மகள் இருந்தால் உனக்குமணம் முடித்துத் தருவேன்

1973…சென்னை லயோலா கல்லூரியில மாணவர் அணி பொதுச் செயலாளராக இருக்கிறார் ஜே.சி.டி. பிரபாகரன். அப்பொழுது அதே கல்லூரியில் படிக்கும் சக மாணவர் ஒருவர், “பணக்கார மாணவர்கள் படிக்கும் இந்தக் கல்லூரியில் ஏழை மாணவனான எனக்கு எப்படியோதகுதி அடிப்பைடியல் சீட் கிடைத்துவிட்டது. எல்லாச் செலையும் ஓரளவு சமாளித்து விட்டேன். நீங்கள் எனக்கு மதிய உணவு மட்டும் நிர்வாகத்திடம் சொல்லிக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்து கொடுங்கள்!” என்று ஜே.சி.டி பிரபாகரினிடம் கேட்கிறார்.

உடனே ஜே.சி.டி. பிரபாகரன் கல்லூரி முதல்வரிடம் இதை எடுத்துச் சொல்கிறார். அதற்குக் கல்லூரி முதல்வர் அப்படியொரு சிஸ்டம் இல்லாத்தால், இது சாத்தியமில்லை என்கிறார்.

அடுத்து ஜே.சி.டி பிரபாகரன் ‘மதிய உணவு வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கவும்’ என்று ஒரு பேப்பரில் எழுதி நோட்டிஸ் போர்ட்டில் ஒட்டி விட்டார். அதன் பின்னர் அந்த ஒரு மாணவரைத் தொடர்ந்து பதினாறு மாணவர்கள் மதிய உணவு வேண்டி விண்ணப்பித்திருக்கிறார்கள்.

மறு நாள் தி.நகர் அலுவலகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைச்சந்தித்து, இந்தப் பதினாறு மாணவர்களின் கோரிக்கையைத் தெரிவிக்கிறார் ஜே.சி.டி.பிரபாகரன்.

உடனே மக்கள் திலகம் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கிறார். வாங்க மறுத்த ஜே.சி.டி.பிரபாகரன்,” நான் உங்ககிட்ட பண உதவி கேட்டு வரலைங்கண்ணே! இந்த மாணவர்களுக்கு நிரந்தரமா தீர்வு கிடைகணும்னா, உங்க தலைமையில ஒரு ஸ்டார் நைட் நடத்தி, அதன் மூலம் வர்ற பெரிய தொகையை வச்சு நிறைய பேர் பயன்படுற மாதிரி இந்தத் திட்டத்தை நிறைவேற்ற விரும்புகிறேன்!” என்கிறார்.

அதற்கு மக்கள் திலகம் பக்கத்தில் அமர்ந்திருந்த கே.ஏ. கிருஷ்ணசாமியிடம், “பார்த்தீங்களா…. படிக்கிற வயசுலேயே தனக்காக இல்லாமல், பிரபாகரன் கூடப்படிக்கிற மாணவர்களுக்காக்க் கவலைப்படுறாரு!” என்ற பாராட்டுடன் மக்கள் திலகத்தின் மனதில் பதிவாகிறார் ஜே.சி.டி.பிரபாகரன்.

மறு நாள் ஆத்தூர் வெள்ளைச்சாமி (இவர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் துணை மந்திர பொறுப்பில் இருந்தார்) மூலம் பத்தாயிரம் ரூபாய் பணம் பெறப்பட்டு, பிரபாகரனிடம் கொடுக்கப்படுகிறது.

நடிகர் சங்க ஒப்புதலுடன், சென்னைப் பல்கலைகழக நூற்றாண்டு மண்டபத்தில் விழா நடக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி வேறு விழாவுக்குச் செல்ல வேண்டி இருந்ததால், முதலிலேயே பேசி முடிக்கிறார். சிவாஜி பேசி முடித்த பிறகு ஜே.சி.டி. பிரபாகரன் கொடுத்த, நடிகர் சங்கத்துக்குச் செலுத்த வேண்டிய ஆயிரம் ரூபாயைச் செலுத்தி விட்டுச் செல்கிறார்.

இறுதியாக அந்த விழாவில் பேச வந்த மக்கள் திலகம், “ஏழை மாணவர்களின் மதிய உணவுக்குஆக நிதி சேர்க்கிற இந்த விழாவில் நம்முடைய சங்கக் கஷ்டங்களைச்சொல்லி ஆயிரம் ரூபாய் வாங்குவது தவறு. எனவே-ஏற்கனவே நான் கொடுத்த பத்தாயிர் ரூபாயுடன், இந்த ஆயிரம் ரூபாயையும் நானே தருகிறேன்!” என்று சொல்லி அந்த இடத்திலேயே ஆயிரம் ரூபாய் தருகிறார்.

விழாவில் கிடைத்த முப்பத்தி மூன்றாயிரம் ரூபாயை பேங்கில் டெபாசிட் செய்து, கல்லூரியில் ஒரு புதிய மதிய உணவுத் திட்டத்தை அமுலாக்குகிறார். பின்னாளில் முதல்வரான பிறகு பள்ளிப் பிள்ளைகளுக்குச் சத்துணவு வழங்கிய சரித்திர நாயகன்.

இந்தத் திட்டம் துவங்கக் காரணமாக இருந்த ஜே.சி.டி. பிரபாகரனின் மனிதாபிமானம் மக்கள் திலகத்தைக் கவர்ந்து விடுகிறது.

அன்றிலிருந்து சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராக ஆகும் வரை ஜே.சி.டி. பிரபாகரன் செயல்பாடுகளைக் கவனித்து வருகிறார். புரட்சித்தலைர். எனவே 1980-ல் புரட்சித் தலைவரின் ஆட்சி கலைக்கப்பட்டு, மீண்டும் முதல்வராக ஆன பொழுது, வில்லிவாக்கம் தொகுதியில் பிரபாகரனை சட்ட மன்ற உறுப்பினராக்கி மகிழ்கிறார் மக்கள்திலகம்.

1984-…ஜே.சி.டி.பிரபாகரனின் உதவியாளர் கண்ணையா திருமணத்திற்கு வருகிறார் மக்கள் திலகம்.

அந்தத் திருமண விழாவில் வாழ்த்திப் பேசிய மக்கள் திலகம், “எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதனால் எனக்கு வாழ்த்த வயதில்லை’ என்று பிரபாகரன் பேசினார்.

பிரபாகரனின் பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு வந்திருப்பார்கள் என்று கருதுகிறேன். அவர்களிடம் ஒரு வேண்டுகோள். பிரபாகரனுக்கு நீங்கள் பெண் பார்க்கப் போகிறீர்களா? அல்லது, இன்றே எனது மனைவி ஜானகியை அனுப்பிப் பெண் பார்க்க வைக்கவா? எனக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால், அவளை நான் பிரபாகரனுக்குத் தான் கொடுப்பேன்!” என்று பேசி பிரபாகரனை மட்டுமல்ல, மணவிழாவுக்கு வந்திருந்த அனைவரையும் நெகிழ வைக்கிறார்.

மக்கள் திலகம் பேசி முடித்த மறுஆண்டே பிரபாகரனுக்குத் திருமண ஏற்பாடு செய்கின்றனர் அவரது பெற்றோர். ஆனால் அந்த நேரத்தில் தான் மக்கள் திலகம் உடல் நலக் குறைவால், அமெரிக்காவுக்குச் சிகிச்சை பெறச் செல்ல நேரிடுகிறது.

திருமணம்முடிந்து -1985, ஆகஸ்டு 25 – ம் தேதி சரியாகப் பேச முடியாத நிலையில் இருந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை -ஜே.சி.டி பிரபாகரன் தன் மனைவியுடன் சந்திக்கிறார்.

சிறிது நேரம் இருவரையும் இமைகொட்டாமல் கண் கலங்கப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் திலகம், பிரபாகரனைப் பார்த்து மழலைப் பேச்சில் “திருமணப் பரிசாக உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கிறார்.

பிரபாகரன் பொன்னாக்க் கேட்பார். பொருளாக்க் கேட்பார் என்று எதிர்பார்த்தமக்கள் திலகத்திடம், “நாடார்கள்-சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்கள். மீனவர்களும் சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்கள. அதே போல் மதம் மாறிய வன்னிய (படையாச்சி) கிறிஸ்துவர் களையும், சிறுபான்மையினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்! இதுவே தாங்கள் எனக்குக் கொடுக்கும் திருமணப் பரிசு” என்று ஒரு பேப்பரில் எழுதித் தருகிறார் ஜே.சி.டி. பிரபாகரன்.

வாங்கிப் படித்த மக்கள் திலகம் மீண்டும் மழலை மொழியில், “அன்னிக்கு முதன்முதலாக, உனக்காக இல்லாம, மாணவர்கள் பசிக்காக உதவி கேட்டே..! இன்னிக்குக் கூட திருமணப்பரிசாக உனக்காக இல்லாம, மக்களுக்காகத்தானே கேட்கறே!” என்று ஆனந்தக் கண்ணீருடன் ‘ஆவன செய்கிறேன்’ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

ஆகஸ்டில் உறுதி அளித்த மக்கள்திலகம், சொல்லியபடி டிசம்பரில் பிரபாகரனின் கோரிக்கையை நிறைவேற்றி அமுலாக்குகிறார்.

தொட்டுக்கொள்…

எம்.கே.தியாகராஜ பாகவதர் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நேரமது. கோவை ராயல் இந்து ரெஸ்டாரன்ட் ஹோட்டலில் தியாராஜ பாகவதர் தங்கியிருக்கிறார். அவர் தங்கியிருந்த நான்குநாட்களும்,- தியாகராஜ பாகவதரைப் பார்க்க ஆண்களும், பெண்களுமாய் ஹோட்டலைச் சுற்றி கட்டுக்கடங்காத கூட்டம் காவல் துறை கண்ணீர்ப் புகை வீசியெல்லாம் ஜனங்களை ஒழுங்குபடுத்த வேண்டி நிலை.

அந்தக் கூட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் பட்டினியாக் கிடந்து பாகவதரை மூன்று நாட்களாகப் பார்க்கமுடியாமல் தவித்தபோது, ராயல் இந்து ரெஸ்டாரன்ட் முதலாளி தியாராஜ பாகவதரைப்பார்க்க வைத்தது எல்லாம் ஒரு பெரிய கதை.

அதே கோவையில் எம்.ஜி.ஆர். கோவை பட்சிராஜா ஸ்டுடியோவில் தினக்கூலியாக எட்டணா சம்பாதித்துக் கஷ்டப்பட்டுக கொண்டிருந்த நேரத்தில், ஒரு நாள்தன் குடும்பத்திற்கு அரைப்படி அரிசி கொடுத்து உதவிய சாண்டோ எம்.எம்.சின்னப்பத் தேவரைப் பட முதலாளியாக்கித் தன நன்றிக் கடனைத் தீர்த்துக கொண்ட மக்கள் திலகம், தான தமிழக முதல்வரான பிறகு, தேவர்வீட்டில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக்க் கோவைக்கு வருகிறார்.

அலங்கார் ஓட்டலில் தங்கி இருக்கிறார் மக்கள் திலகம். ஹோட்டலைச் சுற்றி மக்கள் வெள்ளம். எல்லா சலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர். திருமணம் நடக்கவிருக்கும் ஸ்டேன்ஸ் மில் திருமண மண்டபத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே,எல்லோரும் இங்கிருந்து கலைந்து சென்று அங்கு போய்ப்பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று கட்டளை பிறப்பித்துக் கூட்டத்தை கலைக்கின்றனர் காவல்துறையினர.

திருமண மண்டபத்தில் காத்துக் கிடந்த மக்கள் அலங்கார் ஓட்டலில் தான் மக்கள் திலகம் இருக்கிறார் என்று செய்தி அறிந்து, எல்லோரும் மண்டபத்தில் இருந்து ஹோட்டலுக்குச் செல்கின்றனர்.

இப்படி ஹோட்டலுக்கும் திருமண மண்டபத்திற்குமாக மக்கள் அலைமோதிக் கொண்டிருக்கும் பொழுது, கூட்டத்தில் இருந்த ஒருவர், “இதே மாதிரிதாம்பா இருபது வருஷத்துக்கு முன்னாடிதியாகராஜ பாகவதரைப் பார்க்க ஜனங்க ராயல் ஹோட்டலைச் சுத்தி நின்னாங்க!” என்று சொன்னார்.

இன்னொருவர், “பாகவதரைப் பார்க்க் கட்டுக்கடங்காத கூட்டம் காத்துக் கிடந்தது வாஸ்தவம்தான். ஆனா பாகவதருக்கு வந்த கூட்டத்தைத விட, நூறு மடங்கு கூட்டம் எம்.ஜி.ஆருக்கு இன்னிக்கு வந்திருக்கு!” என்று புள்ளிவிவரம் சொல்லிக் கொண்டிருந்தார்.

மண விழாவை முடித்து வைத்த மக்கள் திலகம் உடன் வந்த மதியழகனுடன், தன்னுடைய ‘டாட்ஜ்’ காரிலேயே சென்னைக்குப் புறப்படுகிறார்.

அவினாசி ரோடு வழியாகச் சென்ற மக்கள் திலகத்தின் ‘டாட்ஜ் காரைத் தொடர்ந்து, அம்பாசிடர் கார் ஒன்று வருகிறது. இருந்தும் மக்கள திலகத்தின் டாட்ஜ் காரில் வேகத்திற்கு, அந்த அம்பாசிடர் கார் பின் தொடர்கிறது என்று அறிந்து கொண்ட மக்கள் திலகம். கோவையிலிருந்து இருபதாவது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கருமத்தம்பட்டிக்கருகே சென்று கொண்டிருந்த பொழுது, டிரைவரைக் காரை நிறுத்தச் சொல்கிறார்.

மக்கள் திலகத்தின் கார் நின்றவுடன், ஒரு கிலோ – மீட்டர் இடைவெளியில் வந்து கொண்டிருந்த அம்பாசிடர் கார் இன்னும் கொஞ்சம் அதிவேகத்தில் வந்து, டாட்ஜ் காரின் குறுக்கே நிற்கிறது. நின்ற வேகத்தில் கார் கதவைப்படாரென்று திறந்து கொண்டு மூன்று இளைஞர்கள் மக்கள் திலகத்தை நோக்கி ஓடி வருகின்றனர்.

மக்கள் திலகம் தான் யூகித்தது போலவே நடக்கிறது என்பதை அறிந்து கொண்டு, காரின் கறுப்புநிறக் கண்ணாடிக் கதவை இறக்குகிறார். கதவு கீழ் நோக்கி இறங்கிக்கொண்டிருக்கும் பொழுதே, கூப்பிய கரத்துடன் இருத் மக்கள் திலகத்தைப் பார்த்து மூன்று பேரும் ஏக காலத்தில் வணங்கி நின்றனர்.

தன்னுடைய வழக்கமான வேத மொழியாக, “உங்களுக்கு என்ன வேணும்? எதுக்காக என்னை இந்தத் துரத்து துரத்தி வந்தீங்க?” என்று கேட்கிறார்.

“எங்களுக்கு ஒண்ணும் வேணாம். உங்களை நின்னு தொட்டுப் பாத்திடலாம்னு காலையிலேர்ந்து அலங்கார் ஓட்டலுக்கும், ஸ்டேன்ஸ்மில் கல்யாண மண்டபத்துக்கும் நடையா நடந்து பார்த்தோம். முடியலை… அதனால்தான் எப்படியும் நீங்க மெட்ராஸ் போறதுக்குள்ள வழியில் எங்கயாவது நிறுத்திப் பார்த்திடலாம்னுதான் மூணு பேரும் கார் எடுத்துட்டுக் கிளம்பினோம்!” என்றனர்.

“அதற்காக இப்படியா காரை வேகமாக ஓட்டி வர்றது?” என்று கடிந்து கொண்ட மக்கள் திலகம் “உன் பேரென்ன?” என்உற கேட்டார்.

“வாசுதேவன்”

“உன்பேரு?”

“ஜெகன்னாதன்”

“உன்பேரு?”

“சிவக்குமார்”(இன்றைய தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவக்குமார். சத்யராஜின் சகலைப்பாடி’) என்று மூன்றாவதாகத் தன் பெயரைச் சொன்னபோது, மக்கள் திலகத்துடன் அமர்ந்திருந்த மதியழகன், “ஏங்கண்ணு…நீ பட்டயக்கார்ர் வக்கீல் துரைராஜ் குடும்ப வழியா?” என்று கேட்க, “ஆமங்கண்ணா!” என்று மாதம்பட்டி சிவக்குமார் பதிலளிக்கிறார். உடனே மதியழகன் மக்கள் திலகத்திடம், “நம்ம கட்சிக்காரண்ணே!” என்கிறார்.

“அப்படியா?” என்றுகேட்டுக் கொண்ட மக்கள் திலகம், “இப்ப நாங்க புறப்படலாமா?” என்று கேட்கிறார்.

உடனேமாதம்பட்டி சிவக்குமார், சட்டைப்பையில் இருந்த ஒரு பேப்பரை எடுத்து, “இதுல உங்க கையெழுத்துப் போட்டுக் கொடுங்க!” என்றுநீட்டுகிறார்.

தன் மனம் கவர்ந்த காதலி, காபி டம்ளர் நீட்டி கொடுக்கும் பொழுது டம்ளரை வாங்கும் சாகில் காதலியின் கைவிரல தொட்டு மகிழ்வதுபோல்-பேப்பரை நீட்டிக் கொடுக்கும் சாக்கில் மக்கள் திலகத்தின் கரம்தொட்டு மகிழ்கிறார் மாதம்பட்டி சிவக்குமார். மக்கள் திலகம், ‘இது ஒன்றும் புதிதாக நடக்கும் நிகழ்வல்ல’ என்று ‘தொட்டுக்கொள்’ என்று தன் கையைவிட்டக் கொடுத்து மகிழ்கிறார்.

பின்னாளில் மக்கள் திலகம் புரட்சித் தலைவராகத்தமிழக முதல்வரான பிறகு,புனித ஜார்ஜ் கோட்டையிலும், இராமாவரம் தோட்டத்திலும், தலைமைக் கழக அலுவலகங்களிலும் வாரத்தில் சில நாட்கள் குறைதீர்க்கும் மனு வாங்குவதற்கு நேரம் ஒதுக்குவார்.

அந்த நாட்களி மக்கள் கொடுக்கும் பாதி மனுக்களில் எதுவுமே எழுதப்பட்டிருக்காது.

சில நேரம் மனுவை அந்த இடத்திலேயே பிரித்துப்பார்க்கும் மக்கள் திலகம், “உங்களுக்கு என்ன வேணும்? மனுவில் உங்கள் தேவை எதுவுமே எழுதப்படவில்லையே?” என்று கேட்கும் பொழுது. மனுதார்ர் நாணிக் கோணி, மனுக் கொடுக்கிற சாக்குலயாவது உங்களை ஒரு முறை தொட்டுப்பார்த்திடணும்கிற ஆசையில்தான் உங்ககிட்ட இந்த வெத்துப் பேப்பரைக் கொடுத்தேன்!” என்றுதங்க் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட மகிழ்ச்சிய் செல்வார்கள்.

இன்னும் சொல்லப்போனால், மக்கள் திலகத்தைப் பார்க்க வந்தபல இலட்சம் பேரில் உதவி கேட்டு வந்தவர்களைவிட, தொட்டுப்பார்த்து மகிழ வந்தவர்கள் தான் பாதிப்பேர்.

மாதம்பட்டி சிவக்குமாரும் அதே மனநிலையில்தான் மக்கள் திலகத்திடம் நடந்து கொள்கிறார். பேப்பரை வாங்கிய மக்கள் திலகம-அந்த ஒருபேப்பரில் இடைவெளிவிட்டு இடைவெளி விட்டு உழைப்பே உயர்வு. அன்பன் எம்.ஜி. ராமச்சந்திரன் என்று கையெழுத்திட்டு, ஏதோ சொத்தைப் பங்கு பிரித்துக்கொடுப்பது போல், ஆளுக்கொரு கையெழுத்தை கட் பண்ணி, மூன்று பேரும் வைத்துக் கொள்ளுங்கள்! என்று கொடுக்கிறார். புதையல் கிடைத்த மகிழ்ச்சியில் போய்க்கொண்டிருந்த மூன்று பேரையும் கூப்பிட்டு, “காரை வேகமா ஓட்டக்கூடாது… மெதுவா போகணும்!” என்று எச்சரித்து அனுப்புகிறார்.

1971 இல் வேலூர் ஆஸ்பத்திரியில், நடிப்பிசை புலவர் கே.ஆர். ராமசாமி உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.

மக்கள் திலகம் அவரைப் பார்த்து நலம் விசாரிக்க வருகிறார் என்ற செய்தி வேலூர் மருத்துவமனை டாக்டர்களில் இருந்து, துப்பறவுப் பணியாளர்கள் மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கும் தெரிந்துவிடுகிறது. ஒரு முதல்வர் வருகிற போது ஏற்படும் பரபரப்பில் வேலூர் மருத்துவமனை திகழ்கிறது.

நடிப்பிசைப் புலவரைப் பார்த்துத் திரும்பிய மக்கள் திலகம், வழியில் நின்ற நோயாளிகளையும் நலம் விசாரித்து வருகிறார்.

அப்பொழுது, அங்கு நின்ற மாதம்பட்டி சிவக்குமார் மக்கள் திலகத்தைக் கைகூப்பி வணங்குகிறார்.

உடனே மக்கள் திலகம் ஏதோ பத்து வருடம் பழகியதைப்போல், “உங்க உடம்புக்கு என்ன?” என்று கேட்கிறார்.

ஆறு வருடத்திற்கு முன் ஐந்து நிமிட சந்திப்பில் மட்டுமே பரிச்சயமான உறவை நினைவில் வைத்துக் கேட்டவுடன் வியந்து போன மாதம்பட்டி சிவக்குமார், “எனக்கு ஒண்ணும் இல்லீங்க… அப்பாவுக்குத்தான் உடம்பு சுகமில்ல…இங்க வச்சுப் பார்த்துகிட்டு இருக்கோம்!” என்று சொல்கிறார்.

மக்கள் திலகத்தின் வருகையால், பொது மக்கள் யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படாத்தால், மருத்துவமனைக்கு வெளியில் சென்று, கண்ணில் பட்ட நோயாளிகளைப் பார்த்து ஆறுதல் சொல்லி விட்டு வடை பெறுகிறார் மக்கள் திலகம்.

அன்றுமாலை-மக்கள் திலகத்தைப்பார்த்த மகிழ்ச்சியில் பாதிப்பேர் குணமாகி, மருத்துவமனையில் இருந்த டிஸ்ஜார்ஜ் ஆகி விடு திரும்பியிருக்கின்றனர்.

திண்டுக்கல் இடைத் தேர்தலில் வெற்றி வாகை சூடி வெள்ளோட்டம் காட்டிய மக்கள் திலகம் தனிக் கட்சி துவங்கிய பிறகு, 1977இல்பொதுத் தேர்தலைச் சந்திக்கிறார்.

அந்நேரம், கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத் தலைவர் மருதாச்சலம், கோவை மாவட்டத் தேர்தல்பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். வேட்பாளர் பட்டியலைக் கோவை மாவட்டம் சார்பில் மக்கள் திலகத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கிறார் மருதாச்சலம்.

மறுநாள் இரவு பத்துமணிக்குமேல், மாதம்பட்டி சிவக்குமார் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டுகிறார் மருதாச்சலம். கதவைத திறந்துகொண்டு வெளியில் வந்த மாதம்பட்டி சிவக்குமாரின் கழுத்தில் கொண்டு வந்திருந்த மாலையைப் போடுகிறார் மருதாச்சலம்.

எதற்கு இந்த மாலை மரியாதை’ என்று அறியாத சிவக்குமார், “எதுக்கண்ணே இதெல்லாம்?” என்று கேட்க “தொண்டாமுத்தூர் தொகுதியில் நீங்கதான் எம்.எல்.ஏ.வா நிக்கறீங்க!” என்று மருதாச்சலம் சொல்கிறார்.

“என்ன விளையாட்டா… நான் தலைவரோட தீவிர பக்தன் தான். அதுக்காக அரசியல்ல இறங்கிச்செயல்பட முடியுமா?” என்று மாதம்பட்டி சிவக்குமார் மறுக்கிறார்.

“தலைவர் நம்ம கட்சியில வேட்பாளரா நிக்கப் போட்ட ஒரே கண்டிஷன் -’பணக்காரனா இருக்கான்ங்கறதுக்காகவோ படிச்சவனா இருக்கான்கறதுக்காகவோ சீட் தரக்கூடாது. அவன் நல்லவனா இருக்கணும்’ங்கறதுதான்! அதனால தான் உங்களைச் சிபாரிசு பண்ணியிருக்கேன்!” என்று மருதாச்சலம் சொல்கிறர்.

ஆனாலும் மாதம்பட்டி சிவக்குமார் மறுத்துவிடுகிறார். பதிலுக்கு மருதாச்சலத்தையே அந்தத் தேர்தலில் நிற்க வைத்து, வேண்டிய உதவிகளைச் செய்து வெற்றி பெற வைக்ககிறார் மாதம்பட்டி சிவக்குமார்.

“எல்லோரும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவர்படத்திற்கு மாலைபோட்டு,மஞ்சள் குங்குமம் இட்டுமரியாதை செய்கின்றனர்.ஆனால் தினம் வீட்டைவிட்டு வெளியே செல்லும் பொழுதும், எம்.ஜி.ஆரை வணங்கி மகிழ்கிற நான், இதுவரை அவர்படத்துக்குப் பூவோ, பொட்டோ வைத்ததில்லை. காரணம்-அவர் இறந்து விட்டதாக நான் உளமார நினைக்கவில்லை. நான் மட்டுமல்ல; என் மகன் நடிகர் சத்யன் கூடத்தான்!” என்று இன்றும் மக்கள் திலகத்தை வணங்கி மகிழ்கிறார் மாதம்பட்டி சிவக்குமார்.

தெய்வத்துக்கு வந்த திருமண பத்திரிகை

ஏவி.எம். ஸ்டுடியோவில் சினிமாவுக்காக எத்தனையோ பிரம்மாண்டமான திருமண விழாக்கள் நடந்திருக்கின்றன. ஆனால் 1973 இல் ஏவ. மெய்யப்பச் செட்டியாரின் புதல்வர்களில் ஒருவரான ஏவி.எம். பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நடந்த திருமண விழா போல் அதுவரை அந்த ஏவ.எம்.ஸ்டுடியோவுக்குள் எந்த சினிமாவுக்காகவும் நடந்ததில்லை.

இதில் ஏவ.எம். செட்டியார் அவர்களின் புதல்வருக்கு நடந்த திருமணம் என்பதால் மட்டும் சிறப்பல்ல; இவருடன் சேர்த்து இருபத்தியோரு ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடந்தி வைக்கப்படுகிறது. அதோடு-இந்த் திருமண விழாவிற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் வருகிறார். அப்பொழுது எதிரில் இலவசத் திருமணம் செய்து கொள்ள வந்திருக்கும் இருப்பத்தியோரு ஜோடிகளும் வரிசையாக நிற்கின்றனர்.

மூகூர்த்த நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே வந்த மக்கள் திலகம். வந்த ஐந்து நிமிடத்தில் நடிகர் அசோகனை அழைத்துக் கொண்டு திருமணப் பந்தலை விட்டுக் காரில் புறப்படுகிறார்.

மக்கள் திலகம் வந்த வேகத்தில் இவ்வளவு சீக்கிரம் திரும்புவார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் இப்படி முகூர்தம் முடியும் முன்பே சென்றார் என்று எல்லோருக்கும் ஒரே குழப்பம்.

மூகூர்த்தம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சரியாக முகூர்த்தத நேரத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அதே காரில் வந்து இறங்குகிறார். எல்லோருக்கும் ஏக மகிழ்ச்சி.

இருபத்தியோரு திருமணத் தம்பதிகளுக்கும்தான் வாங்கி வந்த பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டையுடன் ஆளுக்கொரு தங்கச்செயினை பரிசாக அளிக்கிறார் மக்கள் திகம் எம்.ஜி.ஆர்.

ஏற்கனவே இலவசமாகத்திருமணம் நடத்தி வைக்கும் ஏவி.எம்.நிறுவனத்தினர், பரிசுப் பொருட்களை அந்த ஜோடிகளுக்கு அளித்திருந்தாலும், மக்கள் திலகம் அளித்த பரிசு அனைவரையும் வியக்க வைத்தது. இந்த அற்புதக் காட்சியைக் கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கானோரில், மாறன் என்ற இளைஞரும் ஒருவர்.

1949-ல் ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் அறிஞர் அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகத்தைத் துவங்கிய போது இருந்த சிலரில் ஒருவரான தங்கவேல் என்பவரின் மகன்தான் இந்த மாறன் என்ற இளைஞர்.

ஏவி.எம். பாலசுப்ரமணியம் திருமணத்தில் மக்கள் திலகத்தின் அசாதாரண செயலை நேரில் பார்த்த மாறனுக்கு, அவரது சகோதரர் என்றோ ஒருநாள் சொன்ன மக்கள் திலகத்தின் அவதார நிகழ்வு, தன் நினைவுக்கு வந்தது.

வடபழனி பஸ் ஸ்டாண்டு அருகே செருப்புத் தைத்துக் கொண்டிருக்கிறார் ஒரு தொழிலாளி. அவர் பிளாட்பாரக் கடையில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.புகைப்படம் மட்டுமே தொங்கிக் கொண்டிருக்கும். மக்கள் திலகத்தைத் தன் தெய்வமாக வைத்து வணங்கிக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளி தன் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்கிறார். பொதுவாக-ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் முதல் திருணப் பத்திரிகையைத் தன் குல தெய்வத்திற்கோ படைத்துவிட்டுத்தான் மற்ற உறவுக்காரர்களுக்குக் கொடுப்பார்கள்.

அந்த அடிப்படையில் அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளியும், தான் குலதெய்வமாக வணங்கிக் கொண்டிருக்கும் மக்கள் திலகம் வாழும் ராமாவரம் தோட்ட இல்லத்துக்கு தன் மகளின் முதல் திருமணப் பத்திரிகையைத் தபாலில் அனுப்பி வைக்கிறார்.

அந்தப் பத்திரிகையில், ‘தலைவா..கண்டப்பாக இந்த ஏழை வீட்டுத்திருமணத்திற்கு வரவேண்டும்’ என்றோ, ‘நீங்கள் வரவில்லையென்றால் திருமணத்தை நிறுத்தி விடுவேன்’ என்றோ ஆயிரக்கணக்கானோர் மக்கள் திலகத்திடம் அன்புக் கட்டளை இடுவதுபோல் இவர் எதுவும் குறிப்பிடவில்லை. தெய்வத்துக்குப் பத்திரிகை படைத்தாகிவிட்டது. அவ்வளவுதான்! அனுப்பியதைக் கூட மறந்து விட்டார் அந்த தொழிலாளி.

திருமண நாள் வந்துவிட்டது. ஒன்பது மணிக்கு மூகூர்த்தம், எட்டுமணிக்கெல்லாம் போலீ செக்யூரிட்டிகள், திருமணம் நடக்கும் அந்த் தொழிலாளி வீட்டின் முன்பு வந்து குவிகிறார்கள்.

திருமண வீட்டார்- ஏன் எதற்கு இந்தப் போலீஸ் பந்தோபஸ்து என்று பயந்து நிற்கிறார்கள்.

நடந்தது இதுதான்!

தனது இல்லத்துக்கு வந்த – அந்தத் தொழிலாளி அனுப்பிய திருமணப் பத்திரிகையைப் பார்த்த மக்கள் திலகம், எதையுமே குறிப்பிடாமல் அனுப்பி வைத்திருக்கிறார்களே! எந்த உதவி கூட கேட்காமல், எதற்காக வெறும் பத்திரிகையைத்தனக்கு அனுப்ப வேண்டும் என்று விவரம் தெரிந்து கொள்ள, தன்னுடைய ரகசிய செக்யூரிட்டியுடன் தன் கட்சிக்காரர் ஒருவரையும் அனுப்பி அவர் யார்… என்ன பின்னணி என்று தெரிந்து வரும்படி அனுப்பி வைத்திருக்கிறார் மக்கள் திலகம்.

அவர்களும், அந்தத் தொழிஇலாளிக்கத் தெரியாமலேயே விசாரித்து விவரம் சேகரித்த பொழுது, ‘அது மக்கள் திலகம் வரவேண்டும் என்கிற நோக்கத்தில் அனுப்பி வைக்கப்பட்ட பத்திரிகை அல்ல’ என்றும்; ‘மக்கள் திலகத்தைத் தெய்வமாக நினைத்து மட்டுமே அனுப்பி வைக்கப்பட்ட பத்திரிகை’ என்றும் விளக்கம் சொல்கிறார்கள் அவர்கள்.

அப்பொழுதுதான், தன்னிடம் எதையுமே எதிர்பார்க்காமல், தன் மீது பக்தி வைத்திருக்கும் அந்தத் தொழிலாளி வீட்டுத்திருமணத்திற்குச் செல்ல ஆயத்தமாகிறார் எம்.ஜி.ஆர்.

அதன்படி மக்கள் திலகம். மணமகன் மணமகளின் கழுத்தில் தாலிகட்டப்போகிற நேரத்திற்கு வருகிறார். வாழ்த்துகிறார். பரிசு தருகிறார். பணம் தருகிறார். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அறியாமலேயேந மீள முடியாத மயக்க நிலையில் இருக்கிறார்கள் அனைவரும்!

இந்த இரண்டு நிகழ்வுக்குப்பிறகு இதுவரை திரைப் படத்தில் மட்டுமே தன் மனம் கவர்ந்த நாயகனாகத் திகழ்ந்த மக்கள் திலகம், மாறனின் மனதில் தெய்வமாக்க்காட்சி யளிக்கிறார்.

அதிலிருந்து, மக்கள் திலகத்தைப்போல் உடலைப் பேணுவது என்று எல்லாமே எம்.ஜி.ஆர் தான் என்ற நிலைக்கு மாறன் வந்து விட்டார்.

1980 -இல் மாறன் சென்னை டி.பி. ஜெயின் கல்லூரியில் மாணவர் தலைவராக இருக்கிறார். பல தரப்பட்ட துறையைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருக்கும் ‘தமிழ்நாடு போக்குவரத்து ஆட்வைசரிகிமிட்டி’இல் மாணவர் தலைவர் என்ற முறையில் மெம்பரக இருக்கிறார். ஏதோ சில காரணங்களால், இவருக்கு பஸ் வழங்கப்படவில்லை.

எனவே, அன்றைய போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் முறையிடுகிறார் மாறன். ஆனாலும் கிடைக்கவில்லை.

அடுத்து தலைமைக் கழகச்செயலாளர் கோவிந்தராஜிடம் சொல்கிறார் மாறன். அப்பொழுது அதிர்ஷ்டவசமாக முதல்வர் எம்.ஜி.ஆரே அங்கு வருகிறார்.

கரை வேஷ்டியும் வெள்ளை சட்டையுமாகவே தென்படும் அலுவலகத்தில், பேண்ட்-சூட்-கோட்டுடன் நின்ற மாறனைப் பார்த்தவுடன் மக்கள் திலகத்துக்கு வித்தியாசமாகப் படவே, மாறன் யார்-என்ன என்ற விவரத்தை எம்.ஜி.ஆரிடம் துறை, கோவிந்தராஜ் சொல்கிறார்.

உடனே மாறனைக்கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லிவிட்டு, கட்சிக்காரர்களிடமிருந்து, பொது மக்களிடமிருந்தும் மனு வாங்கிக் கொண்டிருந்தார் மக்கள் திலகம்.

எல்லாம் முடிந்த பிறகு மாறனை அழைக்கிறார். அருகில் வந்தவுடன் முதலில் மாறன் கட்டியிருந்த டையை சரிசெய்து கண்டு “என்னை மாதிரியே நீயும் எக்ஸர்சைஸ் பண்றியா?” என்று கேட்கிறார் மக்கள் திலகம் மாறனுக்கு எங்கே பேச்சு வந்தது! அப்படியே திகைத்துப் போய் ‘ஆம்’ என்று தலையாட்டுகிறார்.

“எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். அப்புறம் போகும் போது ஆட்டோவுல போ!” என்று கைகுலுக்குகிறார்.

அப்பொழுது வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல், சுருட்டப்பட்ட ரூபாய் நோட்டுகளைக் குலுக்கிய கைக்குள் திணித்திருக்கிறார் மக்கள் திலகம்.

என்னென்னவோ நடந்த ஆனந்தத்தில் மாறன் ஆட்டோவில் சென்றுகொண்டிருக்கிறார்.

‘எதற்காக மக்கள் திலகம் நம்மை ஆட்டோவில் போ என்று சொல்ல வேண்டும்? காலேஜ் சேர்மன் என்ற முறையில், கல்லூரியில் கொடுக்கப்பட்ட கோட்-சூட்டைப் போட்டுக் கொண்டு, ஆட்டோவில் வரக் காசில்லாமல் அதைப் பையில் வைத்துக்கொண்டு பஸ்ஸில் வந்து, அந்தக் கோட்-சூட்டைத் தலைமைக்கழக அலுவலக மூலையில் நின்று மாட்டிய ரகசியம் எப்படி எம்.ஜி.ஆருக்குப் போனது? ஒருவேளை என்னைப்பற்றி மக்கள் திலகத்திடம் சொன்ன துரை. கோவிந்தராஜ் அவர்கள் ஓரமாக நின்று நான் கோட்-சூட் மாட்டியதைப் பார்த்து விட்டு, என்னுடைய ஏழ்மை நிலையைச் சொல்லி இருப்பாரா?” என்று சிந்தித்துக் கொண்டே செல்கிறார் மாறன்.

1983- இந்தியாவில் சென்னை, பூனா ஆகிய இரண்டு அரசு திரைப்படக் கல்லூரிகள் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் மொத்தமே ஆண்டொன்றுக்கு ஒரு கல்லூரிக்குப் பத்து சீட்டுகள்தான் உண்டு.

மாறன் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கிறார். சீட் கிடைக்காது என்றே எல்லோரும் சொல்கிறார்கள். ஆனாலும் மாறன் மனம் தளராமல் போராடுகிறார்.

இறுதியாக, ஆர்.எம். வீரப்பன் அவர்களைச் சந்தித்து, ஜெயின் கல்லூரி மாணவர் தலைவராக இருந்த போது, புரட்சித் தலைவருடன் எடுத்த போட்டோவைக் காட்டி, நான் மக்கள் திலகத்தின் மனம் விரும்பும் பக்தன் . எனவே எனக்கு சீட் தாருங்கள்’ என்று சொல்கிறார் மாறன்.

ஆகட்டும் பார்க்கலாம் என்று ஆர்.எம்.வீ சொல்லி அனுப்புகிறார்.

மறுநாள் முதல் லிஸ்டில் மாறனின் பெயர் வருகிறது. எம்.ஜி.ஆர் என்ற மந்திரச் சொல்லுக்கு அவ்வளவு மகிமை இருக்கிறது என்று இன்றும் மகிழ்கிறார் மாறன்.

ஒரு பிடி சோற்றுக்கும் ஒரு ஜோடி துணிக்கும்….

1985- டெல்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் (N.D.I) கலந்து கொள்வதற்காக முதல்வர் எம்.ஜி.ஆர். தன் துணைவியார் ஜானகி அம்மையாருடன் செல்கிறார்.

முதல்வர் எம்.ஜி.ஆருடன் தலைமைச் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு திட்டக்குழுத் துணைத்தலைவர் பாவலர் முத்துச்சாமி மற்றும் திட்டக்குழுச்செயலாளர்களும் கலந்துகொள்ளச் செல்கின்றனர்.

கூட்டம் துவங்குவதற்குமுன் தமிழ்நாடு ஓட்டில் தங்கியிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாவலர்முத்துச் சாமி அவர்களை அழைத்து, “எப்படியோ சத்துணவுத் திட்டத்தை அமுல்படுத்தி விட்டம். அத்துடன் எல்லாக் குழந்தைகளுக்கும் சீருடை வழங்க, பிரதமர் இராஜீவ் காந்தியிடம் இந்தக் கூட்டத்தில் மானியம் கேட்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கு எவ்வளவு பட்ஜெட் தேவை என்று எனக்கு அரைமணி நேரத்தில் கொட்டேஷன் கொடுங்கள்!” என்கிறார்.

பாவலரும், தமிழ்நாட்டில் சத்துணவு சாப்பிடும் அத்தனை குழந்தைகளுக்கும் தேவையான சீராடை வாங்கத் தேவையான தொகையைக் கணக்கிட்டு, மக்கள் திலகம் கொடுத்த அரைமணி நேர அவகாசத்துக்குள்ளேயே தயார் செய்கிறார்.

பிறகு மக்கள் திலகத்திடம், “ஏற்கனவே சத்துணவுக்காக 125 கோடி செலவு செய்து கொண்டு வருகிறோம். சீருடை வாங்க வேண்டுமென்றால், அதற்கும் தனியாக 120 கோடி ரூபாய் தேவைப்படும்!” என்று கணக்கிட்டுச் சொல்கிறார் பாவலர் முத்துச்சாமி.

கூட்டம், பாராளுமன்றக் கட்டட கான்பிரன்ஸ் ஹாலில், தொடங்குகிறது. தமிழ்நாடு நலத்திட்டக் கோரிக்கைகளில், கடைசியாகச்சீருடை வழங்கத் தேவையான மானியக் கோரிக்கையை முன் வைக்கிறார் புரட்சித் தலைவர்.

மக்கள் திலகத்தின் எல்லாக் கோரிக்கையும் ஏற்றுக் கொண்ட பிரதமர் இராஜீவ் காந்தி, சீருடை வழங்கத் தேவையான கோரிக்கையை மட்டும் நிராகரித்துவிட்டு, ‘இதை அடுத்த பட்ஜெட்டில் ஆவன செய்கிறேன்’ என்கிறார்.

ஆனாலும் மக்கள் திலகம் ஒப்புக் கொள்ளாமல், “செய்தால் இதற்கும் சேர்த்து இப்பொழுதே செய்யுங்கள். இல்லையேல் தமிழகத்திற்கு மானியமே வேண்டாம்!” என்று சொல்லி எழுந்து செல்கிறார்.

பாவலர் முத்துச்சாமியும் எழுந்து, முதல்வர் எம்.ஜி.ஆருடன் பின் தொடர்ந்து செல்கிறார். மற்ற செகரட்டரிகளிடம், “நீங்கள் எல்லோரும் இருந்து, கூட்டம் முடித்து நல்ல செய்தியுடன் வாருங்கள்!” என்று சொல்லிவிட்டு, தான் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்திற்குச் செல்கிறார் மக்கள்திலகம்.

மக்கள் திலகம் தமிழ்நாடு இல்லம் சென்றடைந்த சில மணித் துளிகளில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து, ஆர்.கே. தவான் மக்கள் திலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக்க் கூட்டத்திற்கு வரவேண்டும் என்று அழைக்கிறார்.

ஆர்.கே. தவானின் தொலைப்பேசிப் பேச்சை ரிசீவு செய்த பாவலர். மக்கள் திலகத்தின் மனநிலை அறிந்து தவானிடம், “வேண்டுமானால் மாலை பிரதமருடன் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்!” என்கிறார்.

அவர்களும் ஒப்புக் கொண்டு, மாலை ஐந்தரை மணிக்குப் பிரதமரைச் சந்திக்க மக்கள் திலகத்துக்கு அப்பாயிண்ட் மெண்ட் கொடுக்கப்படுகிறது. சரியென்று மக்கள் திலகம் தமிழ்நாடு இல்லத்திலிருந்து காரில் கிளம்புகிறார்.

காரில் சென்று கொணிருக்கும்பொழுதே பாவலரிடம், “பிரதம், கொடுத்தா பார்ப்ப்போம். இல்லாட்டி தமிழ் ஆண்டு மக்கள்கிட்டே போய், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ஒருரூபாய் கேட்போம். அதை வைச்சு இந்தத்திட்டத்தை அமுல்படுத்தியே தீருவோம். ஏன்- நம்ம பேரறிஞர் அண்ணா, கதர்துணி வித்துநிதி சேர்க்கலையா?

அதனால நான் கேக்கறது நியாயம்னு உணர்ந்து ஒத்து வந்தா பார்ப்போம். இல்லாட்டி நம்ம வழியில் நாம் போய்க்கிட்டே இருப்போம்!” என்று மக்கள் திலகம் தன் ஆதங்கத்தைச் சொல்கிறார்.

சரியாக ஐந்தரை மணிக்குப் பிரதமர் இராஜீவ் காந்தியை மக்கள்திலகம் சந்திக்கிறார். நினைத்ததை முடிப்பவர், நினைத்ததைச் சாதிக்கிறார். சந்தோஷமாக விடை பெறுகிறார்.

அன்றிரவு தமிழ்நாடு இல்லத்தில் – ஜானகி அம்மையார், பாவலர் முத்துச்சாமி, அவரது துணைவியார் சண்முகவல்லி ஆகியோருடன் மக்கள் திலகம் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டே, “பாவலர்….ஏற்கனவே சத்துணவுத் திட்டத்தை எதிர்க்கட்சிகளோட எதிர்ப்புகளுக்கு இடையே நடத்திக்கிட்டு இருக்கோம்கறது தெரியும். அப்படியிருந்தும், இந்தச் சிரமத்தையும் ஏன் நான் எடுக்கிறேன்னா, ஒரு பிடி சோற்றுக்கும், ஒரு ஜோடி துணிக்கும் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்குத்தான் தெரியும்.

அதனாலதான் என்னால முடிஞ்ச அளவுக்கு நான் நடத்தற ஸ்கூல்ல- மதிய உணவோட, இலவச உடையும் கொடுக்கிறேன். கணிசமான பேருக்கும் இதைச் செஞ்சு வர்றேன்.

இதையே ஒரு அரசாங்கம் செய்ய முன் வந்தா, தமிழ் நாட்டுல இருக்கிற இலட்சக்கணக்கான பிள்ளைங்க பயன்படுவாங்க…அதனால்தான் இதை நான் வலியுறுத்திப் பிரதமர்கிட்ட கேட்டேன்.

என்னையும், அண்ணன் சக்ரபாணியையும் எங்க அம்மா தமிழ்நாட்டுக்கு அழைச்சுட்டு வந்தப்ப, அம்மாவுக்கு மாத்துச் சேலை கிடையாது. எங்க ரெண்டு பேருக்கும் மாத்து டவுசர் கிடையாது.

அந்த நிலையிலதான் வால்டாக்ஸ் சாலையில் ஆண்டவர்னு அழைக்கிற ராஜகாந்தம் அம்மா (ராஜகாந்தம் அவர்களும் எம்.ஜி.ஆரை, ஆண்டவர் என்றுதான் அழைப்பார். அவர்களுடைய வீட்டுத்திண்ணையில், நான், அம்மா அண்ணன் மூன்று பேரும் படுத்திருந்தோம்

இரவு நாடகத்தில் நடித்துமுடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ராஜகாந்தம் அம்மா, திண்ணையில் படுத்திருந்த எங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து எங்களை எழுப்பி, யார் என்ன வென்று விசாரித்து விட்டு, உள்ளே அழைத்துச் சென்று, எங்களுக்குச் சாப்பாடு போட்டு, அன்பு காட்டி அரவணைத்தார்.

அன்றிலிருந்து நானும், அண்ணன் சக்ரபாணியும் சம்பாதிக்க ஆரம்பிக்கும் காலம் வரை எங்களுக்கு உணவு, உடை எல்லாமே ராஜகாந்தம் அம்மா தான் கொடுத்ததார்கள். எனவே, வறுமையின் கொடுமை எனக்கு நன்றாகத் தெரியும்.

இந்தச் சீருடை மானியம் கிடைக்க நீங்கள், ‘இது நடக்காது, நாட்டுக்கு இது தேவையா’ என்று இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், இதயபூர்வமாக சொல்கிறபடி ஒத்துப் போனீர்களே…! அதற்காக நான் என்றும் உங்களுக்குக் கடமைப் பட்டவன்!” என்று தனக்கு ஏதோ உதவி கிடைத்து விட்டதாக பாவரிடம் , மக்கள்திலகம் தன்பாச உணர்வைப் பகிர்ந்து கொள்கிறார்.

1987 – மக்கள் திலகத்தின் ஒப்புதலுடன், அவர் கொடுத்த தேதிப்படி நவம்பர் பதினான்கில் – பாவலரின் மூத்த மகள் பொன்னியின் செல்வி பாண்டியன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

அந்தத் தேதியில் சென்னையில் பெரிய திருமண மண்டபம் எதுவுமே கிடைக்கவில்லை. திருமண மண்டம் கிடைக்காமல் பாவலர் திண்டாடுவதைத் தெரிந்து கொண்ட மக்கள் திலகம் பாவலரை அழைது, “இது நம் வீட்டுத் திருமணம். வெளியில் ஏன் மண்டபம் தேடி அலைகிறீர்கள்? சத்யா ஸ்டுடியோவிலேயே திருமணத்தை வைத்துக்கொள்ளுங்கள்” என்கிறார்.

பாவலர், மக்கள் திலகம் தன்னுடைய முதல்வர் பதவியையே தனக்கு அளித்துவிட்டதாக மகிழ்கிறார்.

காரணம், இந்த சத்யா ஸ்டுடியோவில் எம்.ஏ.எம். சாண்டோ சின்னப்பத்தேவரின் மகள் திருமணத்தை தவிர, வேறு எரின் திருமணமும் இங்கு நடத்த மக்கள் திலகம் அனுமதி தந்ததில்லை.

ஆனால் தனக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டிருக்கிறதே… ஏன், எதற்கு என்று பாவலர் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, “சில நடைமுறைச்சிக்கல் கருதி, வெளியில் உள்ள வி.ஜ.பி.களுக்கோ, என் ரசிகர்களுக்கோ, சத்யா ஸ்டுடியோவைக் கொடுத்துப் பழக்கப்படுத்தவில்லை.

இதையும் மீறி உங்களுக்கு இந்தச்சலுகை வழங்கியதற்குக்காரணம், இது என் மகள் திருமணம் அது, மட்டுமல்லாமல், என்னுடைய நியாயமான திட்டங்களுக்கெல்லாம் ஒத்துழைத்து, அந்தத்திட்டம் செயல்படக் காரணமான இருந்தீர்களே! அதற்காகத்தான்!” என்று விளக்கமளித்தத மக்கள் திலகத்தை மானசீகமாக நோக்குகிறார் பாவலர்.

என்ன நடராஜா சௌக்கியமா?

ஒரு தாய், சுற்றி என்ன நடக்கிறது என்பதைத அறியா வண்ணம் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவளைக் கையால் தட்டி எழுப்புகின்றனர். எழவில்லை. பிறகு தடியால் தட்டி எழுப்புகின்றனர். இப்படி பலவகையிலும் துன்புறுத்தி எழுப்பியும் அவள் எழவில்லை. ஆனால் அவளின் மழலைக் குழந்தை மீது ஒருமெல்லிய மலரால் அடிக்க, அவள் துடிதுடித்து எழுகிறாள்.

அந்த அன்புத் தாயின் தாயுள்ளத்தைப் போலத்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஏழைகள் மீது தூசு பட்டால் கூட மனம் பொறுக்காதவர். அவரைத் தேடி வந்தவர்களின் துயர் துடைத்ததைவிட, அவர் தேடிப்போய் துயர் துடைத்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

சிவகாசியில் சிறுவர்கள் பலியா? அங்கே இந்த பரங்கிமலை மன்னன் பெற்றவர்களின் விழிநீரைத் துடைத்துக் கொண்டிருப்பார். அதேபோல் இந்திய எல்லையில் சீன யுத்தமா? அங்கேயும் மக்கள் திலகம், இறந்தவர் குடும்பங்களுக்கு நிதி வழங்கிக் கொண்டிருப்பார். புயல், வெள்ளம், தீ விபத்தா அங்கே அரசாங்கத்தை முந்திக் கொண்டு முதலுதவி செய்து கொண்டிருப்பார். முப்பிறவி கண்ட மக்கள் திலகம்.

அப்படித்தான் 1976 – ல் சென்னையில் பெய்த தொடர் மழையால், சைதாப்பேட்டை பகுதி மக்கள் குடிசைகளை இழந்து பெரும்

பாதிப்புக்குள்ளானார்கள் வீட்டையிழந்து வீதிக்கு வந்த மக்கள் கோட்டைக்குச்சென்றல்லவா, தங்கள் குறை தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் எம்.ஜி.ராமச்சந்திரன் வாழும் ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றல்லவா, அவர்கள் தஞ்சம் புகுந்தனர். வந்தவர்களை, தன் வீட்டிலேயே தங்க வைத்து விட்டு, வராதவர்களைத் தேடி மக்கள் திலகமே சைதாப்பேட்டை செல்கிறார்.

அங்கே மனித நேயமிக்க சில பேர் மக்களை வெள்ளத்தில் இருந்து கரை சேர்த்துக் கொண்டும், கருணையுடன் செயல்பட்டுக் கொண்டுமிருக்கின்றனர். அந்த சிலரில் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகனான ஏழுமலை சுழன்று, சுழன்று பணியாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்த பொன்மனச் செம்மல், “இங்கே இவன் இவுங்களுக்காக இவ்வளவு பாடு படுறானே. அங்கே கோடம்பாக்கத்துல இவன் வீடும் வெள்ளத்துல மிதக்குதாம்” என்று பக்கத்தில் இருந்தவர்களிடம் ஏழுமலையைப் பற்றி, சொல்கிறார் மக்கள் திலகம். அப்பொழுது அருகில் வந்த ஏழுமலை, “முடிஞ்சவரை எல்லாரையும், சத்யா ஸ்டுடியோவிகுள்ள பத்திரமா தங்க வச்சு அவங்களுக்கு வேண்டிய உணவு, உடையெல்லாம் கொடுத்தாச்சுங்கண்ணே!” என்று மக்கள் திலகத்திடம் சொல்கிறார்.

ராணுவ நடவடிக்கையைப் போல் எல்லாரையு, பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டு, விரைவில் உங்களுக்கெல்லாம் பாதுகாப்பான இடத்தில், பாதுகாப்பான வீடுகள் கட்டித் தருகிறேன் என்று ஆட்சிப் பொறுப்பில் இல்லாமலேயே உறுதியளிக்கிறார் மக்கள் திலகம்.

1976-ல் வீடு கட்டித் தருவதாகச் சொன்ன மக்கள் திலகம் 1977-ல் முதல்வராக வந்தவுடன், அரசு செலவில் மேட்டுப் பகுதிகளில் ஓட்டு வீடு வீட்டு கட்டித்தருகிறார்.

அதற்குப் பிறகு, 1978 -ல் மக்கள் திலகத்தை மாம்பலம் அலுவலகத்தில் தன்னுடைய நண்பர் நடராஜனுடன் சந்திக்கிறார் ஏழுமலை. அப்பொழுது மக்கள் திலகம் ஏழுமலையிடம், “என்ன விஷயம்?” என்று கேட்கிறார். அதற்கு ஏழுமலை, “ஒண்ணும் இல்லைண்ணே, என் கூட வந்திருக்கிற நடராஜனுக்காகத்தான் உங்களைப் பார்க்க வந்தேன்.

“அப்படியா” என்று மக்கள் திலகம் கேட்க.

“இவரு, தேனாம்பேட்டை சிக்னல் கிட்ட இருக்கிற ஓட்டல் வாசல்ல, பீடாக் கடை வச்சு பிழைப்பு நடத்திக்கிட்டு இருக்காரு. இதுமாதிரி மெட்ராஸ்ல, எல்லா ஓட்டல் வாசல் முன்னாடியும் பீடாக் கடை நிறைய பேர் வச்சு இருக்காங்க. ஆனா இவர் மேல சில வேண்டாதவங்க, பொய் கேஸ் போட்டு ஏரியாவுல சில பேரு தொல்லை கொடுக்கறாங்க. அதனாலதான் உங்களைப் பார்க்க வந்திருக்கேன்” என்று ஏழுமலை சொல்லி முடித்ததைக் கேட்டு மௌனமாக ஆமோதித்து அனுப்பி வைக்கிறார் மக்கள் திலகம்.

வழக்கமாக, ஆபத்துக் காலங்களிலோ, உதவி வேண்டியோ செல்பவர்களிடம் மக்கள் திலகம், “வேண்டியதைச் செய்கிறேன். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தான் பதில் சொல்லி அனுப்புவார். ஆனால் இன்று மௌனமாகத்தலையசைத்ததால், “நாம் ஏதோ தவறான செயலுக்கு சிபாரிசு செய்து விட்டதாகவும், சட்டத்துக்குப் புறம்பான காரியத்துக்காக என்னிடம் ஏன் வந்தாய்?” என்று எம்.ஜி.ஆர் கேட்பது ப ஓலவும் ஏழுமலை, தன்னையே கேட்டுக் கொள்கிறார்.

ஏழுமலை சிந்தித்தது போல் தான் பீடாக் கடை நடரஜனுக்கு உதவி செய்வது, சரியா? தவறா என்று பலமுறை யோசிக்கிறார். மக்கள் திலகம் ஆனாலும் பிளாட்பாரத்தில் நடராஜன் வைத்திருக்கும் பீடாக் கடையால்மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறதா, இல்லையா? என்பதை அறிய விரும்புகிறார் மக்கள் திலகம்.

இரண்டு மூன்று நாட்களாக தேனாம்பேட்டை வழியாக நிகழ்ச்சிக்குச் செல்லும்பொழுது, மக்கள் திலகம் ஓட்டல் வாசலில் இருந்த நடராஜனின் பீடாக் கடையைக் காரில் சென்வாறே பார்வையிடுகிறார். பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும், இல்லையென்பதைப பூரணமாக உணர்கிறார் மக்கள் திலகம். அதற்காகப் பிளாட்பாரத்தில் கடை வைத்திருப்பவருக்காக, சட்டப்படி எப்படி உதவி செய்ய முடியும். சாதுரியத்துடன் செயல்படுகிறார் மக்கள் திலகம்.

ஒரு நாள் கோட்டையில் இருந்து, ராமாவரம் தோட்டம் செல்கிற பொழுது, வழக்கமான கடற்கரைச்சாலை வழியாக வரும் வள்ளல் அன்று தேனாம்பேட்டை சிக்னல் வழியாக வந்து அந்த ஓட்டல் முன் ஓரமாக்க காரை நிறுத்தச் செய்துவிட்டு, கார் கதவைத் திறந்துகொண்டு, கடகடவென்று பீடாக் கடையை நோக்கிச்சென்று, “எனன நடராஜா சௌக்கியமா? வியாபாரமெல்லாம் நல்லா நடக்குதா?” என்று பலநாள் பழகிய நண்னைப் போல் தோழமையுடன் விசாரிக்கிறார். அந்தக் கண நேரத்தில் காவல்துறை செக்யூரிட்டிகள் மட்டுமல்ல, அந்த ஏரியாவே வியப்பில் ஆழ்ந்தது!

இப்பொழுது, அந்த் தேனாம்பேட்டை ஏரியா முழுவதும் நடராஜன் எம்.ஜி.ஆருக்கு வேண்டப்பட்டவர் என்று செய்தி பரவுகிறது. அந்த நிமிடம் வரை, நடராஜனிடம் பீடா ஆங்கிக் கொண்டு தொல்லை கொடுத்த பிஸ்தாக்கலள், இப்பொழுது நடராஜனைப் பார்த்து வணக்கம் சொல்ல ஆரம்பித்தார்கள்.

அடுத்து 19.11.87 ராமாவரம் தோட்டம் இல்லத்தில், ஏழுமலை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு முப்பது வருடங்களாக முடி வெட்டிக் கொண்டிருந்த எம்.கே.எஸ். மகுமது அலியையும், அவரது மகன் சாதிக் அலியையும் அழைத்துக்கண்டு மக்கள் திலகத்தைச் சந்திக்கிறார்.

வழக்கமான தொனியில், “என்ன வேணும் ஏழுமலை?” என்று முழுதும் பேச்சு வராத மழலைப் பேச்சில் கேட்கிறார் மக்கள் திலகம்.

“எனக்கு ஒண்ணும் வேணாம்ண்ணே! முகமதுதான் உங்களைப் பார்க்கணும்னு விரும்பினார்” என்று ஏழுமலை சொல்ல,

“ஓ, இப்பக்கூட அவருக்காகத்தான் வந்திருக்கியா?” என்று மக்கள் திலகம் கேட்டுவிட்டு, “சொல்லுங்க முகமது” என்கிறார்.

“உங்கபுண்ணியத்துல, நீங்க கொடுத்த பணத்தை வெச்சு மசூதி தெருவுல சலூன் கடையை நல்லா டெவலப் பண்ணிட்டேன். இப்ப எனக்கொரு வீடு ஒதுக்கிக் கொடுத்தீங்கன்னா போதும்” என்று சொல்கிறார் முகமது. சரி. நான் பார்த்துக்கிறேன்” என்று முகமதுவிடம் உறுதியளித்த மக்கள் திலகம், ஏழுமலையிடம்,

“இத்தனை வருஷமா என் மேல பாசமா இருக்கே! மூணு பொண்ணுங்களைப் பெத்த நீ உனக்குன்னு ஏதாவது கேட்கணும்ன்னு தோணலியா?” என்று மக்கள் திலகம் கேட்க,

“1984 – ல் முரசலி சங்கரய்யா பிறந்த நாளுக்கு நிதி கொடுக்க வந்துட்டு, பக்கத்துல இருந்த என் வீட்டுக்கும் ஜேப்பியார் கூட வந்தீங்களே – அந்த ஒரு புண்ணியம் போதும்ண்ணே! வேற எந்த உதவியும் எனக்கு வேணாம்” என்று ஏழுமலை உணர்ச்சிப்பெருக்கில் சொல்கிறார்.

“எல்லாம் சரி, வடபழனி கோயில் அறங்காவலர் குழுத் தலைவரா உன்னைப் போடுறேன். ஒண்ணாந்தேதி என்னை வந்துபார். ஆர்.எம். வீயை நாளைக்குப் போய் பார்” என்று சொல்லி அனுப்புகிறார் மக்கள் திலகம்.

19.11.87 ல் மக்கள் திலகத்தை சந்தித்த ஏழுமலைக்கும், முகமதுவுக்கும், 15.12.87 -ல் முகமதுவுக்கு எந்த ஏரியாவில் வீடு வேண்டும் என்று திருப்பூர் மணிமாறனிடமிருந்தும், விரைவில் உங்களுக்கு ஆர்டர் வரும் என்று ஏழுமலைக்கு ஆர்.எம்.வீ. யிடமிருந்தும் தகவல் வருகிறது. ஆனால் இவர்களின் துரதிஷ்டம் மட்டுமல்ல: தமிழ்நாட்டின் துரதிஷ்டம் 24.12.87- ல் மக்கள் திலகம் மறைந்து விடுகிறார். இருந்தும் இன்றும் இவர்களுக்கு இவர்தான் இதய தெய்வம். அதுதான் எம்.ஜி.ஆர். சக்தி!

19 தலைவர் வரவில்லையென்றால் தாலி கட்ட மாட்டேன்!

1971 ல் திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு நீக்கப்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், 1972 – ல் தனிக்கட்சி தொடங்குகிறார். 1973-ல் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றிவாகை சூடிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 1977-ல் பொதுத் தேர்தலைச் சந்திக்கிறது.

தலைமைக் கழகத்தில் மக்கள் திலகம் அமர்ந்து கொண்டு, ஒவ்வொரு மாவட்டத் தேரதல் அமைப்பாளர் மூலம் வேட்பாளர்களைத் தேர்வு செய்கிறார.

விழுப்புரம் தொகுதியில் போட்டியிட மாம்பழப்பட்டு ராம்ரெட்டியார் என்ற மிகப்பெரிய பணபலம் மிக்க மிராசுதாரை, தொகுதி அமைப்பாளர் கிருஷ்ணனும், எம்.ஏ. பெருமாள் ராஜாவும் சிபாரிசு செய்கின்றனர்.

“எதறகாக ராம் ரெட்டியாருக்குச் சிபாரிசு செய்கிறீர்கள்?” என்று கிருஷ்ணனிடம் கேட்கிறார் மக்கள்திலகம்.

அதற்கு கிருஷ்ணன், “அவர்கிட்ட பணபலம் இருக்கு….தொகுதிக்குத் தன் சொந்தப் பணத்தைத தாராளமா செலவு செய்வார்” என்று, ராம் ரெட்டியாரின் பணபலத்தை மட்டுமே திரும்பத்திரும்ப கிருஷ்ணன் கூறுகிறார். அதற்கு மக்கள் திலகம், “ஏய கிருஷ்ணா, அவரை பணபலம் படைத்தவர்னுதான் சொல்றீயே தவிர, அவர் நம்ம கட்சியல ஆரம்பத்துல இருந்து பாடுபட்டவர். மக்கள் செல்வாக்குப் படைத்தவர் நல்லவர், நாணயமானவர்ன்னு நீ அவரைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னாயா? அதனால நீயே விழுப்புரம் தொகுதித வேட்பளரா நில்லு” என்று மக்கள் திலகம் சொல்ல, இதைக் கொஞ்சமும் எதிர்பர்க்காத கிருஷ்ணன், பரம ஏழைக்குப் பல கோடி ரூபாய்ய் கிடைத்த குதூகலம் அடைந்தார.

அதே நேரத்தில் ஆண்டி, அரசனாக கனவு காணலாம்; அமர்வது எப்படி சாத்தியம்!

தன்நிலை உணர்ந்த கிருஷ்ணன், “அண்ணே, சாதாரண டீக்கடை வச்சு பிழைப்பு நடத்துற நான் எப்படி எம்.எல்.ஏ. எலெக்ஷன்ல நின்னு ஜெயிக்க முடியும்?” என்று சொல்ல, அதற்கு மக்கல் திலகம், “விழுப்புரம் தொகுதியில நிக்கறது நீ இல்லை கிருஷ்ணா! இந்த எம்.ஜி. ராமச்சந்தின்தான் நிக்கிறான்…அதனால தைரியமாப்போய் தேர்தல் வேலைகளைப்பார்!” என்று அனுப்பி வைக்கிறார்.

விழுப்புரத்தில் இருந்து கிளம்பும் பொழுது வெறும் மாப்பிள்ளைத் தோழனாகச் சென்ற கிருஷ்ணன், சென்னையிலிருந்து திரும்பி வரும்பொழுது மாப்பிள்ளையாகவே வருவதைப் பார்த்து தொகுதி மக்கள் மலைத்துப் போய் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

தமிழகம் முழுவதும் இரவு பகல் பாராது, தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் செய்துகொண்டிருகிறார், மக்கள் திலகம். கிருஷ்ணனை ஆதரித்து ஓட்டுக் கேட்க, விழுப்புரம் தொகுதிக்கு வருவதாக ஒரு தேதி கொடுக்கிறார்.

இந்த நேரத்தில் மக்கள் திலகத்தைத தன் மனக் கோயிலில் வைத்து வணங்கி வரும் மந்தக்கரை பெருமாள் ராஜா, தன்னுடைய சக நண்பர்கள் எல்லோருமே திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் இருக்க, இவர் மட்டும் திருமணமே செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

எனவே வேட்பாளர் கிருஷ்ணன், மற்றும் கட்சிக்கார நணபர்கள் எல்லோரும் சேர்ந்து மக்கள் திலகம் ம்.ஜி.ஆர். தேர்தல்பிரச்சாரக் கூட்டத்திற்கு வரும் அதே மேடையில், பெருமாள் ராஜாவின் திருமணத்தை மக்கள் திலகம் கையால் தாலியெடுத்துக் கொடுத்து நடத்தி வைக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள். இதுவரை திருமணமே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த பெருமாள் ராஜா, மக்கள் திலகம் தலைமையில், என்றவுடன் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார்.

உடனடியாக வளவனூரில் கட்சிக்காரர்களே ஒருபெண்ணைப் பார்த்து, பெண் வீட்டாரிடம் பேசி சம்மதம் பெறுகிறார்கள்.

தேர்தல் வேலைகளும், பெருமாள் ராஜாவின் திருமணவேலைகளும் ஒரே நேரத்தில் ஜரூராக நடந்து கண்டிருக்கும் இந்த வேளையில், பெருமாள் ராஜா நேரே வளவனூர் சென்று பெண்ணின் தந்தையிடம், எனக்குப் பெற்றவர்கள் இருந்தாலும், எனக்கு தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்தான். அவர் என் திருமணத்தை நடத்தி வைக்கிறார் என்கிற ஒரு காரணத்துக்காகத்தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தேன். ஒருவேளை புரட்சித் தலைவர் வரவில்லை யென்றால், கண்டிப்பாக உங்கள் பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட மாட்டேன். அதற்கு பிறகு என்னைக் குறை சொல்லக்கூடாது!” என்று மனதில் உள்ளதை மறைக்காமல் சொன்னவுடன், மணப்பெண்ணின் தந்தைக்கு பெருமாள் ராஜா மீது மரியாதை இன்னும் கூடுதலாகிறது.

விழுப்புரம் காலேஜ் கிரவுண்ட் மைதான மேடைக்கு ஏழு மணிக்கு மக்கள் திலகம் வருவதாக நேரம் குறிக்கப்படுகிறது. தேர்தல் பிரச்சார மேடையிலேயே, பெருமாள் ராஜாவின் திருமணத்தையும் நடத்தி வைக்குமாறு, மக்கள் திலகத்துக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

மாலை நான்கு மணியிலிருந்தே காலேஜ் கிரவுண்ட் மைதானத்தில் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள. தமிழகம் முழுவதும் மக்கள் வெள்ளம் கட்டுக்கடங்காமல் சூழ்ந்து கொண்டதால், மக்கள் திலகம் திட்டமிட்ட நேரப்படி எந்த ஊருக்கும் எசல்ல இயலவில்லை. இருந்தும் காத்துக் கிடந்த மக்கள், கன அடிதூரம் கூட நகராமல், மணிக்ணக்கில், நாள்கணக்கில், உட்கார்ந்த இடத்திலேயே உறங்கிக் கொண்டும், உறங்கிக் கொண்டிருக்கும் இடத்திலேயே உணவு உண்டு கொண்டும் காத்துக் கிடக்க்கிறார்கள். மணப்பெண்ணும், மாப்பிள்ளையும், மணக்கோலத்தில் மேடை அருகில் காத்திருக்கின்றனர்.

மக்கள் திலகம் மதுரையைத் தாண்டிவிட்டார், மணப் பாறையில் பேசிக்கொண்டிருக்கிறார், திருச்சியை அடைந்து விட்டார், காவிரியைக் கடந்து விட்டார், பெரம்பலூரில் பேசிக்கொண்டிருக்கறார். விருதாசலத்துக்கு வந்து சேர்ந்து விட்டார். இப்பொழுது உளூந்தூர் பேட்டையில் ஓட்டு வேட்டையாடிக்கொண்டிருக்கிறார் என்று விழுப்புர மேடை ஒலிப்பெருக்கியில் மாலை ஏழு மணியிலிருந்தே மக்கள்திலகத்தின் வருகையைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகாலை 5.45 க்கு மக்கள் திலகம் தமிழ்நாடு கெஸ்ட் ஹவுஸ் வந்தடைகிறார். மாவட்டச் செயலாளர் திண்டிவனம் வேணு கோபால், நகரசபை அமைப்பாளர் ஜெயராமன், தொகுதி அமைப்பாளரும் -வேட்பாளருமான கிருஷ்ணன் ஆகியோரை மக்கள் திலகம் அறைக்குள் அழைக்கிறார்.

அவர்களிடம், “இப்பொழுதே மணி ஆறாகிவிட்டது. நான் சரியாக பத்து மணிக்கு சென்னை வானொலி நிலையத்தில் தேர்தல் பிரச்சார உரை நிகழ்த்த வேண்டும். எனவே நான் இப்பொழுது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாது… “என்று சங்கடத்துடன் தன்நிலை விளக்கம் தருகிறார் மக்கள் திலகம்.

பதிலே பேசமுடியாத அந்த மூவரும், “நம்ம கட்சிக்காரர் பெருமாள் ராஜா, மேடையில உங்களுக்காக மணப் பெண்ணுடன் காத்திருக்கிறார்..” என்று சொல்ல, “உங்க தொகுதி மாதிரி சில பகுதிகளுக்கு என்னால போக முடியலை! அவங்களுக்காகத்தான் ரேடியோவுல பேசப்போறேன். அதையும் தவறவிட்டுட்டா, நமக்கு நிறைய பாதிப்பு வந்துடும். அதனால அவனை திருமணத்தை முடிச்சுட்டு, தோட்டத்துக்கு அழைச்சுட்டு வந்துடுங்க!” என்று சொல்லிவிட்டு சென்னை கிளம்புகிறார் மக்கள் திலகம்.

மக்கள் திலகம் வரவில்லை என்ற செய்தியை பெருமாள் ராஜா கேள்விப்பட்டவுடன் தன்னுடைய பைக்கல் பாண்டிச்சேரிக்கு பறந்துவிட்டார். திருமணம் நின்றுவிடுகிறது.

தேர்தலெல்லாம் முடிந்து, வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன், மக்கள் திலகத்திடம் ஆசிபெற தோட்டத்திற்குச் செல்கிறார். உடன் பெருமாள் ராஜாவும் செல்கிறார். ஆசி வழங்கிய மக்கள் திலகம், “அன்னிக்கு ஏதோ கல்யாணம்ன்னு சொன்னியே…எங்கே அந்தபொண்ணு – மாப்பிள்ளை?” என்று கேட்க,

“இதோ -இவன்தான் அந்த மாப்பிள்ளை. நீங்க வந்து தாலி எடுத்துக் கொடுக்காத்துனால, திருமணமே வேணாம்ன்னுட்டு ஓடிட்டான்!” என்று சொல்லி பின்னால் நின்ற பெருமாள் ராஜாவின் கையைப் பிடித்து முன்னுக்கு வரச்செய்கிறார் கிருஷ்ணன்.

இதைக் கேட்ட வள்ளலின் வெற்றித் தோள்கள் துவண்டு போகிறது. எதற்குமே கலங்காத கண்கள் கசிந்துருகி, பெருமாள் ராஜாவின் கையைப் பிடித்துக் கொண்டு, “மண்டு, மண்டு, இப்படிப் பண்ணிட்டியே?” என்று வேதனைப்படுகிறார்.

காலங்கள் கட்நுத கொண்டிருக்கிறது. பெருமாள் ராஜாவப் பார்க்கும் போதெல்லாம், கையில்பணம் கொடுத்து, ஏதாவது ஒரு பெண்ணை நிச்சயம் பண்ணிவிட்டு வா… நானே திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’என்றுமக்கள் திலகம் சொல்கிறார். ஆனால் பெருமாள் ராஜா திருமணத்தில் நாட்டம் காட்டவே இல்லை.

1982-ல் கடலூர் மஞ்சக் குப்பம் மைதானத்தில் செல்வி ஜெயலலிதா கட்சியில் இணைந்தபிறகு பேசிய கன்னிப் பேச்சுக் கூட்டத்திற்குப் பிறகு, தலைமைக் கழகத்தில், 160 ஆட்டோ டிரைவர்களைக் கட்சியில் இணைக்க அழைத்துச் செல்கிறார் பெருமாள் ராஜா. அப்பொழுது மக்கள் திலகம் இல்லாததால், ஜெயல்லிதாவின் முன்னிலையில் சேர்க்க, ஜே.சி.டி. பிரபாகரனுடன் செல்வி ஜெயலலிதாவை அவர் அறையில் சந்திக்கிறார் பெருமாள் ராஜா.

விசயத்தைச்சொன்னவுடன், செல்வி ஜெயல்லிதா அவர்கள் மறுத்து, “மறுநாள் வந்து புரட்சித் தலைவர் முன்னிலையில் சேருங்கள்” என்கிறார். அதற்கு பெருமாள் ராஜா, ‘புரட்சித் தலைவருக்குப் பிறகு உங்கள் தலைமையைத்தானே ஏற்கப் போகிறோம்’ என்று சொன்னவுடன், புரட்சித் தலைவி புன் முறுவலுடன், பெருமாள் ராஜாவின் அன்புக் கட்டளையை ஏற்றுக் கொள்கிறார்.

இந்தச் சம்பவம் முடிந்து சில நாட்கள் கழித்து, மக்கள் திலகத்தைத் தோட்டத்தில் சந்திக்கிறார் பெருமாள் ராஜா, அவரிடம், தலைமைக் கழகத்தில் என்னென்னவோ கேள்விப் பட்டேன்’ என்று ஒரு அர்த்தபுஷ்டியுடன் சிரிக்கிறார் மக்கள் திலகம். பயந்து நின்ற பெருமாள் ராஜாவிடம், “திருமணமும் செஞ்சுக்கலை, வருமானத்துக்கு இப்ப என்னதான் வழி பண்ணி இருக்கே?” என்று பெருமாள் ராஜாவிடன் மக்கள் திலகம் கேட்கிறார்.

“தேவர் பிலிம்ஸ் அசிஸ்டென்ட் மானேஜரா வேலை பார்க்கிறேன். நீங்க இருக்கும்போது எனக்கு ஒரு குறையும் இல்ல தலைவரே!” என்கிறார் பெருமாள் ராஜா.

“சரி; நாளைக்குப் போய் தலைமைக் கழகத்துல துரையைப் போய் பார்!” என்று பெருமாள் ராஜாவை அனுப்பி வைக்கிறார் மக்கள் திலகம். மறுநாள் துரையைச்சந்திக்கிறார் பெருமாள் ராஜா துரை பெருமாள் ராஜாவின் பயோடேட்டா, விலாசம் எல்லாவற்றையும் வாங்கிக் ஒண்டு அனுப்பி வைக்கிறார். இதெல்லாம் ஏன் எதற்கென்று காரணம் புரியவில்லை. பெருமாள் ராஜாவுக்கு.

ஒருவாரம் கழித்து பெருமாள் ராஜாவின் விலாசத்திற்கு ஒரு தபால் வருகிறது. அதில் டி.டி.கே சாலை விலாசதில் ஆட்டோ எடுத்துக் கொள்ளச் சொல்லி பெருமாள் ராஜா பெயருக்கு ஆட்டோ பெர்மிட் இருந்தது. இன்னமும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து வரும் பெருமாள்ராஜா, பிள்ளையாரை வணங்குவதில்லை. பெருமாளை வணங்குவதில்லை. ஆனால் ஒரு நாளும் வள்ளல் எம்.ஜி.ஆரை வணங்காமல் வாசல் தாண்டிச் செல்வதில்லை.

புலியால் கிடைத்த வீடு

1984… செப்டம்பர் மாதம்… தஞ்சைப் பெரிய கோயில் ஆலயத்தைப் புதுபித்து, சிலைப் பிரதிஷ்டை விழா, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களும், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களும் புறப்படுகிறார்கள்.

வாத்தியம் முழங்க, இந்திரா அம்மையார் முன் நடந்து செல்ல, அந்த இராஜராஜ சோழ மன்னனே இராஜநடை போட்டுச் செல்வதுபோல், வீர நடை போட்டுப் பின் செல்கிறார் மக்கள் திலகம்.

சிலை பிரதிஷ்டை செய்யவிருக்கும் இடத்திற்கு நூறு அடி இடைவெளியில் சென்று கொண்டிருந்தபொழுது, மக்கள் திலகத்திற்கு நடக்க முடியாத அளவுக்கு மயக்கம் வருகிறது. உடன் சென்ற செக்யூரிட்டிகள், அந்த நடைபாதையிலேயே ஒரு சேரைப் போட்டு உட்கார வைக்கின்றனர்.

கிட்டதட்ட மக்கள் திலகத்தைப்போலவே புயலாகச் சென்று கொண்டிருந்த பிரதமர் இந்திரா, பின்தொடர்ந்து தென்றலைக் காணாமல் திரும்பிப் பார்த்துத் திகைத்துப் போய் மக்கள் திலகத்திற்கருகில் ஓடோடி வருகிறார்.

சில மணித்துளிகளில் மயக்கம் தெளிந்த மக்கள் திலகம், தனக்கு எதுவுமே நடக்காதது போல் துள்ளி எழுந்து, மீண்டும் நடக்கிறார். ஒரு வழியாக நிகழ்ச்சி முடிகிறது.

அதற்குப் பிறகு அக்டோபர் ஐந்தாம் தேதி, சளித்தொல்லையால் அவஸ்தைப்பட்டமக்கள் திலகம், சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்படுகிறார்.

ஒரு கட்டத்தில் ‘அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றால் தான் மக்கள் திலகத்தின் உயிரைக் காப்பாற்ற முடியும்’ என்று மருத்துவர்கள் கருத்துச்சொல்கிறார்கள்.

அப்பல்லோ மருத்துவமனையில் மக்கள் திலகம் இருந்த போது நெகிழ வைக்கும் பல சம்பவங்கள்.. 1967-ல் மக்கள் திலகம் துப்பாக்கியால் சுடப்பட்டபோது, தமிழகம் மட்டுமல்லாமல்… உலகம் முழுவதும் தேம்பி அழுது, அனைத்து ஆலயங்களிலும் ஆறு கால பூஜை நடத்தியதுபோல், இப்பொழுதும் அனைத்து ஆலயங்களிலும் பூஜை நடத்தி, எம்.ஜி.ஆர். பக்தர்கள் அனைவரும் அப்பல்லோ மருத்துமனை வாசலில் பூ, பழம், தேங்காய் திருநீறு, குங்கும்ப் பிரசாதங்களை மலையாகக் குவிக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்த பாரதப் பிரதமர், “உங்கள் முதலமைச்சரைக் கண்டிப்பாகக் காப்பாற்றித் தருகிறேன்” என்று மக்கள் முன்பு உறுதியளித்து, ஆறுதல் சொல்லி, ஒரு மினி மருத்துவமனையையே ஒரு தனி விமானத்தில் அமைத்து, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை அமெரிக்க புரூக்ளின் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கிறார்.

அப்பல்லோ மருத்துவமனை வாசலில் குவிந்த பிரசாதங்களைபோல், காசியிலிருந்து தீர்த்தமும், ரோமில் இருந்து பிராதமும், கூட்டுப் பிரார்த்தனை செய்த கோடி மக்களின் திருநீறும் குங்கும்ப் பொட்டலங்களும், அமெரிக்க விமான ப்ரூக்ளின் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறது. தந்திகளும், தபால்களும் மட்டும் இன்னொரு தனி வேன்மூலம் ப்ரூக்ளின் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்தியாவில் உள்ள ஒரு மக்கள் திலகம் ஒருமாவீரனாக மீண்டு வருகிறார் தமிழ் மண்ணுக்கு.

1987-டிசம்பர் 24 -ல் மட்டும் மக்கள் திலகம் ‘இன்று போய் நாளை வா’ என்று உன்னை எத்தனைமுறைதான் அனுப்பி வைப்பது’ என்று அந்த எமனுக்கே இரக்கம் காட்டி எமனுடன் செல்லச் சம்மதிக்கிறார்.

இதைக்கொஞ்சமும் எதிர்பார்க்காத தமிழக மக்கள், எந்தக் கடவுளுக்கு ஆறுகால பூஜை செய்து ஆராதித்தார்களோ, அதே கடவுளை நிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இலட்சக்கணக்கானோர் அவரவர் ஊர்களில், ஒரு தந்தைக்கு ஒரு மகன் ஈமச்சடங்கு செய்வது போல், ஒருமகனுக்குத் தந்தை ஈமச்சடங்கு செய்வதுபோல் பெண்களும் தங்கள் தலையை மொட்டையடித்துக்கொண்டு ஈமச்சடங்கு செய்து – நாள் கணக்கில் அன்ன ஆகாரமின்றித் துக்கத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள்.

அந்த இலட்சக்கணக்கானோரில், சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் சூர்யகுமாரி என்ற பெண்- திருச்சி ஸ்ரீரங்கத்திற்கே சென்று, அய்யரை வைத்தே காவிரியில் மக்கள் திலகத்திற்கு ஈமக்கிரியை செய்திருக்கிறார்.

தங்கப்பன் நடன மாஸ்டரின் உதவியாளரான சூர்யகுமாரி, ‘மக்கள் திலகம்தான் எனக்குத் தாய் -தந்தை’ என்கிறார்.

அன்று விஜயா வாகினியில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்-வைஜெயந்திமலா நடித்த ‘பாக்தாத் திருடன்’ படப்பிடிப்ப.

அன்றைய படப்பிடிப்பில் பாக்தாத்தின் வாரிசான குழந்தைப் பருவ எம்.ஜி.ஆரை, எதிரிகள் கொலை செய்யத் திட்டமிடுகின்றனர். இதை அறிந்த மக்கள் திலகத்தின் தய் எஸ்.என்.லட்சுமி, குழந்தை எம்.ஜி.ஆரை பசு மாட்டு மடியில் கட்டி, மாட்டை விரட்டித் தப்பிக்கச் செய்து விடுவார்.

அதேநேரம் பின்னாலிருந்து ஒரு புலி வந்து எஸ்.என்.லட்சுமியைத் துரத்தி கொன்றுவிடும்.

புலியோடு எஸ்.என். லட்சுமி மோதிப் புரளும் இந்தக் காட்சியில், சூர்யகுமாரி டூப் போட்டு புலியோடு சண்டை போடுகிறார்.

அப்பொழுது அந்தப் புலி சூர்யகுமாரியின் நெஞ்சில் பாய்ந்து குதறி விடுகிறது. செய்தியறிந்த மக்கள் திலகம், உடனிடியாக விரைந்து வந்து, சூர்யகுமாரியை அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கச் செய்கிறார்.
சிகிச்சை மூன்று மாதம் தொடர்கிறது. இந்த மூன்று மாதமும் தாய்-தந்தை இல்லாத சூர்யகுமாரியைக் கவனிக்க, பகலுக்கு ஓர் ஆளையும், இரவுக்கு ஓர் ஆறையம் வேலைக்கு வைத்து, தன் சொந்தச்செலவில் பரிவர்த்தனை செய்கிறார் மக்கள் திலகம்.

மூன்று மாத்த்திற்குப் பிறகு சிகிச்சை முடிந்து, சூர்யகுமாரி காரில் அழைத்துச்செல்லப்படுகிறார்.

செல்கிறபோதே, ‘இனி வாடகைப் பிரச்சினை, வயிற்றுப் பிரச்சினை-இரண்டையும் எப்படிச்சமளிப்பது’ என்று சூர்ய குமாரி கவலையுடன் சென்று கொண்டிருந்தபொழுது, கார்கோடம்பாக்கம் பாலத்தைத் தாண்டி, வலதுபுறம் உள்ள ட்ரஸ்ட்புரம் பக்கம் சென்றது.

உடனே சூர்யகுமாரி, “என்னுடைய வீடு இங்கில்லை. வட பழனியைத் தாண்டிச் செல்லுங்கள்…” என்கிறார்.

அப்பொழுதுதான் உடன் வந்தவர்கள், இனி நீங்கள் வாடகை வீட்டில் தங்க அவசியமில்லை, “டிரஸ்ட்புரம், நான்காம் வீட்டில் எம்.ஜி.ஆர். உங்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்!” என்ற இனிப்பான செய்தியைச் சொல்கிறார்கள்.

மூன்று மாதமாக ராஜ உபச்சார சிகிச்சை, அதுபோக – வீட்டு வாடகைக்கு இனி என்ன செய்வதென்று கவலைப்பட்ட தனக்குச் சொந்த வீடே வள்ளல் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்றவுடன், சூர்யகுமாரி அப்படியே ஷாக்காகிப் போகிறார்.

அப்படிப்பட்ட தெய்வத்தைத் தன் தாய் – தந்தையாக வணங்கி மகிழும் அந்த மூதாட்டி, இப்பொழுது தன்னுடைய வசதி வாய்ப்பை இழந்து பூ விற்றுப் பிழைக்கிறார்.

“என் தெய்வம் இருந்தால் என்னை இந்த நிலையில் இருக்க விடுமா?” என்று சொல்லிச் சொல்லிச் சோகப்படுகிறார்.

கிண்டி ரேஸூக்கு நானும் வர்றேன்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து அதிகப் படங்களை இயக்கியவர் டி.ஆர்.ராமண்ணா. அதோடு இருவருக்கும் ஆத்மார்தமான நட்பும் தொடர்ந்து கண்டிருந்தது.

அந்த நட்பில்தான் இரண்டு துருவங்களாக இருந்த மக்கள் திலகத்தையும், நடிகர் திலகத்தையும் ‘கூண்டுக்கிளி’ என்ற படத்தில் இணைத்தார். டி.ஆர் ராமண்ணா.

புத்தாண்டு அன்று பொன்மனச்செம்மலின் கையல் ஒரு ரூபாயாவது வாங்கும் பழக்கத்தை நிறைய பெரிய மனிதர்கள் வழக்கமாக்க் கொண்டிருந்தார்கள். டி.ஆர். ராமண்ணாவுக்கும் அந்தப் பழக்கம் உண்டு.

அப்படித்தான் ஒரு புத்தாண்டு அன்று பொன்மனணச்செம்மல் கையால்பணம் பெற்றுக் கொண்டு, ராமாவரம் தோட்ட இல்லத்திலிருந்து கிளம்புகிறார் டி.ஆர். ராமண்ணா.

கிளம்பிய டி.ஆர். ராமண்ணாவிடம், “ஏன் வந்தவுடனே செல்கிறீர்கள்? அப்படி என்ன அவசர வேலை?” என்று கேட்கிறார் மக்கள் திலகம்.

ஓய்வு நேரங்களிங் கிண்டியில் குதிரைப் பந்தயத்துக்குப் போகும் பழக்கம் டி.ஆர். ராமண்ணாவுக்கு உண்டு. அதில் கலந்து கொள்ள புறப்பட்ட டி.ஆர்.ராமண்ணாவிடம் மக்கள்திலகம் கேட்டவுடன், இதையெல்லாம் விரும்பாத அவரிடம் எப்படிச் சொல்வதென்று தயங்கிக் கிண்டி ரேஸூக்குச்செலவதைச் சொல்கிறார்.

“அப்படியா?” என்று கேட்டுக்கொண் மக்கள் திலகம், “கொஞ்சம் பொறுங்கள்..நானும் வருகிறேன்.!” என்று சொல்கிறார்.

டி.ஆர். ராமண்ணாவுக்கு அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

நம்மீது உள்ள மரியாதை கருதி, தன்னக் கண்டிக்காமலும், கடிந்து பேசாமலும் விட்டுவிட்டார் மக்கள் திலகம். ஆனால் அவரும் ரேஸுக்கு வருவதாகச்சொல்கிறாரே’ என்று டி.ஆர். ராமண்ணாவுக்குக் குழப்பம்.

சொல்லியபடி கிளம்பும் பொழுது, மக்கள் திலகம், தன்னுடைய ஜிப்பாவின் இரண்டு பாக்கெட்டுகளிலும் இரண்டு பணக்கட்டுகளை வைத்துக் கொண்டு விட்டார்.

கார் கிண்டி ரேஸ் மைதானத்தை அடைகிறது. குதிரைப் பந்தயம் நடக்கும் இடத்திற்கு டி.ஆர். ராமண்ணாவுடன் மக்கள்திலகம் மேலே உள்ள பாக்ஸில் அமர்ந்து கொள்கிறார். ரேஸ் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு குதிரை ஓடும்பொழுதும், டி.ஆர் ராமண்ணா மற்றும் அவரது நண்பர்களும் பணம் கட்டுகிறார்கள்.

ஆனால்மக்கள் திலகம், எந்தக் குதிரை மேலும் பணம் கட்டாமல், ஓடும் குதிரைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டும், ஆடும் ஆட்டக்கார்ர்களை உன்னிப்பாக்க் கவனித்துக் கொண்டும் இருக்கிறார்.

ரேஸூக்கு வந்துவிட்டு, பாக்கெட் நிறைய பணத்தையும் வைத்துக்கொண்டு பணம் கட்டி ஆடாமல் இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடினம், “என்னண்ணே..பணத்தைக் கட்டித் களத்தில் இறங்காம, சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்களே?” என்று டி.ஆர்.ராமண்ணா கேட்கிறார்.

அதற்கு மக்கள் திலகம் தலையை ஆட்டிக்கொண்டே, “நீங்க ஆடுங்க..” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ரேஸூம் முடிந்து விட்டது. எல்லோரும் கிளம்பிச்செல்கிறார்கள்.

அப்பொழுது டி.ஆர். ராமண்ணா மக்கள் திலகத்திடம், நீங்க விரும்பாத இடத்துக்கு வந்துட்டு, ஒரு குதிரைமேலகூட பணம் கட்டாம, கண்டு வந்த பணத்தை அப்படியே எடுத்துக்கிட்டுப் போறீங்களே?” என்று கேட்க- மக்கள் திலகம், “கொஞ்சம் பொறுங்க…” என்று சொல்லிக் கொண்டே சிரித்தவறு வருகிறார்.

மைதானத்தைத் தாண்டி மெயின் கேட்டை அடைகிறார்கள். அப்பொழுது அங்கு வேலை செய்த பணியாளர்கள் எம்.ஜி.ஆரைச் சூழ்ந்துத கொண்டு வணங்கி நிற்கிறார்கள்.

இப்பொழுது அவர்கள் எல்லோருக்கும் ஜிப்பாவுக்குள் கைவிட்டுக்கண்டும், பிறகு கை கொடுத்துக்கொண்டும் வருகிறார் எம்.ஜி.ஆர்.

இப்படித் தொடர்ந்து பத்து நிமிடமாக ஜிப்பா பாக்கெட்டுக்குள் கைவிடுவதும். எம்.ஜி.ஆரைக் கவனிக்கிறார் டி.ஆர். ராமண்ணா.

பிறகுதான் தெரிந்தது. ஜிப்பா பாக்கெட்டுக்குள் கையை விட்டு கைக்கு வந்ததை யாருக்கும் தெரியாமல் கொடுக்கிறார், மக்கள் திலகம் என்று!

காரில் ஏறியவுடன் “நான் உங்ககூட வந்ததற்குக் காரணம் நானும் ரேஸ்ல கலந்துக்கறதுக்காக இல்லை. குதிரைப் பந்தயத்தை ஒரு ரசிகனா பார்க்கறதுக்காகத்தான் வந்தேன்.

அடுத்து-முதன் முதலாக நான் அந்த இடத்துக்கு வர்றேன். கண்டிப்பா, அங்கே சாதாரண வேலை செய்ற தொழிலாளிங்க என்னப் பார்க்க வருவாங்க. அவுங்கை வெறுங்கையோட பார்த்துட்டு அனுப்ப முடியுமா? அதுக்காகத்தான் பணம் எடுத்துட்டு வந்டேன். ரேஸ்ல பணம் கட்டுறதுக்காக இல்லை!” என்று சொல்கிறார் மக்கள்திலகம்.

அடடே..இதைத்தான ‘வலது கை கொடுப்பதை, இடது கை அறியாது’ என்று சொல்கிறார்களோ என்று எண்ணி வியக்கிறார் டி.ஆர். ராமண்ணா.

என் தெய்வத்தோட பேர் இது!

கடந்த மார்ச் மாதம் சென்னை இராமவரம் வாணிவெங்கடேஸ்வரா வித்யோதயா பளியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழா முடிவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் ஆர். சுபாஷினி என்ற பெயர் மைக்கில் அறிவிக்கப்பட்டபோது, அந்தப் பெண்ணின் தந்தை, தன் மகள் வாங்கும் பரிசைப பார்த்து ஆனந்தப்படுவதை விட்டுவிட்டு, ஆத்திரப்பட்டார். மிகுந்த ஆவேசத்துடன் மேடையை நோக்கிச்செல்ல அவர் எழுந்தபோது, அவருது துணைவியார் அவரைத் தடுத்தி நிறுத்தி, ‘நாளை பள்ளித் தலைமை ஆசிரியரிடன் நேரில் பேசிக்கொள்ளலாம்’ என்று சொல்லிக் கணவரை விழாவிலிருந்து அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

ஆனால்மு, அவருக்கு ஆவேசம் தணியவில்லை. ராத்திரி யெல்லாம் தூக்கம் பிடிக்காமல் எப்பொழுது விடியும் என்று காத்திருக்கிறார். விடிந்து விட்டது! குளித்து உடை மாற்றிவிட்டு, பள்ளிக்கூடம் திறப்பதற்கு முன்பே சென்று காத்திருக்கிறார்.

பள்ளிக்கூடக் கதவுகள்திறக்கப்பட்டு, தலைமை ஆசிரியர் தன் இருக்கையில் அமர்ந்த அடுத்த நிமிடம், தன் கையில் வைத்திருந்த சர்டிபிகேட்டுடன் உள்ளே நுழைந்து , அந்த சர்டிபிகேட்டைத் தலைமையாசிரியரின் டேபிளில் போட்டுவிட்டு, “எம்.ஜி.ஆர். சுபாஷினி என்ற என் மகளின் பெயரை ஏன் வெறும் ஆர். சுபாஷினி என்றுமாற்றி எழுதியிருக்கிறீர்கள்? என்னிக்குத் தனசேகரன்-ங்கற என் பெயரை மாற்றி எம்.ஜி.ஆர்ன்னு என் தெய்வத்துப் பெயரை நான் வச்சுக்கிடேனோ, அன்னியில இருந்துதான் என் உழைப்புக்கு ஏற்ற ஊதியம், மதிப்பு, மரியாதை, மூணுவேளை சோறு, இருக்க வீடு, போன், அந்தஸ்து எனக்கு எல்லாம் கிடைச்சுது.

“ஏதோ பேருக்கு என் பெயரை எம்.ஜி.ஆர்.ன்னு மாத்திக்கலை. தமிழ்நாடு கவர்மென்ட் கெசட்ல சட்டப்பூர்வமா என் பெயரை எம்.ஜி.ஆர்.ன்னு பதிவு பண்ணி இருக்கேன்.

அப்படிப்பட்ட மகானின் பெயர், என்னோடு போயிடக் கூடாது அடுத்து வருகிற தலைமுறைக்கும் அது நிலைக்க வேண்டும் என்றுதான் என் பிள்ளைகளுக்கு இனிஷியலாக எம்.ஜி.ஆர். என்றே பள்ளியில் பதிவு செய்து சேர்த்தேன். இன்று எதற்காக எம்.ஜி.ஆர் என்ற அந்தப் புனிதரின் இனிஷியலை எடுத்துவிட்டு, வெறும் ஆர்.சுபாஷினி என்று எழுதி இருக்கிறீர்கள்?” என்று உணர்ச்சிக் கொந்தளிப்போடு தலைமை யாசிரியரிடம் கேட்கிறார் சுபாஷினியின் தந்தை தனசேகரன் என்கிற எம்.ஜி.ஆர்.

விளக்கத்தை கேட்ட தலைமையாசிரியர் தவறுக்உக வருந்துவதாக்க் கூறி, உடனடியாக எம்.ஜி.ஆர் சுபாஷினி என்று மாற்றி எழுதி சர்டிபிகேட்டை எம்ஜி.ஆரிடம் தருகிறார்.

வாங்கிக் கொண்ட எம்.ஜி.ஆர்., “வள்ளுவர் மட்டும் நம் வள்ளல் எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்தால் கண்டிப்பாக, ‘தோன்றிற் புகழோடு தோன்றுக… என்று எழுதுவதற்குப் பதிலாக, ‘தோன்றிற் புரட்சித் தலைவரைப் போல் தோன்றுக, அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்றே எழுதியிருப்பார்!” என்று தலைமை ஆசிரியரிடம் சொல்லி, விடை பெற்றிருக்கிறார்.

தனசேகரன் என்று தன் தாய் -தந்தை வைத்த பெயரை மாற்றி, தன்னுடைய அபிமானத் தலைவன் எம்.ஜி.ஆர். என்ற பெயரைத் தனக்குச் சூட்டி மகிழும் அளவுக்கு, அப்படி என்ன அள்ளி அள்ளிக் கொடுத்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்?

1968 – ல் சென்னை போக் ரோட்டில் உள்ள சென்னை மாநகராட்சிகப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறார் (இன்றைய எம்.ஜி.ஆர்.)தனசேகரன்.

ஒருநாள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் டி.எம்.சி. 2374 என்ற எண்ணுள்ள தன்னுடைய அரக்குநிற அம்பாசிடர் காரில், ஆற்காடு சாலை வீட்டில் இருந்து கிளம்பி வருகிறார்.

கார் போக் ரோட்டில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளி வழியாக வந்து கொண்டிருந்தபொழுது, பள்ளிக்கு வெளியே உள பள்ளத்தில் இருக்கும் குழாயில், மதிய உணவு சாப்பிட்டு விட்டு தட்டைக் கழுவிக் கொண்டிருந்த சேகர், பாலன், ராஜேந்திரன், தனசேகரன் ஆகிய மாணவர்கள், எம்.ஜி.ஆரின் காரை அடையாளம் தெரிந்துகொண்டு, ஓடிவந்து ஒன்றாக கைகோர்த்த வண்ணம் காரை வழிமறித்து வணக்கம் சொல்கிறார்கள்.

கார் கதவை இறக்கிய மக்கள் திலகம், “எதற்காக்க் காரை வழிமறித்து நிற்கிறீர்கள்ழ உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும்?” என்று கேட்கிறார்.

“எங்களுக்கு ஒன்னும் வேண்டாம். உங்களை நேரில் பார்க்க சையாக இருந்தது. அனல்தான் நிறுத்தினோம்!” என்று அந்த மாணவர்கள் கூறுகிறார்கள்.

“அப்படியா அதுக்காகப்படிக்கிற நேரத்தில் இப்படி ரோட்ல வழிமறிச்சு நிற்க கூடாது!” என்று அறிவுரை சொல்லிக் கிளம்புகிறார் மக்கள் திலகம்.

ஆனால்மு அந்த மாணவர்கள், ஒவ்வொரு நாளும் மக்கள் திலகத்தின் காரைப் பார்த்தாலே, கும்பலாக நின்று கொண்டு கையசைப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் அந்த வார்டு கவுன்சிலர் சடகோபன், தலைமை ஆசிரியர் சுப்ரமணியைச் சந்தித்து, உங்கள் மாணவர்களைக் கண்டித்து வையுங்கள். தினமும் எம்.ஜி.ஆரின் காரை வழி மறித்துத் தொல்லை கொடுப்பதாக, என்னிடம் கம்ப்ளைண்ட் வருகிறது’ என்று எச்சரித்து செல்கிறார்.

உடனே தலைமை ஆசிரியர் சுப்ரமணி அந்தமாணவர்களைப் பிரம்பால் அடித்த, இனி எம்.ஜி.ஆர் காரை வழிமறிக்கக் கூடாது’ என்று சொல்லி வைக்கிறார்.

மறுநாள் வழக்கம்போல் பள்ளி வழியாக மக்கள்திலகம் காரில் வருகிறார். வழக்கமாக வழிமறித்து வணக்கம் சொல்லும் மாணவர்களைக் காணோம். மக்கள் திலகத்துக்குத்தன்னையறியாமலேயே அவர்களைப் பார்க்க மனம் ஏங்குகிறது. அந்த நேரத்தில் குழாயடியில் (முழங்கால் அளவு தண்ணீரில்) நின்று கொண்டிருந்த மாணவர்களில் ஒருவன் மட்டும் ‘டேய் எம்.ஜி.ஆர் காருடா’ என்று கத்துகிறான்.

ஆனால் யாருமே அந்தப் பள்ளத்தில் இருந்து மேலே வந்த எம்.ஜி.ஆரின் காருக்கருகில் வரவில்லை. வழக்கமாக காருக்கருகே வரும் மாணவர்கள் வராததால், மக்கள் திலகமே காரை விட்டு இறங்கி, அந்தக் குழாய் இருக்கும் பள்ளத்துக்கருகே வருகிறார்.

அப்பொழுது மாணவர்கள் சாப்பாட்டு பிளேட்டைக் கழவிக் கண்டும், அதே பிளேட்டில் தண்ணீர்பிடித்துக் குடித்துக் கொண்டும், அதில் ஒரு மாணவர் பிளேட்டை வைத்து பள்ளத்தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டிருப்பதையும்பார்த்து மனமுருகி நிற்கிறார் மக்கள் திலகம். எல்லா மாணவர்களையும் அந்தப் பள்ளித்இல் இருந்து கைகொடுத்து மேலே வரச் செய்கிறார். பிறகு அவர்களிடம், ‘ஏன் இன்று என்னைப் பார்க்கக் கார் அருகே வரவில்லை’ என்று கேட்கிறார் மக்கள்திலகம், ‘நீங்கதான் நாங்க உங்களுக்குத் தொல்லை கொடுக்கறதா சொல்லிட்டீங்களாமே.. ஹெட்மாஸ்டர இனி உங்களைப் பார்க்கூடாதுன்று நேத்து எங்க எல்லாத்தையும் அடிச்சுட்டார். அதனாலதான் உங்களைப் பார்க்கப்பக்கத்துல வரவில்லை’ என்று சொன்னவுடன் ‘நான் சொன்னேனா?’ என்று மக்கள் திலகம் ஆச்சரியத்துடன் கேட்க, ‘நான் தான் வார்டு கவுன்சிலர் கிட்ட பசங்களைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணினேன்’ என்று டிரைவர் சொல்கிறார்.

‘அப்படியா… ஸ்கூல் நடக்கிற டைம்ல மட்டும என்னப் பார்க்க வெளியல ஓடி வரக்கூடாது’ என்று சொல்லிவிட்டு, மக்கள்திலகம் புறப்படுகிறார்.

இரண்டு நாள் கழித்து, வார்டு கவுன்சிலர் சடகோபன் பித்தளை பொருத்திய ஒரு ட்ரமுடன், நான்கு பெரிய அலுமினய டம்ளருடன் பள்ளிக்குள் வருகிறார். டிரம்மில் தண்ணீர் நிரப்பி வைக்கும் வேலையைப் பியூனிடம் ஒப்படைத்த சடகோபன், மாணவர்களைப் பார்த்து- “இனிமே நீங்க யாரும் சாப்பாட்டுத் தட்டுல முங்கித் தண்ணி குடிக்கக் கூடாது. டம்ளர்தான் தண்ணி எடுத்துக்குடிக்கணும். எம்.ஜி.ஆர். இனிமே உங்கள்ல யாரையும், அந்த குழாய் பள்ளத்துலப் பார்க்க்க கூடாது என்றுசொல்லி இருக்கிறார். இந்த ட்ரம்மை உங்களுக்காக வாங்கிக் கொடுத்திருக்கிறார்!” என்று சொல்லிச் சென்று விட்டார்.

இதே போக் ரோட்டில், எத்தனை நடிகர்கள், எத்தனை தொழிலதிபர்கள், எத்தனை நாட்களாக மாணவர்கள்பள்ளத்தல் இறங்கி, தட்டில் தண்ணீர் குடிப்பதைப்பார்த்திருக்இகறர்கள். ஆனால் இவர்களில் எவருக்குமே மனம் இளகவில்லையே! ஆனால் இந்த மாமனிதரின் மனம் மட்டும் இளகி, இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள், அந்த இளம் பிஞ்சுகளின் மனதைக் குளிர வைத்துவிட்டாரே!

இனி இந்த மகான்தான் நம் வழிகாட்டி என்று அந்த மாணவப் பாருவத்திலேயே மக்கள் திலகத்தை மனதால் ஏற்றுக் கொள்கிறார் தனசேகரன்.

பின்னாளில் தனசேகரன் வசதி வாய்ப்பிழந்து வறுமையில் வாடுகிறார்.

அந்த நேரத்தில் ஜோதிடம் தெரிந்த ஒருவர், “மனுஷன் வாழ்ந்தா பொன்மனச் செம்மல எம்.ஜி.ஆர் போல வாழனும். அவருக்கு, அவருடைய பேர்லேயே அப்படி ஒரு ராசி இருக்கு!” என்றுசொல்ல, இதைக் கேட்ட தனசேகரன், அந்த நிமிடமே தமழ்நாடு கவர்ன்மென்ட் செகட்டுக்குப்போய்த் தன் பெயரை எம்.ஜி.ஆர் என்று பதிவு செய்திருக்கிறார்.

இன்று வசதி வாய்ப்போடு ராமாபரம் எஸ்.ஆர்.எம் கல்லூரிக்கருகில் வாழ்க்கை நடத்தும் பக்தர் எம்.ஜி.ஆர். வீட்டில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மட்டும்தன் பூஜை அறையில் இருந்து படுக்கை அறைவரை தெய்வமாகத் திகழ்கிறார்.

டபுள்ஸ் போகலாம்.!

படித்த மேதாவிகள், பணக்கார்ர்கள், த்த்துவ வித்தகர்கள், பொருளாதார மேதைகள் ஆகயோர் சொன்னவற்றையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, ‘ஏழை சொல் அம்பலம் ஏறாது’ என்று பன்னெடுங்காலமாகச்சொல்லி வந்த பழமொழியைப் பொய் யாக்கி, ஏழை சொல்லும் அரியணை ஏறும் என்று நிரூபித்துக்காட்டியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

அந்த வகையில் சரித்திரப் புகழ் வாய்ந்த சத்துணவுத் திட்டத்தை அமுல்படுத்தியது, கிராமம் தோறும் இருந்த வந்த ஜமீன் பரம்பரை கிராம அதிகாரிகளை ஒழித்தது. ஏழை மக்கள் கூழுக்கும் கஞ்சிக்கும் அலைந்தபோது, மூன்று வேளையும் அரிசிச்சொறு கிடைக்க நிரந்தர் திட்டம் தீட்டியது. -இப்படி அனைத்துத் நலத் திட்டங்களும் தீட்டக்காரண கர்தாவாக இருந்தவர்கள்-மிகப் பெரிய அரிசியல் தலைவர்களோ, அரசியல் பதவி வகிக்கும் பெரிய அதிகாரிகளோ இல்லை. சாதாரண ஏழைக் குடிமக்கள்தான். அவர்களின் கருத்துதான் அரசாணை ஆக்கப்பட்டது.

உதராணத்துக்கு, 1972 ல் தனிக்கட்சித் தொடங்கப்ப்ட்டு, சத்யா ஸ்டுடியோவில் நடந்த பொதுக் குழுவில் மக்கள் தலகம் எம்.ஜி.ஆர். கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அன்று கட்சியின் எதிர்காலத் திட்டங்கள்பற்றியும், மக்களுக்கு என்னென்ன சேவைகள் செய்ய வேண்டும் என்பது பற்றியும் விரிவாகப் பேசப்படுகிறது.

அப்பொழுது, “வசதி படைத்தவர்களெல்லாம் காரிலும், பைக்கிலும் மூன்று பேர் நான்கு பேர் என்று அமர்ந்து செல்கிறார்கள். ஆனால் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் சைக்கிளில் இரண்டு பேர் (டபுள்ஸ்) சென்றாலோ, கல்யாணமான புதுமணத் தம்பதிகள் ஒன்றாகச்சேர்ந்து சென்றாலோ, இன்னும் ஏன்- கர்ப்பிணிப் பெண்ணை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்லும் பொழுதுகூட இறங்கிச் செல்ல வேண்டும். அப்படி இறங்கும் போது போலீஸ்கார்ர்கள்பார்த்துவிட்டால், அபராதமோ, வேறுவிதமான தண்டனையோ வழங்குகிறார்கள்.

ஏழை-எளிய மக்களை மான பங்கப்படுத்துகிற இந்தக் கொடுமையான, காட்டுமிராண்டித்தனமான சட்டத்தை நாம் ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்ய வேண்டும்!” என்று இளையான்குடி காதர்பாய் என்ற சாதாரணத் தொண்டர், மனிதாபிமானமிக்க இந்தக் கோரிக்கையை மக்கள் திலகத்திடன்முன் வைக்கிறார்.

கேட்டுக் கொண்ட மக்கள் திலகம் இதை மனதில்பதிய வைத்துக் கொள்கிறார்.

4.7.1977ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதுவரை கோட்டையிலும், அரசு மண்டபத்திலும் மட்டுமே முதலமைச்சர் பதவி ஏற்பு விழா தமிழகத்தில் நடந்திருக்கிறது.

ஆனால்-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மக்களோடு மக்களாக, பொதுமக்கள்முன்னிலையில் சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகே முதல்வராகப் பதவி ஏற்கிறார்.

பதவியேற்பு முடிந்து, கோட்டைக்கு வருகிறார் வள்ளல். முதல்வர் நாற்காலியில் அமர்கிறார். அங்கே பலகோப்புகள் அவரது கையொப்பத்திற்காக காத்திருக்கின்றன.

சில நிமிடத்திற்குப் பிறகு, புரட்சித் தலைவரின் பூந்தளிர் விரல்கள் எவரும் எதிர்பார்க்காத, எதிர்பார்க்க முடியாத ஒரு கோப்பைத் திறந்து, அதில் கையொப்பமிட்டபுரட்சித் தலைவிரன் பூவிழிகளில் கண்ணீர்த் துளிகள், கையெழுத்திட்டதும் அந்த மாமனிதர் மன நெகிழ்வுடன் சிரித்துக் கொள்கிறார். அவர் கொயொப்பமிட்ட அந்தக் கோப்பில் இருந்ததுமாபெரும் பொருளாதாரத் திட்டமில்லை.

சாமான்ய மக்களின் உரிமையைப் பறிக்கின்ற,தன் மானத்திற்கு ஊறு விளைவிக்கின்ற சட்டத்தையும் அதன் கொடுமைகளையும் நினைத்துப்பார்த்த நிகழ்ச்சி அது.

ஆம். ஐந்தாண்டுகளுக்கு முன்பு சத்யா ஸ்டுடியோவில் நடந்த கூட்டத்தில் சாதாரண தொண்டர் காதர்பாய் சொன்னதைக் கவனத்தில் கொண்டு, ஆயிரம் திட்டங்கள் தன் கண் முன் நின்றாலும், சைக்கிளில் டபுள்ஸ் செல்பவர்களின் அவமானத்தைப் போக்கும் வகையில் ‘இனி சைக்கிளில் டபுள்ஸ் செல்ல்லாம்’ என்று சட்டமாக்குகிறார் மக்கள் திலகம்.

இந்தச் செய்தியை, மறுநாள் வந்த தினசரி பத்திரிகையில் காதர் பாய் இளையான் குடியில் படிக்கிறார். கண்கள் குளமாகிப்போகிறது.

“1972ல் அன்று சாதாரணத் தொண்டனாகிய நான் சொன்ன கோரிக்கையை இத்தனை ஆண்டுகள் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து, அதை இன்று வெளிச்சத்துக்குக் கண்டு வந்திருக்கிறாரே!’ என்று மகிழ்ந்துபோன காதர்பாய் அந்தக் காவிய நாயகனைப் பார்த்து நன்றி சொல்ல ஆசைப்பட்டு சென்னை வருகிறார்.

வழக்கமாகத் தரிசிக்கும் ராமாவர தோட்ட இல்லத்தில் மக்கள் திலகத்தை சந்திக்கிறார் காதல் பாய். அவரிடம், “உனக்கு திருப்தியா?” என்று கேட்கிறார் மக்கள் திலகம். காதர்பாய்க்குப்பேச வார்த்தை வரவில்லை. விழிநீரைத்துடைத்துக் கொண்டு விடைபெறுகிறார்.

1987 – அக்டோபரில், மக்கள் திலகம் தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைக் கழகத்திற்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் தொண்டர்களைச் சந்திக்க வருகிறார். நூற்றுக்கு மேப்பட்டவர்களின் குறைகளைக் கேட்டு வான செய்ய ஆணையிட்டுக் கொண்டிருந்த மக்கள் திலகத்திடம், ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த எஸ்.கே. கந்தசாமி என்கிற தொண்டர், மக்கள் திலகத்திடம் ஒரு மனுவை நீட்டுகிறார். வாங்கிக்கொண்ட வள்ளல், “என்ன விஷயம் என்று நீயே சொல்லு..” என்கிறார்.

“ஈரோட்டிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னிமலை பேரூராட்சியைச்சேர்ந்த மக்கள் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த தண்ணீர்ப் பற்றாக்குறைக்குக் காரணம்-அங்கிருக்கின்ற சென்டெக்ஸ் சாயச்சாலை கம்பெனிக்கார்ர்கள் பாதித் தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எனவே, சென்டெக்ஸ் சாயச்சாலைக்குச்செல்லும் தண்ணீரை நிறுத்தினாலே போதும். சென்னிமலை மக்களன் தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்துவிடும்!” என்று கருத்துச் சொல்கிறார் கந்தசாமி.

கவனமாக்க் கேட்டுக் கொண்ட மக்கள் திலகம். “அந்தச் சாயச்சாலையில் எத்தனைபேர் வேலைப் பார்க்கிறார்கள்…?” என்று கேட்கிறார்.

“இருநூறு பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள்..”

“நீங்கள் சொல்வது போல் சென்டெக்ஸ் சாயச்சாலைக்குச் செல்லும் தண்ணீரை ரத்து செய்து, தொழிற்சாலையை மூடி விட்டால், அந்த இருநூறு பேரும் எங்கே வேலைக்குச் செல்வார்கள்? எப்படிச் சாப்பிடுவார்கள்?” என்று கந்தசாமியிடம் மனிதநேயத்துடன் கேட்கிறார். இதற்கு விளக்கம் அளிக்க முடியாத கந்தசாமி, மௌனமாக நிற்கிறார்.

“சாயச் சாலைக்குப் போகிற தண்ணீரையெல்லாம் நிறுத்த வேண்டாம். தண்ணீர்ப் பிரச்சினையை நான் தீர்த்து வைக்கிறேன்!” என்று சொல்லி, அருகில் நின்ற ஹண்டேயிடம், “அந்த ஏரியாவுக்கு எத்தனை போல்வெல் தேவையோ, அத்தனை போர்வெல் உடனே போட்டுக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்க..” என்று உத்தரவிடுகிறார் மக்கள் திலகம். அன்றிரவே ஈரோடு சென்று விட்டார் கந்தசாமி.

“உங்கள் ஊருக்கு 60 இடத்தில் உடனடியாகப் போர்வெல் போட முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். எந்தெந்த இடத்தில் போட வேண்டும் என்று நீங்களே தீர்மானித்துச சொல்லுங்கள்… உடனடியாக நிறைவேற்றுகிறோம்!” என்று கலெக்டர் சொல்ல, கந்தசாமிக்குக் கண்கள் பனித்துப்போகிறது.

‘நான் என்ன எம்.எல்.ஏ.வா? எம்.பி.யா? மந்திரியா? நாம் சொன்னதை இருபத்தி நாலு மணி நேரத்திற்குள், இவ்வளவு துரிதமாகப்புரட்சித் தலைவர் செயல்படுத்துகிறாரே’ என்று ஆச்சரியப்பட்டு நிற்கிறார்.

மறுநாள்-அறுபது போர்வெல் சென்னிமலை பேரூராட்சிக்குத் தேவையில்லையென்பதால், பக்கத்தில் உள்ள பிடாரியூர் முகாசி பேரூராட்சி பஞ்சாயத்துக்களுக்கும் சேர்த்து அறுபது போர்வெல்லையும் பகிர்ந்து போடச் சொல்லி, பத்தே நாளில் தண்ணீர்ப் பற்றாக்குறை அப்பகுதியில் தீர்த்து வைக்கப்படுகிறது. கோரிக்கை வைத்தவன் என்ன பொறுப்பில் இருக்கிறான்? என்ன பதவியில் இருக்கிறான் என்று பார்க்காமல், சொல்லப்படுகிற கோரிக்கை நியாயமானதா என்று மட்டும் பகுத்துப் பார்த்து, ஆட்சிப் பரிபாலனம் செய்த மக்கள் திலகத்தைப்பற்றி, இன்றும் நினைத்து நினைத்து மகிழ்கிறார் கந்தசாமி.

நான் வரலைன்னா என்ன பண்ணுவே!

1980 மே மாதம். ஒரு மாலை நேரம். வடபழனி விஜயா தெருவில் அண்ணா பத்திரிகையில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரியும் கே. ராஜேந்திரன் அவர்களுக்கும் , ஊட்டி பட்டாளத்தார் மகள் வசந்திக்கும் நிச்சயதார்த்தம் நடந்து தட்டு மாற்றிக் கொள்ளப்படுகிறது.

இந்தச் சுபவேளையில் மாப்பிளைளை ராஜேந்திரன், பெண்ணின் த்தையாரிடம் ஒரு கண்டிஷன் போடுகிறார்.

அதாவது, “எனது தலைவரிடம் தேதி கிடைக்கும் வரை பொறுத்திருக்க முடியுமென்றால் உங்கள் பெண்ணைத் திருமணத் செய்துக்கொள்கிறேன்..” என்று சொல்கிறார். அதற்குப் பெண்ணும் பெண்ணின் தந்தையாரும் சம்மதிக்கிறார்கள்.

திருமணம் நிச்சயத்தார்த்தம் நடந்த மறுநாள், ராஜேந்திரன் மக்கள் திலகத்திடம் திருமணத்தேதி வாங்க ராமாவரம் தோட்டத்திற்குச்செல்கிறார். இவர் சென்ற நேரம்,மக்கள் திலகம் கோட்டைக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறார்.

எனவே, அதற்கு மறுநாளும் செல்கிறார் ராஜேந்திரன். அன்று வேறு ஏத ஒரு முக்கியப் பிரச்சனை குறித்து மக்கள் திலகம் அரிசயல் தலைவர்களுடன் விவாதித்துக் கொண்டிருக்க, காவல் துறை செக்யூரிட்டிகள் பரபரப்பாகச்செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே அன்றும் ராஜேந்திரனால் மக்கள் திலகத்தைச் சந்திக்கமுடியவில்லை.

இப்படி ராஜேந்திரன் பலநாள்,பலமுறை, மக்கள் திலகத்தைச் சந்திக்க, கோட்கைக்கும் ராமாவரத் தோட்டத் துக்கும் அலைந்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு, அண்ணா பத்திரிகையின் டைரக்டர் ரவீந்திரன் சிபாரிசையும், சில அரசியல் பிரமுகர்களையும் அணுகிப் பார்க்கிறார். அதுவும் சரிப்பட்டு வரவில்லை.

இப்படி, நாள்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ராஜேந்திரன், மக்கள் திலகத்திடம தேதி வாங்க அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால் ஏதோ ஒரு வகையில் தடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இப்படியே இரண்டு வருடங்கள் செல்கின்றன. இறுதியாக 1982-ல் அக்டோபர் மாதம், ராமாவரம் தோட்ட இல்லத்திலிருந்து கோட்டைக்கச் செல்ல கார் அருகே மக்கள் திலகம் சென்றபோது, ராஜேந்திரன் உரத்த குரலில், “உங்களுக்காக இரண்டு வருடங்களுக்கு மேல் அலைந்து கொண்டிருக்கிறேன்..” என்கிறார்.

குரல் கேட்ட மக்கள் திலகம் நடந்துக் கொண்டே ராஜேந்திரனை அருகில் அழைத்து, “எதற்காக?” என்றுகேட்கிறார்.

“எனக்குத் திருமணம் நிச்சயம் பண்ணி இரண்டு வருஷத்துக்கு மேலாச்சு.. உங்க தேதிக்காகத்தான் காத்திருக்கேன்..” என்உற ராஜேந்திரன் சொன்னவுடன், மக்கள் திலகம் அப்படியே ஷாக்காகி நின்று விடுகிறார்.

“இவ்வளவு நாளாவா காத்திருக்கே?”

“ஆமாண்ணே?”

“சரி, நான் வரலைன்னா என்ன பண்ணுவே?”

“செத்துப் போயிடுவேன்”

“அப்படியா… எனக்காக வருஷக் கணக்கி நீ காத்திருப்பே, வரலைன்னா செத்துக்கூட போயிடுவே! அதே நேரத்துல உனக்காக நிச்சயம் பண்ணின பொண்ணோட நிலைமையை ஒரு நிமிஷம் யோசிச்சுப் பார்த்தியாழ

என் உடல்நிலை வேற சரியில்லை. அதனாலதான் மதுரை முத்து அண்ணன் வீட்டு ஃபங்ஷனுக்குக்கூட நான் போக முடியலை. இந்த மாதிரி சூழ்நிலையில் நான் வராம்ப் போயிட்டா என்ன பண்ணுவே?” என்று மக்கள் திலகம் கேட்க, “நாங்க ரெண்டு பேருமே செத்துப் போயிடுவோம்” என்று ராஜேந்திரன் வைராக்கியமாகச் சொல்கிறார்.

உடனே மக்கள் திலகம், அருகில் நின்ற உதவியாளர் மகாலிங்கத்தை அழைத்து, “எந்தத் தேதி ஃபிரீயா இருக்கு?” என்று கேட்கிறார்.

மகாலிங்கம் டைரியைப் புரட்டிப் பார்த்துவிட்டு, “நான்கைந்து மாதங்களுக்கு தேதியே இல்லை.” என்கிறார்.

“அப்ப நீ அடுத்த மாதம் ஒரு தேதியில வச்சுக்க..” என்று மக்கள் திலகம் சொல்லிவிட்டு, “ஒரு கண்டிஷன் நான் வெளியூர் போகாம, மெட்ராஸ்ல இருக்கிற நாளா பார்த்துக்க” என்கிறார்.

இவ்வளவு சம்பாஷணையும் சுற்றி மந்திரிமார்கள், காவல் துறை செக்யூரிட்டிகள், அரசு உயர் அதிகாரிகள் காத்திருக்க நடைபெறுகிறது.

திருமணமே நடந்து விட்ட மகிழ்ச்சியில் ராஜேந்திரன் அங்கிருந்து கிளம்புகிறார். பிறகு, தானே ஒரு ஆநளைத் தீர்மானித்து 26-11-82 தேதியில் திருமணம் நடத்த பத்திரிகை அடித்து விடுகிறார்.

பத்திரிகை அடித்து, முதல் பத்திரிகையைப் பொன்மனச் செம்மலிடம் கொடுக்க ராமாவரம் தோட்டம் வருகிறார் ராஜேந்திரன். ஆனால் மக்கள் திலகம் பாரதப் பிரதமர் அழைப்பின் பேரில், டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி விழாவில் கலந்து கொள்ளச் சென்று விடுகிறார்.

மீண்டும் டென்ஷனாகிப் போன ராஜேந்திரன், பத்திரிகையை உதவியாளர் கையில் கொடுத்துவிட்டு, நம்பிக்கையுடன் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ப்திரிக்கை கொடுக்கிறார். ஒரு வாரம் ஆகியும் வள்ளல் சென்னை வரவில்லை.

இந்த நேரத்தில் எஸ்.ஏ.அசோகன் 24.11.82 ல் இறந்து விடுகிறார். அசோகன் மக்கள் திலகத்துக்கு நெருங்கிய நண்பர் என்பதால், சாவுக்காவது வந்துவிடுவார் என்ற நம்பிக்கை ராஜேந்திரனுக்கு வருகிறது. ஆனால் சூழ்நிலை காரணமாக அசோகன் சாவுக்கும் மக்கள் திலகம் வரவில்லை. திருமணத்தேதிக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது.

அந்த நிலையில் கூட, ‘இரண்டு வருடங்களுக்குமேல் காத்திருந்து திருமணத் தேதி குறித்தோம். ஆனால் இவ்வளவு நாள் காத்திருந்தும் பலன் இல்லாமல் போகப் போகிறதே’ என்று யோசிக்காமல் மீண்டும் திருமணத் தேதியைத்தளி வைக்கலாமா’ என்றுதான் யோசிக்கிறார்.

ஆனாலும் ஒரு நம்பிக்கை-’இன்னும் ஒருநாள் இருக்கிறதே… பார்த்துக்கொளலாம்’ என்று ராஜேந்திரன் திருமண வேலையில் ஈடுபடுகிறார்.

ஒருவழியாக மக்கள் தலகம் 25.11.82 அன்று இரவு சென்னை வந்து சேர்ந்துவிட்டமாகச்செய்தி வருகிறது. ராஜேந்திரன் மீண்டும் புத்துயிர் பெறுகிறார்.

மறுநாள் 26.11.82 காலை-திருமணம் நடக்கவிருக்கும் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் மாநகராட்சித் திருமணக்கூடம், மக்கள் திலகம் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் பரபரப்பாக் காணப்படுகிறது.

எட்டு மணிக்கெல்லாம் நூறு அடிக்கு ஒரு போலீஸ் என்று ராமாவரம் தோட்டத்திலிருந்து கோடம்பாக்கம் வரை சாலை ஒழுங்குப்படுத்தப்படுகிறது.

ஆனால் தீடீரென்று ராமாவரம் தோட்டத்தில் கனடா நாட்டில் இருந்து வந்த ஒரு அரசாங்கக்குழு, எம்.ஜி.ஆரிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்றும், அனால் எம்.ஜி.ஆர் திருமணத்திற்கு வரமாட்டார் என்றும் ஒரு செய்தி வந்து, நாவலர் நெடுஞ்செழியன் போன்ற சில அமைச்சர்களெல்லாம், திருமண மண்டபத்திற்கு வந்து விட்டுத்திரும்பிச்சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் கூட ராஜேந்திரன் ஆத்திரமோ, அவசரமோ படாமல், இனி அவ்வளவுதான், இருப்பவர்கள் முன்னிலையில் தாலி கட்டலாம்’ என்று எண்ணாமல், ‘இன்னம் சில நொடிகள் பார்ப்போம்; இல்லையென்றால், இந்த நிமிடத்தில் கூட திருமணத் தேதியை மாற்றி வைத்துக் கொள்ளலாம்’ என்றே தீர்மானிக்கிறார்.

ஒன்பதரை மணியிலிருந்து பத்தரை மணி வரை முகூர்த்த நேரம், அன்று வெள்ளிக் கிழமை என்பதால் பத்தரை மணிக்கு மேல் ராகுகாலம் தொடங்கிவிடும்.

மணி பத்து ஆகிவிட்டது. ராமாவரம் தோட்டத்திலிருந்து முதல்வர் திருமணத்திற்குக் கிளம்பிவிட்டார் என்று கால்துறை வயர்லெஸ் மூலம் செய்தி வருகிறது. ராஜேந்திரன், முகம் மலர்ந்து காணப்படுகிறார். சரியாகப் பத்து இருபதுக்குப் பறந்து வருகிறார். மக்கள் திலகம். கார் திருமண மண்டப வாசலில் நிற்கிறது.

காரிலிருந்து இறங்கிய மக்கள் திலகம், மின்னல் வேக நடையில்மணமேடைக்குச் செல்கிறார். அனைவரையும் சைகையிலேயே அமைதிப்படுத்திவிட்டு, முதலில் ராஜேந்திரனிடம் தாலியை எடு என்கிறார்.

மணமகளின் நெஞ்சுக்கு நேராகத் தாலியைத் தாங்கிப்பிடித்துக்கொண்டு, “கட்டு…” என்கிறார்.

ராஜேந்திரன் மூன்று முடிச்சுப் போடும்ரை தாலியைத் தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்த வள்ளல், ‘இனி எத்தனை எத்தனை முடிச்சு வேண்டுமானாலும் போட்டுக் கொள் என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுத் தாலியை விடுகிறார்.

இந்த ஒரு பெருமை போதும் இந்த ஜெனமத்திற்கு என்று இன்றும் சொல்லி மகிழ்கிறார் வழக்கறிஞர் ராஜேந்திரன்.

கட்டிக்கொடுத்த வீடுகளைவிட மீட்டிக் கொடுத்த வீடுகள் அதிகம்..

ஆட்சியைப் பிடித்து, அரசு அதிகாரத்தின் மூலம் ஏழை, எளிய பாட்டாளி மக்களுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அள்ளிக் கொடுத்ததை விட, தான் நடிகராக இருந்தபொழுது, தன் வியர்வையில் கிடைத்த ஊதியத்தில் வள்ளல் வாரி வழங்கியதுதான் அதிகம்.

என்ன கொடுக்கப் கோகிறார் என்று தன் வாசல் தேடி வந்தவர்களுக்கு, எதையும் கொடுப்பேன் என்று வாழ்ந்து காட்டியவர் வள்ளல்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்த்தை விட அவர்கள் கட்டிய வீடுதங்கள் கைவிட்டு ஏலத்தில் போகிறபொழுது, வள்ளல் மீட்டுக் கொடுத்த வீடுகளின் எண்ணிக்கைதான் அதிகம்.

நாகர்கோயிலில் என்.எஸ்.கிருஷ்ண்டனின் வீடு சென்னையில் கண்ணாம்பா, குமுதினி, நாகேஷ், சுருளிராஜன், எஸ்.வி. சுப்பையா, கவியரிசு கண்ணதாசன்,டி.ஆர் ராமண்ணா என்று ஏராளமானவர்களி வீடுகள் ஏலம் போனபோது, அதை மீட்டுக் கொடுத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

அந்த வரிசையில் நடிகராக, சட்டமன்ற உறுப்பினராக, துணைமந்திரியாகப் பதவி வகித்த ஐசரிவேலன் மறைவுக்குப் பிறகு, அவருக்குச் சொந்தமாக இருந்த -நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள அவரது ஒரே வீட்டின் பேரில் கடன் கொடுத்திருந்த புரைசைவாக்கம் பெனிபிட் பண்டு, அந்த வீட்டை ஏலத்திற்குக் கொண்டு வருகிறது. அதை எப்படி வள்ளல் மீட்டுக்கொடுத்தார்?

14.16.1987ல் விருதுநகரில் அரசு பிரச்சார நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபொழுது, மேடையிலேயே ஐசரி வேலன் மாரடைப்பால் இறந்துவிடுகிறார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கூட மக்கள் திலம் ஐசரி வேலனின் இறுதி ஊர்வலம்வரை கலந்து கொள்கிறார்.

அவர் மறைந்த சோகத்திலிருந்து மீளமுடியாமல் அவரது குடும்பத்தினர் இருந்தபோது, அதற்கு அடுத்த மாதமே அவர்களின் வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ் வருகிறது. அப்போது அவரது மகன் ஐசரி கசேஷ், பச்சையப்பன் கல்லூரியில்படித்துக்கொண்டிருக்கிறார். இதுவரை கஷ்டம் தெரியாமல் வளர்ந்த ஐசரி கணேஷிற்கு, வீட்டின் கஷ்டநிலை தெரியவருகிறது. இந்தக் கஷ்டத்திலிருந்து மீள ஒரே வழி ராமாவரம் தோட்டம் சென்று, மக்கள் திலகத்தைச் சந்திப்பதுதான் என்று முடிவெடுக்கிறார்.

அதன்படி வள்ளலைச் சந்திக்கிறார் ஐசரி கணேஈ, வீட்டின் பேரில் வாங்கிய கடன், வட்டிக்கு வாங்கிய கடன் அனைத்தையும் பட்டியலிடுகிறார் ஐசரி கணேஷ்.

மக்கள் திலகம் ஆச்சரியப்படுகிறார். காரணம் ஐசரி வேலனுக்கு எதில் குறை வைத்தோம்? இந்த அளவுக்குக் கஷ்டம் எப்படி வந்தது என்று நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல், “அப்படியா… எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்..நீ கவலைப்படாமல் . யார் யாருக்கு எவ்வளவு தரணுங்கறதை எழுதிக் கொடுத்துட்டுப் போ..” என்கிறார் மக்கள் திலகம்.

ஐசரிகணேஷ் எழுதிக் கொடுத்துவிட்டு வந்த இரண்டாவது நாள், ஐசரி கணேஷ் வீட்டிற்கு இரண்டு பேர் வந்து விசாரித்து விட்டுச் செல்கிறார்கள். மறுநாள் ஐசரி கணேஷ் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

வள்ளலைச் சந்திக்கிறார் ஐசரி கணேஷ், உடனே உதவியாளர் மாணிக்கத்தை அழைத்து, “ந்தப்பையை எடுத்துட்டு வா..” என்கிறார் வள்ளல்.

மாணிக்கம் எடுத்து வருகிறார். வள்ளல் ஐந்து விரலைக்காட்டி, “இதிலே ஐந்து லட்சரூபாய் இருக்கிறது. இதை வச்சு கடனை அடைச்சுட்டு, மிச்சம் இருக்கிற ஒரு லட்சரூபாயைக் கையில வச்சுகிட்டு, ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணணும்” என்று வார்த்தையாலம், சைகையாலும் சொல்லி, அந்தப் பணப்பையைக் கொடுக்கிறார் மக்கள்திலகம்.

ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையைக் கண்ணால் முதன் முதலாகப் பார்த்த ஐசரி கணேஷிற்குக் கை, காலெல்லாம் நடுங்க ஆரம்பிக்கிறது.

உடன் இரண்டு பேருடன் ஐசரி கணேஷை ஜீப்பில் அனுப்பி வைக்கிறார். மக்கள் திலகம்.. முதலில் ஜீப் நேராகப் பரசைவாக்கம் பெனிபிட் பண்டிற்குச்செல்கிறது. உடன் வந்த உதவியாளர்களே பணத்தைக் கட்டி, பத்திரத்தை வாங்கி ஐசரி கணேஷிடம் தருகின்றனர்.

பிறகு, அங்கிருந்து மந்தைவெளி மார்வாடிக்கடைக்கு வந்து அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்டுத்தருகின்றனர். பிறகு ராயபுரம் சென்று, கடன் கொடுத்த பைனான்ஸ்சியரிடம் கடனைத் திருப்பி அடைக்கின்றனர்.

உடன் வந்த உதவியாளர்களே எல்லாக் கடன்களையும் செட்டில் செய்துவிட்டு, மீதமிருந்த ஒருலட்சத்துப் பத்தாயிரம் ரூபாயை ஐசரி கணேஷிடம் கொடுத்துவிட்டுச் சென்று விடுகிறார்கள்.

வள்ளல் எதிர்காலத்துக்குக் கொடுத்த ஒரு லட்சத்துப் ப த்தாயிரம் ரூபாயை வைத்து, கன்ஸ்ட்ரக்ஷன் வேலையைத் தொடங்குகிறார் ஐசரி கணேஷ்.

எனக்கு எல்லாமே வள்ளல்தான். நான் அன்றாடம் வணங்கும் தெயவமும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.தான்!” என்று தன் வீட்டில் மட்டுமல்ல; தன் சட்டைப் பாக்கெட்டிலும் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை வைத்து வணங்கிக்கொண்டிருக்கிறார் ஐசரி கணேஷ்.

உலகில் நீங்கள் எந்தப்புள்ளிக்கு சென்றாலும்…

ஒரு காலத்தில் காளையை அடக்கினால் போதும்; வில்லை வளைத்தால் பதும்.. அவன் மாவீரனாக அங்கீகரிக்கப்பட்டு, ஒரு பெண்ணை மணம் முடிக்க, மாப்பிள்ளையாகத் தகுதி யானவன் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டான். பின்னாளில் ஒரு வேலை கிடைத்தால் போதும் அவன் ஒரு பெண்ணை மணம் முடிக்கத் தகுதியானவன் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டான்.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் ராமநாதபுரம் வேப்பங்குடி கிராமத்தில்வசிக்கும் இருளாண்டி என்பவர் புரட்சிகரமான பெண் பார்க்கும் முறையை உருவாக்கினார். அதாவது – தன் மகளை மணம் முடிக்க விரும்பும் மணமகன், தன்னைப்போலவே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனம் கவர்ந்த ரசிகனாக, சீடனாக, அவர் படங்களை மட்டுமே பார்த்துப் பண்புகளை வளர்த்துக் கொண்டவனாக இருக்க வேண்டும்’ என்று புதுவிதமான கண்டிஷன் போட்டார்.

இந்த வித்தியாசமான பெண் பார்க்கும் முறையை உறவுக்கார்ர்களுக்கு மட்டுமே சொல்லி வைத்தார் வேப்பங்குடி இருளாண்டி.

இவரின் பெண் பார்க்கும் முறையைத் தெரிந்துகொண்ட-அதே கிராமத்தைச்சேர்ந்த, மது அருந்தாத – புகை பிடிக்காத – மக்கள் சேவை புரியும் மனித நேயமிக்கப் பண்பாளரான- இருளாண்டி என்கிற (அவரின் பெயரையே கொண்ட ) இளைஞர் பெண் கேட்டு வருகிறார்.

இருளாண்டியின் பண்புகளை ஏற்றுக்கொண்ட பெண்ணின் தந்தையான இருளாண்டி, பெண் கேட்டு வந்த இருளாண்டியிடம் ‘மக்கள் திலகத்திடம் உன் மனம் கவர்ந்தது எது’ என்றுஓர் ஆசிரியர், மாணவனிடம் கேள்வி கேட்பது போல், ஒர பத்திரிக்கையாளன் திரைப்பட நட்சத்திரங்களிடம் கேள்வி கேட்பது போல் இருளாண்டி, மாப்பிள்ளை இருளாண்டியிடம் கேட்கிறார். எம்.ஜி.ஆரிடம் கவர்ந்த விஷயம் மணமகன் இருளாண்டிக்கு ஏராளம். அதில் ஒரு விஷயத்தைச் சொன்னார்.

1965..’ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்புக்காக கர்நாடக மாநிலத்தைத் தாண்டி. ‘கார்வார்’ என்று ஊருக்கருகே, ஒரு தீவு போல் ஒதுங்கியிருக்கும் மலைப்பிரதேசப் பகுதியில் தன்னுடைய உதவியாளருடன் காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

விஞ்ஞானத்தின் விலாசமிழந்த – நவநாகரிக உலகின் வெளிச்சம் படாத -மலைவாழ் மக்கள் திலகம். எவர் நம்மை அடையாளம் கண்டுகொள்ளப் போகிறார் என்று பட்டாம்பூச்சிபோல் சிறகடித்துப் பயணிக்க ஆசைப்படுகிறார்.

ஆனால் உடன் வந்த உதவியாளரோ, “உலகில் நீங்கள் எந்தப் புள்ளிக்குச் சென்றாலும், உங்களின் பொன் நிற முகத்தைக் காணக் காத்துக்கிடக்கும் மக்கள் கூட்டம் உண்டு!” என்று சொல்கிறார்.

மக்கள் திலகமோ இதை மறுதலித்து, “மாநிலம் கடந்து வாழும் இந்த மலையக மக்கள் என்னை அறிந்து கொள்ள வாய்ப்பில்லை.” என்கிறார்.

இந்த நேரத்தில் சாலையோரத்தில், தள்ளாத வயதில் பெரியவர் ஒருவர் தலையில் விறகுக் கட்டைச் சுமந்து கொண்டு சோர்வுடன் நடந்து சென்று கொண்டிருக்கிறார். பெரியவரைப் பார்த்தவுடன் அவர் அருகே காரை நிறுதச் சொல்கிறார் மக்கள் திலகம்.

உதவியாளரிடம், “எங்கே போனாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்று சொன்னாய், முதலில் இந்தப் பெரியவருக்கு என்னை யார் என்று தெரிகிறதா என்று பார்ப்போம்” என்று சொல்லி, அந்தப் பெரியவரைக்காரின்பின் சிட்டில் விறகுக் கட்டுடன் உட்கார விட்டு, மக்கள் திலகம் அருகில் அமர்ந்து கொள்கிறார். உதவியாளர் முன்சீட்டில் டிரைவருக்கு அருகில் அமர்ந்து கொள்கிறார்.

கார் சென்று கொண்டிருக்கிறது. பெரியவர் ஒன்றுமே பேசாமல், எந்தச் சலனமும் இல்லாமல் அமர்ந்திருக்கின்றார். மக்கள் திலகம் தன் முகத்தைக்காட்டிப்பெரியவரிடம் பேச்சுக் கொடுக்கிறார். பொன்மனச் செம்மலின் எந்தப் பேச்சுக்கும் முகம் காட்டுதலுக்கும், பெரியவர் முக்கியத் துவம் கொடுக்காமல், அவ்வப்போது மனதுக்குள்ளேயே தனக்குத்தானே சிரித்துக்கொள்வது மட்டும் அவரது உதட்டோரம் தெரிந்தது.

உடனே – தன் உதவியாளரிடம், ‘எங்கே போனாலும் என்னை மக்களுக்குத் தெரியும்னு சொன்னியே.. இப்ப இந்தப் பெரியவருக்கு என்னை யாருன்னு தெரியலை பார்த்தியா?’ சங்கடத்தில் உதவியாளர் நெளிந்தார்.

சிறது நேரம் கார் சென்ற பிறகு, ஒரு ஊர் வருகிறது. உடனே அந்த ஊர் ஓரமாகவே காரை நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொள்கிறார் அந்தப் பெரியவர்.

உடனே மக்கள் திலகம், தன்னுடைய கர்ச்சீப்பில் கொஞ்சம் பணத்தை வைத்து, “இதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். மழைக்காலத்தில் விறகு வெடப் போகமுடியாத நேரத்திலோ, உங்களுக்கு உடம்பு சரியில்லாத நேரத்திலோ இந்தப்பண்த்தைப்பயன்படுத்திக்கொள்ளுங்கள்!” என்று சொல்லிக்கொடுக்கிறார். வாங்க மறுக்கிறார் அந்தப் பெரியவர்.

கடைசியாக, “உங்கள்மகன் கொடுத்தால் வாங்க மாட்டீர்களா?” என்றுசொல்லி மக்கள் திலகம் பெரியவரின் நெஞ்சைத்தொட்டவுடன், நெகிழ்ந்த பெரியவர் வாங்கிக் கொள்கிறார்.

“நீங்கள் கொடுத்ததை நான் வாங்கிக் கொண்டேன். நானும் உங்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டாமா? பெரிதாக நான் என்ன கொடுக்கப்போகிறேன். என் கையால் குடிக்க ஒரு சொம்பு தண்ணீர் கொடுக்க விரும்புகிறேன். ஒரு நிமிடம் அப்படியே காரில் அமர்ந்திருங்கள். ஒரு நொடியில் வந்து விடுகிறேன். ” என்று சொல்லி அந்தப் பெரியவர் விறகுக் கட்டைச்சுமந்து கொண்டு, ஓட்டமும் நடையுமாக ஊருக்குள் செல்கிறார்.

அடுத்த சில விநாடிகளில்,கையில் சொம்புடன், தன் கிராம மக்கள் புடைசூழ நடுவில் அந்தப் பெரியவர் கம்பீர நடையுடன் காரைநோக்கி வருகிறார்.

என்ன இது, தனியாகப் போன இந்த மனுஷன் ஒரு ஊரையே கூட்டி வருகிறாரே’ என்று மக்கள் திலகமும், அவரின் உதவியாளரும் எதுவும் புரியாமல், அந்தப் பெரியவர் நடந்து வரும் தோரணையை ரசித்துக்கொண்டிருந்தனர்.

கூட்டத்துடன் கார் அருகே வந்த பெரியவர் – கார் கதவைத் திறந்துகொண்டு, “சாமீ.. ஒரு நிமிஷம் வெளியில் வந்து எங்க ஊர் ஜனங்களுக்கும் உங்க முகத்தைக் காட்டுங்க!” என்று சொல்ல, மக்கள் திலகம்திகைத்துப் போய்க் காரை விட்டு இறங்குகிறார்.

கூட்டத்தில், ‘அய்யா வாத்தியார்’ என்றும், ‘அய்யா எம்.ஜி.ஆர்’ என்றும், ‘நிசமாவே எம்.ஜி.ஆர். தாண்டா’ என்றும் அந்தக் கிராம மக்கள் புளகாங்கிதமடைகின்றனர.

சத்தம் அடங்கியவுடன், “இவ்வளவு நேரம் நீங்க யாருன்னு தெரிஞ்சும் அதை வெளிக்காட்டிக்காம எப்படி அடக்கிட்டு சும்மா இருந்தேன்னு பார்க்குறீங்களா! இப்ப அந்த இடத்துலேயே, நீங்க யாரங்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டு நான் மட்டும் சந்தோஷப்பட்டிருந்தேன்னா, உங்களை நான் வழியில் பார்த்த தாகவோ, உங்க கார்ல வந்ததாகவோ, நீங்க எனக்குப்பணம் கொடுத்து உதவி செய்த்தாகவோ எங்க ஊர் ஜனங்கிட்ட வந்து சொன்னா, ‘போடா பைத்தியக்காரா, இதையெல்லாம் எங்களை நம்பச் சொல்றியா?ன்னு என்னைப் பரிகாசம் பண்ணுவாங்க. அதனாலதான் ஊர் ஊனங்க எல்லாரையும் கூட்டி வந்து, உங்களைத் தரிசிக்க வெச்சுட்டேன். எங்க ஊர்ல பால் குடிக்கிற பிள்ளைக்குகூட உங்க முகம் யாருன்னு தெரியாம இருக்குமா சாமீ?” என்று அந்தப் பெரியவர் உணர்ச்சிப் பிழம்பாய்ப் பேசுகிறார்.

எப்பொழுதுமே மற்றவர்களை மகிழ வைத்துப்பார்க்கிற மக்கள் திலகம், அந்தப் பெரியவர் பேச்சைக்கேட்டு மகிழ்ந்து போகிறார்.

சில நிமிடங்கள் அந்த மக்களிடம் இருந்துவிட்டு விடை பெறுகிறார் மக்கள்திலகம். தன்னுடைய உதவியாளரிடம் தன் தோல்வியையும் ஒப்புக் கொள்கிறார்.

அதற்குப் பிறகு, ‘கார்வார்’ ஊரில் கப்பலில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. படப்பிடிப்பைப் பார்க்கிறோம் என்கிற சாக்கில், மக்கள் திலகத்தைப் பார்ப்பதற்காக கரையோரத்தில் கனிம வைலை செய்யம் தொழிலாளிகள். தங்களுடைய வேலைகளை விட்டுவிட்டு, படப்பிடிப்பைப்பார்க்கச் செல்கின்றனர்.

‘இது தவறு… அவரவர் வேலையைப் பாருங்கள்’ என்று அவர்கின் சூப்பர்வைசர் பலமுறை எச்சரித்தும் அந்தத் தொழிலாளிகள் கேட்பதாக இல்லை.

எனவே, அவர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்கிறார். ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், மக்கள் திலகத்தைப் பார்ப்பதிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அந்தத் தொழிலாளர்கள்.

இந்த் தொழிலாளர்களின் போக்கு மக்கள் திலகத்திற்கு ஒரு நாள் தெரிய வருகிறது. உடனே தன்னுடைய மானேஜரை அழைத்து, இங்கிருக்கிற தொழிலாளிகள் எத்தனை பேர் என்று கணக்கெடுக்கச் சொல்லி, அவர்களுக்கும் சேர்த்து மதிய உணவு தயாரிக்கச் சொல்கிறார்.

அன்று அந்தத் தொழிலாளர்கள், மக்கள்திலகத்தோடு சேர்ந்து சாப்பிடுகிறார்கள். பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு, ஒவ்வொரு வராக மக்கள் திலகத்தைச் சந்திக்கிறார்கள்.

அப்பொழுது மக்கள் திலகம் ஒவ்வொருவர் கையையும் பிடித்துக்குலுக்கிக் கொண்டு, “வேலை நேரத்தில் வேற எதுலயும் ஈடுபடக்கூடாது. என்னால யாரும் நஷ்டப்படக்கூடாது. நாளையிலிருந்து நீங்க உங்க வேலையைப் பார்க்கணும். நான் என் வேலையைப் பார்க்கணும்!” என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

மக்கள் திலகம் சொல்லி முடித்து, ஒவ்வொருவர் கையைக் குலுக்கி விடும்பொழுதும், ஒவ்வொருவர்கையிலும், சுருட்டி மடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் இருந்ததைப் பார்த்து, தங்களுக்கு மக்கள்திலகம் கொடுத்த போனஸ் தொகையைவிட, அவர் தொட்டுக் கொடுத்த மகிழ்ச்சியில் அவரவர் வேலைகளை எட்டு மடங்காகச் செய்யத் தொடங்கினர்.

மக்கள் திலகத்தின் இந்த மனிதப்பண்பு, இரண்டு இருளாண்டிக்களுக்கும் பிடித்துப்போகவே, அடுத்த முகூர்த்தத்திலேயே தன்மகளை மக்கள் திலகத்தின் மனித நேயத்தைக் கடைப்பிடிக்கும் இளைஞர் இருளாண்டிக்கு மணம் முடித்துத் தருகிறார் வேப்பங்குடி இருளாண்டி.

இன்றும் மக்கள் திலகத்தின் மானிடப் பண்புகளைக் கடைப்பிடித்து வாழும் இருளாண்டி சென்னை எண்ணூர் பவுண்டரியில் பணிபுரிகிறார்.

கலைவாணருடன் மட்டுமே நடித்த நீங்கள் கண்டவர்களோடு நடிக்கலாமா?

தமிழ்த் திரையுலகில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் என்.எஸ்.கே. என்று அழைக்கப்படும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் ஒருவர். சினிமா ஒருபொழுது போக்குச் சாதனம் என்று மட்டுமே கருதிக்கொண்டிருக்கும்பொழுது, அதை ஒருசமுதாய மாற்றத்திற்கான ஊடகமாகப் பயன்படுத்திக் காட்டியவர் கலைவாணர்.

மூட நம்பிக்கைகளைத் கண்டித்து, பகுத்தறிவை வளர்த்து, சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து சமுதாயச்சிந்தனையைத் தூண்டியவர் கலைவாணர். அதனால்தான் உலகிலேயே முதன் முதலாக ஒரு நடிகருக்குச்சிலை வைக்கப்படுகிற பெருமை கலைவாணருக்குக் கிடைத்தது.

தந்தைப் பெரியார், பேரறஞர் அண்ணா, கலைஞர் மூ. கருணாநிதி ஆகிய அரசியல் தலைவர்களோடு மட்டுமல்லாமல், மன்னர்களுடைய சமஸ்தானங்களிலும் பெருமதிப்பைப் பெற்றிருந்தவர் கலைவாணர்.

அப்படிப்பட்ட தலைசிறந்த மேதை கலைவாணரைத் தன்னுடைய வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். தனக்கிருந்த தர்மசிந்தனை, வள்ளல் தன்மை மென்மேலும் வளருவும், திரைப்படத்தில் மக்களை மேம்படுத்தும் கொள்களைகளைச் சொல்வதற்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குத் தூண்டுகோலாக இருந்தவர் கலைவாணர்.

அப்படிப்பட்ட கலைவாணர் 1957ல் ஆகஸ்ட் மாதம் முப்பதாம் தேதி மறைந்துவிடுகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வேனில்தான் கலைவாணரின் இறுதி ஊர்வலம் நடக்கிறது.

கலைவாணரின் மறைவுக்குப் பிறகு – அவரது மூன்று மனைவிகளான நாகம்மாள், டி.ஏ.மதுரம், டி.ஏ.வேம்பு அம்மாள் உட்பட-நாகம்மாளின் மகள்களான முத்துலட்சுமி , சுலோச்சனா… வேம்பு அம்மாளின் பிள்ளைகளான கிட்டப்பா, சண்முகம், நல்லதம்பி, குமரன், வடிவு, கஸ்தூரி, பத்மினி ஆகியோர் உட்பட -கலைவாணரின் தம்பி என் எஸ். திரவியம் குடும்பத்தினரும் பணக்கஷ்டத்தில் இருக்கின்றனர்.

எனவே மொத்தக்குடும்பத்தையும் காப்பாற்ற டி.ஏ. மதுரம் (இவருக்கு குழந்தைகள் கிடையாது. )மீண்டும் சினிமாவில் நடிக்க முன் வருகிறார்.

இதைக் கேள்விப்பட்ட மக்கள் திலகம், டி.ஏ. மதுரம் அவர்களைச் சந்தித்து, நீங்கள் கலைவாணருடன் இத்தனை ஆண்டுகள் இல்லறம் நடத்தியதோடு, நூற்று ஐம்பது படங்களிலும் வேறு எவருடனும் ஜோடி சேர்ந்து நடிக்காமல், உங்களுடைய கணவர் கலைவாணருடன் மட்டுமே ஜோடியாக நடித்து, உலகில் வேறு எவரும் செய்யாத சாதனையைச் செய்திருக்கிறீர்கள். இனி நீங்கள் தனித்துப் போய் நடிப்பதை நான் விரும்பவில்லை.

எனது அண்ணன் கலைவாணர் உயிருடன் இருந்தால் இந்தக் குடும்பத்திற்கு என்ன செய்வாரோ – அவை அனைத்தையும் நானே செய்கிறேன்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒருமுறை என் துணைவியார் உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது, உங்கள் கை வளையலைக் கழற்றிக் கொடுத்து உதவி செய்தீர்களே! அதற்காகவே நான் உங்களுக்கு நிறையக் கடமைப்பட்டிருக்கிறேன்!” என்று சொல்கிறார் மக்கள் திலகம்.

சொல்லியபடி, மாதாமாதம் சாப்பாட்டுச் செலவிலிருந்து பிள்ளைகள் படிப்புச் செலவு வரை எல்லாவற்றையும் தானே ஏற்றுக்கொள்கிறார் மக்கள் திலகம். இதனால் டி.ஏ.மதுரம், நடிக்கிற எண்ணத்தை விட்டுவிடுகிறார்.

இந்த நிலையில், ஏற்கனவே கலைவாணருக்குச்சொந்த மான நிறைய வீடுகளும், நிறைய சொத்துக்களும் கைவிட்டுப் போய் விடுகின்றன. இறுதியாக – அவருக்குச் சொந்தமாக இருந்த நாகர்கோவில் – ஒழுகின சேரியில் இருந்த ஒரே ஒரு பங்களாவும் 1959ல் ஏலத்திற்கு வருகிறது.

இதைக் கேள்விப்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அதை மீட்டுக் கடன் தொகையான பதினெட்டாயிரம் ரூபாயைத் தன்னுடைய ஆள் ஒருவரிடம் கொடுத்தனுப்புகிறார்.

அது மட்டுமல்லாமல், அந்த வீட்டை ஏலம் எடுக்க முன்வந்த சிலருக்குமக்கள் திலகம் தன் கைப்படவே கடிதம் எழுதுகிறார்.

அந்தக் கடித்த்தில் , “தயவு செய்து கலைவாணரின் இல்லத்தை யாரும் ஏலம் கேட்க வேண்டாம். அவரின்நினைவாக அந்த ஒரு வீடாவது அவரின் வாரிசுகளுக்கு இருக்கட்டும். நான் அந்த வீட்டை மீட்டு, அவரின் குடும்பத்தினருக்கு ஒப்படைக்க ஆசைப்படுகிறேன்.” என்று எழுதுகிறார்.

எனவே எவரும் வீட்டை ஏலம் எடுக்க முன் வரவில்லை. எம்.ஜி.ஆ. பிக்சர்ஸ் என்ற பெயரில் அந்த மாளிகை மீட்கப் படுகிறது.

மக்கள் திலகத்தால் மீட்கப்பட்ட அந்த மாளிகையில், கலைவாணரின் குடும்பத்தைச் சேர்ந்த கோப்பனின் குடும்பம்தான் இன்றும் வசித்து வருகிறது.

கலைவாணரின் பிள்ளைகள் பதினோரு பேரையும்-ஒருவரை டாக்டருக்கும், ஒருவரை என்ஜினியருக்கும் என்ற அவரவர் விரும்பும் துறைகளில் படிக்க வைக்கிறார் மக்கள். இந்நிலையில், கலைவாணரின் மூத்த மகன் கிட்டப்பாவுக்கு மின்சார வாரியத்தில் வேலை கிடைத்து விடுகிறது.

எனவே, குடும்பத்தைத் தான் ஏற்று நடத்த முன்வந்து-மக்கள் திலகத்திடம், “எனக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆகையால் தாங்கள் மாதாமாதம் வீட்டுச் செலவுக்குக் கொடுக்கும்பணத்தை நிறுத்திவிடுங்கள்..” என்று சொல்கிறார். தன் பிள்ளைக்குப்பொறுப்பு வந்துவிட்டதாக மகிழ்கிறார் மக்கள் திலகம்.

அதற்குப் பிறகு 1963ல் கலைவாணரின்மூத்த பெண்ணுக்குத்திருமண ஏற்பாடு செய்யப்படுவதாகவும், கலைவாணர் குடும்பம் பணக் கஷ்டத்தில் இருப்பது மக்கள் திலகத்துக்குத் தெரிய வருகிறது. உடனே கலைவாணரின் தம்பி என்.எஸ். திரவியத்தை அழைத்து, “இது என் அண்ணன் மகள் திருமணம் அவள் திருமணத்திற்காக நீங்கள் யாரிடமும் பணம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இந்தத் திருமணத்தை நானே நடத்தி வைக்கிறேன்!” என்று சொல்கிறார் மக்கள் திலகம்.

அதன்படி பெண்ணுக்குத் தேவையான நகை முதல் சீதனப் பொருட்கள் வரை எல்லாச் செலவையும் மக்கள் திலகமே ஏற்றக்கொண்டு-சென்னை ஆபட்ஸ்பரி மாளிகையில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்கிறார். நாகர்கோயிலிருந்து கலைவணரின் உறவுக்கார்ர்கள் சென்னைக்கு வந்து தங்க இரண்டு தனி பங்களாவையும் ஏற்பாடு செய்கிறார் மக்கள் திலகம்.

திருமணம் நடக்கவிருக்கும் முதல்நாள் இரவு, திருமண வேலைகளைக் கண்காணிக்க ஆபட்ஸ்பரி மாளிகைக்கு வருகிறார் மக்கள் திலகம். அப்பொழுது ஏழ்மை நிலையில், நல ஆடைகூட உடுத்தாமல் இருந்த கூட்டத்தினரைப் பார்க்கிறார்.

அருகில் இருந்தவர்களிடம், ‘இவர்களெல்லாம் யார்’ என்று விசாரிக்கிறார் மக்கள் திலகம்.

“இவர்கள் எல்லோருமே நாகர்கோயிலில் இருந்து திருமணத்துக்கு வந்த கலைவாணரின் உறவுக்காரர்கள்” என்று சொல்கிறார்கள்.

அவ்வளவுதான்..

அந்த நிமிடமே தியாராய நகர் (இரவு பன்னிரெண்டு) நல்லி குப்புசாமி ஜவுளிக் கடைக்குப் போன் செய்து, கடையைத் திறக்கச் சொல்கிறார்.

உதவியாளரிடம், “இவர்கள் எல்லோருக்கும் பட்டுப்புடவை எடுத்து வாருங்கள்.. ” என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்மக்கள் திலகம்.

மறுநாள் – கலைவாணரின் உறவுக்கார பெண்கள் அனைவரும் ஒரே நிற பட்டுப்புடவையுடன் யூனிபார்மாக்க் காட்சியளிக்கிறார்கள். கலைஞர் தலைமையில் மக்கள் திலகம் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

இன்று போக்குவரத்துக் கழகத்தில் பொறியாளர் பொறுப்பில் பணியாற்றி வரும் டி.ஏ. வேம்பு அம்மாளின் மூன்றாவது மகன் நல்லதம்பி மக்கள் திலகத்தைப் பற்றிக் கூறுகையில்….

“எனது தந்தை கலைவாணர் மறைந்த பிறகு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களின் மொத்தக் குடும்பத்தையும் தத்தெடுத்துக் கொண்டு, எங்கள் எல்லோரையும் வளர்த்து ஆளாக்கினார். மைசூர் என்ஜினியரிங் கல்லூரியில் எனக்குப்பணம் கட்டிப் படிக்க வைத்ததும் அவர்தான்.

கல்லூரியில் சேர்வதற்கு முதல் நாள் என்னை, பொன்மனச் செம்மல் தன்னுடைய ராமாவரம் தோட்ட இல்லத்திற்கு அழைத்தார். சென்றேன்.

என்னிடம், ‘உங்க அப்பா கலைவாணர் எவ்வளவு சம்பாதிச்சார்னு தெரியுமா?’ என்றார்.

‘தெரியாது’ என்றேன்.

சினிமாவுல மட்டுமே கோடிக்கணக்கிலே சம்பாதிச்சார். அதுபோல – நாடகம், வில்லுப்பாட்டுன்னு நிறைய சம்பாதிச்சார். இப்ப அவர் சம்பாதிச்ச சொத்து என்ன இருக்கு?

‘ஒன்றுமே இல்லை!’

‘அதனாலே செல்வம் அழியக் கூடியது. கல்வி ஒண்ணுதான் என்றைக்குமே அழியாதது. அந்தக் கல்விச் செல்வத்தை நான் உனக்குக் கொடுத்திருக்கேன். நல்லா படிச்சு முன்னுக்கு வரணும்!’

என்று ஒரு தந்தை மகனுக்கு உபதேசிப்பதுபோல் அந்தப் பாசமிக்க தலைவன் எனக்கு உபதேசித்துப் படிக்க அனுப்பினார்.

அவர் காட்டிய வழியில், அவர் வியர்வையில் உருவாகிய பணத்தில் படித்து இன்று நான் நல்லதொரு பதவியில் இருக்கிறேன். அந்த மனித தெய்வத்தால் எங்களது மொத்தக் குடும்பமுமே சந்தோஷத்தில் இருக்கிறது.

என்ஜினியரிங் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நல்லதம்பி அவர்களின் துணைவியார் அன்புக்கொடி அவர்கள், தன் கணவர் மீது வைத்திருக்கும் பக்தியைவிட எம்.ஜி.ஆர் மீது ஒரு மடங்கு கூடுதலாக வைத்திருக்கிறார். அது மட்டுமில்லாமல், தன்னுடைய மாமனார் கலைவாணரைப் பற்றி ஆய்வு நூல் ஒன்றையும் எழுதி வருகிறார்.

அள்ளிக் கொடுப்பதை சொல்லிக் கொடுத்த வள்ளல்…

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் படங்களில் வரும் பாடல்களோ, வசனங்களோ – எதுவமே தொலைநோக்குப பார்வையுடனும், தீர்க்கத் தரிசனத்துடனும் இருக்கும்.

அந்த அடிப்படையில்தான்-

“ஒரு தவறு செய்தால்-
அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும்
விடமாட்டேன்”-

என்றும்;

“தனியானாலும், தலைபோனாலும்
தீமைகள் நடப்பதைத்
தடுத்துநிற்பேன்”

என்று சொடுக்குப் போட்டுச் சொல்கிறமாதிரி கவிஞர்கள் எழுதும் அளவுக்கு மக்கள் திலகம் தனித் தன்மையுடன் திகழ்ந்தார்.

அதேபோல், “நான் வெற்றி ஒன்றையே பரிசாகப் பெற்று வருபவன்!” என்று வில்லன் வீரப்பாகப் பேசும்பொழுது, “நான் எதிரிகளுக்குத் தோல்வி ஒன்றையே பரிசாகக் கொடுத்துப் பழக்கப்பட்டவன்!” என்று பதிலடி கொடுத்துப் பேசுவதாக வசனகர்த்தா எழுதும் அளவுக்கு வள்ளல் தனது வலிமையை நிஜ வாழ்வில் உணர்த்திக் காட்டியவர், அதனால்தான் எம்.ஜி.ஆருக்கு எந்த கவிஞன் பாட்டெழுதினாலும், வசனம் எழுதினாலும் அவர்களின் கற்பனை பின்னுக்குத் தள்ளப்பட்டு, பொன்மனச் செம்மலின் கருணையும், வீரமும்; கட்டுமஸ்தான அழகும் மட்டுமே ஆராதனை செய்யப்பட்டது.

பாகிஸ்தான் எல்லையில் கார்கில் போரில் நமது போர்வீர்ர்கள் பட்ட விழும்புண்களுக்காக, இன்று தமிழக்க் கலையுலகமே நிதி திரட்டியது; ஆதரவுக் குரல் கொடுத்து உற்சாகப்படுத்தியது. ஆனால் அன்றே போர்வீரர்களுக்குத தன் வீர வணக்கத்தையும்,நிஜத்தில் பணத்தையும் கொடுத்தவர் நம் மக்கள் திலகம்.

எல்லைக்குக் காவல்
நிற்கும் வீர்ர்கள் அன்னைக்குத்தொண்டு
செய்யும் பிள்ளைகள்”

என்று பாடி மகிழ்வார்.

இப்படி நம் வீர்ர்களின் உணர்வுகளைத் திரையில் சொன்ன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 1962 – ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடந்தபோரில் பாதிக்கப்பட்ட நம் இந்திய இராணுவ வீர்ர்களுக்காகத்தமிழ்நாட்டிலிருந்து எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாயை நன்கொடையாக முதல் ஆளாக்க் கொடுக்கிறார்.

இந்தச் செய்தியை, பஞ்சாப் பார்டரில் உயிரைப் பணியமாக வைத்துப் பணியாற்றிக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விமானப்படை சார்ஜென்ட் காளிமுத்து பேப்பரில் படித்துப் பரவசன் அடைகிறார்.

காரணம்-எல்லாரும் புறநானுற்றுப் பாணியில் கை, கால் இழந்தவனுக்கு ஓர் கவிதையும், உயிர் இழந்தவனுக்கு ஓர் இரங்கற்பாவும் எழுதிக் கொண்டிருந்த நேரத்தில், மகள் திலகம் எம்.ஜி.ஆர். மட்டுமே காயத்துக்கு மருந்தும், வயிற்றுக்குச் சோறும் அளிக்கப் பணம்கொடுக்கிறார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இந்த மனித நேயப் பண்பில் மயங்கிப் போன சார்ஜெண்ட் காளிமுத்து, போரெல்லாம் முடிந்து ஓய்ந்த சமயம் சென்னை ராமாவரம் தோட்டம் சென்று ஒரு முறை மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைச் சந்தித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

உடனே தன்னுடைய மேலதிகாரியிடம் லீவு கேட்கிறார் காளிமுத்து. மேலதிகாரியும் மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக லீவு கொடுக்கச் சம்மதித்து – காளிமுத்துவிடம், “போர் முடிஞ்சவுடனே முதல் ஆளா நீதான் லீவு கேட்பேன்னு எனக்குத் தெரியும். ஏன்னா- உனக்குக் கல்யாணமான ஒரு வாரத்துலயே போர் அறிவிச்சுட்டாங்க…அதனால் புதுசா கல்யாணமான உன் மனைவியை உடனே உன் சொந்த ஊரான ராமநாதபுரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிடுச்சு…அதனால நீ இன்னிக்கே கூடப் புறப்பட்டு,முதல்ல ராமநாதபுரத்துக்குப் போய் உன் மனைவியைப் பார்..” என்று சொல்லி லீவு தருகிறார்.

எப்படியோ-விடுமுறை கிடைத்தமகிழ்ச்சியில் அன்றிரவே பஞ்சாபில்இருந்து புறப்படுகிறார் காளிமுத்து! ஆனால் ராமநாதபுரம் லீவு கேட்டுப் புறப்பட்ட காளிமுத்து நேரே சென்னை மக்கள் திலகத்தின் ராமாவரம் தோட்டத்துக்குச் செல்கிறார் காளிமுத்து.

காளிமுத்து சென்ற நேரம்-மக்கள் திலகம் படப்பிடிப்புக்குச் செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறார். அந்தக் காலை நேரத்தில் ராணுவ உடையில், தன்னைநோக்கிக் கம்பீரமாக நடந்து வரும் காளுமுத்துவைப் பார்த்தவுடன், காரி ஏறப்போன மக்கள் திலகம் அவருக்காக ஒரு நிமிடம் நிற்கிறார்.

தான் யார் என்பதையும், எங்கிருந்து வருகிறார் என்ற விவரத்தையும் சொல்லிவிட்டு, “ராணுவ வீர்ர்களுக்காகத் தமிழ்நாட்டில் இருந்து முதல் ஆளாகப் பணம் அனுப்பி, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கே பெருமை சேத்துட்டீங்க…அதுக்கு நன்றி சொல்லிட்டுப் போகலாம்னு தான் ஊருக்குக்கூடப் போகாம நேரே உங்களைப் பார்க்க வந்தேன்!” என்று சொல்லி முடிக்கிறார்.

எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக்க் கேட்டுக் கொண்ட மக்கள் திலகம், தன்னுடைய வழக்கமான உபசரிப்புடன் சார்ஜென்ட் காளிமுத்துவை ஊருக்கு அனுப்பி வைக்கிறார்.

இப்படி வடநாட்டிலிருந்து ஒவ்வொரு முறை லீவுக்கு வரும்பொழுதும், முதலில் ராமாவரம் தோட்டம் சென்று மக்கள் திலகத்தைப் பார்த்த பிறகுதான் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்திற்குச்செல்வதைப் பழக்கமாக்க் கொள்கிறார் காளிமுத்து. அதனால் காளிமுத்து, மக்கள் திலகத்தின் இதயத்தில் இடம் பிடிக்கிறார்.

இப்படி மக்கள் திலகத்தின் அன்பைப் பெற்ற காளிமுத்து, 1972ம் ஆண்டு-செப்டம்பர் மாதம் தன்னுடைய பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதே வருடம் அக்டோபர் மாதம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.., தனிக்கட்சி துவங்குகிறார். நாட்டுக்குப் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்ற காளிமுத்து, மக்கள் திலகத்துடன் இணைந்து மக்களுக்கு பணியாற்ற விரும்புகிறார்.

அன்று இரவு திருகழுக்குன்றம் மீட்டிங்கை முடித்துக்கொண்டு, அதிகாலை நான்கு மணிக்கு – காளிமுத்து குடியிருக்கும் தாம்பரம் ஏரியா கூட்டத்துக்கு வருகிறார் மக்கள் திலகம். அந்தக் கூட்ட மேடையில் மக்கள் திலகத்தின்முன்னிலையில் கட்சியில் சேருகிறார் காளிமுத்து.

அதற்குப் பிறகு தொடர்ந்து ஒரு இராணுவ வீரனின் கம்பீரத்துடன் கட்சிப் பணியாற்றிக் கொண்டிருந்த காளி முத்துவின் திறமையையும் தகுதியையும் வைத்து அவரை முன்னாள் தமிழ்நாடு இராணுவ வீர்ர் நல வாரியம் பிரிவில் உறுப்பினர் பணியில் அமர வைக்கிறார் மக்கள் திலகம்.

அதுமட்டுமல்லாமல், அவரது துணைவியார் லட்சுமி காளிமுத்துவுக்குப் பகுதி அமைப்பாளர், தலைமை கழகப் பேச்சாளர், சமூக நலவாரிய உறுப்பினர் என்று படிப்படியாகப் பதவி கொடுத்து கௌரவிக்கிறார் மக்கள் திலகம்.

இதைத்தொடர்ந்து, புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா பிரச்சாரக்கூட்டங்களுக்குச் செல்லும்போதெல்லாம், லட்சுமி காளிமுத்துவையே உடன் அனுப்பி வைக்கும் அளவுக்கு உயர்ந்துவிடுகிறார்.
புதிதாகத் திருமணமான மனைவியைப் பார்க்கச் செல்லாமல், தன்னைப் பார்க்க வந்த அந்த உயர்ந்த அன்பிற்காக, காளிமுத்துவுக்கு பதவிகள் கொடுத்தது மட்டுமல்லாமல் – 30.03.80 ல் காளிமுத்து -லட்சுமி தம்பதிகளின் மூத்த மகள் ஜோதிசிவகாமி திருமணத்தையும், 9.6.85ல் அவர்களின் இரண்டாவது மகள் ரமா கல்பனா திருமணத்தையும், 12.7.87ல் அவர்களின் மூன்றாவது மகள் உமாமகேஸ்வரி திருமணத்தையும் மக்கள் திலகமே முன்னின்று நடத்தி வைக்கிறார்.
இப்படி- ஒரு இராணுவ வீர்ர் தன் மீது காட்டிய அன்புக்காக அவரின் குடும்பத்திற்கே காட்ஃபாதராகத் திகழ்ந்தவர் மக்கள் திலகம். இன்று அந்தத் தம்பதியினர், புரட்சித் தலைவர் காட்டிய அன்புக்கு நன்றியாக, தங்கள் பணியைப் புரட்சித் தலைவி ஜெயல்லிதா தலைமையில் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

கொடுத்த கைதாண்டா என்னுடையது..

1974 எஸ்.எல்.சி. படிக்கும் இருபது வயது இளைஞன் இத்யத்தில் கோளாறு ஏற்பட்டு மிகவும் இம்சைப்பட்டு வருகிறான். இவனுக்கு இலவச்ச் சிகிச்சை அளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டிருக்கிறது. எனவே, இவனது விமானப் போக்குவரத்துச்செலவுக்கு உதவி செய்யுங்கள்’ என்று குமுதம் வார இதழில் – ‘ராமுவைக் காப்பாற்றுங்கள்’ என்ற தலைப்பில், ஒரு கட்டுரை பிரசுரமாகிறது.

இதைப்படித்த கதாசிரியர் கலைஞானம், மைலாப்பூர் காரணீஸ்வரம் தெருவில் ருந்த அந்தப் பிராமண இளைஞனை டாக்சியில் ஏற்றிக்கொண்டு, நேராக அர் பணியாற்றிக் கொண்டிருக்கும் எம்.எம்.ஏ. சாண்டோ சின்னப்பத் தேவரின் அலுவலகத்துக்கு அழைத்து வருகிறார்.

டாக்சியில் இருந்து இறங்கி, மாடிக்கு அந்தப் பையனை அழ்த்துச் சென்றபொழுது -ஐந்தாவது படியிலேயே அவன் மயக்கம் வந்து உட்கார்ந்து விடுகிறான்.

அவனிடம் இங்கேயே ஐந்து நிமிடம் உட்கார் என்று சொல்லிவிட்டு, டிஸ்கஷனில் இருந்த தேவரின் அறைக்குச் செல்கிறார் கலைஞானம்.

வழக்கமாக காலை ஒன்பது மணிக்கெல்லாம் வந்துவிடும் கலைஞானம் பன்னிரண்டு மணிக்கு வந்ததால, “ஏண்டா லேட்டு.. இவ்வளவு நேரம் ஏங்கே போனே?” என்று கோபத்துடன் கேட்கிறார் தேவர்.

“அண்ணா.. காலையில் குமுதம் பத்திரிகை பார்த்தீங்களா..?”

“ஆமாம்…பார்த்தேன்..”

“அதுல முதல் பக்கத்துல ‘ராமுவைக் காப்பாற்றுங்கள்’ என்ற க்டுரையைப் படிச்சீங்களா..?”

“ஆமா படிச்சேன்..”

“அந்தப் பையனைப் பார்க்கத்தான் மைலாப்பூர் போயிருந்தேன்…அதான் லேட்!”

“சரி; பையன் இப்ப எப்படி இருக்கான்?”

“ரொம்ப மோசமான சூழ்நிலையில்தான் இருக்கான்.. இப்ப அவன் நம ஆபீஸ் மாடிபடியில் தான் உட்கார்ந்து இருக்கான்!”

“என்னடா சொல்றே?”

“ஆமாங்கண்ணா.. உங்கிட்ட ஏதாவது உதவி வாங்கிக் கொடுக்கலாம்னுதான் இங்கே கையோடு அழைச்சுட்டு வந்தேன்…”
“சரி; அவனை இங்கே ஏண்டா அழைச்சுட்டு வந்தே? அதான் உதவி செய்யறுதுக்கின்னே என் தெய்வம் ராமாவரம் தோட்டத்தல வாழ்ந்துகிட்டு இருக்க்கே! அங்கே அழைச்சுட்டுப் போயிருக்கலாம்டா?”

“உங்கள் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்னுதான்..”

“சரி..சரி.. அந்தப் பையனை மெதுவா ரூமுக்கு அழைச்சுட்டு வா..” என்கிறார் தேவர்.

உடனே கலைஞானம் ஓடிச்சென்று அந்தப் பையனைக்கைத்தாங்கலா அழைத்து வந்து தேவர் முன் நிறுத்துகிறார்.

பையனைப் பார்த்த தேவர்மனம் உருகி, “அமெரிக்காவுக்குப் போக எவ்வளவு பணம் வேணும்?” என்கிறார்.

“பத்தாயிரம் வேணும்” பையன் பதில் சொல்கிறான்.

“சரி; நான் அஞ்சாயிரம் ரூபா தர்றேன். மீதி அஞ்சாயிரம் ரூபா வேற யார்கிட்டயாவது கிடைக்குதான்னு பார்.. கிடைக்கலைன்னா என்கிட்டேயே வா.. மீதம் அஞ்சாயிரத்தையும் நானே கொடுத்துடுறேன்!” என்று சொல்லி, அந்த இடத்துலேயே ரூ. 5000/- பணத்தைக் கொடுத்துப் பையனைப் பத்திரமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறார் தேவர்.

அந்தப் பையனைக் காரில் அனுப்பி வைத்த பிறகு கலைஞானத்திடம் தேவர், “டேய் கலைஞானம்.. இப்ப நான் அந்தப் பையனுக்கு அஞ்சாயிரம் ரூபா கொடுத்தேனே.. கொடுத்த கைதான்டா என்னோடது; பணம் என் தெய்வத்தோடதுடா!” என்று உணர்ச்சி வசப்படுகிறார்.

(சின்னப்ப தேவர் எப்பொழுதும் எம்.ஜி.ஆரை நேரில் ‘முருகா’ என்றும், இல்லாதபோது ‘தெய்வம்’ என்றும்தான் அழைப்பார்.)

“அந்த தெய்வத்தோட முகத்தைப் பத்து சீன்லயும், நாலு பைட்லயும், நாலு பாட்டுலயும் காட்டுனா போதும்டா…என்னுடைய பாக்கெட்டுக்கு லட்ச லட்சமா வந்துடும்டா. என் தெய்வம் இருக்கிறவரைக்உம் எனக்குஒரு குறையும் இல்லைடா!

ஒரு சின்ன நன்றிக்கடனுகாக, யாருமே செய்ய முடியாத அளவுக்கு-1956ல் என் தெய்வம் எனக்கு ‘தாய்க்குப் பின்தாரம்’ படம் நடிச்சுக்கொடுத்து, நிறைய பணமும் புகழும் சம்பாதிக்க வெச்சார். அதற்குப்பிறகு சின்ன மனஸ்தாபத்துல பிரிஞ்சு போய், ‘நீலமலைக் திருடன்’ படம் எடுத்தேன். நல்லா ஓடுச்சு. ஓரளவுக்குச்சம்பாதிச்சேன்.

பின்னர் நான் தாயரித்த ‘வாழ வைத்த தெய்வம்’, ‘செங்கோட்டை சிங்கம்-இப்படி தொடர்ந்து நாலு படங்கள் எடுத்து தோல்வி அடைஞ்சதனால பெரிய நஷ்டமாகி, எல்லோரும் என்னை விட்டுப்போயிட்டாங்க. என்கூட ஒரு வேலைக்காரன், ஒரு சமையற்காரன், ஒருவாட்மேன மட்டும்தான் இருந்தாங்க.

இந்தச் சூழ்நிலையிலதீபாவளிப்பண்டிகை வந்தது. பண்டிகைச் செலவுக்கு அந்த மூணுபேரும் என்னை எதிர்ப்பார்த்துக்கிட்டு இருந்தாங்க. உடனே ஒரு மார்வாடி சேட்டுகிட்ட போய் ஆயிரம் ரூபா வட்டிக்குக் கேட்டேன். அவனும் மறுக்காமக் கொடுத்தான். அந்தப் பணத்தை ஆளுக்கு முன்னூறா பிரிச்சுக்கொடுத்துட்டு, நான் நூறு ரூபாயை மட்டும் வச்சுக்கிட்டேன். அவுங்க தீபாவளி கொண்டாடுனாங்க. நான் அந்த வருஷம் தீபாவளி கொண்டாடலை.

இப்படி நான் படம் எடுத்து நஷ்டப்பட்டுக் கடனாளியாகி, ‘இனி தேவர் அவ்வளவுதான். திரும்பவும் அவரு கோயம்புத்தூருக்குப் போய் பழைய தொழிலான பால் வியாபாரம்தான் செய்யணும்’ என்று மற்றவர்கள் பேசும் அளவுக்கு நிலை தாழ்ந்து விட்டேன்.

இந்த நேரத்தில்தான் என் தெய்வம் சீர்காழியில் ‘இன்பக் கனவு’ நாடகம் நடிச்சுட்டு இருந்தபோது, 250 பவுண்ட் எடையுள்ள குண்டுமணியைத் தலைக்கு மேலே தூக்கிக் கீழே போடறதக்குப் பதிலா, தன்காலிலேயே போட்டுக்கொண்டு, காலை ஒடித்துக் கொண்டது. மாதக் கணக்கில் நடக்க முடியாமல் என் தெய்வம் சிகிச்சைப் பெற்றுக் கொண்டு ஓய்வில் இருந்தபோது, ‘இனி அவ்வளவுதான், ஓய்ந்தார் எம்.ஜி.ஆர்’ என்று எல்லோரும் முடிவே கட்டிவிட்டார்கள்.

ஆனா என் தெய்வம் மீண்டும் குணமாகி, எந்த குண்டுமணியைத் தூங்கிக் காலை ஒடித்துக்கொண்டு படுக்கையில் கிடந்ததோ, அதே குண்டுமணியை தலைக்கு மேல் அலேக்காத்தூக்கி நிறுத்தியதை ஸ்டில் எடுத்து, மறுநாள் பேப்பரில் அந்த ஸ்டில்லைப் போட்டுத்தான், ‘புரட்சி நடிகர் பூரண குணமாகிவிட்டார்’ என்று அறிவித்தார்கள்.

வாகினியில் அந்த ஸ்டில் ஒர்க் முடிந்து என் தெய்வம் வீட்டுக்குக் கிளம்பும்போதுதான்நானும் அதே ஸ்டூடியோவில் கன்னட நடிகர் உதயக்குமாருக்காக ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த பாடலை சின்ன கரெக் ஷன் செய்து விட்டு வெளியில் வந்தேன். எதிர்பாராத விதமாக இருவரும் நேருக்கு நேர் சந்தித்தபோது, நான் என்னை அறியாமலேயே என் தெய்வத்தை கட்டிப்பிடித்து ‘முருகா’ என்றேன்.

‘அண்ணே’ என்று என் தெய்வமும் என்னைக் கட்டிப்பிடித்து என்னைக் காரில் ஏற்றிக்கொண்டுதன்னுடைய ராமாவரம் தோட்ட இல்லத்திற்கு அழைத்துச் சென்றது. மூன்று வருடப் பிரிவுக்குப் பிறகு சந்தித்ததால் இருவருக்குமே பேச்சு வரலை.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, “இப்ப என்னண்ணே பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்றது என் தெய்வம்.

“மூணு பாட்டை ரெகார்டு பண்ணி வச்சிருக்கேன்”

“பாட்டைக் கேட்கலாமா?”

“கேளு முருகா…” என்று சொல்லி, அந்தப்பாடல்களைப் போட்டுக் காட்டினேன்.

“யார் ஹீரோ?” என்று என் தெய்வம் கேட்டவுடன், கன்னட நடிகர் உதயக்குமாருக்காக என்பதை மறைத்து முதன் முதலாக, “இன்னும் முடிவு பண்ணலை..” என்று பொய் சொன்னேன்.

“நானே நடிச்சுத் தர்றேன்…” என்று சொல்லி, “இனி மேல் வாழ்நாள் முழுவதும் நாம் பிரியக்கூடாது!” என்று என் கையைப் பிடித்தது என் தெய்வம்.

சொல்லியபடி 1960ல் ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படத்தில் நடித்து, போன தீபாவளிக்கு ஆயிரம் ரூபாய் இல்லாமல் அவஸ்தைப்பட்ட என்னை என் தெய்வம் மீண்டும் குபேரனாக்கியது! அதனால என் தெய்வம் இருக்கிற வரைக்கும் எனக்கு ஒரு குறையும் கிடையாதுடா..!” என்று கலைஞானத்திடம் மக்கள் திலகத்தின் கருசைக் கதையைச்சொல்லி முடிக்கிறார் தேவர்.

இப்படி மக்கள் திலகம், தான் மற்றவர்களுக்குக்கொடுத்து மகிழ்ந்ததோடு, மற்றவர் கொடுக்கவும் கற்றுக் கொடுத்த கோமேதகம்.

வீணை வந்த கதை…

உயர்ந்த நூல்களைப் படிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை விட, இல்லாதவர்கள் உதவி கேட்டு எழுதும் கடிதங்களைப் படிப்பதில்தான் எல்லாக் காலங்களிலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மனநிறைவ காட்டினார். அது மட்டுமல்லாமல், பிறர் தன்னிடம் கேட்டுக் கொடுத்ததை விட, கேட்காமலேயேக் குறிப்பறிந்து கொடுத்ததுதான் அதிகம்.

1978-ல் சென்னை திருவல்லிக்கேணி கைக்ராப்ட்ஸ் ரோட்டில் இருக்கும் அக்ரஹாரத்தைச் சேர்ந்த கௌரி என்ற மாணவி, மக்கள் திலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்புகிறார்.

அதில்…

“மாண்புமிகு தமிழக முதல்வருக்கு,
நான் இப்பொழுது நான்காம் வகுப்புப் படிக்கிறேன். இசையில் ஆர்வம் உள்ள எனக்கு வீணை கற்றுக்கொள்ள ஆசை. ஆனால்பணம் கொடுத்துக் கற்றுக்கொள்வதற்கோ, வீணை சொந்தமாக வாங்கிக் கொள்வதற்கோ வசதி இல்லை. தாங்கள் கூட சிறுவயதில் பரதநாட்டியமும், கர்நாடக சங்கீதமும் முறையாக்க் கற்றுக் கொண்டிருந்தபொழுது, வசதி இல்லாத காரணத்தால் இரண்டையும் பாதியிலேயே விட்டுவிட்டதாக ஒரு பத்திரிகைப்பேட்டியில் தாங்கள் சொல்லியிருந்ததைப் படித்தேன். உங்களைப்போலத் தான் எனக்கும் கற்றுக்கொள்ள ஆசையிருந்தும், வசதி இல்லாத்தால் தொடர முடியவில்லை. எனவே, தாங்கள் எனக்கு ஒரு வீணை வாங்கித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்று அந்த மாணவி மழலை மொழியில் எழுதியிருந்ததை மக்கள்திலகம் படித்துவிட்ட்டு, உடனடியாக மைசூரில் இருந்து வீணை ஒன்றை வரவழைத்து, அந்தக் குழந்தையிடம் சேர்க்குமாறு, உதவியாளர் பரமசிவத்திடம் சொல்கிறார்.

அதற்குப் பிறகு 1980-ல் சென்னைக் கலைவாணர் அரங்கில் நடந்த அனைத்துப் பள்ளி மாணவிகளுக்கான பரிசுப் போட்டி விழாவிற்கு மக்கள் திலகம் பரிசு வழங்க அழைக்கப்படுகிறார்.

மக்கள் திலகம் எந்த விழாவுக்குச் சென்றாலும், அந்த விழாவில் எதைப் பேசிக் கைத்தட்டல் வாங்கலாம் என்பதைவிட, எந்த மாதிரி இடத்தற்குச் செல்கிறோம், எந்த மாதிரி மக்கள் தன்னைச் சந்திக்க வருவார்கள். அவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும். எவ்வளவு பணம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றுதான் கணக்குப் போட்டுக் கிளம்புவார்.

அப்படித்தான் அந்தப் பரிசு வழங்கும் விழாவிற்குச்செல்வதற்குமுன், அந்தப் பள்ளியைப் பற்றியும், பரிசு பெரும் மாணவிகளின் பட்டியல்களுடன், அவர்களின் பின்னணி பற்றியும் தனது உதவியாளர் மூலம் தெரிந்துகொண்டு விழாவுக்குக் கிளம்புகிறார்.

விழா நடந்துக் கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற மாணவிகளின் பெயரை வரிசை யாக வாசிக்க, வள்ளல் பரிசு வழங்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் பட்டியலில் வீணைப் போட்டியில் வெற்றி பெற்ற கௌரி என்ற மாணவியின்பெயரும் வாசிக்கப்படுகிறது.

உடனே அந்த மாணவி கையில் ஒரு கடித்த்துடன் மேடை ஏறுகிறார் பரிசு வாங்கி – மக்கள் திலகத்துடன் கை குலுக்குகையில், அந்த மாணவி கையோடுகொண்டு வந்த கடித்த்தைக்கொடுக்கிறார். வாங்கிக்கொண்ட வள்ளல், அந்த இடத்திலேயே அந்தக் கடித்த்தைப் பிரித்துப் படிக்கிறார். அதில்,

“1978-ல் தங்களுக்கு, ஒரு வீணை எனக்கு வாங்கித் தரச்சொல்லிக் கடிதம் எழுதி இருந்தேன். அந்த கடிதம், தங்கள் கையில் கிடைத்ததா? இல்லையா? ஏன் எனக்கு வீணை வாங்கித் தரவில்லை. இப்பொழுதுகூட ஓசியில்தான் வீணை கற்று வருகிறேன்…” என்று எழுதப்பட்டிருந்தது.

உடனே அந்த மாணவியைத் தன் அருகில் நிற்கச் சொல்லி விட்டு,தன் உதவியாளர் பரமசிவத்தைப் பார்த்துக் கையசைக்கிறார் மக்கள் திலகம். சைகையைப் புரிந்துகொண்ட உதவியாளர். ஓடிச்சென்று காரில் இருந்த அழகிய வீணை ஒன்றை எடுத்து வருகிறார். அதை வாங்கி மக்கள் திலகம் அந்த் மாணவி கௌரியிடம் கொடுக்கிறார். இந்தநிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தினர் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றனர். ஆசிரியைகள் எல்லாம் அதிசயத்து நின்றனர்.

‘என்றோ ஒருநாள் கடிதம் எழுதினோம். அது பொன்மனச்செம்மலின் கையில் கிடைக்காமல்கூடப்போயிருக்கலாம்.

ஆனால் நினைவுப்படுத்திய அந்த நிமிடத்திலேயே, தான் அன்று கேட்ட வீணை இன்று கையில் தவழ்கிறதே! இன்று நான் நினைவுப்படுத்தியை, இதற்கு முன்பே எவர் நினைவுபடுத்தியது..? அப்படியே நினைவுபடுத்தினாலும், கோடானு கோடி மக்களை ரட்சித்து வருகிற வள்ளல், இந்த ஏழைச்சிறுமியின் கோரிக்கையை இத்தனை காலம் எப்படி நினைவில் வைத்திருந்தார்?’ என்றெல்லாம் யோசித்து மேடையில் அப்படியே மலைத்து நிற்கிறார் மாணவி கௌரி.

ஆனால் அன்று அனுப்பிய கோரிக்கைக் கடிதம் கிடப்பில் போடப்பட்டதற்கான காரணம்; பரமசிவம் ஆயிரம் சொன்னாலும் பள்ளியிலிருந்து பரிசு பெற்றவர்களின் பட்டியல் தோட்டத்துக்கு வந்தவுடன், பைகிராப்ட்ஸ் ரோடு, வீணை கௌரி என்று படித்தவுடன், மின்னலாய் அன்று கௌரி அனுப்பிய கடிதம் மக்கள் திலகத்தின் நினைவுக்கு வர, அது நிறைவேற்றி வைக்கப்படவில்லை என்பதால் பரமசிவம் பட்டபாடு; அதற்குப்பிறகு பத்துமணி நேரத்தில் வீணை வரவழைக்கப்பட்ட கதை… இதெல்லாம் அந்த் மாணவி கௌரிக்குத் தெரியாது.

ஆனாலும் இன்று மாணவி கௌரி, இன்னொருவருக்கு மனைவியாகிப் புகந்த வீட்டிற்குச் சென்றபோதும், பிறந்த வீட்டுச் சீதனமாகப் பொன்மனச்செம்மல் கொடுத்த அந்த வீணையைத் தன் பூஜை அறையில் வைத்து மகிழ்ந்து வருகிறார்.

கௌரி போலவேதான் வேளச்சேரியில் உள்ளபத்மினி என்ற ஓவியர், மக்கள் திலகத்தை ‘Phantam’ என்று அழைக்கிறார். ‘ஃபேண்டம்’ என்பது, அமெரிக்காவில் இருந்து வெளிவந்த ஒரு புத்தகம். இதில் ‘பேண்டம்’ என்கிற மாய மனிதன், என்றும் சாகாத தன்மையுடைய சர்வ சக்தி பெற்றவன். “அந்த ஃபேண்டம்’ தான் எம்.ஜி.ஆர்…அவர் இறந்து விட்டதாகச் சொல்வதை நான் இன்றும் நம்பவில்லை.!” என்கிறார் பத்மினி.

இன்று சினிமா ஆசையில் படிப்பைப்பாதியில் விட்டுவிட்டு வரும் இளைஞர் – இளைஞிகளைப்போல், 1944- பட்டாளதில் பார்த்த வேலையைப் பாதியில் விட்டு விட்டு, சினிமா ஆசையில் ஓடி வந்தவர் எஸ். கோவிந்தராஜ். அதிலும் குறிப்பாக – மக்கள் திலகத்திடம் பணியாற்ற வேண்டும் என்பதே கோவிந்தராஜின் குறிக்கோள்.

அவர் ஆசைப்படியே ‘ஜெனோவா’ என்னும் படத்தில் புரொடக்ஷன் மானேஜராக, ஆர்ட் டைரக்கடராக, ஆபீஸ் பாயாக அனைத்து வேலைகளையும், பட்டாளத்து ராணுவ வீரனைப் போலவே படு சுறுசுறுப்பாகச செய்கிறார். கோவிந்த ராஜின் குணமும், கூர்த்த மதியும் மக்கள் திலகத்தின் மனதுக்குப்பிடித்துப் போகவே- 1957-ல் ‘நாடோடி மன்னன்’ படத்தைத் தான் சொந்தமாக இயக்கித் தயாரித்தபோது, கோவிந்தராஜையும் கூடவே வைத்துக்கொள்கிறார் மக்கள் திலகம்.

இப்படித் ‘தெய்வத்தாய்’ படம் வரை மக்கள் திலகத்துடன் பணியாற்றிய கோவிந்தராஜ் 1965 இறந்துவிடுகிறார்.

அதற்குப்பிறகு அந்தக்குடும்பத்திற்கு வேண்டிய அதனை உதவிகளையும் மக்கள் திலகம் செய்கிறார். அதுமட்டுமல்லாமல், கோவிந்தராஜின் மகன் வித்யாசாகருக்குச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சீப் டெக்னீஷியன் வேலை வாங்கித் தருகிறார்.

கோவிந்த ராஜ் இருக்கும் வரை ராமாவரம் தோட்டத்தில் ப்ப்பியாக விளையாடித் திரிந்த பத்மனியை அடையாளம் தெரந்து கொண்ட மக்கள் திலகம், “நீ கோவிந்தராஜ் பொண்ணுதானே?” என்று சொல்லி வாரியணைத்துக் கொண்டு, “உங்க அப்பா இறந்த பிறகு இந்த அப்பாவைப் பார்க்க ஏன் தோட்டத்துக்கு வர்றதில்லே?” என்று விசாரிக்கிறார் வள்ளல்.

பிறகு பத்மினியிடம், “உங்க அப்பா சகலகலா வல்லவர் மட்டுமல்ல. நல்ல ஓவியர். உனக்கு ஓவியம் வரையத் தெரியுமா?” என்று மக்கள் திலகம் கேட்க, “ஓ… வரைவனே..” என்றுபத்மினி பதில் சொல்கிறார். “அப்ப என்னை வரைந்து காட்டு..ம என்று ஒரு பேப்பரும், பேனாவும் கொடுத்து, சேரில் போஸ் கொடுத்து உட்காருகிறார் பொன்மனச் செம்மல்.

பத்மினி பதட்டமில்லாமல், பத்தே நிமிடத்தில் மக்கள் திலகத்தை வரைந்துகாட்டுகிறார். வாங்கிக் பார்த்த மக்கள் திலகம், அப்பொழுதே சாக்லெட், பிஸ்கட் என்று பரிசுப் பொருட்களைப் பத்திமினிக்கு கொடுக்கிறார்.

அதோடு, அந்த ஓவியத்தைப் பார்த்த மக்கள் திலகம் – பத்மினியிடம், “எப்பவுமே ஒரு மனிதனுடைய உருவத்தை வரையும்போது நேருக்கு நேர் பார்ப்பது போல் வரையக்கூடாது. ஒன்றில்மூன்று பகுதி- அதாவது ப்ரொஃபைலில்தான் வரைய வேண்டும்!” என்று ஓர் ஓவிய ஆசானைப்போல் பத்மினிக்கு வரைந்து காட்டுகிறார்.

அன்றிலிருந்தே ஒருபெரிய ஓவியராக வரவேண்டும் என்கிற இலட்சிம் பத்மினியின் நெஞ்சில் பதிந்து விடுகிறது. பிறகு அதே போல் சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து விடுகிறார்.

இன்றுமலேசியாவில் சிறந்த ஓவியர் என்று தமிழ்நாட்டுக்குப்பெருமை தேடித்தந்துக்கொண்டிருக்கிறார். எல்லாப்புகழும் எம்.ஜி.ஆருக்கே என்று சொல்லும் பத்மினி, மக்கள் திலகத்தை இன்னமும் (ஃபேண்டமாகவே) கருதி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ராமாவரம் தோட்டத்துலதாண்டா இருக்கு..

கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழக அரசு பண்பாட்டுத் துறையும், தமிழக அரசு இசைக் கல்லூரியும் இணைந்து தமிழிசை நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி லோகநாதனின் புதல்வர் டி.எல்.மகராஜனை கர்நாடக சங்கீத இசை நிகழ்ச்சி நடத்த கல்லூரி இயக்குனர் விருப்பம் தெரிவிக்க, “டி.எல். மகராஜன் சினிமாப்பாடலும், பக்திப் பாடலும் மட்டும்தானே பாடி வருகிறார். கர்நாடக சங்கீதம் எப்படி இவரால் பாடமுடியும்?” என்று கல்லூரி முதல்வர் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.

ஆனால் இயக்குநர் டி.எல். மகராஜனிடம் கர்நாடக சங்கீத்த்தை ஒருமுறைக் கேட்டுப் பாருங்கள்’ என்று வற்புறுத்திச் சொல்லவே, முதல்வர் சம்மதித்திருக்கிறார்.

நிகழ்ச்சியில் காம்போதி ராகத்தில் மிஸ்கரகதி தாளம் போட்டுப் பாடினார் டி.எல்.மகராஜன். கேட்டவர்கள் அனைவரையும் கிறங்கடித்து டி.எல். மகராஊன் பாடிமுடிந்தவுடன், முதல்வரிலிருந்து மாணவர்கள் வரை, மகராஜனை மனம்திறந்துபாராட்டினார். சில இசைக்கல்லூரி மாணவர்கள் டி.எல். மகராஜனின் காலிலும் விழுந்தனர்.

அப்பொழுது மெய்சிலிர்த்துப் போன டி.எல்.மகராஜன் ஒருமுறை வில்லன் நடிகர் எஸ்.ஏ. அசோகன் நாடக்க்குழுவைச்சேர்ந்த ஒருவர், எஸ். ஏ. அசோகனின் காலில் விழுந்தார். அதற்கு எஸ்.ஏ. அசோகன் தலையில் அடித்துக்கொண்டு, தொட்டு வணங்குறதுக்கின்னே, தகுதியா கால் ராமாவரம் தோட்டத்துல தான்டா இருக்கு. பாவி என் கால்ல ஏன்டா விழுந்தே” என்று உணர்ச்சிப் பொங்கச் சொன்னது போல், கண்ணீர் மல்க, “நீங்கள் விழுந்து என் கால்களில் அல்ல. அந்த மகான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் கால்களில்!” என்று மனமுருகிச் சொன்னார்.

1967-ல், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்டு விடுகிறார் எம்.ஆர்.ராதா. சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் மக்கள் திலகம்.

“உள்ளமதில் உள்ளவரை
அள்ளித்தரும் நல்லவரை
விண்ணுலகம் வாஎன்றால்
மண்ணுலகம் என்னாகும்…”

-என்று திரையில் மட்டும் அல்லாமல், நிஜத்திலும் கோடானுகோடி மக்கள், தன் இஷ்ட தெய்வத்தை வேண்டி பிரார்த்தித்தார்கள்.

அப்பொழுது மக்கள்திலகத்தைப்பார்க்க, தனக்கு ஆரம்ப நாட்களில் ஆதரவுக் கரம் நீட்டிய ராஜகாந்தம் அவர்கள், தன் பேரன் டி.எல்.மகராஜனையும் உடன் அழைத்துச் செல்கிறார். தன் பேரன் மகராஜனை மக்கள்திலகத்திடம் அறிமுகம் செய்து வைக்கிறார் ராஜகாந்தம்.

மகராஜனிடம், “உங்க அப்பா ‘மர்மயோகி’ படத்தில் ‘கண்ணின் கருமணியே கலாவதியே’ என்று பாடிய பாடல் இன்றும் என் நெஞ்சிலே நிக்குது! ‘நீ பாடுவியா’ என்கிறார் வள்ளல்.

“உம்.. பாடுவேன்”

“அப்ப ஒரு பாட்டுப் பாடு..”

“பக்திப் பாட்டா, சினிமாப்பாட்டா?”

“பக்திப்பாட்டு..” – என்றுமக்கள் திலகம் சொல்ல, மகராஜன் பாடத் தயாரான போது, மக்கள் திலகம் உடனே அங்கிருந்த டீன், டாக்டர்கள், நர்சுகள், வார்ட் பாய்கள் அனைவரையும் அழைத்து ‘இந்தச் சின்னப்பையன் பாடப்போறான். வந்து கேளுங்க’ என்று எல்லோரையும் நிற்க வைத்து விட்டார். மகராஜன் பாடி முடிந்ததும் மக்கள் திலகம, மகராஜனைக் கட்டிப் பிடித்துக்தலையில் முத்தமிட்டார்.

பிறகு மகாராஜனிடம், “நல்லா பாடுறே… ஆனா நீ முறையா கர்நாடக ச்ங்கீதம் கத்துக்கணும். அதுக்கு நானே மாசாமாசம் அனுப்பி வைக்கிறேன்!” என்று வாழ்த்திவிட்டு, பரிசுப் பணமும் கொடுத்தார் மக்கள் திலகம்.

அப்பொழுது உடனிருந்த ராஜகாந்தம் – மகராஜனிடம், “ஆண்டவன் எப்பொழுதுமே எம்.ஜி.ஆரை ராஜகாந்தம் ஆண்டவன்என்றே அழைப்பார். அதே போல் எம்.ஜி.ஆரும், ராஜகாந்தத்தை ஆண்டவன் என்றுதான் அழைப்பார். இப்ப உனக்குக்காட்டின அன்பைவிட, உங்க அப்பா லோகநாதனுக்குக் காட்டிய அன்பு அளவிடமுடியாத்து. உங்க அப்பாவோட திருமணத்துக்குப் பண உதவி செய்த கலைவாணர் என்.எஸ. கிருஷ்ணன் இறந்துட்டார். இந்தச்செய்தி கேட்ட உங்க அப்பா ஓடோடிப்போய் கலைவாணர் அருகிலேயே சோகத்துடன் பிரமை பிடித்ததுபோல்நிற்று விட்டார்.

“அதே நாளில் ஆரணியில் இசைக் கச்சேரி நடத்த ஒத்துக் கொண்ட உனது அப்பா, காலையிலேயே ஆரணிக்குச் செல்வதாக இருந்தது. ஆனால்கலைவாணர் இறந்த செய்தியின் துக்கம் தாளாமல், அங்கு செல்வதையே மறந்துவிட்டார். எனவே, ஆரணியைச் சேர்ந்த, இசைக்கச்சேரி நடத்த அழைத அந்த ஊர்க்கார்ர்களில் சிலர் சென்னை வந்துவிட்டனர்.

“அங்கு நின்று கொண்டிருந்த லோகநாதனை ஆரணிக்கார்ர்கள் தனியாக அழைத்து, ‘உடனே புறப்படுங்கள், கண்டிப்பாக மாலை ஆரணியில் கச்சேரி நடத்த வேண்டும்…’ என்று கறாராக்க் கூப்பிட்டார்கள்.

இந்த நிலையில் நான் வர இயலாது’ என்று எவ்வளவு எடுத்துக்கூறியும், ஆரணிக்கார்ர்கள் ஆக்ரோஷமாக வந்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துச சண்டைக்கு நின்றனர்.

“இதைக் கவனித்த எனது ஆண்டவன் (எம்.ஜி.ஆர்) அவர்கள் அருகே வந்து பிரச்சினை என்னவென்று விசாரிக்கிறார். விஷயத்தை அறிந்துகொண்ட ஆண்டவன், அவர்கள் கொடுத்தத அட்வான்ஸத் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு, ‘இன்னொரு தேதியில், நானே லோகநாதனை அழைத்து வந்து, நானும் கலந்துகொண்டு, எனது சொந்ந செலவில் கச்சேரி நடத்தித்தருகிறேன். நாங்கள் எல்லோரும் துயரத்தில் இருக்கும் இந்த நேரத்தில் வம்பு செய்யாமல், உங்கள் ஊர் மக்களிடம் சென்று நிலைமையை எடுத்துச் சொல்லுங்கள்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதற்குப்பிறகு அதற்கு அடுத்த வாரமே, அதே ஆரணியில் ஆண்டவன் தலைமையில், அவர் செலவிலேயே உனது அப்பாவின் கச்சேரி நடந்தது!” என்று ராஜகாந்தம் சொல்லி முடிக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மகராஜன் முறையாக்க் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்கிறார். பெரியபாடகராக வளர்கிறார்.

1986-அக்டோபர் மாதம், சென்னை மைலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தல் டி.எல்.மகராஜன்குத் திருமணம். அந்த நேரத்தில் மிகவும் உடல்நிலை-பாதிக்கப்பட்டிருந்த மக்கள் திலகத்திற்கு ஒரு மரியாதை நிமித்தமாகப் பத்திரிகை கொடுக்கிறார் மகராஜன்.

திருமண நாளன்று ஏற்கெனவே பெய்த அடைமழையைத்தொடர்ந்து சென்னை முழுவதும் வெள்ளம். பத்து மணிக்கு முகூர்த்தம். ஒன்பதுமணியில் இருந்துபாதபூஜை சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒன்பது பத்திற்கு, தன் உடனல் நிலையையும் பொருட்படுத்தாமல், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கல்யாண மண்டபத்திற்கு, காரில் வந்து இறங்குகிறார்.

பத்திரிகையில் பெயர் போடாத பட்சத்திலும், மோசமான சூழ்நிலையிலும் மக்கள் திலகம் திடீரென்று வந்து நின்றவுடன், மாப்பிள்ளைக்கோலத்தில் இருந்த மகராஜன் உட்பட, மண்டபத்தில் இருந்த அத்தனை பேரும் அதிசயத்து நிற்கிறார்கள்.

பிறகு திருமணத்தை நடத்தி வைத்த மக்கள் திலகம், மணப் பெண் கையிலும் , மாப்பிள்ளை கையிலும் தனித்தனியே ஒரு கவர் த்ந்துவிட்டு, “உங்க அப்பா திருச்சி லோகநாதன் திருமணத்தை நடத்தி வைத்த கலைவாணர் இருந்திருந்தா, உன் கல்யாணத்தையும் நடத்தி வைத்திருப்பார். அவர் இல்லாத்தால் தான் நான் நடத்தி வைக்கிறேன்” என்று ஆசி கூறிச் செல்கிறார் மக்கள்திலகம்.

அதற்குப் பிறகு மக்கள் திலகம் கொடுத்த இரண்டு கவரையும் மகராஜன் பிரித்துப் பார்க்கிறார். ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது கண்டு, அவரால் சந்தோஷத்தைத் தாங்க முடியவில்லை. ‘கல்யாணக் கடன் முப்பத்தைந்தாயிரம் ரூபாயை எப்படி அடைக்கப் போகிறேனோ என்ற திகிலுடன் இருந்த தனக்குத் தெய்வமாக வந்து, கூடுதலாகவே கொடுத்த மக்கள் திலகத்தை நினைத்துக் கண் கலங்கி நின்றார் மகராஜன்.

அந்தத்த் “தெய்வத்தின் நிழலில்தான் எனது குடும்பம் இன்னும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது!” என்றுமனம் நெகிழ்கிறார் மகராஜன்.

பெண் வீட்டுக்காரணும் நான்தான் மாப்பிள்ளை வீட்டுக்காரணும் நான்தான்

பேரறிஞர அண்ணாவின் இதயக்கனியாக இருந்தவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். ஆனால், பேரறிஞர் அண்ணாவின் இதயமாகவே இருந்தவர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி அவர்கள்.

திராவிட இயக்க வரலாற்றில் ஒரு நடிகர் என்ற அந்தஸ்தில் முதன்முதலாக இணைந்து செயலாற்றியவர் என்ற பெருமை நடிப்பிசைப் புலவர் ஆக.ஆர். இராமசாமிக்கு உண்டு.

‘ஒரிஜினல் பாய்ஸ்’ நாடக்க் கம்பெனியில் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். சேர்ந்தபோது, அவருக்கு வயது பத்து. அதே கம்பெனியில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி சேர்ந்தபோது , அவருக்கு பொன்மனச்செம்மலைவிட இரண்டு மூன்று வயதுதான் கூடுதல். அன்று தொடங்கிய அந்த நட்பு மக்கள் திலகம் மறையும் வரை நீடித்தது.

1945 வரை ‘எம்.ஜி.ராம்சந்தர்’ என்று கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்த மக்கள் திலகத்திடம், “இதென்ன வடநாட்டுக்காரன் பெயர் மாதிரி ராம்சந்தர் என்று பெயர் வைத்திருக்கிறாய்? எம்.ஜி.ராமச்சந்திரன் என்று தமிழ் மணம் கமழும் பெயரை வைத்துக்கொள்!” என்று சொல்லி, மக்கள் திலகத்ததின் பெயரை மாற்றியவரும் நடிப்பிசைப் புலவர்தான்.

அறிஞர் அண்ணாவின் புரட்சிகரமான படைப்புக்களான ‘ஓர் இரவு’ ‘வேலைக்காரன்’ போன்ற கதைகளை மற்றவர்கள் அரங்கேற்றத் தயங்கியபோது , அதை நாடகமாக அரங்கேற்றி, பட்டி தொட்டிகளிலெல்லாம் பாப்புலராக்கியவர் நடிப்பிசைப் புலவர்தான்!

இப்படித்திரைவானிலும், அரசியல்வானிலும் ஜொலித்துக் கொண்டிருந்த நடிப்பிசைப் புலவர் நோய் வாய்ப்பட்டு, வேலூர் மருத்துவமனையில் 1971ல் சிகிச்சை பெற்று வருகிறார். ‘இனி நாம் பிழைக்கமாட்டோம்’ என்கிற நிலைக்கு வந்த நடிப்பிசைப்புலவர் தன்னப் பார்க்க வந்த அன்றைய முதல்வர் கலைஞரிடன் தன் கைப்பட எழுதியக் கடிதம் ஒன்றைக் கொடுக்கிறார்.

அதில்.. “உடுமலை நாராயணகவிக்குப் பணமுடிப்பும், எனது மகள் கலைச் செல்விக்குத்திருமணமும் நம்முடைய இயக்கம்தான் நடத்தி வைக்க வேண்டும்!” என்று இருந்தது.

கலைஞரிடன் கடிதம் கொடுத்த ஓரிலு நாட்களுக்குப்பிறகு, 1971-ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடிப்பிணைப் புலவர் இறந்துவிடுகிறார்.

அதற்குப் பிறகு கலைஞர், உடுமலை நாராயணகவி குடும்பத்திற்குப் பணமுடிப்பு வழங்கி, நடிப்பிசைப் புலவரின் முதல் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கிறார். இரண்டாவது கோரிக்கைய நிறைவேற்றி வைப்பதற்குள் கலைஞரி ஆட்சி கலைக்கப்படுகிறது.

இந்தத் தருணத்தில், நடிப்பிசைப் புலவர் இறந்த நாளிலிருந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவரின் குடும்பத்திற்கு மாதம் ஆயிரம் ரூபாய் தந்து கொண்டிருக்கிறார்.

தனது கணவரான நடிப்பிசைப் புலவர் இறந்த பிறகு, மனதைத் திடப்படுத்திக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றி வந்த அவரது மனைவி கல்யாணி அம்மாள், தன் மகள் கலைச்செல்வியின் திருமணத்தை நடத்திப் பார்க்க ஆசைப்படுகிறார். அதற்குத் தகுந்தாற்போல கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் மகன் சண்முகம், கலைச்செல்வியைத் திருமணம் செய்ய விரும்புகிறார்.

உடனே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் போனில் தொடர்பு கொள்கிறார் கல்யாணி அம்மாள்.

“பரவாயில்லை. போனிலேயே சொல்லுங்கள்..” என்கிறார் மக்கள் திலகம்.

“கலைவாணர் குடும்பத்துல நம்ம பொண்ணு கலைச் செல்வியைப் பெண் கேட்கிறாங்க..”

“அவ்வளவுதானே மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன். இந்தக் கல்யாணத்தைப் பொருத்தவரை, பெண் வீட்டுக்காரனும் நான்தான். மாப்பிள்ளை வீட்டுக்காரனும் நான்தான். ! நானேமாப்பிள்ளை வீட்டார்கிட்ட போன்ல பேசிட்டுத்திரும்ப உங்க்கிட்டே பேசுறேன்…” என்று சொல்லிவிட்டுப் போனை வைக்கிறார் மக்கள்திலகம்.

உடனே கலைவாணர் குடும்பத்தினருடன் போனில் தொடர்பு கொள்கிறார் மக்கள் திலகம். அவர்களிடம் பேசி முடித்துவிட்டு அடுத்த நிமிடமே கல்யாணி அம்மாளிடம் தொடர்பு கொள்கிறார்.

“மாப்பிள்ளை வீட்டாரிடம் எல்லாத்தையும் விவரமா பேசிட்டேன். எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்!” என்று போனிலேயே பேசி முடிக்கிறார் மக்கள் திலகம்.

சொல்லியபடி 1976-ல் வாணி மகாலில் என்.எஸ்.கே. சண்முகம்-கலைச்செல்வி திருமணத்தை நடத்தி வைக்கிறார் மக்கள் திலகம்.

அதற்குப் பிறகு 1982-ல் ஒருநாள் கல்யாணி அம்மாளைச்சந்திக்க நான்கைந்து பத்திரிகை நிருபர்கள் வந்து ‘டாப்கோச் சேர்மன் ஆகப் போகிறீர்களே! இதை எப்படிச்செயல்படுத்தப் போகிறீர்கள்?” என்று கேட்க, கல்யாணி அம்மாள் ஒன்றும் புரியாமல் உடனே மக்கள் திலகத்தை போனில் தொடர்பு கொள்கிறார்.

உங்கள் திறமையில் நம்பிக்கை வச்சு நான்தான் அந்தப் பொறுப்பைக்கொடுக்கச் சொன்னேன். என்று மட்டும் சொல்லிவிட்டுப் போனை வைக்கிறார் வள்ளல்.

இப்படி நடிப்பிசைப் புலவரின் குடும்பத்திற்கு ஓடி ஓடி உதவி செய்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இதற்கெல்லாம் சிகரமாக-26.7.84ல் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மத்திய அலுவலகமான -பதினோரு மாடிக் கட்டடத்திற்கு ‘நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி மாளிகை என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்.

அப்படிப்பட்ட மக்கள் திலகம் 1984-ல் உடல்நிலை சரியல்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்க்கக்கல்யாணி அம்மாள், தன் மகள் கலைச்செல்வியுடன், பேத்தியையும் ராமாவரம் தோட்ட இல்லத்திற்கு அழைத்துச் சென்று, மருத்துவ சிகிச்சைக்காகப் பேத்தி கையில் முன்னூறு ரூபாயைக் கொடுத்து மக்கள் திலகத்திடம் கொடுக்கச் சொல்கிறார்.

இடது கை அறியாமல் வலது கையால் கொடுத்து வந்த மக்கள் திலகம் அந்தப் பணத்தை வாங்கி நன்றாகத் தெரியும்படி பிரித்துக் காட்டி, “பரவாயில்லை, கடைசி வரை மற்றவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த தன்னுடைய தாத்தாக்களான கலைவாணர் போலவும், நடிப்பிசைப்புலவர் கே.ஆ. ஆரைப் போலவும் இப்பொழுதே ஒரு வாரிசு உருவாகி விட்டது.!” என்று பாராட்டி மகிழ்கிறார் மக்கள் திலகம்.

உன்னைப் பார்த்துக்கொண்டிருந்தால் பாட்டு வரும்…

பரீட்சைக்கு படிக்கும் மாணவன், பாடத்தை எப்படி பலமுறைப் படத்து மனதில் பதிய வைத்துக் கொள்கிறானோ, அப்படித்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் வரும் பாடல்கள் அனைத்தையும் மன்னம் செய்து-இன்று மிகப்பெரிய பாடகராகவும், இசையமைப்பாளராகவும் ஆனவர் கலைமாமணி ஏ.வி. ரமணன். (சன் டி.வி.யில் சப்தஸ்வரங்கள்’ நிகழ்ச்சியை நடத்தும் அதே ஏ.வி. ரமணன்தான்!)

இப்படிப் பள்ளிப் பருவத்திலிருந்தே, பாடும் திறனை வளர்த்துக்கொண்ட ஏ.வி. ரமணன், தனியாக ‘மியூசியானா’ என்ற பெயரில் இசைக்குழு ஒன்றைத் துவக்குகிறார். இவருடை முதல் கச்சேரி, சென்னை ஆபட்ஸ்பரி மாளிகையில் பஸ் அதிபர் சீனிவாசன் மகள் திருமண நிகழ்ச்சியில் நடக்கிறது.

எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு அருகில் சீனிவாசன் வீடு இருந்தால், அந்த நட்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனது துணைவியார் ஜானகி அம்மையார், “வாங்க…போகலாம்!” என்று மக்கள் திலகத்தின் தோளைத் தொடுகிறார்.

மேடையில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்த மக்கள் திலகம், “கொஞ்சம் இரு… போகலாம்!” என்று பல முறை சொல்லிக்கொண்டே ஜானகி அம்மையாரின் கைகளை மெதுவாகத் தட்டிவிட்டுக் கொண்டே பாடலை ரசித்துக்கொண்டிருக்கிறார்.

இப்படி மக்கள் திலகம் மனம் இலயித்து, ஒரு மணி நேரம் அமர்ந்து கச்சேரி கேட்கிறார்.

ஒருமணி நேரத்துக்குப் பிறகு ஜானகி அம்மையார், “விட்டா விடிய விடிய உட்கார்ந்துக்கிட்டு இருப்பீங்களே!” என்று குழந்தையை ஒரு தாய் கரிசனத்தோடு அழைத்துச் செல்வது போல் மக்கள் திலகத்தின் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறார்.

அப்பொழுது ஏ.வி. ரமணன் ஏக சந்தோஷத்தில் மேடையில் இருந்து கொண்டே கண்ணீர்மல்க மக்கள் திகத்தைக் கைகூப்பி வணங்குகிறார். பதிலுக்கு மக்கள் திலகமும் கைகூப்பி வணங்கி விட்டு, கையசைத்துக் கொண்டே விடைபெறுகிறார்.

கச்சேரியை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஏ.வி. ரமணனுக்கு ராத்திரியெல்லாம் தூக்கம் பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து ஆசி பெற எப்பொழுதும் விடியும் என்று காத்திருந்த ரமணன், விடிந்தும் விடியாத கருக்கலிலேயே சைக்கிளை எடுத்துக் கொண்டு மாம்பலம் ஆற்காடு ரோடு வீட்டிற்கு செல்கிறார்.

அங்கே யாரும் இல்லை. வாட்சுமேன் மட்டுமே பின்பக்கம் நின்று கொண்டிருக்கிறார். அவரின் பார்வை படாவண்ணம் உள்ளே நுழைந்து விடுகிறார் ரமணன். சுற்றும் முற்றும் பார்வையைச்செலுத்தியபோது அந்த அதிகாலைப் பொழுதில் இடதுபுற அறையில் இன்லேண்டு லெட்டரில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார் மக்கள் திலகம்.

ஏ.வி. ரமணனைப பார்த்தவுடன் ஆச்சரியப்பட்ட மக்கள் திலகம், “உனக்குத்தாம்பா லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன். பரவாயில்லே நீயே நேர்ல வந்துடியே!” என்று அந்தக் கடித்த்தைக் காட்டுகிறார்.

அதற்குப் பிறகு, ஏற்கனவே டேபிளில் பிரித்துப் போடப்பட்டிருந்த டேப்-ரெக்கார்டரைச் சரி செய்துகொண்டே, “அமைதியின் வெற்றி” என்ற படத்தை நானே டைரக் ஷன் பண்ணப்போறேன். எஸ்.எம். சுப்பையா நீதான் பாடப்போறே…. பத்து நாள் கழிந்து வந்து பார்!” என்று சாதாரணமாகச் சொல்கிறார் மக்கள் திலகம்.

இதைக்கேட்ட மாத்திரத்தில் கிறங்கிப் போன ஏ.வி.ரமணன் பத்துக்காசு பிச்சை கேட்கப் போனவனுக்குப் பத்துலட்சம் ரூபாய் பரிசு விழுந்த மயக்கத்தில் மிதந்துகொண்டே தன் வீட்டிற்கு வந்தடைகிறார்.

பத்து நாள் கழித்து சத்யா ஸ்டுடியோ சென்று ‘அமைதியின் வெற்றி’ படத்தயாரிப்பாளர் உதயம் ப்ரொடக்ஷன்ஸ் – ‘ஆனந்த விகடன்’ மணியன் (பின்னாளில் ‘இதயம் பேசுகிறது’ நிறுவனர்) மணியன் அவர்களைச் சந்திக்கிறார் ஏ.வி. ரமணன்.

தயாரிப்பாளரிடமும், அந்தப் படத்திற்குப் பாடல்கள் அனைத்தையும் பாடுவதற்கு ரமணன் வாய்ப்புப்ப பெற்றுவிட்ட நிலையில், மக்கள் திலகம் தி.மு.கவிலிருந்து நீக்கப்படுகிறார். எனவே, அந்தப் படம் அத்தோடு நின்று விடுகிறது.

அதற்கப் பிறகு ஒன்பது வருடம் கழித்து ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்த ஒரு திருமணத்தில் ஏ.வி. ரமணின் கச்சேரி நடந்துகொண்டிருக்கிறது. ஏழேகால் மணிக்கு முதல்வர் எம்.ஜி.ஆராக வருகிறார் மக்கள் திலகம்.

பாட்டு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், மக்கள் திலகத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் உற்சாகமாகப் பாடுகிறார் ஏ.வி. ரமணன். அன்றும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் உட்கார்ந்து ரசித்துக்கொண்டிருந்த மக்கள் திலகம், ஒரு துண்டுச் சீட்டில் ஏதோ எழுதி, மேடையில் இருந்த ரமணனைக் கீழே வரவழைத்துக் கட்டிப்பிடித்து, அந்தச்சீட்டை ரமணனிடம் கொடுத்துவிட்டு விடைபெறுகிறார்.

அதில்,

“அன்புத் தம்பிக்கு, ஆசி பல..! திரு. தங்கவேலு அவர்களின் மகனுக்குப் பெங்களூரில் திருமணம் நடந்து இன்று மாலை எட்டு மணி அளவில் இம்பீரியல் ஓட்டலில் வரவேற்பு நடைபெறுகிறது. எனது நிலையப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். புறப்பட வேண்டிய நிர்ப்பந்தம் – தவறாக்க்கருத மாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை.

அன்பன்,
எம்.ஜி. ராமச்சந்திரன்
29.10.1982″

என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு ரசிகனுக்கு, ஒரு பக்தனுக்கு, நாட்டை ஆளும் மன்னன் இவ்வளவு கரிசன் காட்ட இயலுமா என்றெண்ணி தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் ஏ.வி.ரமணன்.

அதற்குப் பிறகு – உதயம் ப்ரொடக்ஷன் மணியன் – எம்.ஏ. காஜா இயக்கத்தில் ‘காதல், காதல், காதல்’ படம் தயாரிக்கப் போகும் செய்தி அறிந்து, மணியன் அவர்களைச் சந்தித்து இந்தப் படத்திலாவது தனக்குப் பாட வாய்ப்பு வேண்டும் என்று ரமணன் கேட்கிறார்.

உடனேமணியன், மக்கள் திலகத்துடன் போனில் தொடர்பு கொண்டு, ரமணன் வந்த செய்தியைச சொல்கிறார்.

சிலநொடிகளில் பேசி முடித்துவிட்டு, மணியன் – ரமணின் கையைக் குலுக்கிக்கொண்டு, “நீ பாடத்தானே சானசுகேட்டு வந்தே… ஆனா தலைவரு உன்னை இந்தப் படத்துல கதாநாயகனாகவே போடச் சொல்லிவிட்டார். அது மட்டுமல்லாம, பைட், டான்ஸ் எல்லாத்தையும் தோட்டத்துக்கே வந்து கத்துக்கச் சொல்லி இருக்கார்!” என்று மணியன் சொல்ல, ரமணின் ஆனந்த நிலையை எப்படி சொல்வது? படப்பிடிப்பு துவங்கி, படம் ரிலீஸும் ஆகி விட்டது. படம் எதிர்பார்த்த வெற்றி அடையாத்தால், ரமணன் அதற்குப் பிறகு மக்கள் திலகத்தைச் சந்திக்கவில்லை.

1987-டிசம்பர் முதல் வாரத்தில் நாகி ரெட்டியின் பேத்தி திருமணம் விஜயசேஷ மஹாலில் நடக்கிறது. அதிலும் ஏ.வி.ரமணின் கச்சேரி ஏற்பாடு செய்யப்படுகிறது. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வருகிறார். வந்தவர், கடைசி வரிசையிலேயே நாகிரெட்டியுடன் அமர்ந்து கொள்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் திலகத்தைப் பார்த்த ரமணன் – பயத்தில், ‘அதோ அந்தப் பறவை போல’ பாடலைத் தப்புத் தப்பாகப் பாடுகிறார். அதையும் தெரிந்து கொண்ட மக்கள் திலகம் சிரித்துக்கொள்கிறார்.

பன்னிரண்டு பாட்டுக்களே கேட்டு முடித்த மக்கள் திலகம், தன் இருக்கையை விட்டு எழுந்து நடந்து மேடைக்கு வருகிறார். ஏ.வி. ரமணனைக் கட்டிப்பிடித்து, “நாளைக்குத் தோட்டத்துக்கு வா..” என்று சொல்லிவிட்டு, பின்புற வாசல் வழியாகச் செல்கிறார்.

கச்சேரி முடிந்து – அன்றிரவும் தூக்கம் பிடிக்காமல் சொரக்கத்தில் மிதந்து கொண்டு, எப்பொழுது விடியும் என்று காத்திருக்கிறார் ஏ.வி.ரமண்ன்.

விடிந்ததும் தனது துணைவியார் உமா ரமணனையும், மகனையும் அழைத்துக்கொண்டு ராமாவரம் தோட்டம் செல்கிறார் ரமணன்.

தன்னுடைய தனியறையில் படுத்துக்கொண்டே வார்த்தை வராத மழலையில் “என்ன வேணும், கேளுங்க.” என்று வாய் மலர்கிறார் வள்ளல்.

பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்ட முகம், இன்று பச்சிளம் குழந்தைபோல் தவித்துக் கொண்டிருந்ததைப்பார்த்து ரமணன் தம்பதியர் கண்ணீர் விட்டபடி, “நீங்க நல்லா இருக்கும்பொழுதே நான் உங்ககிட்ட எதுவும் கேட்கலை… ஆனா நீங்க நான் நடந்து வர பட்டுக்கம்பளம் விரிச்சு அழகு பார்த்தீங்க! அதனால் நீங்க நல்லா இருந்தாலே அதுவே எங்களுக்குப் போதும்!” என்று சொல்லி விடை பெறுகிறார்கள் ஏ.வி. ரமணன் தம்பதியர்.

அன்று மக்கள் திலகம் எழுதிக்கொடுத்த துண்டுச் சீட்டுதான் இன்றும் அழகிய லேமினேஷனில், பூஜை அறைமுதல், ரமணன் பாக்கெட் வரை குடிகொண்டிருக்கிறது!

பொன்மனச் செம்மலின் படம் ஒரு பாடம்தான்..

நாள் கணக்கில், மணிக்கணக்கில் நின்ற இடத்திலேயே – உட்கார்ந்த இடத்திலேயே காத்திருந்து, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நேரில் பார்த்துப் பரவசப்பட்டது போல், அவர் நடித்த படங்களையும் மணிக்கணக்கில், நாள் கணக்கில் காத்திருந்து பார்த்து மக்கள் பரவசப்பட்டார்கள்.

அதுபோல அவரை அறிந்து கொள்ளாமல் அவதூறு பேசியவர்கள், புரிந்து கொள்ளாமல் பொல்லாங்கு பேசியவர்கள் ஒரே ஒருமறை மக்கள் திலகத்தை நேரில் பார்த்து விட்டாலோ, ஒரே ஒரு வார்த்தை பேசிவிட்டாலோ மனம் உருகிப்போவார்கள்.

இன்றைக்குப் பட்டிமன்றப்பாவலராகவம் கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் பொறுப்பாளராகவும் திகழும் மக்கள் கவிஞர் அரு.நாகப்பன், ஆறாம் வகுப்பு படிக்கிறபோதே மக்கள் திலகத்தின் மீது மாறாத அன்புகொண்டு, மக்கள் திலகம்மறைந்த பின்பும் அவர் மேல் தீராத காதல் கொண்டிருப்பவர்.

காரைக்குடியிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிறுவயல் கிராமத்தில் பெரிய நிலச் சுவான்தாரின் குடும்பத்தில் தோன்றிய அரு. நாகப்பன் – அன்று காரைக்குடி சரஸ்வதி டாக்கீஸில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன்’ படம் பார்க்கக் காலையிலேயே கட்டுச் சோறு கட்டிக் கொண்டு கிளம்புகிறார்.

மாலை ஆறு மணிக்காட்சிக்குக் காலையிலேயே புறப்பட்டு, வரிசையில் நின்று, அங்கேயே கட்டுச் சொறைச் சாப்பிட்டு, சட்டை கிழிபட மாலைக்காட்சி பார்த்துவிட்டு, இரவு வீடு சென்ற அருநாகப்பனுக்கு வீட்டில் நன்கு வசவு கிடைக்கிறது.

“ஒருபண்ணையார் வீட்டுப் பிள்ளை இபடி ஒரு பாமரனைப் போல், பகல்பொழுதெல்லாம்கால் கடுக்க நின்று படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறாயே.. நீ ன்ன பள்ளிக்கூடப்பாடமா படிக்கப் போனாயை?” என்று அரது குடும்பத்தினர் அருநாகப்பனைத் தண்டிக்கிறார்கள்.

அதற்கு அரு. நாகப்பன் அந்த வயதிலேயே, “ஆம்! பாடம்தான் படித்தேன். இதே படத்தைப் பத்துதடவை பார்த்தால்,பல்கலைக்கழகப் படிப்பையே முடித்த திருப்தி ஏற்பட்டு விடும்!” என்று தைரியமாகப்பதில் சொல்கிறார்.

இப்படிப் பொன்மனச் செம்மலின் படத்தையே பார்த்துப் பார்த்து, அவர் மீது மிகுந்த பக்தியை வைத்திருக்கும் அரு. நாகப்பன் படித்து முடித்து, புதுவயல் ராமநாதன் செட்டியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

1972ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டு, தனிக்கட்சி தொடங்குகிறார். உடனே தான் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். துவங்கிய கட்சியில் சேர்வதென்று முடிவெடுக்கிறார்.

அதற்காக மதுரை சென்று, காளிமுத்து அவர்களிடம் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்துக் கடிதம் கேட்கிறார் அரு. நாகப்பன், காளிமுத்து கொடுத்த கடித்தத்தில் அரு.நாகப்பனின் தகுதி பற்றிக் குறிப்படும்பொழுது, கவிஞர், இலக்கியவாதி என்றெல்லாம் வரிசையாகப் பட்டியல் போடப்பட்டு – கடைசியாக ஐந்தாண்டு காலமாகப் பார்த்த ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருப்பது கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

கடித்த்தைப் பெற்றுக்கொண்ட அரு. நாகப்பன் தஞ்சையில் தங்கியிருந்த மக்கள் திலகத்தை சந்தித்துக் காளிமுத்து கொடுத்த கடிதத்தைக் கொடுக்கிறார்.

வாங்கிப் படித்த மக்கள் திலகம், ‘ஏதோ நம் கட்சிக்கு ஆள் சேர்ந்தால் போதும்; அரு. நாகப்பனால் ஆயிரம் ஓட்டாவது கிடைக்கும்’ என்று கணக்குப் போடாமல், அரு. நாகப்பனின் ஆசிரியப் பணியின் புனிதத் தன்மையை மனதில்கொண்டு, சேர்த்துக் கொள்ளமாட்டேன். ஒழுங்கா ஆசிரியர் வேலையைப் போய்ப் பார்!” என்று அரு. நாகப்பனை அனுப்பி வைத்துவிடுகிறார்.

ஆனால் அரு. நாகப்பன் எப்படியும் எம்.ஜி.ஆரின் கட்சியில் புதுக்கோட்டை கூட்டத்திலாவது சேர்ந்து விடுவதென்று முடிவெடுக்கிறார்.

அதன்படி புதுக்கோட்டை சென்று, மறைந்த சட்டமன்ற உறுப்பினர் அன்பரசனைச் சந்தித்து, தஞ்சாவூரில் நடந்த சம்பவத்தை முழுவதுமாக மறைத்து, ஆர்.எம். வீரப்பன் அவர்களின் அச்சு ஆபிஸில் ‘அரு. நா.’ என்ற பெயரில் கடிதம் பெற்றுக்கொள்கிறார் அரு. நாகப்பன்.

மேடையில் ஒவ்வொருவராகச் சென்று மக்கள்திலகம் முன்னிலையில் செல்லும்போது, மக்கள் திலகம் அரு. நாகப்பனை அடையாளம் கொண்டு கொண்டு மகிழ்கிறார்.

“என் வாத்தியாரே… நான்தான் உன்னைக் கட்சியில் சேர்த்துக்க மட்டேன்னு தஞ்சாவூர்லேயே சொன்னேனே… திரும்ப எதுக்கு இங்கே வந்தே?” பேரை மாத்திட்டா, ஆளை மறந்திடுவேனோ” என்று (படிக்கிற வயதில் அரசியல் பேசிய நடிகை கோவை சரளாவை, அரசியல் பேசுவதை நிறுத்திவிட்டு, படிக்க போ’ என்று சொல்லிப் படிக்க வைத்ததைப்போல்) அரு.நாகப்பனைக் கடிந்து கொள்கிறார்.

ஆனாலும் அரு.நாகப்பன் தன்னைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்.
உடனேமக்கள் திலகம் அரு. நாகப்பனை ஒரு குழந்தையை அரவணைப்பதுபோல் அணைத்து, “சரி; உன்னைச்சேர்த்துக் கொள்கிறேன்!” என்று சொல்லி, தன் ஜிப்பா பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கிறார் மக்கள் திலகம்.

பொன்மனச் செம்மலின் பொற்கரம் பட்டு, மேனி சிலிர்க்க மேடையைவிட்டு இறங்குகிறார் அரு.நாகப்பன்.

அவ்வளவுதான்! கூடி நின்ற மக்கள் திலகத்தின் தொண்டர்கள்,பொன்மனச் செம்மல் தொட்டுப் பிடித்த அரு. நாகப்பனின் கைகளை முத்தம் கொடுத்து, தடவிப் பார்த்து, தொட்டுப்பார்த்து, கை முடிகளையே பிய்த்துப் புண்ணாக்கிவிடுகிறார்கள்.

அதற்குப் பிறகு கட்சிப்பணி, இலக்கியப் பணி, ஆசிரியப்பணி மூன்றையும் தொய்வில்லாமல் தொடர்கிறார் அரு. நாகப்பன்.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், கவியரசு கண்ணதாசன் தலைமையில் கவிபாட வேண்டி, அரு. நாகப்பனுக்குக் கடிதம் வருகிறது. ஆனால் விழா அழைப்பிதழில், கவிஞர் வாலி தலைமையில் பாடுவதாகப் பெயர் போடப்பட்டிருந்தது.

உடனே கவியரசு கண்ணதாசனுடன் போனில் தொடர்புகொண்டு அழைப்பிதலில் வாலி தலைமையில் பாடுவதாகத் தன் பெயர் இருப்பதைச்சொல்லி, “ஏன் இந்த மாற்றம்?” என்று கேட்கிறார் அரு. நாகப்பன்.

“இந்த மாற்றத்திற்கு நான் காரணமல்ல. முதல்வர் எம்.ஜி.ஆர்.!” என்று பதிலளித்தார். கண்ணதாசன். பிறகுதான் உண்மை தெரிந்தது. வாலியே விருப்பப்பட்டு மக்கள் திலகத்திடம் தெரிவிக்க, அதற்குப் பிறகுதான் இந்தப் பெயர் மாற்றம் நடந்திருக்கிறது என்று!

அந்த உலகத்தமிழ் மாநாட்டில்,

“மலர்ந்திருக்கும் தாமரையை
குளத்தில் காணோம்!-அதை
மாண்புமிகு முதல்வரின்
முகத்தில் பார்த்தோம்!..”

என்று மக்கள் திலகத்தைப் போற்றிப் பாடுகிறார் அரு. நாகப்பன்.

கவியரங்க நிகழச்சி முடிந்து புறப்பட்ட மக்கள் திலகம், “மாலை என்னை ஹோட்டலில் வந்துபார்!” என்று சொல்லிவிட்டுக்கிளம்புகிறார்.

அதன்படி அன்று மாலையே அரு. நாகப்பன், மக்கள் திலகம் தங்கியிருந்த பாண்டியன் ஓட்டலுக்குச் செல்கிறார்.

உதவியாளர் பிச்சாண்டி, “உள்ளே தலைவர்சிலருடன் பேசிக்கொண்டிருக்கிறார். நீங்கள் கொஞ்ச நேரம் உட்காருங்கள்!” என்று அரு. நாகப்பனை அமர வைக்கிறார்.

இரண்டு மணி நேரமாகியும் தன்னை உள்ளே செல்ல அனுமதிக்காகத்தால், கவிஞனுக்கே உரிய கோபத்தில் பிச்சாண்டியிடம், “நான் பார்க்க விரும்பவில்லை; நான் போய் வருகிறேன்” என்று சொல்லி விட்டுப் புயலாய்ச்சென்று விடுகிறார் அரு. நாகப்பன்.

அதற்குப்பிறகு 1980 – ல் அங்கு நாகப்பன் மலேசியாவில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு வருகிறது. எனவே, முதன்முதலாக மலேசியா செல்வதால்,மக்கள் திலகத்திடம் ஆசிபெற ராமாவரம் தோட்டம் செல்கிறார் அரு. நாகப்பன்.

தோட்டத்தில் பணிபுரியும் காரைக்குடி ரத்தினம் பிள்ளை அரு நாகப்பன் வந்திருந்த செய்தியை ஜானகி அம்மையாரிடமும், மக்கள் திலகம் எம்.ஜி.ரிடமும் சொல்கிறார்.

அரு. நாகப்பனின் பெயர் சொன்னவுடன் மக்கள் திலகம், “மதுரையில் கோவிச்சுட்டுப் போன மாதிரி வாத்தியார் இங்கேயும் கோவிச்சுட்டுப் போயிடப் போறார். அவரை உட்கார வை. வாரேன்!” என்று சொல்கிறார்.

மக்கள் திலகம் அரு. நாகப்பனைச் சந்திக்க மாடியிலிருந்து புறப்பட்ட வேளையில் – மண்டைக்காடு ஜாதிக்கலவரம் பற்றிய செய்தி வருகிறது. வேறு வழியில்லாமல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உடனடியாக்க் கோட்டைக்கச் செல்கிறார்.

இப்பொழுது மீண்டும் மக்கள் திலகத்தைச் சந்திக்க வேண்டிய வாய்ப்பை இழக்கிறார் அரு. நாகப்பன்.

இரண்டு முறை அழைத்தும் நடக்காமல் போனாலும், இரண்டாவது முறை ராமாவரம் தோட்ட இல்லத்தில் ரத்தினம் பிள்ளையிடம் சொன்ன வார்த்தைகள், காந்தியிடம் கோபித்துச்சென்ற பாரதியைப் பற்றி, ‘இந்தக் கவிஞனைப் பத்திரமாகப்பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று தன் அருகில் இருந்தவர்களிடம் சொல்லியதே தன் நினைவுக்கு வருவதாக, தன் நினைவில் நீங்கா இடம் பெற்ற மக்கள் திலகத்தைப் பற்றி இன்றும் நயம்படச் சொல்கிறார் அரு. நாகப்பன்.

காஞ்சி மடத்தில் மோட்ச தீபம்

1944-ல் காரைக்குடி அழகப்பச் செட்டியார் டெல்லியில் மகாத்மா காந்தியைச் சந்தித்தபோது அவரிடம், “எனக்கு ஒரே ஒரு பெண் மட்டும்தான் இருந்தாள். இப்பொழுது அவளையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். கூட ஒரு பிள்ளை இல்லாமல் இருப்பது பெரும் அவஸ்தையாக இருக்கிறது!” என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு மகாத்மா காந்தி, “ஏம்ப்பா பிள்ளை இல்லைன்று கவலைப்படுறே.. உடனே ஒரு காலேஜ் கட்டு…அங்கே படிக்கிற பிள்ளைகளெல்லாம் உன் பிள்ளைகள் ஆயிடப் போகுது!” என்று அட்வைஸ் பண்ணி அனுப்பி இருக்கிறார்.

அண்ணலின் ஆலோசனைப்படி அழகப்பச்செட்டியார் உடனடியாக்க் காரைக்குடியில் அழகப்பா கல்லூரி ஒன்றைக் கட்டுகிறார். கவலை இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார். தானம் தர்ம்ம் தாராளமாகச் செய்கிறார்.

கடைசியில்…

‘கொடுத்ததல்லாம் கொடுத்தார் குடியிருந்த வீட்டையும் கொடுத்தார்’ என்று சொல்லும் அளவுக்கு, அழகப்பச் செட்டியார் தான் குடியிருந்த வீட்டையும் தானமாகத் தருகிறார்.

இப்படியொரு தர்மவான் வாழ்ந்த செட்டிநாட்டில், ‘ராங்கியம்’ என்ற கிராமத்தில், பிள்ளைப் பிராயத்தில் இருந்த வி.என். சிதம்பரம் என்ற சிறுவனுக்கு அழகப்பச் செட்டியாரின் கொடைத்தன்மையும், அன்பான தோற்றுமும் கவர்ந்து விடுகிறது.

எனவே அழகப்பச் செட்டியாரைத் தன்னுடைய மானசீகக் குருவாக நினைத்துக் கொள்கிறார் சிதம்பரம்.

அதற்குப் பின்னாலே 1953ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன்னுடைய ‘இன்பக் கனவு’ நாடகம் நடத்தப் பொன்னமராவதி என்ற ஊருக்கு வருகிறார். நாடகம் நடக்கிறது.

அந்த நாடகத்தைச்சிதம்பரம் பார்க்கிறார். பொன்மனச் செம்மலின் பொன்னிற மேனி பார்த்து மெய்சிலிர்த்துப் போகிறார்.

நாடகம் முடிந்து மறுநாள் – ‘இன்பக் கனவு’ நாடகம் மூலம் கிடைத்த சம்பளத்தில் வலையப்பட்டி கிராம மக்களுக்கு மதிய விருந்து வழங்கி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் அந்த மக்களுடன் அமர்ந்து உண்ணுகிறார்.

குறும்ப ஆட்டுக் கிடா வெட்டி வந்தவர்களுக்கெல்லாம் வடித்துக்கொட்டி, வகை வகையான பதார்த்தங்களுடன் விருந்து கொடுத்து, விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற செட்டிநாட்டு மண்ணில், பொன்மனச்செம்மல் விருந்து கொடுத்துக்கொண்டிருந்ததைப்பார்த்து, ‘என்னடா இது.. திருநெல்வேலிக்கே அல்வாவா? மணப்பாறைக்கே முறுக்கா!’ என்று இதைப் பார்த்த வி.என். சிதம்பரம் வியந்து நிற்கிறார்.

இரவில் நாடக மேடையில்மன்னனைப் போல் தோற்றமளித்த மக்கள் திலக்தைப் பார்த்து மயங்கிய வி.என். சிதம்பரம், மறுநாள் மக்கள் திலகத்தின் மனித நேயத்தில் மனம் லயித்து நிற்கிறார்.

இந்த இரண்டு சம்பவத்திற்கு பிறகு வி.என்.சிதம்பரம் – மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் மீதும், மக்கள் திலகத்தின் தனி மனித செயல்பாட்டின் மீதும் தனி ஆர்வம் காட்டுகிறார்.

பிறகு 1958ல் வாகினி ஸ்டுடியோவில் ‘நடோடி மன்னன்’ படப்பிடிப்பில் லேனா தமிழ்வாணன் மூலம் வி.என. சிதம்பரம் ‘ஹலோ’ என்று சொல்லும் அளவுக்கு மட்டுமே மக்கள் திலகத்துக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார். அதற்குப் பிறகு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் படப்பிடிப்புக்காகச் சிங்கப்பூரில் வியாபாரம் செய்து கொண்டிருந்த வி.என். சிதம்பரம், மக்கள் திலகத்தை விருந்துக்கு அழைக்கச் செல்கிறார்.

அப்பொழுது அங்கே நூற்றுக்கணக்கான சீனக் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து சாப்பிடச் செய்து மகிழ்ந்துகொண்டிருக்கிறார் மக்கள் திலகம்.

இதைப்பார்த்த வி.என். சிதம்பரம், ‘இந்த மனுஷன் அன்னிக்கு என்னடான்னா எங்க ஊர் ஜனங்களுக்கு கறிச்சோறு விருந்து கொடுத்து சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தார். இங்கே என்னடான்னா இந்த ஊர் பசங்களுக்கு ஐஸ்க்ரீம் கொடுத்து கொண்டாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். உழைக்கச் சம்பாதிக்கிறது. அதை ஊருக்கே பகிர்ந்து கொடுக்கிறது. இதையே தன் வாழ்வியலாகக் கொண்டிருக்கிறாரே இந்த வள்ளல்!’ என்று புரட்சித்தலைவரைப் பார்த்து வணங்கி நிற்கிறார் வி.என். சிதம்பரம்.

“வாங்க!” என்று பலநாள் பழகியவரைப் போல் வி.என். சிதம்பரத்துக்கு ஐஸ்க்ரீம் கொடுத்து உபசரிக்கிறார்.

ஷூட்டிங் முடிந்தவுடன் விருந்துக்கு அழைக்க வி.என். சிதம்பரம் வாயெடுத்தபோது, “இரவுச் சாப்பாட்டுக்கு நான் தங்கியிருக்கிற ஹோட்டலுக்கு வந்திருங்க!’ என்று சொல்லி விட்டு விருட்டென்று கிளம்பி விடுகிறார் மக்கள் திலகம். விருந்துக்கு அழைக்கப் போன வி.என். சிதம்பரம், தான் விருந்தாளியாகிப் போனதை நினைத்து வியக்கிறார்.

அதற்குப் பிறகு 1980ல் மதுரை உலகத் தமிழ் மாநாட்டு விழாவில் அறநிலையத் துறை சார்பில் நடந்த கண்காட்சியில் வி.என்.சிதம்பரம் தன் மகன் கணேஷிற்கு எம்.ஜி.ஆர். வேடமிட்டு,மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வரவேற்கச் செய்கிறார். தன் வேடத்தில் குட்டி எம்.ஜி.ஆராகக் காட்சியளித்த கணேஷைப் பார்த்து மகிழ்கிறார் மக்கள் திலகம்.

பொன்னமராவதியில் பொன்மனச் செம்மலைப் பார்த்துப் பரவசப்ட்ட வி.என். சிதம்பரம், பொன்மனச் செம்மலின் ஆட்சியிலேயே அறங்காவலர் குழுத் தலைவராக இருந்ததை எண்ணி இன்றும் மகிழ்கிறார்.

இப்படி சமூகத்தின் எல்லா தரப்பினரின் அன்புக்கும், வியப்புக்கும் உரிய மனிதராக வாழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். தான் 20ம் நூற்றாண்டு கண்ட தமிழகத்தின் வரலாற்று நாயகர் என்றுசொன்னால், அது மிகைப்படுத்தப்பட்ட கணிப்பன்று! அந்தக் காலத்து மன்னர்களைப் பற்றிக் கர்ண பரம்பரைக் கதைகள் ஏராளம் உண்டு. இந்த நூற்றாண்டில் தமிழகத்தின் எந்த மூலைக்குச்சென்றாலும், எம்.ஜி.ஆரின் தர்மகுணம் பற்றி வரம் பற்றி,மனித நேயம் பற்றி ஏதாவது ஒரு சம்பவம் இருக்கும்! இது போன்றதோர் அபிமானத்தைப் பெற்றது எம்.ஜி.ஆர். செய்த புண்ணியமா? இல்லை. அவர் மாமனிதராக வாழ்ந்த வாழ்க்கையா? விடை காண முடியாத கேள்வி இது.

நல்ல காரியங்களோ, வீர சாகசங்களோ யார் செய்தாலும் அதை உடனே ஒப்பிட நினைவுக்கு வரும் ஒரே பிம்பம் எம்.ஜி.ஆர்தான். அதனால்தான் பெரிய எம்.ஜி.ஆர்ன்னு நினைப்போ? என்று மக்கள் ஒப்பீடு செய்து பேசுவதைக் கேட்க முடிகிறது!

தனது ஒவ்வொரு நற்பண்புகளாலும் மனிதன் என்ற நிலையிலிருந்து மாமனிதர் என்று எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதால்தான் மகான்களின் மறைவுக்கு மட்டுமே ஏற்றப்படும் மோட்ச தீபம் எம்.ஜி.ஆர் மறைவுக்காக காஞ்சி மகாப் பெரியவர்களா காஞ்சி காமாட்சியம்மன் கோயில் கோபுரத்தில் ஏற்றப்ட்டது.

எம்.ஜி.ஆர். மாமனிதர்தான் என்பதற்கு இதைவிட வேறு என்ன அங்கீகாரம் வேண்டும்?

ஒரு நாளைக்கு ஒரு வீட்டில் தங்கி வாழ்நாளை கழிக்கலாம்

“கானி நிலம் வேண்டும்” – பாடலில் பாரதியார் கண்ட கனவைப்பத்து மடங்காக நனவாக்கி வாழ்ந்து காட்டியவர் வள்ளல் எம்.ஜி.ஆர். நாற்பது ஆண்டுகளுக்கு முன், சென்னை நெரிசலில் இருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொண்டு, ராமாவரத்தில் எட்டு ஏக்கர் நிலம் வாங்கி, அந்த நில்லதில்தானே செங்கல் சூளை போட்டு, கல் சுமந்து, மண் சுமந்து சிறிய அளவிலான மாடி வீடு ஒன்றைக கட்டுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அந்த மாடி வீட்டைச் சுற்றி வயல்வெளிகள், தென்னந் தோப்பு, மயில்களும், மான்களும துள்ளி விளையாடும் மாந்தோப்பு, மாட்டுப் பன்னை, ஆட்டுப்பண்ணை, தோட்டத்தின் முன்புறம் அரண்மனை வாயிலில் அமைந்திருக்கும், ஆழி போன்ற சிறிய நீரோடை தோட்டத்தைச் சுற்றி பெரிய நீரோடை, நீச்சல் குளம், மினி சினிமா தியேட்டர், தோட்டத் தொழிலாளர்கள் தங்கியிருக்கக் குடியிருப்பு வீடுகள் விருந்தினர் மண்டபம், நூலகம், இருபத்தி நான்கு மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் அணையா அடுப்பு என்று ஒரு தனி ராஜ்யத்தையே அந்த எட்டு ஏக்கருக்குள் நிர்மானித்திருக்கிறார் வள்ளல்.

பலபேருக்கு பளிங்குமாளிகை கட்டித் தந்த வள்ளல், திரையுலகில் கோடிக்கணக்கில் சம்பாதித்தபொழுதும் தான் வாழ்ந்த பிருந்தாவனத்தை ஆடம்பர மாளிகையாக மாற்றவில்லை. கடைசிவரை காரைச் சுண்ணாம்பும், சிமெண்டும் கலந்த பூசிய, எளிமையான அழகியல் கொஞ்சும் வீடாகவே வைத்திருந்தார்.

இப்படிப் பார்த்துப் பார்த்து கண்விழித்துக்கண் விழித்துக்கட்டிய அந்தக் காவிய நாயகனின் வீடு ஒரு கட்டத்தில தன்னுடைய கையை விட்டுப்போகிற நிலை ஏற்படுகிறது. ஆம்! அந்த வீட்டின் பேரில் வள்ளல் வாங்கிய கடனை, திருப்பிக் கட்ட முடியாமல், வீட்டை ஜப்தி செய்யும் அளவுக்கு வந்துவிடுகிறது. ஆனால், வள்ளல் கலங்கவில்லை. ஆனால், தோட்டத் தொழிலாளி முதல் வள்ளலின் துணைவியார் ஜானகி அம்மையார் வரை கலங்கி நிற்கிறார்கள். நாளை காலை பத்து மணிக்குள் பணத்தைத்திரும்ப செலுத்தாவிட்டால் கட்டாயம் ஜப்தி என்ற நிலை வந்து விடுகிறது. ஆன மட்டும் எப்படியும் வள்ளலின் வீட்டை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் அங்கங்கு அலைந்து கொண்டிருக்கிறார் ஆர்.எம். வீரப்பன்.

விடிந்தால் வீடு நமக்கில்லை என்ற் வேதனையில் இரவு முழுவதும் தூக்கம் பிடிக்காமல், தவிக்கிறார் ஜானகி அம்மையார். ஆனால், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நாளைக்கு என்ன வேலையென்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். தர்மத்தின் தலைவன்

விடிந்து விடுகிறது. வழக்கம்போல் வள்ளல் எழுகிறார். வாக்கிங் போகிறார். குளிக்கிறார். உடை மாற்றுகிறார். உணவு உண்ணுகிறார். கார் ரெடியாகி நிற்கிறது. சோகத்தில் கண்கள் சுருங்கி நின்ற ஜானகி அம்மையாரையும், தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள வீட்டிற்குச்செல்ல அழைக்கிறார். அப்பொழுது தான் இந்த வீடு நமக்குச் சொந்தமில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் வள்ளல் என்பதை ஜானகி அம்மையார் உணர்கிறார்.

வீட்டு முன் அமைந்திருக்கும், தன் தாயின் கர்ப்பகிரகத்தைக் கை கூப்பி வணங்கிவிட்டு, காரின் பின் சீட்டில் ஏறிய வள்ளலைத் தொடர்ந்து ஜானகி அம்மையாரும் ஏறி அமர்கிறார். கார் கிளம்ப நான்கடி தூரம் நகர்ந்தவுடன், டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்கிறார் வள்ளல். கார் நிற்கிறது. அப்படியே கார் கண்ணாடியை மெதுவாக இறக்குகிறார். ஜானகி அம்மையாரை அழைத்து, “ஜானு ஒரு முறை நம்ம வீட்டை நல்லாப் பார்த்துக்கடா” என்று சிரித்துக் கொண்டே செல்லமாகச்சொல்கிறார் வள்ளல். அவ்வளவுதான் ஜானகி அம்மையார் பீறிட்டுக் கிளம்பிய அழுகையை அடக்கமுடியாமல் மன்னாதி மன்னன் மார்பில் சாய்கிறார்.

‘அள்ளி அள்ளி கொடுத்த வள்ளலுக்கா இந்த நிலை!’ இருந்தும் என்ன அதிசயம்! நான் கஷ்டப்பட்டு, வியர்வை சிந்தி சம்பாதித்து, முதன்முதலாகக் கட்டிய கோட்டை, கொலுமண்டபம், கோயில் அதை இன்று இழக்கப் போகிறேனே, என்று மன்னவன் அல்லவா மனம் கசிந்து மனைவி மடி சாய வேண்டும். மன்னவனின் கண்ணீர்துடைத்து, மனைவிதானே, “நீங்கள் நினைத்தால் இதுபோல் ஆயிரம் வீடுகள் வாங்கலாம்” என்று ஆறுதல் சொல்லி அச்சம் போக்கவேண்டும்.

ஆனால் இங்கே மன்னவன் அல்லவா, மனைவியைத் தேற்றி, அந்த எட்டு ஏக்கர்தோட்ட வீடு எம்மாத்திரம். உனக்கு பதினாறு ஏக்கரில் பளிங்கு மண்டபம் கட்டித் தருகிறேன். அது இயலவில்லை என்றால், என் மீது உயிரையே வைத்திருக்கும் தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான குடிமகன்கள் வீட்டில், ஒரு நாளைக்கு ஒரு வீட்டில் தங்கி, வாழ்நாளைக் கழிக்கலாம்” என்று புன்முறுவல் பூக்கப் பொன்மனச் செம்மல் சொல்கிறார்.

கார் வீட்டை விட்டு கிளம்பிச் செல்கிறது. வள்ளலின் நம்பிக்கை வீண் போகவில்லை. ஜப்தி ஏதும் நடக்கவில்லை. மாலை அதே ராமாவரம் தோட்ட இல்லத்துக்கே வள்ளலும், ஜானகி அம்மையாரும் திரும்பி வருகின்றனர்.

நடப்பது நடக்கட்டும் என்று நம்பிக்கையோடு நடைபோட்டுக் கொண்டிருந்தால் நாளை அல்லது என்றாவது ஒருநாள் வெற்றி உறுதி என்பதைத்தானே வள்ளலின் வழித்தடம் உணர்த்துகிறது!

நாம் பூஜிக்கும் தெய்வம்

நாஞ்சில் ராஜன் அவர்கள் தமிழ்த்திரையுலகில் முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். இவர் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன் தயாரிப்பில் உருவான மணிமகுடம் ‘முத்து மண்டபம்’ ஆகிய படங்களிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘நான் ஏன் பிறந்தேன்’ ‘அன்னமிட்டக்கை’ ‘ஊருக்கு உழைப்பவன்’ உட்பட இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் அசிஸ்டென்டாகப் பணியாற்றியவர். அவர் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஊரான வடச்சித்தூருக்கு அடிக்கடி வருவார்.

வருகிறபோதெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அற்புதங்களைப் பற்றி அம்புலி மாமா கதைகள் போல் தன் மருமகன் ராபர்ட்டிடம் நிறைய சொல்லிக் கொண்டே இருப்பார். அப்படிச் சொன்னதில், புரட்சித் தலைவரின் நான் ஏன் பிறந்தேன் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து கொண்டிருந்தபொழுது ‘நான் பாடும்பாடல் நலமாக வேண்டும்’ பாடல் வரியை இரண்டு பஞ்சாக எடுப்பதாக அந்த படத்தின் இரண்டு இயக்குனர் எம்.கிருஷ்ணன் ஒளிப்பதிவாளர் ராம்மூர்த்தி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும் முடிவெடுத்து இருக்கிறார்கள். இந்தப் படத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நாஞ்சில் ராஜன் சவுண்ட் என்ஜினியரிடம் சென்று, இரண்டு பஞ்சாக எடுக்க இருப்பதை சொல்லி அதை இன்டர்லாக் செய்துவிட்டு பட சம்பந்தப்பட்ட வேறு ஒரு வேலைக்கு சென்று இருக்கிறார்.

ஆனால் புரட்சித் தலைவரின் ஆலோசனைப்படி ரவுண்ட் சர்க்கிள் ட்ராலியில் கேமிராவைப் வைத்துக் காஞ்சானாஐ சென்டர் பண்ணி ஒரே ஷாட்டில் எடுப்பதாக மாற்றித் தீர்மானித்து இருக்கிறார்கள். ரிகர்சல் முடிந்து ஆக் ஷன் சொல்லும் பொழுது நாஞ்சில் ராஜன் வந்திருக்கிறார். அப்பொழுது புரட்சித் தலைவர் அணர்ச்சிப் பூர்வமாக நடிக்க அவர்கள்மாற்றியது தெரியாமல் ‘நான் பாடும் பாடல் வரிகள் வந்தவுடனேயே விசில் ஊதி விட்டார். அதனால் அந்த முழு ஷாட்டும் இன்டர்லாக்கில் கட் ஆகிவிட்டதாம்.

உடனே டென்ஷனாகிப் போன புரட்சித் தலைவர் கோபமாக நாஞ்சில் ராஜனை முறைத்துப்பார்த்து பார்த்து இருக்கிறார். அவ்வளவுதான். நாஞ்சில் ராஜன் பயந்துபோய் அப்படியே ரூமுக்குப் போய் விட்டாராம். அன்று இரவு குளிர் ஜூரமே வந்து விட்டதாம். அப்படியே ஜூரத்தில் நாஞ்சில் ராஜன் அசந்து தூங்கிக்கொண்டிருந்தபொழுது இரவு பதினொரு மணி வாக்கில் ஒரு கரம் நாஞ்சில் ராஜனின் நெற்றியைத் தொட்டதாம். விழித்து பார்த்தால் புரட்சித் தலைவர். தாயரிப்பாளர் வேலுமணி அசிஸ்டென்ட் டைரக்டர் அவினாசிமணி ஆகியோரும் உடன் நின்றார்களாம்.

புரட்சித் தலைவரைப்பார்த்தவுடன் நாஞ்சில் ராஜனுக்கு சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும் புரட்சித் தலைவரின் எதிர்பாராத வருகை நாஞ்சில் ராஜனை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் கூடவே அழைத்து வந்த டாக்டர் நாஞ்சில் ராஜனுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். நாம் கனவு ஏதும் காண்கிறோமா என்று நாஞ்சில் ராஜன் புரட்சித் தலைவரின் பொற் கரங்களைப் பற்றி இருக்கிறார்.

‘வேலை செய்யும்பொழுது வர்ற கோபத்துக்கெல்லாம்நீ லொக்கேஷனை விட்டு வந்துடறதா. கவலைப்படாதே. உடம்பு ராத்திரிக்குள்ள சரியாயிடும். காலையில் ஷூட்டிங் வந்துடு.” என்று சொல்லிய புரட்சித் தலைவர் கையோடு கொண்டு வந்த விலையுயர்ந்த கம்பளிப் போர்வையையும் ஸ்வெட்டர் ஒன்றையும் கொடுத்துவிட்டுச் சென்றாராம்.

இப்படிப் புரட்சித் தலைவரைப் பற்றி எனக்குப் புத்துணர்ச்சி உண்டாகும் அளவுக்கு நிறைய அவரின் வீரச் செயல்களையும் மனித நேயச் செயல்களையும் சொல்லச் சொல்ல, இன்று வடசித்தூர் ராபர்ட், மக்கள் திலகத்தைத் தெய்வமாகவே வணங்கி வருகிறார்.

வள்ளுவன் வழியில் வள்ளல் எம்.ஜி.ஆர்.

இன்றைக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் மலைச்சாமி ஐ.ஏ.எஸ். இருபது ஆண்டுகளுக்கு முன் கோயம்புத்தூரில் மாவட்டக் கலக்டராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அங்க நடந்த அரசு விழாவுக்கு முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வருகிறார். மாடக்கலெக்டர் என்ற முறையில் அந்த விழாவில் மலைச்சாமி அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.

சுத்தமான உணவைப் போல் மலைச்சாமி அவர்கள் தூய தமிழில் இலக்கியச் சுவை சொட்டச்சொட்ட வரவேற்புரையைத் தொடங்குகிறார். இதை சற்றும் எதிர்பாராத புரட்சித்தலைவர், தான் அமர்ந்திருந்த சேரைக் கொஞ்சம் முன்னுக்கு இழுத்துப் போட்டுக் கொண்டு ஒரு குழந்தையைப் போல் குதூகலத்துடன் கேட்டு கொண்டிருந்தார். தொடர்ந்து மலைச்சாமி, பொன்மனச் செம்மலின் ஆற்றலைத் தோற்றப் பொலிஐ, அள்ளிக் கொடுக்கிற வள்ள் தன்மையை, ஆட்சியில் அணுகுமுறையைச்சுருக்கமாக்க் கோடிட்டுக் காட்டிப் பேசி முடிக்கிறார்.

பொதுவாக கலெக்டர் என்றால் ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு ஆண்டறிக்கை படிப்பது போல் பேசுவார்கள். என்றுதான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைத்திருக்க வேண்டும். ஆனால் மலைக்க வைத்த மலைச்சாமியின் பேச்சு. அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஓர் அரசு அதிகாரிஇந்த அளவுக்கு இலக்கியம் பேசுகிறாரே என்று மக்கள் திலகத்தை வியப்பில் ஆழ்த்தியது.

மாவட்டக் கலெக்டராக மட்டுமே தெரிந்த மலைச்சாமி அவர்களை ஒரு தமிழ் இலக்கியவாதியாகப் புரட்சித்தலைவருக்கு அடையாளம் காட்டியது அந்த விழாதான்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு மூன்றாண்டுகள் கழித்து, அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் அவர்கள், அவர் சார்ந்திருக்கிற வருவாய்த்துறை பிரிவிற்கு மலைச்சாமி அவர்களின் பெயரைச் சிபாரிசு செய்து கடிதத்தை எம்.ஜி.ஆர் அவர்களின் பார்வைக்கு வைக்கிறார்.

அந்தக் கடிதத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர் அவர்கள் அப்பொழுதே அமைச்சர் முன்பே கிழித்தெறிந்திருக்கிறார். எஸ்.டி.எஸ். அவர்களுக்கு, தான் ஏதோ தவறான ஒரு நபருக்கு சிபாரிசு செய்து விட்டோமோ? என்கிற பயம்.

எம்.ஜி. ஆர் சிரித்துக்கொண்டே “தமிழறிந்த ஓர் இலக்கிய வாதியை, கணக்கு எழுத விடறதா, அவருக்கு இதைவிடத் தகுதி வாய்ந்த கூடுதல் பொறுப்பைக் கொடுக்கலாம்” என்று கூற அன்றைக்கு மதுரையில் நடக்கவிருந்த உலகத் தமிழ் மாநாட்டிற்கு உத்தரவு பிறப்பித்தார்.

ஒரே ஒரு முறை மலைச்சாமி அவர்களின் இலக்கியப் பேச்சை மனதில் பதிய வைத்துக்கொண்ட எம்.ஜி.ஆர் ஓர் ஆட்சியாளனுடைய ஆற்றலை,

‘இதனை இதனாலிவன் முடிக்கு மென்றாய்ந்து
அதனையவன் கண்விடல்’

என்ற குறள் வரிக்கேற்ப வள்ளுவன் வழியில் நடத்திக் காட்டியிருக்கிறார். அவரது நிறைவாற்றலை, நினைத்ததை முடித்துக் காட்டும் வீரத்தை இன்றும் நினைத்து நெகிழ்கிறார் மலைச்சாமி.

சாப்பிட்டாயா! சாப்பிட்டாயா!

புரட்சித் தலைவரின் வாழ்வில் அவர் கடைப்பிடித்து வந்த தர்ம சிந்தனையில், தனிமனிதப் பண்பில், தனி மனித வீரத்தில் ஒரு சதவிகிதம் கடைப்பிடித்தாலே அவன் மிகச் சிறந்த மனிதனாக கருதப்படுவான். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். 136 படங்களி நடத்திருப்பதாக அவர் நடித்த படங்களின் பட்டியலைச்சொல்வார்கள். இல்லை அவர் நடித்தது ஒருபடம்தான். மற்ற 135 படங்களும் அந்த ஒரு படத்தின் ஜெராக்ஸ் காப்பிதான்.

ஒரு படத்தில் படகோட்டியாக வருவார். இன்னொரு படத்தில ஏர்பிடிக்கும் விவசாயியாக, மூட்டைத் தூக்கும் தொழிலாளியாக இப்படித் தன்னுடைய பாத்திரங்களைத்தான் மாற்றிக் கொள்வார். மற்றபடி தான்கடைப்பிடித்து வருகிற தர்ம்ம் செய்தல், தாயை நேசித்தல், தவறு செய்பவர்களைத் தண்டித்தல், மன்னித்தல், நல்லவர்களை வாழ வைத்தல் போன்ற தன்னுடை தனிப்பட்ட கொள்களைகளை மட்டுமே, மக்களுக்குப பாடமாகச் சொல்லி பரவசம் உண்டாக்க ஒரு விஞ்ஞான மாஸ் மீடியாவைப் பயன்படுத்திக்கொண்டார். அதனால்தான் அவர் மறைந்து பதிமூன்று ஆண்டுகள் ஆகியும், அவர் உண்ட, உறங்கிய நடந்த தோட்டம்’ ஆற்காடு ரோட்டில் உள்ள ‘நினைவில்லம்’ கடற்கரை சமாதி ஆகிய இடங்களில் தினமும் ஆயிரமாயிரம் பக்தர்கள் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

“சாப்பிட்டாயா சாப்பிட்டாயா?” என்று மற்றவர்களைச் சாப்பிட வைத்து அழுகு பார்த்தவர் மட்டுமல்ல, புரட்சித் தலைவர எம்.ஜி.ஆர் தான் என்ன சாப்பிடுகிறாரோ அதே சாப்பாட்டை தன்னிடம் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளி கூடச்சாப்பிட வேண்டும் என்று தன் வீட்டில் மட்டுமல்ல, தான் சார்ந்திருந்த திரைப்படத்துறையிலும் நடைமுறைப்படுத்தி எழுதப்படாத சட்டமாக்கினார்.

அதற்கு ஒரு உதாரணம் மட்டும் இங்கே, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சூட்டிங், முடிந்தோ அல்லது மீட்டிங் முடிந்தோ ராமாபுரம் தோட்ட வீட்டுக்கு வர இரவு மணி பத்தோ, பதினொன்றோ ஆகிவிடும். வந்தவுடன் சாப்பிட்டுவிட்டு, இரண்டு நாய்களைப்பிடித்துக் கொண்டு, டார்ச் லைட்டுடன் தோட்டத்தைச் சுற்றி நடப்பு வழக்கம். அப்படி நடந்து போகும்பொழுது, ஒருநாள் தொழிலாளர்கள் குடியிருக்கும் குவார்ட்டர்ஸ் வழியாகச் சென்று, அங்கு வெளித் திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்த சிறுவனைத் தட்டி எழுப்பித் தன்னுடன் அழைத்துச் சென்று அவனிடம்,

“ஸ்கூலுக்குப் போனியா?”

“போனேன்”

“சாப்பிட்டாயா?”

“சாப்பிட்டேன்”

“என்ன சாப்பிட்டே?”

“சோறு, கறி, முட்டை,” என்று இரவு சாப்பிட்ட பதார்த்தத்தை சொன்னான் அந்தச் சிறுவன். பிறகு அந்தச் சிறுவனை அனுப்பிவிட்டுத்தான் என்னென்ன சாப்பிட்டோம். அந்த சிறுவன் என்னென்ன சாப்பிட்டான் என்று ஒப்பிட்டுப் பார்க்கிறார். நேரே சமையற்கட்டிற்குச் சென்று உறங்கிக் கொண்டிருந்த சமையல்காரர் மணியை எழுப்பி “வெளியே போ” என்றார்.

“இந்த நட்டுநடுநிசியில் ஏன் என்னை வெளியில் அனுப்புகிறீரகள்?” என்றெல்லாம் மணி கேட்கவில்லை. கேட்டால் அடி விழும். ஆனால் தன்னை அனுப்புவதிலும் அர்த்தம் இருக்கும் என்று உணர்ந்த மணி வாயை மூடிக்கொண்டு ஒன்றும் பேசாமல் வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிட்டார். என்ன தவறு செய்தோம். தலைவர் இப்படித் தண்டித்து விட்டாரே என்று இரவெல்லாம் மணி யோசித்து யோசித்துப்பார்த்திருக்கிறார். ஒன்றும் புலப்படவில்லை. ஆனால் மறுநாள் பொன்மனச் செம்மல் புறப்படும் நேரத்துக்கு கார் அருகே வந்து நின்று கொண்டார். இப்படி மணி தினம் காலையில் கார் அருகே வந்து நிற்பதும் மக்கள் திலகம் கண்டு கொள்ளாமல் சென்று விடுவதும் இரண்டு மாதமாக தொடர்ந்தது. ஆனால் சம்பள தேதியில் கரெக்டாக சம்பளம் மட்டும் மணி வீட்டிற்கு சென்றுவிடும்.மணியை மட்டும் மக்கள் திலகம் வேலையில் வைத்தக்கொள்ளவில்லை. தினமும் மணி தனக்குக் கிடைத்த தண்டனைக்கான காரணத்தைக் கண்டு பிடிப்பதிலேயே முழுக்கவனம் செலுத்தி, கடைசியா அன்று இரவு மக்கள் திலகத்திற்கு வைத்த மீனை அந்தச் சிறுவனுக்கும் வைக்கவில்லை என்பதால்தான் என்பதைத் தெரிந்து கொள்கிறார் மணி.

மறுநாள் பொன்மனச்செம்மலின் காலில் விழுந்து “அன்றைக்கு அந்தச் சிறுவனுக்கு மீன் வைக்க மறந்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்” என்று மணி தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டார். பிறகுதான் மணியை வேலைக்கு வைத்துக் கொள்கிறார் மக்கள் திலகம். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மணி மட்டுமல்ல; சிறுவர்களுக்கு யார் உணவு பரிமாறினாலும், அவர்களிடம் “இதோ பாருங்கடா பசங்களா..இது இட்லி, இது முட்டை… இது கறி… நல்லா ஞாபகம் வச்சுக்கங்க..” என்று ஆசிரியர் பாடம் நடத்துவது போல் ஒவ்வொரு உணவுப் பொருள்களின் பெயர்களைச் சொல்லிச் சொல்லி வைப்பார்கள்.

அப்புறம் ஞாபக மறதியில் வச்சதுல எதையாவது பசங்க சொல்லாம விட்டுட்டா தண்டனை சமையல்காரங்களுக்குத் தானே! இப்படித் தொழிலாளர்கள் உண்ணுகிற உணவில் கூட கரிசனம் காட்டுகிற ஒரு உன்னதத் தலைவனை எங்காவது பார்க்க முடியுமா?